யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களிலுள்ள மீனவர்களை கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. தாழமுக்கம் வடமேல் திசையை நோக்கிப் பயணிப்பதே இதற்குக் காரணமென திணைக்களத்தின் கடமை நேர வானிலை நிபுணர் குறிப்பிட்டார். இதனால் கடற்பகுதிகள் ஏனைய நாட்களையும் விட சற்றுக்கொந்தளிப்பாகக் காணப்படுமென அவர் குறிப்பிட்டார். மேற்குறிப்பிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் கடுங்காற்று வீசுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல [...]
‘வேண்டுகோள்’ பகுப்புக்கான தொகுப்பு
சீரற்ற காலநிலை தொடருகிறது, மக்கள் இடப்பெயர்வு, மீனவர் கடலுக்கு செல்லவேண்டாம்
Posted: December 24, 2011 in உள் நாட்டு செய்திகள், வேண்டுகோள்இவ்வருடத்தின் இறுதிக்கிரகணமான பூரண சந்திர கிரகணம் இன்ஷாஅல்லாஹ இன்று சனிக்கிழமை (10.12.2011) ஏற்படவுள்ளதாக வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் இலங்கைக்கும் இது உச்சம் கொடுக்குமெனவும் இலங்கை நேரப்படி இரவு 6.15 முதல் பகுதிக் கிரகணத்தின் உச்சம் ஆரம்பமாகி இரவு 8.00 மணியளவில் பூரண உச்சம் கொடுக்குமெனவும் தெரிவிக்கின்றன. இவ்வாறான கிரகணங்கள் ஏற்படும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுங்கள், இறைஞ்சுங்கள், பிழை பொறுக்கத் தேடுங்கள் என்று உபதேசம் செய்வதுடன் கிரகணத் தொழுகையையும் நிறைவேற்றுவார்கள். [...]
இலங்கையில் இஸ்லாத்தின் வளர்ச்சி – நடுங்கும் சிங்கள பேரினவாதம்
Posted: December 3, 2011 in உள் நாட்டு செய்திகள், வேண்டுகோள்எமது குறிப்பு – (இலங்கையின் சனத்தொகை கணக்கெடுப்பு நீதியாக நடத்தப்படுமாயின் 20 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் நாட்டில் உள்ளனர் என்பதை அறிந்துகொள்ளமுடியும். அவ்வாறான ஒருவேளையில் சிங்களப் பேரினவாதம் தென்னிலங்கையிலும், வடகிழக்கில் தமிழ் தேசியமும் முஸ்லிம்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக அமையலாம். இந்நிலையில் சிறந்த தந்திரோபாய உபாயங்களை வகுக்கவேண்டிய கட்டாயத்தில் இலங்கை முஸ்லிம் உம்மா தள்ளப்பட்டுள்ளது என்பதை முன்கூட்டியே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்) அபூ மஸ்லமா இலங்கையில் முஸ்லிம்கள் அநுபவிக்கும் உரிமைகள் எவ்வளவு தாராளமாக உள்ளனவோ அதே போன்று [...]
இந்த மாதம் 20 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு, ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி வீதி விபத்துக்களின் பலியானவர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை சுகாதார அமைச்சு சகல இலங்கையர்களிடமும் விடுத்துள்ளார். நாட்டில் விபத்துக்களின் சிக்குண்டு மரணமானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக, முதல் தடவையாக நவம்பர் மாதாம் 20 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு விபத்துக்களில் 15 தொடக்கம் 45 வயதுடையவர்களே அதிகம் பலியாவதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. [...]
பல ஆண்டு காலமாக இருந்து வந்த அல்லாஹ்வை ஸுஜுது செய்யும் மட்டக்களப்பு கள்ளியங்காடு பிர்தௌஸ் பள்ளிவாயல் நிர்வாகப் பயங்கரவாதத்தின் ஆசீர்வாதத்துடன் ஆக்கிரமிப்புக்குள்ளாகி அழிக்கப்பட்டு பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையம் கட்டப்பட்டு கடந்த 09.11.2011 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த பள்ளிவாயலின் பெயரில் காணி பத்திரமிருந்தும் கூட இப்பிரதேசத்தில் இருக்கின்ற பெண் அரச நிருவாகியொருவர் நிர்வாக துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு இப்பள்ளிவாயலின் பேர்மிட்டை மாற்றி பிரம்மகுமாரி இராஜயோக நிலையம் அமைப்பதற்கு அனுமதி கொடுத்தார். அத்தோடு சில அரசியல்வாதிகளும் இந்த பெண் அரச [...]
வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் – நாடு பூராகவும் சுவரொட்டிகள்
Posted: அக்டோபர் 28, 2011 in வேண்டுகோள்வடமாகாண முஸ்லிம்கள் வடமாகாணத்தில் இருந்து விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்டு ஒக்டோபர் மாதத்துடன் 21 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. இந்த சம்பவம் ஆண்டுதோறும் வடமாகாண முஸ்லிம்களால் நினவு கூறப்படுகின்றது. இந்த ஆண்டும் நினைவுகூரும் நிகழ்வுகள் கொழும்பு ,கண்டி, புத்தளத்தில், மன்னார் , யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கறுப்பு ஒக்டோபர் 2011 நிகழ்வுகளின் கருப்பொருளாக முஸ்லிம் மீள்குடியேற்றத்தை ஊக்குவித்தல் , தமிழ் , முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் மீண்டும் புரிந்துணர்வையும் , ஒருமைப்பாட்டையும் ஊக்குவித்தல். வடமாகாண முஸ்லிம்களின் [...]
கடாபி மறைவுக்கு இன்று ஜும்மாவுக்கு பிறகு அனைத்து பள்ளிவாசல்களிலும் ஜனாஸா தொழுகை நடாத்த அலவி மெளலானா மற்றும் பைஸர் முஸ்தபா வேண்டிகோள்
Posted: அக்டோபர் 28, 2011 in வேண்டுகோள்படுகொலை செய்யப்பட்ட லிபியத் தலைவர் முஅம்மர் கடாபி மற்றும் சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஸ் ஆகியோரின் மறைவுக்காக சகல பள்ளிவாசல்களிலும் இன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகையின் பின்னர் ஜனாஸா தொழுகை நடத்துமாறு மேல் மாகாண ஆளுநர் அல்ஹாஜ் அலவி மெளலானா மற்றும் தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா சகல பள்ளிவாசல் கதீப்மார்களையும் கேட்டுக் கொண்டுள்ளனர். 42 ஆண்டுகளாக லிபியாவை ஆட்சி செய்த தலைவர் முஅம்மர் கடாபி [...]
பெண்கள் ஒழுக்கமுள்ளவர்களாக மாற வேண்டும்(AKPகுழும நிர்வாகிகளின் வேண்டுகோள்)
Posted: ஆகஸ்ட் 23, 2011 in வேண்டுகோள்பெண் என்பவள் இஸ்லாத்தின் பார்வையில் மிக கண்ணியமானவளாக கருதப்படுகின்றாள். எந்தவொரு மதமும் கொள்கையும் பெண்ணுக்கு வழங்கிடாத கௌரவத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் இஸ்லாம் வழங்கியிருக்கின்றது. ஆனால், இஸ்லாம் வழங்கியுள்ள சுதந்திரத்தை சில முஸ்லிம் பெண்கள் தவறான முறையில் பயன்படுத்துகின்றார்கள் என்பது தான் கவலைக்குரியவிடயமாகும். முஸ்லிம் பெண்கள் தமது தனித்துவமான ஒழுக்கங்கள், பண்புகள், கலாசாரம் என்பவற்றை இழந்து வீழ்ச்சி நிலைய நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலைக்கு காரணங்கள் பல இருந்தேபாதும் அவற்றில் சிலதை இங்கு நோக்கலாம். முதலாவதாக, தொடர்புசாதனங்கள் முஸ்லிம் [...]
‘நாடு காத்து நம் உரிமையை வென்றெடுப்போம்’ – நாளை புதன்கிழமை முஸ்லிம்கள் எழுச்சி அரசியல்
Posted: ஜூலை 12, 2011 in அரசியல், உள் நாட்டு செய்திகள், வேண்டுகோள்இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பேரவையும், கிழக்கு மாகாண சிவில் சமூகமும் ஒன்றிணைந்து நாடு காத்து நம் உரிமையை வென்றெடுப்போம்” எனும் தலைப்பிலான பிரகடன நிகழ்வு நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாக முன்றலில் நடை பெறவுள்ளது. முஸ்லிம்களின் எழுச்சி அரசியல் தீர்வு முயற்சியில் ஈடுபடும் தரப்புக்களுக்கான அழுத்தங்களாக மாற்றப்பட வேண்டும், அரசியல் அதிகாரங்களுடன் தொடர்புபடும் எந்த விடயத்திலும், முஸ்லிம்கள் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும், அரசியல் தீர்வு முயற்சியில் முஸ்லிம்களுக்கும் [...]
சகோதரி றிஸானாவின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் இன்று ஒன்றுகூடுவோம்
Posted: ஜூன் 29, 2011 in வேண்டுகோள்சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சகோதரி றிஸானா நபீக்கின் விடுதலையை வலியுறுத்தி இன்று புதன்கிழமை கொழும்பில் அமெரிக்க தூதரகம் முன்னிலையில் ஆர்ப்பாட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் சகோதரி ரிஸானா நபீக்கின் விடுதலையில் ஆர்வம் கொண்டுள்ள எமது உறவுகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் ஆதரவை வெளிப்படுத்துமாறு ஒன்லைன் அக்கரைப்பற்று வலைத்தளம் மற்றும் ஏ.கே.பீ குழுமமும் கோருகிறது. கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம்முன் றிஸானா நபீக்கின் விடுதலையை [...]