‘உள் நாட்டு செய்திகள்’ பகுப்புக்கான தொகுப்பு

எமது நாட்டு முஸ்லிம் மக்களுக்கு மத வழிபாட்டு உரிமை மறுக்கப் படுகிறது அனைத்து இலங்கையர்களுக்கும் தமது மத வழபாடுகளில் ஈடுபட இலங்கை அரசியலமைப்பில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. எனினும் துரதிஷ்டவசமாக எமது நாட்டு முஸ்லிம் மக்களுக்கு அந்த உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாக அண்மைக்கால சம்பவங்கள் தெரிவிக்கின்றன. என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் தம்புள்ளை நகரில் இடம்பெற்ற சம்பவம் இதற்கு [...]

முஹம்மத் அம்ஹர்: பள்ளிவாசல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் முஸ்லிம்களின் கடுமையான எதிர்ப்பை அரசு சந்திக்க நேரிடும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்த தகவலில் பள்ளிவாசல்களுக்கு எதிராக நாட்டில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவது குறித்து அரசிடமிருந்து இன்னும் உறுதியான எந்தவொரு அறிக்கையும் கிடைக்கவில்லை. என்று தம்புள்ள பள்ளிவாசல் அகற்றப்படும் என்று தெரிய வந்ததும் அனைவரும் ஆர்பாட்டத்தை நடத்தினர் .அத்துடன் அவர்களின் நடவடிக்கைகளை நிறுத்திக் [...]

எஸ்.அஷ்ரப்கான்: கல்முனை மாநகர பிரதேசத்திற்குட்பட்ட 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. சா.தர பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் மாநகர முத்துக்கள் நிகழ்வும் புத்தக வெளியீடும் வெள்ளிக்கிழமை (25) சாய்ந்தமருது கடற்கரை பூங்காவில் கல்முனை மாநகர முதல்வர் ஸிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழவுக்கு பிரதம அதிதியாக நீதி அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களும், கெளரவ அதிதிகளாக  பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத், பாராளுமன்ற உறுப்பினர்களான  எம்.ரீ.ஹசனலி, எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசீம் ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக மாகாண [...]

முஹம்மத் அம்ஹர்: தெஹிவளை பிரதேசத்தில் கல்வல வீதியில் அமைந்துள்ள தாருர் ரஹ்மான் மஸ்ஜித் , சிறுவர் மதரஸாவுக்கு எதிராக இரண்டாவது ஆர்ப்பாட்டம் ஒன்று  இடம்பெற்றுவருகிறது . தெஹிவளை பிரதேசத்தின் கல்வல வீதி மிருகக்காட்சி சாலைக்கு பின்புறம் அமைந்துள்ள சிறுவர் மதரஸாவாகவும் , மஸ்ஜித்தாகவும் இயங்கிவரும் கட்டடத்திற்கு எதிராகவே அந்த ஆர்ப்பாட்டம் பெளத்த பிக்குகள் தலைமையில் இடம்பெற்றுவருகிறது . குறித்த கட்டிடம் சட்டவிரோதமான கட்டடம் என்றும், அனுமதி பெறாமல் மஸ்ஜித்தாக இயங்குவதாகவும் அங்கு மாடுகளை பலியிடுவதாகவும்  கூறியே அதற்கு எதிராக ஆர்பாட்டம் [...]

ஏ.அப்துல்லாஹ் : மட்டகளப்பு – கள்ளியங்காடு பிரமகுமாரிகள் இராஜயோக நிலையமாக மாறியுள்ள மஸ்ஜிதுல் பிர்தௌஸ் மீட்பதற்கு  மட்டகளப்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மூன்றாம் கட்ட விசாரணை இன்று நடைபெறவுள்ளது . மஸ்ஜிதுல் பிர்தௌஸ் மீட்பதற்கு நீதிமன்றத்தை நாடவுள்ளதாக காத்தான்குடி மஸ்ஜிதுகள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் MIM.சுபைர் lankamuslim.org க்கு சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார் .தற்போது மஸ்ஜிதுல் பிர்தௌஸ் அமைத்திருந்த காணியை மீட்பதற்காக வழக்கு இன்று நடைபெறவுள்ளது . மஸ்ஜிதுல் பிர்தௌஸின் [...]

இலங்கை::முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அரசாங்கம் பொன்சேகாவுக்கு அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பை வழங்க சம்மதித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அர்ஜுன ரணதுங்க மேலும் கூறுகையில், ஜனாதிபதியின் மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தினோம். பொன்சேகாவின் குடும்ப உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸும் இவ்விடயத்தினை அரச மட்டத்திற்கு எடுத்துச் சென்றனர். இவர்களது [...]

போர் குற்றம், மனித உரிமை மீறல் தொடர்பில் இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கொடுக்கப்படும் அழுத்தங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ரஷ்ய வெளிவிவகார அமைச்சரால் இக்கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இறைமை கொண்ட இலங்கையின் சம்மதமின்றி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அனுமதி இன்றி இவ்வாறு சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தப்படுவது பிழையான முயற்சி [...]

கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ்  உறுப்பினர் மசூர் சின்னலெப்பை (வயது 54) இன்று செவ்வாய்க்கிழமை காலை காலமானார். கடந்த இரு தினங்களாக சுகவீனமுற்ற நிலையில் கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எம்.ஜெமீல் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார். தற்பொழுது கொழும்பில் உள்ள இவரது ஜனாஸா அவரது சொந்த ஊரான அட்டாளைச்சேனைக்கு விசேட விமானத்தின் மூலம் [...]

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சகல வசதிகளும் கொண்ட பொறியியல் பீடம் ஒன்றை விரைவில் அமைக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா கடந்த சனிக்கிழமை ஒலுவில் வளாக பல்கலைப் பூங்காவில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதேவேளை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல், தொழில்நுட்ப பீடம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விஞ்ஞான பீடத்தில் கணணி, புள்ளிவிபரவியல், பௌதீகவியல் இரசாயனவியல் உயிரியல் [...]

கட்டார் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டின் ஷேக் ஹமாட் பின் காலீபா அல் தானி மற்றும் பிரதமர் ஷேக் ஹமாட் பின் ஜாசிம் பின் ஜாபர் அல்தானி ஆகியோர் படங்கள் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். தனது வெளிநாட்டுப் பயணத்தையும் ஒத்திவைத்து விட்டு ஜனாதிபதிக்கு கௌரவம் வழங்குவதற்கு தான் முடிவு செய்து இப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதாக மன்னர் அறிவித்துள்ளார். அத்தோடு இலங்கைக்கு வழங்கும் உதவிகள் தொடர்பில் தாம் திருப்தி கொள்ளவில்லையென்றும் எதிர்காலத்தில் தேவையான [...]