நிழலான நிஜங்கள் -நடந்தது என்ன??(பகுதி 9)

Posted: மார்ச் 9, 2017 by மூஸா in Uncategorized

image

JABEER RAZI MOHAMED

ஒரு சகுனியின் சதுரங்கம்- (குமாரி தற்கொலை செய்வதற்கு முன்னர் கைப்பட எழுதிய கடிதம்)
***********************************************************
(ஒருவரின் குறைகளை வெளிப்படுத்தஅனுமதிக்கப்பட்ட 6 சந்தர்ப்பங்களைப் பற்றி இமாம் நவவி கூறும்போது “இறுதியாக ஒரு தலைமைத்துவத்தில் இருக்கும் ஒருவர் அந்தப் பொறுப்புக்கு பொருத்தமானவரல்ல அல்லது அவர் ஒரு பாவி என்ற காரணங்களுக்காக தனது கடமையை நிறைவேற்றவில்லை எனும் சந்தர்ப்பங்களில் ஒருவர் அவரின் குறைகளை அவரின் மீது அதிகாரம் கொண்டவர்களிடம் குறிப்பிட்டு அவரை நீக்கவோ அல்லது அவருக்குப் பதிலாக இன்னொருவரை நியமிக்கவோ முயல வேண்டும்.அல்லது அவருக்குப் பொறுப்பாக இருப்பவர்கள் அவரின் குறைகளைப் பற்றி தெரிந்து கொள்வதன் மூலம் அவரோடு நடந்து கொள்ள வேண்டிய முறையை தெரிந்து கொள்வதோடு அவரால் ஏமாற்றப் படாமல் தவிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் அவரை நேர்வழிப்படுத்த அல்லது பதவியில் இருந்து விலக்க முயலலாம்”-(அல் அத்கார், ஹிப்ழுல் லிஸான்,இமாம் நவவி)
*****
அடுத்த பகுதியோடு இந்த தொடர் முடிவிற்கு வரும்.
******************************************************************************
2004 மே மாதம் 16ம் திகதி சுரனிமாலா எழுதிய கட்டுரை ஹக்கீமுக்கும் குமாரிக்கும் இடையிலான தொடர்புகளை மறைத்து குமாரி சந்திரிக்காவை சந்தித்தார்,இந்த நாடகத்தை சந்திரிக்கா இட்டுக்கட்டி நடத்தினார் என்ற தோரணையில் அமைந்திருந்தது.

ஹக்கீமின் இந்த விவகாரத்தை சண்டே லீடர் பத்திரிகையில் எழுதியவர்கள் இருவர்.ஒருவர் சுரனிமாலா.மற்றையவர் பிரெட்ரிகா ஜேன்ஸ். இந்தக் கதையின் புதிரை அவிழ்க்க வேண்டும் என்றிருந்தால் சுரனிமாலாவைச் சந்தித்து நடந்தவற்றைக் கேட்க வேண்டும். சுரனிமாலாவைத் தேட ஆரம்பித்தேன். தேடிக்கொண்டு செல்லும் போதுதான் சுரனிமாலா என்பது லசந்த விக்ரமதுங்கதான் என்பது எனக்குத் தெரியவந்தது.லசந்த விக்ரமதுங்க சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார். அடுத்தவர் பிரெட்ரிகா ஜேன்ஸ்.பல முயற்சிகளின் பின்னர் பிரெட்ரிகா ஜேன்ஸ் அமெரிக்காவில்  seattleglobalist  என்ற பத்திரிகையில் வேலை செய்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன். பின்னர் பிரெட்ரிகா ஜேன்ஸைக் கண்டுபிடித்து அவரோடு பேசினேன்.லசந்த மாத்திரம்தான் இந்த விவகாரத்தில் ஈடுப்பட்டிருந்தார் தனக்கு அவர் யார் யாரைச் சந்தித்தார் என்று தெரியாது என்று கூறிவிட்டார்.

இந்தக் கதை உண்மை என்று எனக்குத் தெரியும்.ஆனால் ஹக்கீமை தனது தார்மீகத் தலைவனாக ஏற்ற அந்த அப்பாவிப் போராளிகளுக்குத் தெரியாது. அதற்கு உண்மைகள் ஆதாரங்களோடு வேண்டும்.இல்லாவிட்டால் மக்கள் நம்பமாட்டார்கள்.எனது பிரார்த்தனைகள் வீண் போகவில்லை.எனது தேடலையும் நான் விடவில்லை. நடந்த சம்பவங்களை நேரில் கண்ட ஒருவர் வேண்டும்.அதற்கு சரியான வழி குமாரியின் குடும்பத்தினர்தான் என்று அந்த வழியில் தேடிக்கொண்டு போனேன்.

