இஸ்லாம்

வரதட்சனை கொடுமையை ஒழிக்க ……

புகழ் அனைத்தும் ஏக இறைவன் அல்லாஹ்வுக்கே! சாந்தியும் சமாதானமும் உத்தம  நபி(ஸல்) அவர்கள் மீதும் அவர்களது கிளையார்கள், தோழர்கள், நல்லோர்கள் மீதும் உண்டாகட்டும்.

ச‌மூகத்தில் ந‌டைபெறும் எல்லா அநாச்சார‌ங்க‌ளுக்கும் காரணம் “அறியாமை” என்றும், மற்றும் எம் சமூகம் கல்வி கற்பதில் காட்டும் அசிரத்தையும்தான் காரணம்” என்ற‌ க‌ருத்தைக் க‌ண்ட‌வுட‌ன்தான் எழுதுதற்கே வ‌ந்தேன்.

உண்மையில் உலகில் எந்தவொரு கொள்கையும் எந்தவொரு மதமும் இஸ்லாத்திற் போன்று கல்விக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளதனைக் காண முடியாது. இஸ்லாத்தின் தோற்றம் கல்வியிலிருந்து ஆரம்பிப்பதனைக் காணலாம். அல் குர்ஆனில் ஸுரதுல் ‘அலக்’ இன் ஆரம்ப வசனங்கள் கூட கல்வியை மையப்படுத்திய கருத்துக்களைக் கொண்டிருப்பதனை அவதானிக்கலாம். உம்முடைய இரட்சகனின் (சங்கையான) திருநாமத்தைக் கொண்டு நீர் ஓதுவீராக! அவன் எத்தகையவனென்றால் (படைப்பினங்கள் அனைத்தையும்) படைத்தான். மனிதனை (அட்டைப்பூச்சி போன்று ஒட்டிக் கொண்டிருக்கும்) இரத்தக் கட்டியிலிருந்து அவன் படைத்தான். நீர் ஓதுவீராக! மேலும், உமதிரட்சகன் மிக்க சங்கையானவன். அவன் எத்தகையவனென்றால், எழுதுகோலைக் கொண்டு (எழுதக்) கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் (அல்லாஹ்வாகிய) அவன் கற்றுக் கொடுத்தான். (அல் அலக் 1-5).

அல்லாஹ் மனித சமூகத்தை ஆரம்பத்தில் நேர்வழிப்படுத்த கடமையாக்கியது தொழுகையையோ, ஸகாத்தையோ மற்றும் நோன்பையோ அல்ல மாறாக கல்வியைத்தான் அல்லது அறிவைத்தான். எனவேதான் வாசிப்பீராக அல்லது படிப்பீராக அல்லது ஓதுவீராக என்றே அல் குர்ஆனின் ஆரம்ப வசனம் அமைந்திருக்கின்றன. அதற்குக் காரணம் அறிவினூடாகவே ஏனைய விடயங்களை செவ்வனே நிறைவேற்ற முடியுமென்பதாதாகும். எனவே இஸ்லாத்தின் தோற்றமே கல்வியை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. இது இஸ்லாத்துக்கே உரிய தனித்துவப் பண்பாகும். அதுமட்டுமல்லாது அல் குர்ஆனில் ஆரம்பமாக இறங்கிய சூராக்களில் ஒன்றான சூரா அல் ‘கலம்’ கூட எழுது கோலின் மீதும், அதன் மூலம் எழுதுகின்ற வற்றின் மீதும் சத்தியம் செய்து ஆரம்பிக்கின்றது. அல்லாஹ் ஒரு விடயத்தின் மீது சத்தியம் செய்கின்றான் என்றால் அந்த விடயமானது மிகவும் பெறுமதி வாய்ந்ததாகவும் பாரதூரமானதாகவும் இருக்கின்றது. அந்த அளவிற்கு கல்வி முக்கியத்துவம் வாய்ந்ததென்பதனை அல்லாஹ் பேனையின் மீதும் எழுத்தின் மீதும் சத்தியம் செய்திருப்பதானது உணர்த்துகின்றது. இஸ்லாமானது கல்விற்கும் அறிவிற்கும் ஆரம்ப காலம் தொட்டே முக்கியத்துவம் வழங்கியதென்பதற்கான சான்றாக உள்ளன.

