‘தகவல்கள்’ பகுப்புக்கான தொகுப்பு

கழிவுநீரில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை இங்கிலாந்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி உருவாக்கி வருகிறார். உலக பணக்காரர் பில்கேட்ஸ் அளித்த நிதியுதவியுடன் இந்த ஆராய்ச்சி நடந்து வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவன அதிபரும், உலக பணக்காரர்களில் முன்னணியில் இருப்பவருமான பில்கேட்ஸ், குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கான கண்டுபிடிப்பை ஊக்குவிக்க நிதியுதவி அறிவித்தார். உலகம் முழுவதும் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களது ப்ராஜக்ட்களை அனுப்பினர். அதில் இங்கிலாந்தை சேர்ந்த நானோ தொழில்நுட்ப வல்லுனர் சாரா ஹே என்ற பெண்ணின் ப்ராஜக்ட் [...]

  பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்திற்கு2012 ஆம் பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்திற்கு2012 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்கள் (முஸ்லிம் ஆண்) சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். இதற்கான எழுத்து மற்றும் நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 24, 25, 26 ஆம் திகதிகளில் காலை 8.30மணி முதல் ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் நடைபெறவுள்ளது. எழுத்துப் பரீட்சையில் மாணவர்களின் மொழித்திறன், பொது அறிவு, விவேகம் என்பன பரீட்சிக்கப்படும். க.பொ.த. (சா.த) பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கான தகைமை பெற்ற (இஸ்லாம், கணிதம், தமிழ்) பாடங்களில் சித்தியடைந்த, 2012 ஜனவரி 31 ஆம் திகதிக்கு 17 வயதுக்கு மேற்படாதவர்கள் பரீட்சையில் கலந்துகொள்ளலாம். நேர்முகப் [...]

சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம் பாடசாலை மாணவர்களிடையே ஊடக அறிவை வளர்ப்பதற்காக கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் 31 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை கொழும்பு தெமட்டகொடை கைரியா முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. நிகழ்வில் பிரதம அதீதியாக பங்களாதேஷின் இலங்கைக்கான தூதுவர் கலந்துகொள்ளவுள்ளார். 21 ஆம் நூற்றாண்டின் ஊடகம் எனும் தொனிப்பொருளிலான இக்கருத்தரங்கிற்கு மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமை வகிக்கவுள்ளார். கருத்தரங்கில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் [...]

இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி புதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகப் பரீட்சை – 2012 ஷரீஆ கற்கைநெறியுடன் உயர் கல்வியைத் தொடர விரும்பும் மாணவிகள் கீழ்காணும் தகைமைகள் இருப்பின் நேர்முகப் பரீட்சையில் கலந்துகொள்ளலாம். தகைமைகள்: 1. 1995.01.01ம் திகதிக்கு பின்னர் பிறந்திருத்தல். 2. க.பொ.த. சா/த இல் மூன்று பாடங்களில் “C” சித்தியுடன் கணிதம், தமிழ் உட்பட 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல். 3. சிங்கள மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றியவர்களும் ஓரளவு தமிழ் எழுத வாசிக்கத் தெரிந்திருந்தால் இதற்கு விண்ணப்பிக்கலாம். காலம்: வடக்கு, வடமத்தி,கிழக்கு, தென், ஊவா, சப்ரகமுவ,மேல், மத்திய மாகாணங்களில் வதிவோருக்கு 21.04.2011 சனிக்கிழமையும், வடமேல் மாகாணத்தில் [...]

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இப்பெறுபேறுகளை www.doenets.lk  எனும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்

   குறும்திரைப்பட சான்றிதழ் கற்கைநெறி ஒன்றை வாமி நிறுவன ஊடகப் பிரிவு நடாத்த திட்டமிட்டுள்ளது. மூன்று மாத இக்கற்கை நெறியானது கொழும்புவாமி கேட்போர் கூடத்தில் ஒவ்வொரு சனிக்கிழமை நாட்களிலும் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இடம்பெறவுள்ளது.   இக்கற்கை நெறியின் இறுதிப்பகுதியில் மாணவர்களைக்கொண்டே இன்ஷா அல்லாஹ் இரண்டு குருந்திரைப்படங்கள் தயாரிக்கப்படும். அத்துடன்படப்பிடிப்பினை நேரடியாகப் பார்ப்பதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்படும். மிகப் பெறுமதிமிக்க இக்கற்கை நெறி முழுவதற்காகவும் மாணவர்களின் நலன் கருதி ரூபா 1500 [...]

2011-2012 ஆம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பப்படிவம் இன்று தொடக்கம் விநியோகிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.   2011ம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலதிக விபரங்களுக்கு: www.ugc.ac.lk

-ஏ.அப்துல்லாஹ்: தனிநபர்களின் மின்னஞ்சல்களை கண்காணித்து உளவு பார்ப்பதில் அமெரிக்கா, பிரேசில் இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களை கைப்பற்றியுள்ளதாக Google Transparency Report அறிக்கை கூறுகிறது. மின்னஞ்சல் உளவு பார்ப்பதில் தொடராக அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. google பயனீட்டாளர்களின் விபரங்களை பெற்றுக்கொள்ள தங்களை அணுகுவதில் அமெரிக்கா, பிரேசில் இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில் உள்ளதாக Google Transparency Report அறிக்கை தெரிவிக்கிறது. அதேவேளை 2011 ஆம் ஆண்டு முதல் முறையாக ஒரு [...]

காணி தொடர்பில் பிரச்சினைகள் எதுவும் இருக்குமாயின் அது குறித்து நடவடிக்கை எடுக்க குற்றத் தடுப்புத் திணைக்களத்தில் தனியொரு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  காணி பிரச்சினைகள் குறித்து முறையிட விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  அதன்படி 24 மணித்தியாலங்களும் இயங்கும் வகையில் 1933 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  காணி அதிகாரத்தை சூழ்ச்சி செய்து பெற்றுக் கொள்ளுதல், பலாத்காரமாக காணிகளை கையகப்படுத்தல் என்பவை குறித்து பொது மக்கள் முறைப்பாடு செய்ய முடியும்.

தகவல் உதவி – Inamullah Masihudeen “சமகால முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பங்களும் சவால்களும், அடைவுகளும், பின்னடைவுகளும்” பட்டதாரிகள், பல்கலைகழக மாணவர்களுக்கான ஒரு முழு நாள் செயலமர்வும் கலந்துரையாடலும் நடைபெறவுள்ளது. பங்கு கொள்ள விரும்புபவர்கள் விபரங்களுடன் மின் அஞ்சல் மூலம் மாத்திரம் தொடர்புகொள்ளமுடியும். உங்கள் முகவரி மற்றும் தொலை பேசி இலக்கங்களை தவறாது குறிப்பிடவும். சான்றிதழ் மற்றும் ஆவணங்களும் வழங்கப்படும். slcgksa@gmail.com CENTRE FOR MUSLIM POLITICAL STUDIES – COLOMBO 12 இச்செயலமர்வில் அரசியல் தீர்வு முயற்சிகள் [...]