‘தொழில்நுட்பத் தகவல்கள்’ பகுப்புக்கான தொகுப்பு

மென்பொருள் துறையில் முதன்மையான மைக்ரோசாப்ட் தற்போது புதிய சமூக வலைத்தளம் ஒன்றை கட்டமைத்து வருகின்றனர். மைக்ரோசாப்டின் புதிய சமூக வலைத்தளத்திற்கு Socl என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் (User Interface) மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இடது புறத்தில் Navigation வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. செய்திகள் Feed என வகைப்படுத்தப்பட்டுள்ளன. நமது செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. (Update Status). Social Search: இதில் சமூக வலைத்தளத்திலிருந்தே தேடிக் கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது. நீங்கள் தேடும் போது வழக்கமான தேடல், நண்பர்களின் [...]

  கழிவுப் பொருட்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இரண்டு திட்டங்கள் மேல் மாகாண சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கரதியான மற்றும் கடுவெல ஆகிய பகுதிகளில் இந்த மின் உற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக மேல் மாகாண சபையின் கழிவுப் பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நலின் மான்னப்பெரும தெரிவித்தார். மலேசியா மற்றும் இந்தியாவிலுள்ள இரண்டு நிறுவனங்கள் இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் கூறினார். இதன் ஊடாக 50 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விண்வெளி துறை பேராசிரியர் ஸ்டீவன் வோக்ட் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது, பூமியை போன்ற மற்றொரு கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அந்த கிரகத்துக்கு கிளைஸ் 581ஜி என பெயரிட்டுள்ளனர். இது பூமியில் இருந்து 123 லட்சம் கோடி தொலைவில் உள்ளது. இந்த புதிய கிரகத்தில் தண்ணீர் உள்ளது. எனவே அங்கு மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழும் சூழ்நிலை இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியை சுற்றி இருப்பது போன்றே [...]

சேற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இஸ்ரேல் கண்டுபிடித்துள்ளது.இதுகுறித்து இஸ்ரேலை சேர்ந்த மின் உற்பத்தி நிறுவனம் ஜிஆர்பிஎல் தரப்பில் கூறப்படுவதாவது, ஆற்றுப் படுகையில் சேரும் சேறு, சகதியில் படிந்திருக்கும் மின்காந்த சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. மின் உற்பத்திக்கான இயந்திரங்களை பயன்படுத்த சுற்றுச்சூழலுக்கு ஆதரவான சூரிய மின்சக்தி பயன்படுத்தப்படும். இயற்கை எரிவாயு தயாரிப்பு உலை மூலம் சேறு, சகதியை வெப்பமூட்டுவதன் மூலம் அது வாயுவாக வெளிப்பட்டு டர்பைன்கள் வழியாக மின் உற்பத்தியாகும். சேறு, சகதி [...]

தினம் தினம் புதுமைகளை சந்தித்து கொண்டிருக்கிறது மொபைல் உலகம். அந்த புதுமைகள் வாடிக்கையாளர்களின் வசதிகளை நாளுக்கு நாள் பெருக்கி வருகிறது. அதன் அடிப்படையில் இப்போது டோல்மோல்.காம் மற்றும் என்மேக் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து என்மேக் குரான் என்ற பெயரில் புதிய மொபைலை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த மொபைல் முஸ்லிம் சமுதாய மக்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் உள்ள ஓர் அற்புதமான வசதியின் மூலம் எங்கிருந்தாலும், குரான் வாசகங்களை எந்த நேரத்திலும் கேட்டு பயன் பெறலாம். இந்த [...]

மன்னார் கடற்பரப்பில் இரண்டாவது எரிவாயு கிணறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனம் பெற்றோலிய வள அபிவிருத்தி செயலகத்திற்கு அறிவித்துள்ளது. மன்னார் கடற்பரப்பை அண்மித்த பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது எண்ணெய்க் கிணறு முதலாவது கிணற்றிலிருந்து 38 கிலோ மீற்றர் தொலைவில் இருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

புனே : தீவிரவாதிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் ரோபோக்களையும், வெடிகுண்டுகளை செயல் இழக்கச் செய்யும் ரோபோக் களையும் புனே விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், ஏவுகணைகள், போர் விமானங்களை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தயாரித்து கொடுத்து வருகிறது. இந்த மையத்தின் ஒரு பிரிவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பொறியியல் அமைப்பு புனேயில் செயல்பட்டு வருகிறது. இ¢ந்த அமைப்பை சேர்ந்த விஞ்ஞானிகள் 2 ரோபோக்களை கண்டுபிடித்துள்ளனர். ஒரு ரோபோ தனது தலையில் [...]

வாஷிங்டன் : பேச, எஸ்எம்எஸ் அனுப்ப, அலாரம் வைத்துக் கொள்ள மட்டுமே செல்போன் பயன்பட்டது ஒரு காலம். அந்த செல்போன் இப்போது பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன், பேத்தி எடுத்துவிட்டது. பர்சனல் டிஜிட்டல் அசிஸ்டென்ட், போர்ட்டபிள் மீடியா பிளேயர், கேமரா, இடம் கண்டுபிடிக்க உதவும் ஜிபிஎஸ், மொபைல் இன்டர்நெட் வசதி.. உள்பட இன்னும் என்னென்னவோ வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் தற்போது அதிகம் வந்துவிட்டன. ஸ்மார்ட்போன்கள் இயங்குவதற்கு ஏராளமான ஆபரேடிங் சிஸ்டம்களும் உள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ், கூகுள் [...]

தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றாக நிர்வாணம்காட்டும் ஜபோன் இப்போது பெரிதும் மக்கள் பாவனையில். இந்த ஜபோன் மூலம் பெண்களும் சரி ஆண்களும் சரி இவர்கள் ஆடை அணிந்து வந்தாலும் இந்த மென்பொருள் ஆடையை நீக்கிகாட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களை அறிவியல், கணிதம் மற்றும் பொறியியல் துறைகளில் ஊக்குவிக்கவும் அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தவும் யுடியூப் மற்றும் லெனோவோ நிறுவனங்கள் புதிய அறிவியல் போட்டியை அறிவித்துள்ளன. உலக அளவில் நடக்கவுள்ள இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் விண்வெளியில் பறக்கவுள்ளனர். இதுதொடர்பாக யுடியூப் மற்றும் லெனோவோ நிறுவனங்கள் இணைந்து “ஸ்பேஸ் லேப்” என்ற போட்டியை அறிவித்துள்ளன. இதில் உலகம் முழுவதிலும் உள்ள 14 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். விண்வெளியில் சுற்றிவரும் ஆய்வு மையத்தின் புவிஈர்ப்பு [...]