சாதாரண தரம் சித்தியில்லாத 94 ப.ஊ

Posted: மார்ச் 16, 2017 by மூஸா in Uncategorized

“ நமது பாராளுமன்றத்தில் மொத்தம் 225 எம்பிக்கள் உள்ளனர். 196 பேர் தேர்தல் மூலமும் மிகுதி 29 பேர்கள் தேசியப் பட்டில் மூலமும் தெரிவு செய்யப்படுகின்றனர்.
இதில் அதிர்ச்சியளிக்கும் விடயம் என்ன வென்றால், இவர்களில் 94 எம்பிக்கள் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில்கூட
சித்திபெறவில்லை! 25 பேர்கள் மட்டுமே பட்டதாரிகள். இத்தகவல்களை பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எம்.ஓ.ஏ.டி சொய்சா மந்தாநாள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
இந்த லட்சணத்தில், இவர்கள்தான் இலங்கை அரசின் சட்டவாக்காளர்களாம்”

அதற்கு ஒரு நண்பர் “படிப்பு அவசியம் இல்லை, நேர்மையும். திறனும் இருந்தால் போதும்” என்று கருத்து கூறியிருந்தார்.    

நான் அவரிடம் கேட்கிறேன் . 
படிப்பு அவசியம் கிடையாதா?  வெறுமனே நேர்மையானவர்களாகவும், ஆற்றல் உடையவர்களாகவும் இருந்தால் போதுமா? 
ஒரு சாதாரண தொழில் ஒன்றுக்கே  இப்ப ஏகப்பட்ட தகைமைகள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லையா? 
நமது பெண்பிள்ளைக்கு வரன் தேடும்போது படித்த மாப்பிள்ளையை பார்த்து தேடுகிறோம்…. இல்லையா?    
நமது பிள்ளைகளை படித்த பிள்ளைகளுடன் பழக விடுகிறோம். காரணம் அப்பிள்ளைகள்  ஏழையாயினும் படித்திருந்தால் நல்ல பண்புடன்  இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் தானே?

அப்படி இருக்கும்போது நமது சார்பாக நாம் தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பும் உறுப்பினர்கள்  கற்றவர்களாக இருக்கக் கூடாதா?
அதனால்தான் அங்கே எடுத்ததெற்கெல்லாம் கூச்சல் போடுகிறார்கள். பண்புடன் நடக்கிறார்களா? படிப்பறிவுள்ளவர்கள் அப்படி செய்வார்களா?

பாராளுமன்றம் என்றால் அது ஒரு சட்டவாக்கமன்றம். வெறுமனே கல்லினாலும் மண்ணினாலும் கட்டப்பட்ட கட்டிடம் அல்ல. பாரை  ஆளுகின்ற  மன்றம்.   அது மீயுயர்தன்மை வாய்ந்தது.  அங்குதான் நம்மை ஆளும் சட்டம்கள் இயற்றப்படுகின்றன. அதன் உறுப்பினர்கள்தான் அதை இயற்றுகிறார்கள். சட்டம் ஒன்று ஆக்க ப்படும்போது அதன் நோக்கம் என்ன? என்ன காரணத்திற்காக இயற்றப் படுகிறது?  அதன் உள் அர்த்தம் என்ன?  இதன் பின்விளைவுகள் என்ன? தன்னை சார்ந்த சமூகத்தை அச்சட்டம் எந்த வகையில் பாதிக்கும். இதெல்லாம் விளங்காமல்தான் பெரும்பான்மையானவர்கள் அங்கு கையை உயர்த்துகிறார்கள்.

அதற்காக அவர்கள் சட்டவல்லுனர்களாகவோ அல்லது சட்டம் படித்தவர்களாகவோ இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை. At least ஆகக்குறைந்த தகைமையான GCE A/L                 சித்தியடைந்தவர்களாகவாவது இருக்க வேண்டாமா? (ஏனெனில் ஆகக் குறைந்த தகைமை GCE O/L என்ற காலம் மலையேறிவிட்டது) 

சும்மா நேர்மையும், ஆற்றலும் மட்டும் இருந்தால் போதுமா?          எதிர்கட்சிக்காரர்  எது சொன்னாலும் அதற்கு கூப்பாடு போடமட்டும் தெரிந்தால் போதுமா? மேடையில் வாய் கிழிய எகன மொகனையுடன் பேச/ஏச மட்டும் தெரிந்தால் போதுமா? 

இதற்கு பொறுப்பு தாரிகள் யார்? நாம்தானே. எந்தவித தகுதியும் இன்றி  பிரதேச சபையில் நுழைந்து, அடாவடித்தனம் செய்து வெற்றிபெற்று, பின்னர் படிப்படியாக முன்னேறி, மாகாண சபை, அடுத்தது பாராளுமன்றத்திற்கும்  PROMOTION   கொடுக்கிறோம். ஆனால் ஒரு அரச அலுவலகத்தில் கல்வித்தகுதி இல்லாமல் அவ்வாறு பதவி உயர்வு கிடைத்துவிடுமா? 
நாம்தான் நமது கண்ணில் மண்ணைத் தூவுகின்றோம் என்பது ஏன் புரிவதில்லை.
                                                                                        சிந்தித்தால் விடை கிடைக்கும்.  
                                                                                                      முக்கிய குறிப்பு:  இதை நான் யாரையும் மனதில் வைத்து எழுதவில்லை. இது என் பொதுவான அபிப்பிராயம்  அவ்வளவுதான். யாருக்கும் சாதகமாகவும் எழுதவில்லை.  பாதகமாகவும் எழுதவில்லை.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s