உங்களுக்க ஏதேனும் தெரியாதவையிருந்தால் தெரிந்தவரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். என குர்ஆன் எளிதான வசன நடையில் கூறுகின்றது. மற்றுமோரிடத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் அவன் உங்களுக்கு கற்றுத்தருவான்(அல் குர்ஆன்) இவ்வசனம் தக்வாவுடன் தொடர்பு படுத்தி பேசுவதனை அவதானிக்கலாம்.  இஸ்லாம் கல்வியை உலகக் கல்வி மார்க்கக் கல்வி என இரண்டாகப் பிரித்து பார்க்கவில்லை. மாறாக (இல்ம்) அறிவைத் தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றே கூறுகின்றது. கல்வியை பொதுவாகவே இஸ்லாம் நோக்குகின்றது. இவ்வாறு பொதுவாக நோக்குகின்றது என்பதற்கு ஆதாரங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை நிறையவே இருக்கின்றன. எனவேதான் வியாபாரம் செய்யக் கூடிய ஒருவர் அவ்வியாபாரத்துக்குரிய சட்டதிட்டங்களை அறிய வேண்டியது அவனிடத்தில் கடமையாக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்காக முன்வரக் கூடிய இளைஞன் அவை தொடர்பான சட்டதிட்டங்களை தெரிந்திருக்க வேண்டியது அவனிடத்தில் கடமையாகும். அதுமட்டுமள்ளாது ஆசிரியராக இருக்கக் கூடிய ஒருவர் ஆசிரியரொருவருக்கிருக்க வேண்டிய பொறுப்புக்கள், சட்டதிட்டங்களைத் தெரிந்திருப்பதனைக் கடமையாக்கியுள்ளது. இஸ்லாம் கல்வியை இரண்டாக நோக்காததன் காரனமாகவே இஸ்லாமிய வரலாற்றல் சம காலத்தில் விஞ்ஞானியாக இருந்தவர் சட்டத்துறை அறிஞராகவும்(பகீஹ்), ஹதீஸ் துறை(முஹத்திஸ்) அறிஞராக இருந்தவர் மானுடவியல் துறையில் மேதையாகவும். இருந்தார்கள். அத்தோடு இஸ்லாமிய சட்டத்துறை அறிஞராக இருந்தவர் சம காலத்தில் ஹதீஸ் துறை அறிஞராகவும் புவியியல் துறை அறிஞராகவும் உளவியல் நிபுனராகவும் இருந்தார்கள். உதாரணமாக இப்னு ருSத் ஒரு மிகப்பெரிய தத்துவவியல் அறிஞராக இருந்ததோடு மிகப் பெரிய சட்டத்துரை அறிஞராக இருந்தார். ஏன் இவை இவ்வாறு நடை பெற்றதென்றால் இஸ்லாம் கல்வியை உலகக் கல்வி மார்க்கக் கல்வி என்று பிரித்து நோக்காமையினாலே. நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள், ஒவ்வொரு முஃமினுக்கும் இபாதத்துக்கள் எவ்வாறு கடமையோ அவ்வாறே கல்வியைத் தேடுவதும் கடமை எனக் கூறினார்கள். இது எதனைக் குறிப்பதென்றால் இஸ்லாம் கல்வியை இரண்டாக நோக்கவில்லையென்பதேயாகும்.

