Archive for the ‘அரசியல்’ Category

ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நிறைவேற்ற முனைந்தால் நாடு பாரதூரமான பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் – இலங்கை அரசின் இணை அனுசரணையுடனேயே கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசு அதனை நிராகரிப்பதாக இருந்தால் தற்போது அது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நிறைவேற்ற முனைந்தால் நாடு பாரதூரமான பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். இதில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடங்களை அரசு நிராகரிக்காது செயற்படுத்த முயற்சித்தால் அதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுப்போம். இந்த விடயத்தில் அரசு விளையாட்டுத்தனமானக் கருத்துகளைக் கூறி நாட்டு மக்களை மடையர்களாக்கி சாதிக்க நினைக்கின்றது. எதிர்வரும் 13ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகின்றது. இதில் அரசு தமது தெளிவான நிலைப்பாட்டைத் தெரிவிக்கவேண்டும்” – என்றார்.
Advertisements
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் கிழக்கு முதலமைச்சர் சம்பந்தமாக ஊடக அறிக்கை
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை தமிழ் தேசிய கூட்டமைப்பு தனக்கு வழங்கப்படல் வேண்டுமென்று ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருப்பதாக அறிய முடிகின்றது.
கிழக்கு மாகாணம் மூவின மக்களையும் சம அளவாக காணப்படும் ஒரு மாகாணமாகும்.  அந்த வகையில் கிழக்குக்கு தமிழர் ஒருவர் முதலமைச்சராக கொள்கையளவில், நிராகரிக்க முடியாது.
ஆனால் இன்று நாடு இருக்கின்ற சூழ்நிலையில் குறிப்பாக கடந்த 2 வருடங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக தெற்கில் எழுப்பப்பட்ட இனவாத கோசம் மறுபுறத்தில் இன்றைய ஜனாதிபதி மைத்திரியின் வெற்றிக்கான காரணம் வட கிழக்கு மக்களின் வாக்குகள் அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகளவில் மைத்திரிபால சிறிசேனாவுக்கு வாக்களித்தமை உறுதியாக ஏற்றுக்கொன்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச. அதனை அவர் பகிரங்கமாகவும்  தெரிவித்திருந்தார்.
மகிந்த ராஜபக்சவுக்கு  சிங்கள மக்கள்  பெரும்பாண்மையாக வாக்களித்துள்ளனர் ஆனால்  சிறுபாண்மைச் சமுகம் குறிப்பாக முஸ்லீம்களினதும் வாக்குகள் கார்ணமாகவே  நான் தோல்வியடைந்து விட்டேன், என்ற ஒருவித அதியிருப்தி உணர்வு  பெரும்பாண்மையான சிங்கள மக்கள் மத்தியில் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.
அதே நேரம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஸ்ரீ.ல.மு.கா உதபியுடன் வட கிழக்கையும் இணைத்து சுயாட்சிக்கான நடவடிக்கை திட்டத்தை செயற்படுத்த முனைகின்றது.
இது தொடர்பாக  சம்பந்தனும் ரவுப் ஹக்கீமும்  மைத்திரியுடன் இரகசிய  உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டு இருக்கின்றனர். என்ற ஒரு பிரச்சாரத்தில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போது மஹிந்த  மற்றும் விமல் வீரவன்ச உட்பட மகிந்த அணியினர் கடுமையாக பிரச்சாரங்களை செய்து வந்தனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மையித்திரிபால சிறிசேனாவுக்கு தாம் ஆதரவு அளிக்கின்ற முடிபினை பகிரங்கப்படுத்தி தாமதித்த காரணமும் இவ்வாறன மகிந்த அணியினரின் பிரச்சாரமாகும்.
மறுபுரத்தில் முஸ்லீம்களுக்காக கரையோர மாவட்டம் மறைந்த தலைவர்  எம்.எச்.எம் அஸ்ரபினால் முன்வைக்கப்பட்டபோதிலும்  சந்திரிக்கா பண்டாரநாயக்க அரசாங்கத்தில் தாம் பலமிக்க அமைச்சராக இருந்தும் அதனை செயட்படுத்துவதற்கு இரண்டில் 3 பெரும்பாண்மை பாராளுமன்ற அனுமதி தேவையாக இருந்தது. என்ற யதார்த்தினையும் மட்டுமல்லாமல் கரையோர மாவட்டம் தொடர்பாக மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஸ்றப் ஊடகங்கள் வாயிலாக  எதுவித கோரிக்கைகளை முன்வைத்ததன் காரணம் அது பெரும்பாண்மை சமுகத்தை பொருத்த வரையில் உணர்வுபூர்வமாகப் பார்க்க கூடியதொன்பதால் உரிய சர்ந்தர்ப்பம் வரும்பொழுது  அமைதியாக  செய்து முடிக்க வேண்டும் என்றிருந்தார்.
கிழக்கு முதலமைச்சர் பதவி  கடந்த  6 மாதங்களுக்கு முன்பு  முன்னைய அரசினால்  முஸ்லீம் காங்கிரசுக்கு  வழங்கப்படுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டபொழுது முதலமைச்சர் பதவியை பெறுவதில் நாட்டமில்லாத ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் மக்களுக்கே ஏதாவதொரு காரணத்தை செல்ல வேண்டும் என்பதற்காக