அந்தத் தேடலின் இறுதியில் ஒருவர் என்னோடு பேசுவதற்கு முன்வந்தார்.அழுத கண்களோடு அவர் பேசினார்.தனது சொந்தத்திற்கு நடந்த அநீதியைச் சொல்லிக் கண்ணீர் வடித்தார்.உங்கள் மக்களிடம் கூறி எங்களுக்கு நீதி கேட்டுத்தாருங்கள் என்றார்.எந்த சந்தர்ப்பத்திலும் அவருடையை பெயரை வெளிக்கொணரக்கூடாது என்ற நிபந்தனையில் தன் சொந்தத்தின் கதையைக் கூறினார்.நான் ஹக்கீமால் வெட்கித்தலை குனிந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.சண்டே லீடர் மறைத்த அனைத்தையும் எனது கேள்விகளுக்கான விடைகள் அனைத்தையும் அவர் அவிழ்த்து விட்டார்.அவரின் வார்த்தைகளை மாத்திரம் வைத்து  இதனை நான் எழுதவில்லை.அதற்கான அனைத்து ஆவணங்களையும் அவர் காண்பித்தார்.

சண்டே லீடர் பத்திரிகையில் கட்டுரை வந்ததும் அரசாங்கம் சுதாரித்துக் கொண்டது.இது சந்திரிக்கா இட்டுக்கட்டிச் செய்ததுதான் என்று பத்திரிகை கூறியதும் இல்லை அது உண்மையான சம்பவம்தான் என்று நிரூபிப்பதற்காக கட்டுரை வெளிவந்த அன்றைய தினமே ரூபவாஹினியிலும்,ஐ.டி.என் தொலைக்காட்சியிலும் ரிஷாட் குழுவினர் எடுத்த குமாரியின் வீடியோவை அரசாங்கம் ஒளிபரப்பியது.அந்த காணொளியில் தனக்கும் ஹக்கீமுக்கும் இருக்கும் தொடர்பையும்,ஹக்கீம் தன்னை திருமணம் முடிப்பதாக ஏமாற்றியதையும் தனக்கு மரணத்தைத் தவிர வேறு வழியில்லை என்று குமாரி பேசியிருந்தார்.அந்த வீடியோ சண்டே லீடர் பத்திரைகையில் கட்டுரை வெளிவந்த இரவு வெளியானது.அந்தப் பேட்டியில் குமாரி சொல்லியவைகள் அனைத்தும் உண்மையானவை.

இந்தப் பேட்டி வெளிவந்தவுடன் ஹக்கீம் கண்ணாமூச்சி விளையாடத் தயாரானார். ஏற்கனவே லசந்த விக்ரமதுங்கவும் ஹக்கீமும் சொல்லிக் கொடுத்து,ஹக்கீம் தன்னைத் திருமணம் முடிப்பார் என்ற வாக்குறுதியை நம்பி குமாரி கொடுத்த பொய்ப் பேட்டி தயார் நிலையில் இருந்தது.ரூபவாஹினியில் ஹக்கீமுடன் தொடர்பிருப்பதாக ஒளிபரப்பான பேட்டியைத் தொடர்ந்து, தன்னை சந்திரிக்கா இவ்வாறு சொல்லச் சொன்னார் என்ற பேட்டி உடனே சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. சிரச தொலைக்காட்சியில் ஹக்கீமிற்காக குமாரி சொன்ன பொய்யால்தான் ஹக்கீமின் மானம் அன்று காப்பாற்றப்பட்டது. இல்லாவிட்டால் ஹக்கீம் இன்று முகவரி இல்லாத ஒருவராக இருந்திருப்பார்.முஸ்லிம் காங்கிறசின் மானத்தை காப்பாற்றியது அன்று குமாரி என்கின்ற ஒரு வேற்றுமதப் பெண்.இதற்கெல்லாம் முழுக் காரணம் ஹக்கீமின் வெறிபிடித்த காமம் என்பதை போராளிகள் ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும்.
அதற்குப் பின்னர் லசந்த விக்ரமதுங்கவும் ஹக்கீமும் குமாரிக்கு சொல்லிக்கொடுத்து எடுத்த பேட்டி எழுத்து வடிவில் மே மாதம் 30ம் திகதி சன்டே லீடர் பத்திரிகையில் வெளியானது.அது இங்கே இணைக்கப்பட்டுள்ளது. http://www.thesundayleader.lk/archive/20040530/interviews.htm