இஸ்லாத்தின் கருத்தின் படி சமூக வாழ்க்கைக்கு எவையெல்லாம் தேவையாக இருக்கின்றனவோ அவை அணைத்தும் கல்விதான். அது விஞ்ஞான அறிவாகவோ அல்லது தொழிநுட்ப அறிவாகவோ சமூக வியளாகவோ அல்லது முறன்பாட்டு முகாமைத்துவமாகவோ இருக்கலாம். இவற்றைக் கற்பது முஸ்லிம்களது கடமையென்பது போல் இது ஒரு இபாதாவாகும். இதற்கான மழுமையான வழிகாட்டல்களை இஸ்லாம் முன்வைத்துளள்ளதோடு குர்ஆனின் எல்லா இடங்களிளும் இதற்கான உட்சாகத்தை வழங்கியுள்ளது. அது மட்டுமள்ளாது அல் குர்ஆனின் போக்கு அதுவாகவே உள்ளது. எனவேதான் அல் குர்ஆன் நபிமார்களைப் பற்றி பேசுவதாக இருந்தாலும் சரி சமூகங்களின் அழிவைப் பற்றி பேசுவதாக இருங்தாலும் சரி லுக்மான், துள்கர்ணைன் போன்றவர்களைப் பற்றி பேசுவதாக இருந்தாலும் சரி அவை அறிவை அல்லது கல்வியைத் தேடவேண்டும் அல்லது படிப்பினைகளைப் பெற வேண்டுமென்றே பார்க்கிறது. அது மட்டுமள்ளாது குர்ஆன், சுன்னா பொதுப்படையாக அறிவைப் பற்றியே பேசியுள்ளது.

அல் குர்ஆன் கல்விற்கு எந்தஅளவு முக்கியத்துவம் வழங்கியுள்ளது என்றால் பல்வேறுபட்ட கலைகளையும், ஆராய்ச்சிகளையும் பண்ணக்கூடிய கல்விமான்களைத்தான் அல்லாஹ்வை மிகவும் அஞ்சக்கூடியவர்கள், நெருக்கமானவர்கள் என அல்லாஹ் கூறுகின்றான். அதனைத்தான் ஸுரா ஃபாதிர் பின்வருமாறு குறிப்பிடுகின்றது. நிச்சயமாக அல்லாஹ்வை அவனுடைய அடியார்களில் பயப்படுவதெல்லாம் (அவனைப் பற்றி அறிந்த) கல்விமான்கள் தான், நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவன், மிக்க மன்னிப்புடையவன்.(ஃபாதிர் 28)

இந்த உலகில் மனிதனை அல்லாஹ் படைத்திருப்பதன் நோக்கங்களில் ஒன்று அவனைப்பற்றி, அவனது படைப்புக்களைப் பற்றி, அதனது அற்புதங்களைப் பற்றி தேடிக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகக் குறிப்பிடுகின்றான். இவற்றிலிருந்து இஸ்லாம் அறிவைத் தேடுவதற்கு அளித்துள்ள முக்கியத்துவத்தை அறிய முடிகின்றது.

இஸ்லாத்தில் கல்வியைத் தேடிச் செல்வது புனித போர் செய்வதற்கு சமனாகும். அவ்வாறு சென்று மரணித்தால் புனித போர் (ஜிஹாத) செய்து மரணித்த நன்மையை அவருக்கு அல்லாஹ் வழங்குகின்றான். அதுமட்டுமள்ளாது யார் ஒருவர் கல்வியைத் தேடி புறப்பட்டுச் சென்று விடுகிறாறோ அவர் திரும்பி வரும் வரை அல்லாஹ்வின் பாதையில் இருக்கிறான். இஸ்லாம் கல்வியின் பக்கம் ஊக்கமளித்திருப்பது மட்டுமள்ளாது கல்வியின் பக்கமாகச் செல்வதற்கும் தூண்டியுள்ளது. அத்தோடு அல்லாஹ் கூறுகின்றான் ‘உங்களில் ஈமான் கொண்டவரையும் அறிவு கொடுக்கப்பட்டவரையும் அல்லாஹ் அந்தஸ்த்துக்களாள் உயர்த்துகின்றான்’. கல்வி கற்கும் மனிதன் ஏனைய சாதாரன மனிதனை விட ஒரு படி மேலே அல்லாஹ் வைத்திருக்கின்றான். கல்வியின் மூலமாக அம்மனிதனுக்கு இம்மையிலும் மறுமையிலும் மேலான இடத்தைப் பெற்றுக் கொடுக்கின்றான். அல் குர்ஆன் இன்னொரு இடத்தில் மனிதர்களைப் பார்த்து கேற்கின்றது, அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா? கற்றவர்கள்தான் நிச்சயமாக படிப்பினை பெருவார்கள் என்கின்றது.