தமக்கு முதலமைச்சர் பதவி முக்கியமல்ல கரையோர மாவட்டமே முக்கியம் என்றதொரு பிரச்சாரத்தினை ஊடகங்கள் வாயிலாக முன்னெடுத்தது. முஸ்லீம்கள் ஏதோ தனிநாடு கேட்கின்றார்கள். என்று ஒரு பிரமையை பெரும்பாண்மைச் சமுகத்தின் மத்தியில்  விதைக்கப்படுவதற்கு  காரணமாக இருந்தார்கள்.
இதன் விளைவாக  ஜ.தே.கட்சி ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி,  கூட்டமைப்பு, ஜே.வி.பி, கெல உருமைய,  போன்ற சகல கட்சிகளினதும்  பாராளுமன்றத்திற்குள்ளும்  அதற்கு வெளியிலும் பகிரங்கமாக எதிர்த்தாகள். இன்னும் கூறப்போனால்  அவர்களது ஊடகங்களுக்கு ஊடான கரையோர மாவட்டக் கோரிக்கையின் விளைவு அதனை தர விரும்புகின்ற கட்சினையும் ஒன்றுக்கு இரண்டு  முறை சிந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளியிருந்தது.
போதக்குறைக்கு கடந்த ஜனாதிபதி தேர்தலில்  மகிந்த ராஜபக்சவின் தோல்வியில் முஸ்லீம்களை  நியாயப்படுத்துவதற்காகவோ, அல்லது ஜ.தே.கட்சி முன்வைத்த தமது அதீத கோரிக்கைளுக்கு ஜ.தே.கட்சி உடன்பட வைப்பதற்காக எடுத்துக்கொண்ட ஒரு உத்தியாகவோ தொடர்ச்சியாக கறையோர மாவட்டத்தை மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு என்று செய்து வந்த பிரச்சாரமும்  பின்னர் மைத்திரியை ஆதரிக்க முஸ்லீம் காங்கிரஸ் முடிவெடுத்தன் பின்பு மகிந்த அணியினர் நாட்டில்  ஒரு துண்டை வழங்க தனி பிரிவாக வழங்க முடியாது. என்று மறுத்தன் காரணத்தில்தான்  முஸ்லீம் காங்கிரஸ்  மறுபக்கம் சென்றது.  என்ற பிரச்சாரமும்  முஸ்லீம்களைப் பற்றியும் முஸ்லீம் காங்கிரஸ் பற்றிய தவறான கண்ணோட்டத்தை கணிசமான சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது
இந் நிலையில் முஸ்லீம் காங்கிரஸ் தயவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முதலமைச்சர் பதவி பெற்று ஆட்சியமைக்குமானால் வடக்கு கிழக்கு முஸ்லீம்கள்  சேர்ந்து வடகிழக்கை இணைக்கப்  போகின்றார்கள். என்ற பிரச்சாரத்தை தெற்கில் இனவாதிகள் செய்வதற்கு ஒரு  வாய்ப்பிருக்கின்றது.
குறிப்பாக இரண்டு முதலமைச்சர்கள் சேர்ந்து இரண்டு மாகாணங்களையும் இனைப்பதற்கு  சட்டரீதியான வழிமுறைகள் இருக்கின்றன.  குறிப்பாக மஹிந்த ராஜபக்ச புதிய கட்சியொன்றை  மீண்டும்  ஆரம்பித்து அரசியலில் இறங்க இருக்கின்றார்.  என்ற செய்திகள் அடிபடுகின்றன.
அவ்வாறான சூழ்நிலையில் முஸ்லீம்கள் தமிழர்களுக்கு எதிராக அவரது இனவாத பிரச்சாரம் செய்வதற்கு  இரு முதலமைச்சர்கள் பதவி ஒரு பெரிய வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்துவிடும்.
முஸ்லீம் காங்கிரஸ் சாதாரண நிலையில் சாத்தியப்படாத கரையோர மாவட்டத்தை கேட்டு அது ஊடகங்கள் வாயிலாக பாரிய பிரச்சாரம் செய்யப்பட்டுள்ள இந் நிலையில் முஸ்லீம்கள் தொடர்பாக தப்பாண அபிப்பிராயத்தை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் தமிழ்த் தேசிய  கூட்டமைப்புடன் முதலமைச்சர் பெறுவதற்கு துனைபோகி முஸ்லீம்களுக்கு இன்னும் அநியாயத்தை  செய்ய வேண்டாம் என வேண்டுகின்றோம்.
முஸ்லீம்களுக்கு முஸ்லீம் காங்கிரஸ் உதவ முடியாது பரவாயில்லை. ஆனால் உபத்திரமாகவாது செய்யாமல் இருக்குமாறு வேண்டுகின்றோம்.  அதே நேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்  எக்காரணம் கொண்டு  முதலமைச்சர்  பதவியை  விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று அறிக்கை மேல் அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.
இது யாரோ அவர்களிடம் போய் முதலமைச்சர் பதவி எங்களுக்குத் தாருங்கள் என்று கேட்டதற்கு அவர்கள் கூறும் பதில் போல் இருக்கின்றது.
முஸ்லீம் காங்கிரஸ் ஏற்கனவே  தனது கட்சிக்கு  முதலமைச்சர் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் இன்று இருக்கின்ற அதே அங்கத்தவர்களுடன்  அதனைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி தலைவராக மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபாலவே இருக்கின்றார்.  மாறாக தமிழ்த்தேசிய கூட்டமும் முதலமைச்சர்  பதவி வேண்டுமென்றால் அதனை நாங்கள் எதிர்க்கவில்லை.
அதனை முஸ்லீம்களுக்கு விட்டுத் தரவேண்டிய அவசியமுமில்லை. அவர்கள் தமது சொந்த வழியில் அதனை பெறவாய்பியிருந்தாள் அதனைப் பெற்றுக் கொள்ளலாம். மாறாக இன்றைய கால சூழ்நிலையில் முஸ்லீம் கட்சிகள் பகைடைக்காய்கலாக பாவித்து முஸ்லீம் சமுகத்தை மேலும் இக்கட்டான நிலைக்கு தள்ள முயற்சிப்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அதே நேரம் முஸ்லீம்கள் எக்கேடு கெட்டால் என்ன? தனது ஆதங்கத்தை மட்டும் கருத்திற் கொண்டு நாங்கள் செயற்படுவோம். என்கின்ற மனோ நிலையில் இருந்து முஸ்லீம் கட்சிகள்  விடுபட வேண்டும்.