அதன் பின்னர் 2004 மேமாதம் 31ம் திகதி குட்மோனிங் சிறிலங்கா நிகழ்ச்சியில் குமாரி பேசினார்.அதனால் ஹக்கீமின் அசிங்கங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டு, ரிஷாட் பதுர்தீனும் அவரது கூட்டமும் துரோகிகளாகச் சித்தரிக்கப்பட்டு கட்சியைவிட்டு வெளியேற்றப்பட்டனர். அவர்கள் கட்சியை விட்டு வெளியேற்றப்படதற்கான காரணம் குமாரி கூரேயின் விவகாரமே அன்றி வேறில்லை.ஒரு பெண்ணின் மீது கொண்ட காமத்தால் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் எவ்வாறு சின்னாபின்னப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்.இதன் பிறகும் யாரும் இதனை ஹக்கீமின் ஒரு தனிப்பட்ட விவகாரம் என்று தட்டிக்கழிப்பீர்களா?

அதன் பின்னர் 2004 ஓகஸ்ட் மாதம் 18ம் திகதி குமாரியும் ரவூப் ஹக்கீமின் பிளவர் வீதி நண்பரும் நண்பரின் மனைவியும்,அவரது இரண்டு குழந்தைகளும் சிங்கபூர் சென்றார்கள்.ஹக்கீம் 20ம்திகதி சிங்கப்பூருக்கு வந்தார்.அவர்கள் சிங்கப்பூரில் நியூ பார்க் ஹோட்டலில் தங்கினார்கள்.அனைவருக்கும் முன்னிலையில் 2004 செப்டம்பர் மாதம் 23ம் திகதிக்கு முன்னர் குமாரியைத் திருமணம் முடிப்பதாக பகிரங்கமாக ஹக்கீம் வாக்குறுதியளித்தார்.அதன் பின்னர் ஓகஸ்ட் 25ம்திகதி ஹக்கீம் இலங்கைக்கு வந்தார்.குமாரி அடுத்த நாள் வந்தார்.இந்தத் தகவல்களின் உண்மைத்தன்மையை தெரிந்து கொள்ள விரும்புபவர் ஹக்கீம் அவர்கள் அந்தத் திகதியில் எங்கிருந்தார் என்பதை பரிசோதித்துப் பார்த்தால் புரிந்துவிடும்.

ஹக்கீம் வாக்களித்தது மாதிரி குமாரியை அவர் திருமணம் முடிக்கவில்லை.அன்று குமாரி அந்தப் பேட்டியை சிரச தொலைக்காட்சிக்கு கொடுக்காமல் இருந்திருந்தால் ஹக்கீம் என்றோ அழிந்திருப்பார்.ஆனால் தன்னைத் திருமணம் முடிப்பார் என்ற நம்பிக்கையில்தான் குமாரி இவை அனைத்தையும் செய்தார்.ஹக்கீம் குமாரிக்கு திருமணம் முடிப்பதாகத் திகதி கொடுத்து மீண்டும் ஏமாற்றினார்.குமாரி மனதுடைந்துபோனார்.
சில நாட்களின் பின்னர் ரிஷாடின் கூட்டத்திற்கு எதிராகவும்,குமாரியின் உண்மையான வீடியோவைப் பிரசுரித்ததற்காகவும் ரூபவாஹினிக்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு செய்வதற்கும்,வழக்குத் தாக்கல் செய்வதற்கும்  கையெழுத்து வாங்குவதற்கு ஹக்கீம் குமாரியை நாடிய போது,தனது வாழ்க்கை ஹக்கீமின் அரசியலுக்கான பகடைக் காயாகப் பாவிக்கப்படுகின்றது என்பதை குமாரி மெது மெதுவாக உணர்ந்து கொள்ள ஆரம்பித்தார்.அவர் கையெழுத்துப் போட மறுத்துவிட்டார்.