ஒரு இடத்தில் நபி(ஸல்) கூறினார்கள், அறிஞர்கள் நபிமாரின் வாரிசுகளாவர் அவர்கள் தீனாரையும் திர்கங்களையோ வாரிசாக விட்டுச் செல்லவில்லை அவர்கள் அறிவை வாரிசாக விட்டுச் சென்றார்கள். எனவே அறிவினூடாக நபி மார்களின் அந்தஸ்த்தை சாதாரன மனிதர்கள் கூட அடைந்து விடுகிறார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு பின்னால் வந்தவர்களும் கூட இப்பின்னனியிலேயே குர்ஆனையும் ஹதீஸையும் பார்த்தார்கள். அதனாலேயே வறலாறு நெடுகிளும் பல வெற்றிகளைக் கண்டார்கள். அத்தோடு மிகப் பெரிய உயர் வளர்ச்சி இஸ்லாமியத் துறைகளில் காணப்பட்டது. அதுமட்டுமள்ளாது சமூக விஞ்ஞான துறையிலும், ஆய்வுத் துறையிலும் முஸ்லிம்கள் வழங்கிய பங்கு மகத்தானது. கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடிகளாக முஸ்லிம்களே இருந்தார்கள். உதாரணமாக, இப்னு ஸீனா, அபூ இஸ்rக் இப்ராஹீம் அல்பஸாரி, அல் பிரூனி போன்றோர். குறிப்பாக அல் பிரூனி கணித அறிஞராகவம் புவியியல் அறிஞராகவும் இருந்ததோடு மத ஒப்பீடு சம்பந்தமான பல ஆய்வுகளை மேற்கொண்டார். இதற்குக் காரணம் அவரின் பொதுத் தேடலும் அறிவைப் பெற்றுக் கொள்வதற்கு காட்டிய முயற்சியுமேயாகம். இவை அணைத்துக்கும் காரணம் கல்வியைப் பிரித்து நோக்காமையே. அதன் காரணத்திலே குர்துபா பல்கலைக் கழகம் சமகாலத்தில் மிகப் பெரிய விஞ்ஞானிகளையும் சட்ட அறிஞர்களையும், உருவாக்கியது. அவர்கள் அணைவரும் எல்லாத் துறைகளிளும் தேர்ச்கி பெற்றவர்களாக இருந்தார்கள். இஸ்லாம் முன்வைத்த மானுடவியல், வானவியல், சமுத்திரவியல் போன்ற துறைகள் பறந்தளவில் நோக்கப் பட வேண்டியவை. இவை அணைத்துக்கும் காரணம் இஸ்லாம் கொடுத்த வழிகாட்டல் என்பதில் சந்தேகமில்லை.

வரலாற்றில் இருண்டயுகம் என வர்ணிக்கப்படும் மத்திய கால ஐரோப்பா சுத்தமாக இருப்பதனையுப் கல்வி கற்பதனையும் பாவமாகக் கருதியது. உண்மையில் ஐரோப்பவுக்கு ஒளியைக் கொடுத்தவர்கள் முஸ்லிம்களே. முஸ்லிம்களே இஸ்பெய்னில் ஐரோப்பாவில் முதல் முதலாக பல்கலைக் கழகத்தை அறிமுகம் செய்து வைத்தார்கள். அப்பல்கலைக் கழகங்களில் முஸ்லிம்கள் வானியலும் புவியலிலும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்கள். இவற்றுக்கு பின்னரெ ஐரேபாப்பியர்கள் கல்வியின் பக்கம் தலைநிமிர்ந்து பார்க்கத்தொடங்கினர். இதனை ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் கூட ஏற்றுக் கொள்கின்றனர். இவை அணைத்தும் இஸ்லாம் கல்விக்கு கொடுத்துள்ள முக்கியத்துவத்தினைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

பிற்காலத்தில் ஐரோப்பா கல்வியில் எழுச்சி அடையத் துவங்கியதும் முஸ்லிம்கள் கல்வித் துறையில் இருந்து பின்வாங்கினார்கள். பின்னர் முஸ்லிங்கள் கல்வித் துறையிலிருந்து வியாபாரம் மற்றும் ஏனைய துறைகளிள் ஆர்வம் காட்டினார்கள். அதன் பின்னர் முஸ்லிம் கல்வி மான்கள் விரல்விட்டென்னக்கூடியவர்களாக மாறினார்கள். இதன் தாக்கம் மத்தியகிழக்கு, ஐரோப்பா, கிழக்காசிய நாடுகளை விடவும் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளையே வெகுவாகப் பாதித்துள்ளது.

