முஹம்மத் அம்ஹர்: மேல்மாகாணத்தின் சில பெளத்த ,கிறிஸ்தவ பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகள் இஸ்லாமிய உடையிலான சீருடைகளை அணிவதில் பல்வேறு தடைகளை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போது முஸ்லிம் மாணவியரின் சீருடைகள் மீதான தடை அவர்களின் பெற்றோரின் இஸ்லாமிய உடைகளுக்கு எதிராகவும் திரும்பியுள்ளது.
இது தொடர்பாக மேல்மாகாண சபை உறுப்பினர் முஜீபு ரஹ்மான் மேல்மாகாண சபையில் தெளிவு படுத்தியபோது ஹிஜாப், அபாயா உடைகளில் பெற்றோர் பாடசாலை கூட்டங்களுகு அனுமதிக்கப் படவேண்டும் என்ற சுற்று நிருபம் சகல பாடசாலைகளுக்கும் மாகாண கல்விப் பணிப்பாளர் அனுப்பவேண்டும் என்று மேல்மாகாண முதலமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார் .
முஸ்லிம் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பெரும்பான்மை பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களின் பெற்றோர் பாடசாலை நிர்வாகங்கள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களுக்கு போகும்போது இஸ்லாமிய உடைகளான ஹிஜாப், அபாயா போன்ற உடைகளுடன் கூட்டங்களில் பங்கு பற்ற அனுமதிக்கப் படுவதில்லை அவர்கள் திருப்பி அனுப்பப் பட்டுள்ளனர் ,சில பெரும்பான்மை பாடசாலைகளின் அதிபர்கள் ஹிஜாப் அபாயா உடைகள் அணியாது கூட்டங்களுக்கு வருமாறு பெற்றோரை கேட்டுள்ளார் . இதனால் பெரும்பான்மை பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவரின் பெற்றோர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர் . இது குறித்து மேல்மாகாண சபையின் கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் மேல்மாகாண சபை உறுப்பினர் முஜீபு ரஹ்மான் தெளிவு படுத்தியுள்ளார் .
இது தொடர்பாக மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் கல்வி அதிகாரிகளின் பங்கேற்புடன் இடம்பெற்ற இக் கூட்டத்தில் மேல்மாகாண சபை உறுப்பினர் முஜீபு ரஹ்மான் மேற்கண்ட தகவல்களை முன்வைத்தபோது முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆச்சரியத்துடன் அவற்றை கேட்டதுடன். பெரும்பான்மையினர் பாடசாலைகளில் முஸ்லிம் முஸ்லிம் மாணவர்களின் உடைகளைச் கழற்றுவதும், முஸ்லிம் பெண்கள் ஹிஜாப், அபாயா உடைகளை கழற்றிவிட்டு கூட்டங்களுக்கு வருமாறு உத்தரவிடுவதும் அதிகரித்து வருகின்றமை குறித்து முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க கவலை தெரிவித்ததுடன் , பெரும்பான்மையினர் பாடசாலைகளில் கற்கும் முஸ்லிம் முஸ்லிம் மாணவர்களின் பெற்றோர் ஹிஜாப், அபாயா அணிந்து கூட்டங்களுக்கு வர அனுமதிக்கும் வகையில் சகல பாடசாலைகளுக்கும் சுற்று நிருபம்மொன்றினை உடனடியாக அனுப்பி வைக்குமாறு முதலமைச்சர் மாகாண கல்விப் பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்தார்