‘விளையாட்டுச் செய்திகள்’ பகுப்புக்கான தொகுப்பு

சென்னை::சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் இறுதி போட்டி நாளை நடைபெறுகிறது. போட்டியை நேரில் பார்ப்பதற்காக இன்று காலை டிக்கெட் எடுக்க வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், சேவாக் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும் இடையே நேற்று நடந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணியும், [...]

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை அடுத்துத் தான் பதவியிலிருந்து விலகியபோது இலங்கை அணியின் தலைவராக அஞ்ஜலோ மத்தியூஸ் இலங்கை அணித் தலைவராகப் பதவியேற்றிருக்க வேண்டும் எனக் கருதுவதாக இலங்கை அணியின் மூத்த வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். அதற்கான தகுதிகள் அவரிடம் காணப்படுவதாகத் தான் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளை அடுத்து அப்போது அணித் தலைவராகப் பதவி வகித்த குமார் சங்கக்கார அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். குமார் சங்கக்காரவோடு அப்போது [...]

இந்தியன் பிறீமியர் லீக் போட்டிகள் இறைச்சிக் கடைக்காரர்களையே உருவாக்கும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் சபை மீது மாத்திரமன்றி, இந்திய கிரிக்கெட் சபை மீதும் விமர்சனங்களை முன்வைத்த அர்ஜுன ரணதுங்க, இந்திய கிரிக்கெட் சபை ஐ.பி.எல் போட்டிகள் மூலம் கிரிக்கெட்டைச் சிதைப்பதாக குற்றஞ்சாட்டினார். இலங்கை கிரிக்கெட் அணி முக்கியமான தொடர்களிலெல்லாம் தோல்விகளைச் சந்தித்து வருவதற்கு இலங்கையில் கிரிக்கெட்டிற்குள் அரசியல் புகுந்தமையே காரணம் எனத் தெரிவித்த அவர், ஜனாதிபதியிலிருந்து அனைவரும் [...]

இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துஅணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. பி.சாரா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் 5 ஆவது நாளான இன்று இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 278 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் 94 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்பட்டன. இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இத்தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றது. இதனால் 2 போட்டிகள் [...]

இலங்கைக்கெதிராக நாளைய தினம் இடம்பெறவுள்ள தீர்மானம் மிக்க மூன்றாவது இறுதிப் போட்டியில் அவுஸ்ரேலிய அணி சார்பாக அணித்தலைவர் மைக்கல் கிளார்க், வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பற்றின்சன் இருவரும் பங்குபெற மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்தொடைத் தசைநாரில் ஏற்பட்ட உபாதை காரணமாக மைக்கல் கிளார்க்கும், பின்பகுதியில் ஏற்பட்ட உபாதை ஜேம்ஸ் பற்றின்சனும் நாளைய போட்டியில் பங்குபெற மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மைக்கல் கிளார்க், அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்ரேலிய அணி சார்பாக ஒருநாள் சர்வதேசப் [...]

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்யும் நான்காவது 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இலங்கையில் நடைபெறவுள்ளன. இலங்கையில் நடைபெறவுள்ள இவ்வுலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்குரிய சகல வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே அமைச்சரவைக்கு முன்வைத்திருந்த ஆலோசனைக்கமைய அமைச்சரவை இத்தீர்மானத்தை எடுத்துள்ளது. மகளிருக்கும் ஆண்களுக்குமான இக்கிரிக்கெட் போட்டிகளுக்கென 20 அணிகள் கலந்து கொள்கின்றன. 52 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கென சர்வதேச கிரிக்கெட் [...]

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கரூரில் நடந்த ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- இலங்கை அணியில் 20 ஆண்டுகளாக நான் விளையாடி வருகிறேன். வளர்ந்து வரும் வீரர்களுக்கு 3 ஆண்டுகள் அவகாசம் தர வேண்டும். அப்போதுதான் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உருவாக வாய்ப்பு கிடைக்கும். தற்போது உலகளவில் ஹர்பஜன்சிங், அஸ்வின், டேனியல் வெட்டோரி, அஜ்மல், சுவான் ஆகியோர் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். சச்சின் [...]

  தெற்காசிய உதைப்பந்தாட்ட சம்மேளன (சாவ்) சுற்றுப்போட்டியில் இலங்கை அணியை ஆப்கானிஸ்தான் அணி 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது. இந்தியாவில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் இலங்கை அணி வீரர் மொஹமட் செய்ன் 17 ஆவது நிமிடத்தில் முதலாவது கோலை அடித்தார். இருந்தபோதும் அதன்பின்னர் திறமையாக ஆடிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் 3 கோல்களi அடித்து போட்டியில் வெற்றியீட்டினர். நாளை இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையே மற்றுமொரு போட்டி நடைபெறவுள்ளது.

  இலங்கையில் நடைபெறும் முதலாவது தெற்காசிய கடற்கரை விளையாட்டு விழா கடந்த சனிக்கிழமை (ஒக். 08) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை பீச் பார்க்கில் நடைபெறவுள்ளது. இதற்காக ஹம்பாந்தோட்டை நகரும், விளையாட்டு மைதானமும், தெற்காசிய நாடுகளின் தேசியக் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூட்டான், பங்களாதேஷ் மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய எட்டு நாடுகளில் இருந்தும் 400 [...]

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஹசிம் அம்லா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சாம்பியன்ஸ் “லீக்” போட்டியில் ஆடியதால் டிவில்லியர்ஸ் காயம் அடைந்தார். இதனால் அவருக்கு பதிலாக அம்லாவுக்கு கேப்டன் பதவி கிடைத்துள்ளது. மார்க் பவுச்சர், டேவிட் மில்லர் ஆகியோர் ஒருநாள் போட்டிக்கான அணியிலும், 20 ஓவர் போட்டியிலும் இடம் பெற்றுள்ளனர். காலிஸ், ஸ்டெய்னுக்கு 20 ஓவர் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக தேசிய [...]