இவை மாறவேண்டுமென்றால் முஸ்லிம் இளைஞர் யுவதிகளிடத்திலும் சிறுவர் மத்தியிலும் கல்வித்தாகத்தை ஊட்ட வேண்டும். அத்தோடு இஸ்லாத்தைப் பிரித்துப் பார்க்கும் தன்மையில் இருந்து முஸ்லிங்கள் மாற வேண்டும்.

 அல்லாஹ் நம் அனைவரின் பிழைகளையும் மன்னிப்பானாக. ஆமீன்.

Advertisements
பின்னூட்டங்கள்
 1. faisalissath@yahoo.co.uk சொல்கிறார்:

  verry importent for all aodiance

 2. Mujees Bsc சொல்கிறார்:

  ஒரு நாள் வரும், அன்று நீ குளிக்க மாட்டாய், உன்னை குளிப்பாட்டுவார்கள்.
  நீ உடையணிய மாட்டாய், உனக்கு அணிவிக்கப்படும்.
  நீ பள்ளிவாசல் போக மாட்டாய், உன்னை பள்ளிக்கு கொண்டுசெல்வார்கள்.
  நீ தொழமாட்டாய், உன்னை வைத்து தொழப்படும்.
  நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய், உனக்காக உன்பின்னால்
  .

 3. mailyas சொல்கிறார்:

  Engludya nalla shyal mattum.

 4. அஸ்ஸலாமு அலைக்கும்

  அல்லாஹ்வுக்கே எல்லாப்புகளும்

  அல்லாஹ் மனிதனுக்கு எண்ணிலடங்க அருட்கொடைகளை வழங்கியிருக்கிறான் அதில் ஒன்றுதான் மனிதனது சிந்தனா சக்தியென்னும அறிவு அதை உரிய முறையில் பயன்படுத்தவில்லை என்றால் ஆரம்பமும் முறையற்றுப்போகும்,கடைசியபும் முறையற்றுப்போகும் என்புதான் உண்மை இதனால் இன்று உலகில் அககிரமங்களில் மிகப்பெரிய கொடுமைதான் இந்த வரதட்சனை என்று சொன்னால் மிகையாகாது எத்தனை கமரிப்பெண்கள் எண்ணிலடங்கா துன்பங்களை அனுபவித்து வருவதை ஒற்று மொத்த முஸ்லிம் சமூகமும் தன் கண்களால் பார்ப்பதை நாம் அறிவோம் தனக்கு வரயிருக்கும் மனைவி அவள் நம் வாழ்க்கைத் துணைவி ஒன்றல்ல இரண்டல்ல பதினாறு குழந்தைகளைப் பற்றாலும் அவள் நமக்குள்ளே இருப்பவள் . இப்படியாக இருக்கும் போது கேவளமான ஆண் மகனும் அவனைப் பெற்றெடுத்த பெற்றார்களும் தன் மகனுக்கு வரவிருக்கும் வாழ்க்கைத் துணைவியை லட்சம் எடுத்து மணமுடிக்கிறார்களே இது கேவளமாக விளங்க வில்லையா இஸ்லாம் காட்டிய வழி முறைகளை உதாசீனம் செய்து விட்டு கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று ஏன் இன்றைய ஆண்கள் மாறுகிறார்கள் சகோதரர்களே புனித மிகு மஹரை நல்லெண்ணத்துடன் கொடுத்து மணம் முடிப்பது தான் இஸ்லாத்தின் கடமை என்று சொன்னால் அதை எடுத்து நடப்பவனே உண்மை முஃமீன் . மேலே கூறப்பட்டிருக்கும் படிப்பினைகளை நாமும்பெற்று வாழ்வோமாக ஆமீன்
  …………………………………………………………………………………………………………………………………………
  யஹ்யா
  ஹொரோவபதான
  SRI LANKA

