‘மொழிபெயர்ப்பு’ பகுப்புக்கான தொகுப்பு

“குருவே வணக்கம். எனக்கு ஒரு பிரச்னை. நான் எது செய்தாலும் மற்றவர்கள் கிண்டலடிக்கிறார்கள்’ என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. “அதனாலென்ன? நீ அவர்களைப் பொருட்படுத்தாமல் காரியங்களை செய்ய வேண்டியதுதானே’ என்றார் குரு. “என்னால் அப்படி இருக்க முடியவில்லை குருவே’என்று சொன்னவனுக்கு குரு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார். “ஒரு முறை டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் டாக்ஸி ஏறினார்கள் இரண்டு இளைஞர்கள். டாக்ஸி டிரைவர் ஒரு வயதான சர்தார்ஜி. அவரைப் பார்த்ததும் இளைஞர்களுக்கு கிண்டல் புத்தி வந்துவிட்டது. [...]