‘சுகாதாரம்’ பகுப்புக்கான தொகுப்பு

கழிவுநீரில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை இங்கிலாந்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி உருவாக்கி வருகிறார். உலக பணக்காரர் பில்கேட்ஸ் அளித்த நிதியுதவியுடன் இந்த ஆராய்ச்சி நடந்து வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவன அதிபரும், உலக பணக்காரர்களில் முன்னணியில் இருப்பவருமான பில்கேட்ஸ், குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கான கண்டுபிடிப்பை ஊக்குவிக்க நிதியுதவி அறிவித்தார். உலகம் முழுவதும் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களது ப்ராஜக்ட்களை அனுப்பினர். அதில் இங்கிலாந்தை சேர்ந்த நானோ தொழில்நுட்ப வல்லுனர் சாரா ஹே என்ற பெண்ணின் ப்ராஜக்ட் [...]

சவர்க்காரம் இட்டு கை கழுவாமல் உணவுப் பொருட்களை உண்பதால் வாந்திபேதி, நியூமோனியா போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இவ்விரு நோய்களினாலும் உலகில் வருடமொன்றுக்கு இரண்டு மில்லியன் சிறுவர்கள் (20 இலட்சம்) மரணமடைகின்றனரென யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி அப்துல்லா கான் தெரிவித்தார். உலக கைகழுவல் தினத்தின் தேசிய வைபவம் அநுராதபுரம் வலிசிங்க ஹரிச்சந்திர மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது, இவ்வாறான [...]

கை குலுக்கினால் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் ஏற்படும் என நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.   இங்கிலாந்தில் உள்ள ஸ்டான் போர்டு பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சி நிபுணர் நாதன்வோல்பே தி வைரஸ் ஸ்ட்ராம் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், வயிற்று வலி, காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் போன்றவை தோல் மூலம் மற்றவர்களுக்கு பரவுகின்றன. அதை தடுக்க சில எளிய முறையை மேற்கொள்ளலாம்.   அன்பை பரிமாறிக் கொள்ள ஒருவருக்கொருவர் கை குலுக்கி கொள்கின்றனர். அதை தவிர்க்க வேண்டும். மாறாக தங்களின் [...]

விழிகளில் படலம் ஏற்படுகின்றமையால் வருடாந்தம் ஒரு இலட்சம் பேர்வரை பார்வையை இழக்க நேரிடுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது. விழிகளில் ஏற்படுகின்ற படலங்களை அகற்றும் சுமார் 75 ஆயிரம் சத்திரசிகிச்சைகள் வருடாந்தம் அரசாங்க வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் கூறுகின்றது. விழிகளில் தோன்றும் படலத்தை அகற்றும் சத்திரசிகிச்சையை மேற்கொள்வதன் மூலம் இந்த நோய்க்கு நிரந்தர தீர்வினைக் காணமுடியும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது

சிறுவர்கள் மனநல பாதிப்புகளுக்கு இலக்காகும் தன்மை அதிகரித்துச் சென்றுள்ளதாக அங்கொடை தேசிய மனநல சுகாதார ஆய்வுநிறுவனம் தெரிவிக்கிறது. குடும்பத் தகராறுகள் கல்வி மற்றும் சமூக பிரச்சினைகளே இந்த நிலைமைக்கு காரணமாக அமைந்துள்ளதென அந்த நிறுவனத்தின் பணிப்பாளரும் விசேட மனநல வைத்திய நிபுணருமான ஜயன் மெண்டிஸ் குறிப்பிடுகிறார். பிள்ளைகளிடையே மன அழுத்தம் பரந்தளவில் காணப்படுதாகவும் விசேட மனநல வைத்திய நிபுணர் குறிப்பிட்டார். பிள்ளைகளுக்கு சிறந்த இளம் பராயமும், பெற்றோரின் உரிய பராமரிப்பும் பி்ள்ளைகளின் மன அழுத்தங்களை இனங்கண்டு அவற்றுக்கு [...]

               இலங்கையில் தினமும் 900 கருக் கலைப்புக்கள் இடம்பெறுவதாக குடும்ப சுகாதாரப் பணியகம் தெரிவித்துள்ளது. இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் கருக்கலைப்புக்கள் வருடாந்தம் இடம்பெறுகின்றன. வருடாந்தம் 3 இலட்சத்து 80 ஆயிரம் பிறப்புக்கள் இடம்பெறுகின்ற நிலையிலேயே கருக்கலைப்புக்களும் அதிகரித்திருப்பதாக சமூக, சுகாதார ஆலோசகர் வைத்தியர் கபில ஜெயரட்ண தெரிவித்தார். 2005 ஆம் ஆண்டிலேயே மிகக் குறைவான 660 கருக்கலைப்புக்கள் நாளாந்தம் இடம்பெற்றிருந்ததுடன், 17 உயிர்கள் வருடாந்தம் இழக்கப்பட்டதாக அவர் [...]

இரவில் முன் கூட்டியே தூங்க சென்று அதிகாலையில் கண் விழிப்பது உடல் நலத்துக்கு நல்லது. அவர்கள் சொல்வாக்கு மற்றும் செல்வாக்குடன் திகழ்வார்கள் என கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்னரே பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர் தெரிவித்து இருந்தார். அது முற்றிலும் உண்மை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இங்கிலாந்தில் உள்ள ரோம்ப்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக சுமார் 1100 ஆண்கள் மற்றும் பெண்களை தேர்ந்தெடுத்தனர். அவர்களில் அதிகாலையிலேயே எழுபவர்கள் ஒல்லியாகவும், நல்ல உடல் நலத்துடனும் [...]

ஐரோப்பிய நாடுகளில் பரவிவரும் “ஈ-கோலி’ என்னும் நோய் எமது நாட்டிலும் பரவும் அபாயம் காணப்படுவதாக இலங்கை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உணவு, குடிதண்ணீர் மற்றும் தொற்று நோய்க்கு உட்பட்ட விலங்குகள் மூலம் நேரடியாகத் தாக்கும் கிருமிகளால் இந்த நோய் வேகமாகப் பரவக்கூடியது எனவும் இந்த நோயின் அறிகுறியாக வயிற்றுநோ, வயிற்றுளைவு, மலத்துடன் இரத்தம் வடிதல், காய்ச்சல், வாந்தி போன்றவை காணப்படுமெனவும் குறிப்பாக இளம் சிறார்கள், முதியோர்களைத் தாக்கி உயிராபத்தை ஏற்படுத்தக் கூடியது [...]

Following a court order that the marketers of Astra Margarine have evaded displaying the warning label on the product stating the content was harmful to the health of kids under three years, the Health Ministry has ordered the Public Health Inspectors countrywide to check all Astra Margarine packs in the market, Health Ministry sources said. [...]

உலகம் முழுவதும் சுமார் 10 கோடி பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 1980-ம் ஆண்டில் புதிய கருத்தடை மாத்திரைகளை தயாரித்தனர். அவை “மூன்றாம் தலைமுறை கருத்தடை மாத்திரை” என அழைக்கப்படுகிறது. இவை இதற்கு முன்பு பெண்களால் பயன்படுத்தப்பட்ட மாத்திரைகளைவிட ஆபத்தானது. இது ரத்தத்தை உறைய செய்யக் கூடியது என கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நிபுணர்கள் 2 ஆய்வுகள் நடத்தினர். அதில் மேற்கண்ட தகவல் தெரிய வந்துள்ளது. ரத்தம் உறைவதால் சில நேரங்களில் இது [...]