எஸ்.எச்.அமீர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்ளத்தினால் திருகோணமலை மாவட்ட அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்ட இரண்டு நாள் பயிற்சி செயலமர்வு இன்று சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. திருகோமலை மாவட்ட அஹதிய்யா பாடசாலை சம்மேளனத்தின் உப தலைவர் மௌலவி வை. ஹதியத்துல்லா தலைமையில் கிண்ணியா இஹ்ஸானியா மகளிர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது .
இச்செயலமர்வு ஆரம்ப வைபவத்தில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் வை.எல்.எம்.நவவி, ஈரான் அல்-முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அரிய்க் ஹக்கி ,பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.எச்.நூருல் அமீன், கலாசார உத்தியோகத்தர் டி. ரவுப்தீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செயலமர்வில் வளவாளராக ஜாமியா நளிமியாவின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளரும் மிஸ்காத் ஆய்வு மையத்தின் ஸ்தாபகத் தலைவருமான உஸ்தாத் எம்.ஏ.மன்சூர் ,முன்னாள் கல்விப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம். நிஸாம் முதலானோர் கலந்து கொண்டனர்.