யாழில் துப்பாக்கிப் பிரயோகம் இரு இராணுவ வீரர்கள் பலி! இலங்கை::யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகமொன்றில் இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இராணுவ வீரரொருவர், மற்றுமொரு வீரர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்தார். யாழ்ப்பாணம் நாக விகாரைக்கு அருகிலுள்ள இராணுவ காவலரணில் இன்று காலை 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்
‘Uncategorized’ பகுப்புக்கான தொகுப்பு
தம்புள்ளை மஸ்ஜித் தொடர்பில்: ஆசாத் சாலி கலந்துகொண்ட இரண்டாவது மின்னல் நிகழ்ச்சி கடந்த மின்னல் நிகழ்ச்சி யில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆசாத் சாலி கலந்து கொண்ட மின்னல் நிகழ்ச்சி தம்புள்ளை ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பில் சக்தி தொலைக்காட்சி நடத்திய இரண்டாவது மின்னல் நிகழ்ச்சி, இதில் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்களும் கலந்து கொண்டுள்ளார் இவற்றில் இரு பகுதி களை உங்களுக்கு தருகிறோம் Video
கொலை சம்வம் தொடர்பில் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் கைது:- மது போதையில் வாகனம் செலுத்திய 137 பேர் கைது!
Posted: April 15, 2012 in Uncategorizedஇலங்கை::பதுரலிய பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மதுபோதையில் இருந்த நிலையில் சந்தேகநபர் இந்த கொலையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்… மது போதையில் வாகனம் செலுத்திய 137 பேர் கைது! சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் வீதி போக்குவரத்து [...]
இல்லத்தரசிகளின் ஜீவனோபாயத்தை அதிகரிக்க அமைச்சர் பசில் ஏற்பாடு
Posted: April 9, 2012 in Uncategorizedகைத்தறி நெசவாலைகளுக்கு புத்துயிரளிக்க திட்டம் கைத்தறி நெசவாலைகளை மீண்டும் ஆரம்பித்து நவீன வகை ஆடைகளை உற்பத்தி செய்வதன் மூலம் நாட்டின் ஆயிரக்கணக்கான இல்லத்தரசிகளுக்கு ஜீவனோபாயத்தைப் பெற்றுக் கொடுப்பதில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். நவீன வகையிலான கைத்தறி ஆடைகளை உற்பத்தி செய்வதன் மூலம் அவற்றுக்கு பெருமளவில் சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பது அவரின் இலட்சியமாக இருக்கிறது.
ஜீ.எல்.பீரிஸ் – மாலைத்தீவு ஜனாதிபதிக்கிடையில் பேச்சுவார்த்தை!
Posted: April 7, 2012 in உலகச் செய்திகள், Uncategorizedஇலங்கை::மாலைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. மாலைத்தீவின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுடன் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரின்போது இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக மாலைத்தீவு அரசாங்கத்திற்கு அமைச்சர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளதாக இலங்கைத் தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன… மாலைதீவிற்கு இலங்கை வழங்கும் ஒத்துழைப்புக்கள் மற்றும் இரு நாட்டிற்கும் இடையிலான நெருங்கிய வரலாற்று [...]
சூரிய மண்டலத்துக்கு வெளியே 26 புதிய கிரகங்களை கெப்ளர் விண்கலம் கண்டுபிடித்துள்ளது.இந்த 26 கோள்களும் நட்சத்திரங்களை(சூரியன்கள்) சுற்றி வருகின்றன. ஒவ்வொரு கோளும் தனது நட்சத்திரங்களை மிக நெருக்கமாக சுற்றி வருவதால், இவற்றில் வெப்பம் மிக மிக அதிகமாக இருக்கலாம் என்றும், இதனால் அங்கு உயிர்கள் வசிக்க வாய்ப்பில்லை என்றும் நாசா தெரிவித்துள்ளது. கெப்ளர் விண்கலம் ஒரு மாபெரும் விண் தொலைநோக்கியாகும். கடந்த 2009ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட கெப்ளர் இதுவரை நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே 61 [...]
ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெரா நகரில் நேற்று தேசிய நாள் விழா கொண்டாடப்பட்டது. அங்குள்ள ஒரு ஓட்டலில் நடந்த விழாவில் பிரதமர் ஜுலியா கில்லார்டு, எதிர்க்கட்சி தலைவர் டோனி அல்போட் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவின் பழங்குடி அமைப்பை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் விழா நடந்த ஓட்டலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஓட்டல் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதனால் கண்ணாடி ஜன்னல்கள் [...]
மஹிந்தவிற்கு 65வது பிறந்தநாள் – நாடு பூராகவும் 11 இலட்சம் மரக்கன்றுகள் நடுகை
Posted: நவம்பர் 15, 2011 in Uncategorizedஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 65 ஆவது பிறந்த தினத்தையும், இரண்டாவது பதிவியேற்பு நிகழ்வையும் முன்னிட்டு சுற்றாடல் அமைச்சு ஏற்பாடு செய்துள்ள தேசத்துக்கு நிழல் (தெயட்ட செவன) தேசிய மர நடுகை திட்டம் செவ்வாய்கிழமை நாடு முழுவதும் இடம்பெறுகிறது. இதன் போது 11 இலட்சம் மரக்கன்றுகள் நடப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் சகல அமைச்சுகள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள், மாகாண சபைகள், மாவட்ட பிரதேச செயலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றின் பங்களிப்புடன் 29 [...]
பலஸ்தீனின் காசா பாகுதியில் ஹமாஸ் இலக்கு மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் பொலிஸார் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். வடக்கு காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பு கடற்படை தளமாக பயன்படுத்திய கட்டடத்தின் மீதே இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்கு நேற்று அதிகாலை நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாத செயலில் ஈடுபடும் இலக்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக தெற்கு இஸ்ரேலின் ஷார் ஹெனதேவ் பகுதிக்கு காசாவில் இருந்து எறிகணை தாக்குதல் [...]
ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு – சந்தேகத்தை கிளப்புகிறது விக்கிலீக்ஸ்
Posted: அக்டோபர் 4, 2011 in Uncategorizedகடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிபுகள் முதலில் அலரிமாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. தேர்தல் செயலகத்திற்கு உத்தியோகபூர்வ முடிபுகளை அனுப்பி வைப்பதற்கு முன்னர் அலரிமாளிகைக்குத் தகவல்களை வழங்குமாறு எட்டு அரசாங்க அதிபர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது. அம்பாறை, அனுராதபுரம், பொலநறுவை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட அரச அதிபர்களுக்கு இப்பணிப்புரை விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்னீஸினால் இந்தத் தகவல் அந் நாட்டு இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிழக்கில் ஜனாதிபதித் தேர் தலுக்குப் [...]