வை.எல்.எஸ் ஹமீட்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிகா பண்டாரநாயக ஆகியோரை ஒரே மேடைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த காலங்களில் கட்சிக்குள் ஏற்பட்ட பல்வேறு பட்ட கருத்து மோதல்கள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தற்பொழுது இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
எதிர்வரும் தேர்தல்களின் போது கட்சி வெவ்வேறாக பிரியும் அபாயம் காணப்படுவதால், சுதந்திரக் கட்சியின் முக்கிய மூன்று தூண்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிகா பண்டாரநாயக ஆகியோரை ஒரே தேர்தல் மேடையில் ஏற்றி கட்சியை பாதுகாக்கும் பாரிய முயற்சியில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகிறனர்.
கடந்த வாரங்களில் கட்சின் தலைவர் தொடர்பில் எழுந்த பிரச்சினையின் போது கட்சி உறுப்பினர்கள் இரு பிரிவுகளாக பிரியும் அபாயம் ஏற்பட்டதை அடுத்து, கட்சியை மீண்டும் வெற்றியின் பாதையில் கொண்டு செல்வதற்காக ஜனாதிபதிகள் மூவரையும் ஒரே மேடைக்கு கொண்டுவர வேண்டிய கட்டாயம் காணப்படுவதாக சுதந்திரக் கட்சியின் கிராமிய தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் கட்சியின் கிராமிய மட்ட உருப்பினர்களிடத்திலும் பாரிய பின்னடைவு காணப்படுவது தொடர்பிலும் கட்சி கூட்டத்தின் போது கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது, ஆகவே மீண்டும் கட்சியை கிராமிய மட்டத்திளிலிருந்து வெற்றியின் பாதைக்கு கொண்டு செல்வதற்கான திட்டங்களில் மும்முரமாக ஈடுபடவேண்டிய அவசியம் காணப்படுவது தொடர்பில் ஆராயப்பட்ட போது, சிரேஷ்ட உறுப்பினர்கள் கட்சின் பிரதான மூன்று தூண்களையும் ஒரே மேடையில் ஏற்றி அதன் மூலம் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கட்சின் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
என்றாலும் இது குறித்து ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவுடனோ, முன்னாள் ஜனாதிபதிகள் உடனோ பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக ஆகியோர் ஒன்றிணைந்து எதிராக வேலை செய்தததால் மூவரையும் ஒரே மேடைக்கு கொண்டு வருவது மிகவும் கடினமான காரியம் என்பது குறிப்பிடத்தக்கது.