 5. மனிதா……
  இறைவன் உனக்கு
  அளித்திருக்கும்
  அருளை எண்ணிப்பார்

  கண்ணீரின் பெயர் தான்
  புரிந்து வடிக்கிராள்
  பெண் என்பவள்
  அது எதற்குஎன்று
  புரிவில்லை உனக்கு
  மஹரின் மகத்துவம் தான்
  உன் வாழ்க்கையின்
  உன்னத அஸ்திவாரம்

  லட்சம் என்பதுதான்
  அதன் அடிப்படைப்பெயர்
  அதில் இருக்கும்
  எண்ணிக்கையை
  கணக்கிட்டால் நீ
  சுகம் அனுபவிக்க மாத்திரம்
  தான் அத்தொகை என
  உனக்குபபுரியும்

  மனிதா….
  கொடுமைகளின்
  மிகப்பெரிய கொடுமை தான்
  வரதட்சனை அதை
  நீயும் கொழிக்க வேண்டும்
  என்று உனக்கும் கடமை
  இருக்கும் போது
  அக்கம் பக்கம் தெரிய
  நீ வாங்குவது தான்
  நீ ஒரு துரோகி
  என்பதைக் காட்டுகிறது
  ……………………………………………..

  யஹ்யா,
  ஹொரோவபதான
  SRI LANKA

 6. யஹ்யா,ஹொரோவபதான சொல்கிறார்:

  இஸ்லாமிய மார்க்கத்தில் திருமணம் என்பது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் வாழ்க்கை ஒப்பந்தமாகும். மாற்று மதத்தில் கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுவது இஸ்லாத்தில் இல்லை. திருமணம் புரியவுள்ள ஆணும் பெண்ணும் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருவரும் தங்களது பரிபூரண சம்மதத்தை தெரிவிக்க வேண்டியது மிக அவசியமாக வலியுறுத்தப்பட்ட விஷயமாகும்.

  முன்பே மணமுடிக்கப்பட்டு கணவனை இழந்துவிட்ட விதவையும், அல்லது முந்திய கணவனால் விவாக முறிவு (தலாக்) கொடுக்கப்பட்ட பெண்ணும் தனக்காக இத்தா காலம் முடிந்ததும் மறுமணம் முடிக்க விரும்பினால் அப்பெண்ணின் முழு சம்மதத்தையும் பெற்றே மண முடித்து வைக்கவேண்டும். இப்பெண்களை அயிம்மா என்றோ தய்யிபா என்றோ அழைப்பர்.

  கண்ணிப்பெண்ணாக இருப்பாளேயானால் அவள் தனது சம்மதத்தை மெளனம் மூலம் தெரிவிக்கலாம். அவளுக்கு விருப்பமில்லையெனில் கட்டாயம் சொல் மூலம் தெரிவிக்க வேண்டும். அவள் எந்த பதிலும் தராமல் மெளனம் சாதித்தால் அது சம்மதம் என்ற பொருளைத் தரும். இப்பெண்களை ‘பாகிரா’ என்று அழைப்பர்.

  ‘அயிம்மா’ பெண்களுக்கு அவர்களது சம்தமின்றி திருமணம் செய்து வைக்காதீர்கள். கன்னிப் பெண்களிடம் திருமணம் விஷயமாக அனுமதி பெற வேண்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஒரு கன்னிப்பெண் (நாணாத்தால்) தெளிவாகச் சொல்ல வெட்கப்படுவாளே! என்று சிலர் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவளது மெளனம் சம்மதமாகும் என்றார்கள். அறிவிப்பாளர்: ஆயிஷா, அப்பாஸ், அபூஹுரைரா(ரழி- அன்கும்) நூல்:புகாரி முஸ்லிம் அபூதாவூத், நஸயீ,திர்மிதி, இப்னுமாஜ்ஜா

