தெஹிவளை பிரதேச தாருர் ரஹ்மான் மஸ்ஜித் , சிறுவர் மதரஸா தொடர்பாக முஸ்லிம் தரப்புக்கும், ஆர்பாட்டகாரர்கள் தரப்புக்கும் இடையில் நாளை பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் ஒன்று தெஹிவளை ஜெயசிங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது என அதன் பிரதான நிர்வாகி onlineAkkaraipattu க்கு தெரிவித்தார். குறித்த மஸ்ஜித் மற்றும் மதரஸா தெஹிவளை – கல்கிசை மாநகர சபையில் கடந்த பத்து வருடங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தெஹிவளை பிரதேச தாருர் ரஹ்மான் மஸ்ஜித் , சிறுவர் மதரஸாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் [...]
‘இஸ்லாம்’ பகுப்புக்கான தொகுப்பு
சிங்கள தப்ஹீமுல் குர்ஆன் அதை வாசிக்கக் கூடிய அனைத்து தலைவர்களுக்கும் வழக்கும் திட்டம்
Posted: மே 22, 2012 in இஸ்லாம்சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட தப்ஹீமுல் குர்ஆன் விளக்கவுரை இலங்கையில் அதை வாசிக்கக் கூடிய அனைத்து சிங்கள தலைவர்களுக்கும் கையளிக்கப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக சப்ரகவ மாகாணத்தில் கேகாலை மாவனெல்லை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட அல்குர்ஆன் விளக்கவுரை சப்ரகவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்திற்கு கையளிக்கும் நிகழ்வு கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாவனெல்லையில் இடம்பெற்றது . 1989ஆம் ஆண்டு ஜமாஅத்தே இஸ்லாமியினால் வெளியிடப்பட்ட தப்ஹீமுல் குர்ஆனின் ஸூரதுல் பாதிஹா, அல்பகரா ஆகிய இரண்டு ஸூராக்களும் சிங்கள [...]
அமைச்சர் ரவூப் ஹகீம் கூறியது தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது அகில இலங்கை ஜம்இயதுல் உலமா : ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், இலங்கையின் நீதி அமைச்சருமான ரவூப் ஹகீம் நேற்று முன்தினம் மாலை கிண்ணியாவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது “தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் முடிவுக்கு வந்துள்ளமையால் அது பற்றி நான் பேசமாட்டேன். அந்தவிவகாரம் முடிந்த பிறகு குப்பையை கிளறுவதும் வீர வசனம் பேசுவதும் தேவையில்லாத விடயமாகும். இதற்கு மேல் தம்புள்ள பள்ளிவாசல் பற்றி [...]
தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாராதிபதி பேட்டியின் தமிழ் வடிவம்
Posted: மே 6, 2012 in இஸ்லாம், உள் நாட்டு செய்திகள்தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாரையின் விகாராதிபதி இனாமலுவ சுமங்கள தேரரை சண்டே லீடர் ஊடகவியலாளர் நிரஞ்சலா ஆரியவன்ஷா சந்தித்து பேட்டி கண்டுள்ளார் . அதிகார தோரணையில் அந்த பெண் ஊடகவியலாளரையும் மிரட்டியுள்ள தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாராதிபதி. தனது 65 ஆண்டுகால மஸ்ஜிதுக்கு எதிரான வன்முறைகளையும் நியாயப்படுத்தியுள்ளார். அவர் வழங்கியுள்ள பேட்டியின் முக்கிய பகுதிகளை தமிழில் உங்களுக்கு வழங்குகிறோம் : நிரஞ்சலா : நீங்கள் விகாரையின் நிலத்தில் இருப்பதாக சொல்லப்படும் ஒரு பள்ளி கட்டிடத்தை எதிர்த்து இரண்டாவது தடவையும் கவனத்தை [...]
ஜனாதிபதி சந்திப்பு இன்னும் இடம்பெறவில்லை ,அமைச்சர் பசிலுடனான சந்திப்பு இடம்பெற்றது
Posted: மே 2, 2012 in இஸ்லாம்தம்புள்ள மஸ்ஜித் விடயம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவுக்கும் ஜனதிபதிக்கும் இடையிலான எதிர்பார்க்கப்படும் சந்திப்பு இன்னும் இடம்பெறவில்லை. ஆனால் மஸ்ஜித் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்ஷ்சவை ஜம்இயத்துல் உலமா சந்து பேசியுள்ளது. அமைச்சர் பசில் ராஜபக்ஷ்சவை சந்தித்து தம்புள மஸ்ஜித்துக்கு நடந்த விடயங்களை தெளிவாக விளக்கியதுடன் அது தொடர்பான வீடியோ பதிவுகளையும் வழங்கியது என்று lankamuslim.org க்கு ஜம்இயத்துல் உலமாவின் செயலாளர் முபாரக் மௌலவி தெரிவித்தார் . அந்த சந்திப்பின்போது அமைச்சர் எந்த [...]
தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அறி சிறுபான்மை மக்களின் உரிமைகளை வழங்கவில்லை என்ற சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தைக் கையாளும் விதம் மனித உரிமைக் குற்றச்சாட்டை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது. முஸ்லிம்களும் இந்நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் தமது மத சுதந்திரத்தைப் பயன்படுத்தி மஸ்ஜிதுல் ஹைரிய்யா என்ற பெயரில் ஒரு பள்ளிவாசலை நிறுவி கடந்த 50 வருடங்களுக்கு மேலாகப் பரிபாலித்து வருகின்றனர். தம்புள்ளை வாழ் மக்களுக்கோ [...]
நான் இன்னும் ஜனாதிபதியின் வாயை பார்த்தவாறுதான் இருக்கிறேன் ஒரு முஸ்லிம் வாலிபனின் ஆதங்கம் :தம்புள்ளை ஹைரியா பள்ளிவாயல் எங்கள் நாட்டு ஜனாதிபதி கொரியா விஜயம் மேற்கொள்ள முன்பு நடைபெற்றதை எல்லோரும் அறிவார்கள். அந்த விடயத்தின் பின்பு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு கிடையில் ஒரு பதற்றம் என்ன செய்வது என்று ஒன்றும் புரியாத கலக்கம். தொலைகாட்சியில் செய்திகளும் , மக்கள் மத்தியில் தொலைபேசி அழைப்புக்களும், குறுஞ் செய்தி மூலமாக செய்திகளும், இணையத்தில் மக்கள் மனதை திடுக்கிட வைக்கும் வீடியோ காட்சிகளும் [...]
புனித பூமி அதன் வரைவிலக்கணம் என்ன ? அதை யார் பிரகடனப் படுத்துவது ? : உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் : புனித பூமி என்பது அனைத்து மதத்தவர்களுக்கும் உண்டு ஆனால் இங்கு தம்புள்ள ஹைரியா ஜும்ஆ மஸ்ஜித் பெளத்த புனித பூமியில் அமைத்துள்ளது என்று கூறி அதை அகற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளபடுகிறது. இந்த விடயத்தில் ஒரு பிரதான கேள்வி இருக்கிறது. புனித பூமி என்றால் என்ன ? அதன் வரைவிலக்கணம் என்ன ? ஒரு மதத்தின் புனித பூமி [...]
நாடு நகர திட்டமிடல் சட்ட மூலத்திற்கு அன்று அங்கீகாரம் வழங்கியிருந்தால் இன்று முழு நாட்டிலும் இந்த புனித பூமி… மாகாண சபைகளின் அங்கீகாரத்தை பெரும் நோக்கில் கிழக்கு மாகாணசபையில் நாடு நகர திட்டமிடல் சட்ட மூலத்தை அன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாக்களித்து அனுமதி வழங்கயிருந்தால் இன்று முழு நாட்டிலும் இந்த புனித பூமி என்கின்ற சட்டம் அமுலாகியிருக்கும். மேற்கண்டவாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஏ. அஸீஸ் ஞாபகார்த தின நிகழ்வின் போது தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் [...]
ஜமிய்யத்துல் உலமாவின் தீர்மானத்தை அமுல்படுத்த முழு அரசியல் பலத்தையும் பிரயோகிப்போம் .. இர்ஷாத் றஹ்மத்துல்லா, F.M.பர்ஹான்: தம்புள்ள ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாசல் சர்ச்சை தொடர்பாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீடம் கடந்த ஞாயிற்றுக் கிழமை கட்சியின் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் கூடி விரிவாக ஆராய்ந்ததுடன்,தீர்மானங்கள் சிலவற்றையும் எடுத்துள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்துள்ளர். அன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை செயலாளர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.அவை பின்வருமாறு – தம்புள்ள பள்ளிவாசல் [...]