மின்னல் ரங்கா எனும் இரட்டை உளவாளியின் ரகசியம் அம்பலம்..!!

AKP Group

மஹிந்த எதிர் கட்சி தலைவராக இருந்த காலத்தில், அவரது தமிழ் ஊடக அதிகாரியாக கடமையாற்றியவர் யார் தெரியுமா? அந்த நபர் தற்போது ஒரு பாராளுமன்ற உறுப்பினர். அப்படியானால் அவர் ஒரு ஐமசுமு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவேண்டும் என்றல்லவா ஊகிக்கிறீர்கள்? ஆனால் அவர் ஐதேக ஊடாக பாராளுமன்றம் புகுத்தப்பட்டவர்!!

குழப்பமாக இருக்கிறதா? கீழே படியுங்கள்

மஹிந்த எதிர் கட்சி தலைவராக இருந்த காலத்தில், அவரது தமிழ் ஊடக அதிகாரியாக கடமையாற்றியவர் ஜயரத்னம் சிறீரங்கா! அதாவது இன்றைய மின்னல் ரங்கா. அந்த தொடர்புதான் மஹிந்த வீட்டு அடுக்களை வரை அவரை கொண்டு சென்றது. இந்த தொடர்பு காரணமாக பின்னர் ரங்காவுக்கு ஒஸ்லோவில் அமைந்த தூதரகத்தில் ஜனாதிபதி தொழில் ஒன்றைக்கூட வழங்கினார். இதோ அமெரிக்க தூதரகத்தின் கேபிளின் பகுதி (விக்கிலீக்ஸில் இருந்து)

Popular Tamil TV talk show host Sri Ranga Jeyaratnam (strictly protect), who has close personal ties to the Rajapaksa family…..

The President, whose son is a close friend of Ranga’s, insisted that Ranga leave the country, offering him the post of DCM in Oslo as an inducement. Should he fail to accept the offer of exile, Rajapaksa reportedly told him, Devananda would have him killed. Ranga said he also feared assassination by the LTTE, who consider him a Rajapaksa stooge.

பார்க்க https://www.wikileaks.org/plusd/cables/07COLOMBO728_a.html

புலிகள் காலத்தில் தனது அரசியல் பயணத்தை வன்னியில் தொடங்க ஆசைப்பட்ட ரங்காவுக்கு எதிரும் புதிருமான புலிகளும் EPDP யும் எதிர்ப்பு தெரிவித்தன என்பதும் இன்னுமொரு ஆச்சரியம்! அவ்வளவு தூரம் இவரைப்பற்றிய இமேஜ், டெமேஜ்! இதன் காரணமாக மஹாராஜா ஊடகமூடாக ஐதேக தலைவர் ரணிலை நெருங்கி மலையக மக்களின் ஓட்டுக்கள் மூலம் எம்பியானார்.