  இந்த நபிமொழி மூலம் ஏற்கனவே திருமணம் செய்த பெண்கள் தங்களது அடுத்த திருமணத்துக்கு தெளிவான சம்மதம் தெரிவிக்க வேண்டுமென்பதை அறியலாம். கன்னிப்பெண்கள் தங்களது சம்மதத்தை மெளனம் மூலம் தெரிவிக்கலாம். சம்மதம் இல்லையெனில் நிச்சயமாக வாய்விட்டு சொல்லியே ஆக வேண்டுமென்பதை உணரலாம். இவ்விதமாக மணப்பெண்ணின் சம்மதம் பெறாமல் நடத்தி வைக்கப்படும் திருமணம் இஸ்லாத்தில் செல்லத்தக்கதல்ல. அது முறிக்கப்படும்.

  கன்சா(ரழி) என்ற அம்மையார் அறிவிக்கிறார்கள்; எனது தந்தை கிதாம்(ரழி) அவர்கள் எனக்கு பிடிக்காத இடத்தில் மணமுடித்துக் கொடுத்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இதனைக் கூறியபோது அந்த திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்து செய்தார்கள். இதே நிகழ்ச்சியை இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும் அறிவிக்கிறார்கள். (முஅத்தாமாலிகி, புகாரி, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா, பைஹகீ)

  இவ்விதம் தனது தந்தையின் வற்புறுத்தலில் நடத்தப்பட்ட திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் மூலமாக ரத்து செய்யப்படவே கன்சா(ரழி) அவர்கள் அபூலுபாபா(ரழி) அவர்களை மணமுடித்துக் கொண்டார்கள் என்ற விபரம் அப்துர்ரஹ்மான் பின் யஜீத்(ரழி) அறிவிக்க இப்னுமாஜ்ஜா என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  இதே போல் ஒரு கன்னிப்பெண் சம்மதமின்றி அவளது தந்தையால் நடத்தி வைக்கப்பட்ட திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்து செய்ததாக அபூதாவூதில் இப்னு அப்பாஸ்(ரழி) கூற பதிவு செய்யப்பட்டுள்ளது.

  எனவே எந்த முஸ்லிம் பெண்ணையும் அவளது முழு சம்மதமின்றி திருமணம் செய்து வைக்க இஸ்லாத்தில் இடமில்லை. அப்பெண்ணைப் பெற்றெடுத்த தந்தைக்கும் அனுமதியில்லை என்பதை தெளிவாக உணர்ந்து பெற்றோர்கள் நடந்து கொள்வது அவசியமாகும்.

  மணமகளுக்குரிய தகுதிகள்

  நீ நல்லொழுக்கமுள்ளவளை மணம் புரிவதன் மூலம் வெற்றியடைந்துகொள்! என நபி(ஸல்) அவர்கள் அறிவுரை பகன்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்)

  பெண்களை அவர்களின் அழகுக்காக மணமுடிக்காதீர்கள்; அவர்களின் அழகு அவர்களை அழித்துவிடலாம்; அவர்களின் செல்வத்திற்காக மணமுடிக்காதீர்கள்; அவர்களின் செல்வம் அவர்களை தவறச் செய்திடலாம்; நல்லொழுக்கத்திற்காக அவர்களை மணமுடியுங்கள்; நல்லொழுக்கமுள்ள அழகற்ற கருநிறத்து அடிமைப்பெண் (தீய ஒழுக்கமுள்ள பெண்ணைவிட) மேலானவள் என நபி(ஸல்) அவர்கள் விளக்கினார்கள். (அறிவிப்பு: இப்னு அம்ர்(ரழி) நூல்: இப்னு ஹிப்பான், அஹ்மத்)

  மணமகனுக்குரிய தகுதிகள்

  எவருக்கு திருமண வயது வந்து விட்டதோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். அது அவரது கண்களையும், வெட்கஸ்தலங்களையும் பாதுகாக்கும் அரணாக அமைகிறது. எவருக்கு திருமணம் செய்ய வசதிபடவில்லையோ அவர் நோன்பு வைத்துக்கொள்ளட்டும். (அறிவிப்பு: இப்னு மஸ்வூத்(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம், நஸயீ, தாரமி, பைஹகீ, அஹ்மத்)

