‘உலக‌ச் செய்திகள்’ பகுப்புக்கான தொகுப்பு

சட்ட விரோத யூத குடியேறிகள் பலஸ்தீன மக்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்து அத்துமீறலில் ஈடுபட்டு அவர்களை ஆத்திரம் ஊட்டும் நடவடிக்கையில் ஈடுபடுத்திய சம்பவம் வீடியோவில் வெளியாகியுள்ளதுடன் அது உலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது இஸ்ரேலிய பொலிசாருக்கு முன்னால் நின்று கொண்டு ஆயுதம் தாங்கிய யூத சட்ட விரோதிகள் கும்பல் ஓன்று அப்பாவி நிராயுத பாணிகளான பலஸ்தீன மக்கள் மீது நேரடி துப்பாக்கி பிரயோகம் செய்வதை வீடியோ மூலம் காணலாம் கடந்த 19 ஆம் திகதி மாலை 4 [...]

புதுடெல்லி::3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் நேற்று கொல்கத்தாவில் இருந்து டெல்லி போய்ச் சேர்ந்தார். அங்கு பிரதமர் மன்மோகன்சிங்கை, ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் ஹிலாரி சந்தித்து முக்கிய பேச்சு வார்த்தை நடத்தினார். பொருளாதார முன்னேற்றம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகவும், கட்டமைப்பு திட்டங்களில் உள்ள வாய்ப்பு, வசதிகள் பற்றி ஹிலாரியிடம், மன்மோகன்சிங் எடுத்து உரைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு வாய்ப்பு [...]

இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை  350 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதேவேளை குழந்தைகளுக்கான பால்மா தவிர்ந்த ஏனைய இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மா பக்கெட் ஒன்றின் விலை 163 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் பால்மா பக்கெட் ஒன்றின் விலை 810 ரூபா வுக்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது . அதேவேளை 50 கிலோகிராம் எடைகொண்ட சீமெந்து பொதி ஒன்றினை [...]

மட்டக்களப்பு அம்பிட்டியே சுமண தேரர் கடத்திச் செல்லப்பட்டு மிரட்டல்?. இலங்கை::மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச சபையின் தலைவர் உட்பட வன்முறை குழுவொன்று மட்டக்களப்பு மங்களராம விகாரையில் விகாராதிபதி அம்பிட்டியே சுமண தேரரை நேற்று மதியம் கடத்திச் சென்று, அவர்களின் அலுவலகத்தில் தடுத்து வைத்து, சிங்கள மக்களின் காணி உரிமைகளுக்காக தலையிட வேண்டாம் எனக் கூறி மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை சேர்ந்த பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட குழுவினர் தேரரை தாக்க முயற்சித்து [...]

டெஹ்ரான்::அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் டிரோன் போலவே ஈரானும் தயாரித்துள்ளது என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான், ஈரானில் அமெரிக்க வீரர்கள் முகாமிட்டு தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர். இதை தடுக்க, ஆளில்லா உளவு விமானம் டிரோன்கள் மூலம் அமெரிக்கா தாக்குதலை அதிகரித்துள்ளது. ஈரானில் டிரோன் மூலம் தாக்குதல் நடந்த போது விபத்தில் சில டிரோன்கள் நொறுங்கி உள்ளன. அவற்றை ஈரான் ராணுவம் சேகரித்து ஆராய்ந்து வந்தது. இந்நிலையில் ராணுவ [...]

வாஷிங்டன்::அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 6-ந் தேதி நடக்கிறது. அதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஒபாமா போட்டியிடுகிறார். எதிர்க்கட்சி சார்பில் குடியரசு கட்சி வேட்பாளராக மிட் ரோமினி களம் இறக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த தேர்வு போட்டியில் கட்சி நிர்வாகிகளால் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இருவரும் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னணி பத்திரிகைகளான நியூயார்க் டைம்ஸ், சி.பி.எஸ். நியூஸ் ஆகியவை தங்களது வாசகர் இடையே தேர்தல் குறித்து [...]

தாமரா(ஒடிசா)::ஐயாயிரம் கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் இலக்கைத் தாக்கும் திறன் கொண்ட அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக வியாழக்கிழமை நிறைவேறியது. ஒடிசா மாநில கடலோர நகரான தாமராவின் அருகிலுள்ள வீலர் தீவிலிருக்கும் ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து, சரியாக காலை 8.05 மணிக்கு அக்னி-5 ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது. பின்னர், அந்த ஏவுகணை இந்து மகாசமுத்திரத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை குறி தவறாமல் துல்லியமாகத் தாக்கியது என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ) தலைவர் வி.கே.சாரஸ்வத் தெரிவித்தார். இவர் பாதுகாப்புத் [...]

தனது தலைக்கு விதிக்கப்பட்ட பரிசுத் தொகையை பெறுவதற்கு தலிபான் தளபதி ஒருவர் தானே முன்வந்துள்ளார். அமெரிக்க படையால் விதிக்கப்பட்ட 100 டொலர் பரிசைப் பெறவே இவர் அந்த பரிசை அறிவிக்கும் போஸ்டருடன் ஆப்கான் துருப்புக்களிடம் சென்றுள்ளார். “நாம் அவரிடம் அந்த போஸ்டரை காட்டி ‘இதில் இருப்பது நீங்களா?’ என்று கேட்டோம். அதற்கு அவர் மிக ஆவலுடன் ‘ஆம், ஆம், நான்தான் இது! எனது பரிசை பெற முடியுமா?’ என்று கேட்டார்” என்று இச்சம்பவம் குறித்து அமெரிக்க இராணுவத்தைச் [...]

இலங்கை::சுதந்திரமும் சுகமும் தரும் நந்தன தமிழ் புத்தாண்டு எல்லோருக்கும் மன மகிழ்வையும் புத்துணர்வையும் தரும் நல்லாண்டாக மலர்ந்துள்ளது. இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் அவரவர் வாழ்வில் நல்ல மேம்பாடும் நல்ல பொருளாதார வளமும் அதற்கான வாய்ப்பும் உண்டென ஜனாதிபதியின் இந்துமத அலுவல்கள் விவகார இணைப்பாளர் இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்தார். அண்மையில் இலங்கை சமாதானத்திற்கான சமய பேரவைக்குழுவில் இந்து மதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதியாக ஜப்பான் நாட்டிற்குச் சென்று திரும்பிய பாபுசர்மாவைச் சந்தித்த போது நாட்டில் மலர்ந்துள்ள சமாதானச் [...]

Sunday, April 15, 2012 இஸ்லாமாபாத்::பாகிஸ்தான் சிறை மீது தலிபான் தீவிரவாதிகள் இன்று அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு சிறையில் இருந்து 384 கைதிகள் தப்பியோடி விட்டனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ளது பன்னு மாவட்டம். பழங்குடியினத்தவர்கள் அதிகம் வசிக்கும் எல்லை பகுதியில் இந்த மாவட்டம் உள்ளது. இங்குள்ள சிறையில் ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். மேலும் பன்னு நகருக்கு அருகில் உள்ள கோஹத், [...]