ஹக்கீம் தன்னைத் இனித் திருமணம் முடிக்கப்போவதில்லை. தன்னைப் நன்றாகப் பயன்படுத்திவிட்டு அது வெளியே வந்ததால் அவரின் மானம் போய்விடக்கூடாது என்பதற்காக தன்னை வைத்து அனைத்தையும் முறியடித்துவிட்டு தன்னைக் கைகழுவிவிட்டார் என்பதைக் குமாரி புரிந்து கொண்டார்.
ஹக்கீமைப் பொறுத்தவரைக்கும் குமாரியின் உடம்பு மாத்திரம்தான் அவருக்குத் தேவை.குமாரிக்கு ஹக்கீம் என்பது அவளின் வாழ்க்கை.அனைத்தையும் அவர் இழந்தது தன்னைத் திருமணம் முடிப்பார் என்பதற்காகத்தான். அனைத்து அவமானங்களையும் அவர் சகித்துக்கொண்டதும் அதற்காகத்தான்.இத்தனை முறை ஏமாற்றப்பட்டதன் பின்னர் தான் இனி இந்த உலகில் இருந்து பயனில்லை என்று குமாரி தன்னை அழித்துக்கொள்ள முடிவு செய்தார்.குமாரி ஹக்கீமை ‘பபி’ என்றுதான் செல்லமாக அழைப்பார்.

தன் கதை தெரிந்த தனது நெருக்கமான இரண்டு சொந்தங்களுக்கு குமாரி ஒரு கடிதம் எழுதினார்.அந்தக் கடிதத்தின் ஒரிஜினல் பிரதியை அவரின் அந்தச் சொந்தக்காரர் என்னிடம் தரும்போது அழுதுவிட்டார். நான் இங்கு இணைத்திருப்பது குமாரியின் கைப்பட எழுதிய கடிதம்.குர்ஆனையும் சுன்னாவையும் யாப்பாகக் கொண்ட ஒரு முஸ்லீம் கட்சியின் தலைவரால் ஏமாற்றப்பட்டு இறந்தவளின் கடிதம்.ஹக்கீமைக் காப்பாற்றி காங்கிறசைக் காப்பாற்றிய பெண்ணின் கடிதம்.யாருக்கு எழுதப்பட்டதோ அவர்கள் இருவரின் பெயரும் இங்கே தவிர்க்கப்படுகிறது. அந்தக் கடிதம் சிங்களத்தில் எழுதப்பட்டிருப்பதால் அதன் மொழி பெயர்ப்பைத் தமிழில் தருகிறேன்.

16.11.2004
வெற்றியும் மகிழ்ச்சியும் உண்டாகட்டும்.

அன்புள்ள ………..மற்றும்…………………..,

நீங்கள் இருவரும் எனக்கு அதிகமாக உதவி செய்தீர்கள்.என்னை நன்றாகப் பார்த்துக்கொண்டீர்கள். என்னை சந்தோஷமாக வாழ வைக்க நீங்கள் மிகவும் பாடுபட்டீர்கள்.என்றாலும் உங்களுக்கு அதைச் செய்ய முடியாது.இந்த உலகில் என்ன மகிழ்ச்சியாக வைக்க,வாழவைக்க முடிந்த ஒருவர் பபி மாத்திரமே. அவருக்கு நான் தேவையில்லை என்றால் எனக்கு இந்த வாழ்க்கையில் பயன் இல்லை.இரவு பகல் பாராது எனது பிரச்சினைக்கு தீர்வு காண நீங்கள் இருவரும் முயற்சி செய்தீர்கள்.அவற்றையும் பார்க்காமல் நான் இந்த முடிவை எடுப்பதற்காக என்னை மன்னியுங்கள்.எனக்கு எனது காதல் இல்லாமல் என்னால் வாழ முடியாது. என்னை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் எல்லோருக்கும் இறைவன் அருள்பாலிக்கட்டும்.

இப்படிக்கு,
குமாரி கூரே.

** …..பபி எனக்கு கொடுத்த அனைத்தையும் அவரின் மகள்களுக்குக் கொடுத்துவிடுங்கள்.
**எனது உடைகளை அநாதை இல்லத்திற்கு கொடுத்துவிடுங்கள்.
**எனது மரணச் சடங்குகளை நீங்கள் இருவரும் மாத்திரமே செய்யுங்கள்(முடியுமானால் மாத்திரம்)
**எனது வீட்டாருக்கும் மற்ற எவருக்கும் எனது சடலத்தைக் காட்டவேண்டாம்.இந்த அனைத்து வேலைகளையும் நீங்கள் இருவர் மாத்திரம் செய்தால் உங்கள் இருவருக்கும் நன்மை உண்டாகும்.

இந்தக் கடிதத்தை எழுதிய பின்னர் குமாரி மூன்று முறை தற்கொலை முயற்சி செய்தார்.       (தொடரும்)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s