  இந்நபிமொழி ஆண்களுக்கு கூறப்பட்டதாகும். மணமகன் பெண்ணுக்காக மஹர், திருமண செலவு, வலீமா விருந்து என பல செலவு செய்யவேண்டியவனாகிறான். அது மட்டுமின்றி திருமணம் முடிந்த நேரம் முதல் தனது மனைவிக்காக உணவு, உடை, இருப்பிடத்திற்கான செலவுகள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். எனவேதான் மணமுடிக்கும் மணப்பெண்ணுக்கு தனது உடல் ரீதியான சுகத்தையும், பொருளாதார ரீதியான சுமையையும் சுமக்க தகுதியுடையவன் தனது திருமண வயது வந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம்; அதற்கான வசதியில்லாதபோது நோன்பு வைத்து தனது இச்சையை அடக்கவும் நபி(ஸல்) அவர்கள் அறிவுரை பகர்ந்தார்கள்.

  எங்கள் மனைவிக்கு நாங்கள் ஆற்றவேண்டிய கடமைகள் யாவை? என நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது ‘நீ உன்ணும்போது அவளுக்கும் உணவளிக்க வேண்டும்; நீ ஆடை அணியும்போது அவளுக்கு ஆடை அணிவித்தல் வேண்டும்; அவளது முகத்தில் அடித்தலாது’ என நபி(ஸல்) அறிவுறுத்தினார்கள். (அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா(ரழி) நூல்: அபூதாவூத்)

  எனவேதான் ஒருவேளை செல்வ செழிப்புள்ள மனமகள் ஒருவருக்கு மனைவியாக அமைந்தாலும் அவளது சொத்து பங்கில் அவளது உரிமையின்றி கணவன் கைவைக்க அனுமதியில்லை என இஸ்லாம் கூறுகிறது. மண முடிக்க நாடும் மணமகன் தான் மணக்கும் பெண்ணை உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதுகாக்கும் தகுதியை பெற்றிருப்பது அடிப்படை தகுதியாகும்.

  யஹ்யா,
  ஹொரோவபதான,ஆனைவிழுந்தான் SRI LANKA

  • Abthul Kaneem சொல்கிறார்:

   பேராசை பிடித்தவர்களால் தோற்றுவிக்கப்பட்டதே சீதனம்.

   டாக்டர் மாப்பிள்ளை தேவை,or

   Accountant மாப்பிள்ளை தேவை, or

   பட்டதாரி தேவை or 

   குறைந்தது அரச உத்தியோகத்தர் (KKS) ஆவது தேவை,

   நான் ஒர் அரச உத்தியோகம் செய்யும் பெண் எனவே எனக்கு விவசாயியா மாப்பிள்ளை ? 

   போன்ற பேராசைகளால் தோற்றுவிக்கப்பட்டதே சீதனம்…சீதனம்…சீதனம்…சீதனம்…சீதனம்…………………..

   பேராசையும் ஹறாம்தான்.

   பெண்களின் தந்தையர்களாலும் பேராசை பிடித்த பெண்களாலும் தோற்றுவிக்கப்பட்டதே சீதனம்…சீதனம்…சீதனம்…சீதனம்…சீதனம்………………..

   ஒரு வருடத்தில் எத்தனை Doctors வெளியாகின்றனர் ?
   ஒரு வருடத்தில் எத்தனை Accountants வெளியாகின்றனர் ?
   ஒரு வருடத்தில் எத்தனை Engineers வெளியாகின்றனர் ?

   முன்வீட்டில் Doctor மாப்பிள்ளை,
   பின் வீட்டில் பட்டதாரி மாப்பிள்ளை,
   எனக்கு விவசாயியா அல்லது Sales Man ஆ மாப்பிள்ளை ?
   போன்ற பேராசைகளால் தோற்றுவிக்கப்பட்டதே சீதனம்…சீதனம்…சீதனம்…சீதனம்…சீதனம்………………..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s