(இதற்கும் மேலதிகமாக தேர்தல் முடிவுக்கு பின்னர், மஹாராஜா நிறுவனம் தேசியப்பட்டியல் எம் பி ஒன்றும் கேட்டது! ரணில் மறுக்க மஹாராஜா நிறுவனம் ரணிலுக்கு எதிராக செயற்பட துவங்கியது. சஜித்தை கொம்பு சீவி விட்டு ரணிலை பழி வாங்கியது. இதன் காரணமாக ரணிலுக்கும் சிரசைக்கும் இன்னும் சரியான உறவில்லை)

புலிகளின் அழிவுக்கு பின்னர் வன்னிக்கு தன் அரசியல் தளத்தை மாற்றுவது ரங்காவின் திட்டம். ஆனால் வெற்றிலை சின்னத்தில் அவர் போட்டியிடுவதை ரிஷாத் கடுமையாக எதிர்க்க தனது பிரஜைகள் முன்னணி மூலம் அரசியல் செய்து பஸ் சின்னத்தில் நூற்றுக்கும் குறைவான வாக்குகளை எடுத்து மூக்குடைபட்டார். தனது வன்னி அரசியல் கனவை ரிஷாத் உடைத்ததும் ரிஷாத் மீதான கோபத்துக்கு காரணம்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை பொது எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று தேர்தல் திணைக்களத்தில் கட்டினார்.

எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் இன்று தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிட உள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் சார்பிலேயே மைத்திரிபால சிறிசேனவிற்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது

 எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில்  புதிய கூட்டணியொன்றை உருவாக்குவது தொடர்பான பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் முன்னால் ஜனாதிபதி சந்திரகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்கிடையில் இந்த பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சில கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ள போதும் எதுவித முடிவும் இதுவரையில் எடுக்கப்படவி்ல்லை.
ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குதல் மற்றும் பொதுத் தேர்தலின் போது பொதுவான ஒரு கொள்கை அடிப்படையில் ஒன்றினைந்து செயற்படுதல் போன்ற விடயங்கள் பற்றி இந்த பேச்சுவார்த்தையின் போது ஆராயப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடனான இந்த சந்திப்பின் போது மக்கள் விடுதலை முன்னணியினர் கலந்துக் கொள்ளவில்லை எனவும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளின் போது அவர்களும் கலந்து கொள்ளும் சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியினருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது தமக்கு அவ்வாறான ஒரு கூட்டணி தொடர்பாக எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் அவ்வாறு ஆரமபித்தால் அதில் இணைவதா?இல்லையா? என்பது தொடர்பில் உறுதியாக கூற முடியாது எனவும் தெரிவித்தன

unnamed (12)

( எஸ்.அஷ்ரப்கான் )

முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் உறுப்பினர்களின் கருத்துக்களை உள்வாங்காமல் தனிமனித ஆட்சியினை செய்துவந்தார். இவரது ஆட்சியில் வெளிப்படைத் தன்மை காணப்படவில்லை. இதனாலேயே சில உறுப்பினர்கள் அவரைவிட்டும் தூரமாகி நின்றோம். முதல்வர் நிஸாம் காரியப்பர் உறுப்பினர்களின் கருத்துக்களை உள்வாங்கி எங்களுடன் கலந்தாலோசனை செய்து தனது பதவிக்காலத்தினை கொண்டுசெல்வாராயின் நிச்சயமாக அவருக்கு பக்கபலமாக இருப்போம். என்று கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் தெரிவித்தார்.
கல்முனை மாநகர புதிய முதல்வர் நிஸாம் காரியப்பருக்கு முதல்வர் ஆடை அணிவிக்கும் விழா அன்மையில் கல்முனையில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றிய பறக்கத்துள்ளாஹ் தொடர்ந்தும் அங்கு உரையாற்றும்போது,
கிழக்கு மாகாணத்தைப்பொறுத்தவரையில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் பரம்பரை பரம்பரையாக ஒற்றுமை, சக வாழ்வு வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். ஒவ்வொரு முஸ்லிம் ஊர்களுக்கும் இடையில் தமிழ் ஊர்களும,; அதேபோல் தமிழ் ஊர்களுக்கு இடையில் முஸ்லிம் ஊர்களும் என ஒன்றாய்க்கலந்து வாழ்ந்திருக்கின்றனர்
குறிப்பாக கல்முனை மாநகரம் என்பது வெறுமனே ஒரு ஊரையோ அல்லது ஒரு இனத்தையோ பிரதிபலிக்கும் மாநகரம் அல்ல. இது தமிழ் முஸ்லிம் என 11 கிராமங்களை உள்ளடக்கிய ஒரு மாநகரமாகும். அதிலும் விசேடமாக கல்முனை தொகுதிக்கே முழுமையான ஒரு உள்ளுராட்சி மன்றமாக கல்முனை மாநகரம் திகழ்கின்றது.
1956ம் ஆண்டு காலப்பகுதியில் கல்முனை முதன்முதலாக கல்முனை பட்டின சபை என்றும் கரவாகு வடக்கு கிராமோதைய சபை என்றும், கரவாகு தெற்கு கிராமோதைய சபை என்றும், கரவாகு மேற்கு கிராமோதைய சபை என்றும் பிரிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் சாய்ந்தமருதைச் சேர்ந்த கேட்முதலியார் அவர்களே கல்முனை பட்டின சபையின் தவிசாளராக இருந்தார். இதனைத் தொடர்ந்து செயின் தம்பி லெப்பை, எம். தம்பிப்பிள்ளை, எம்.சீ. அஹமது, கே.கே. மரைக்கார், ஏ. முகைதீன்பாவா ஆகியோர் கல்முனை பட்டின சபையின் தவிசாளர்களாக இருந்திருக்கின்றார்கள்.
இதன்பிறகு 1977 இலங்கை அரசியல் அமைப்பு சீர்திருத்தத்திற்கு அமைவாக தொகுதிவாரி தேர்தல் முறை ஒழிக்கப்பட்டு விகிதாசார தேர்தல் முறை உருவாக்கப்பட்டதன் பிற்பாடு குறித்த நான்கு உள்ளுராட்சி மன்றங்களும் ஒன்றினைக்கப்பட்டு 19 உறுப்பினர்களை உள்ளடக்கியதான கல்முனை பிரதேச சபை தோன்றம் பெற்றது. இருந்தபோது அக்காலத்தில் தேர்தல் இடம்பெறவில்லை. 1994ம் ஆண்டு முதன்முதலாக உள்ளுராட்சி மன்ற தேர்தல் விகிதாசார தேர்தலாக இடம்பெற்றது. இத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 10 ஆசனங்களை கைப்பற்றி அதன் தவிசாளராக ஐ.ஏ. ஹமீட் அவர்கள் தெரிவானார்கள். இவர் 3 வருடங்கள் தவிசாளராக இருந்தபிறகு உறுப்பினராக இருந்த எஸ்.எச்.அப்துல் ஹமீட் அவர்கள் தவிசாளராக நியமிக்கப்பட்டார்.
1994ம் ஆண்டு இடம்பெற்ற கல்முனை பிரதேச சபை தேர்தலின் பின்னர் கல்முனையில் 2006ம் ஆண்டு 2002ம் ஆண்டு தரமுயர்த்தப்பட்டிருந்த கல்முனை மாநகர சபை தேர்தலே இடம்பெற்றது. இத்தேர்தலிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 10 ஆசனங்களை கைப்பற்றி முதல்வரை தனதாக்கிக்கொண்டது. இதில் முதல்வராக ஏ.ஆர். அஜ்மீர் அவர்கள் இரு வருடங்களும், எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் இருவருடங்களும், செனட்டர் மசூர் மௌலானா அவர்கள் முதல்வராக கடமையாற்றினார்கள் என்பது வரலாறு.
2011ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 11 ஆசனங்களை கைப்பற்றி வெற்றியீட்டியது. இதனைத் தொடர்ந்து எழுந்த முதல்வர் சர்ச்சையின் பிற்பாடு சிராஸ் மீராசாஹிப் முதல் இரு வருடங்களுக்கு என நியமிக்கப்பட்டார். பின்னுள்ள இருவருடங்களுக்கு இன்று விழாக்காணும் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அவர்கள் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்;. இவருக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கல்முனை பட்டின சபை முதல் பிரதேச சபை மற்றும் மாநகர சபையில் இதுவரை எந்த தவிசாளரோ முதல்வரோ முழுமையான காலம் பதவியில் இருக்கவில்லை என்பது வரலாறாகின்றது. இது இவ்வாறு இருக்க அண்மைக் காலங்களில் சிலர் ஊர்களை மூட்டிவிடும் செயற்பாடுகளில் ஈடுபடமுற்பட்டனர். ஆனால் அந்த முயற்சியிலிருந்து அவர்கள் தோல்வியினையே கண்டு கொண்டனர். மக்கள் மத்தியில் பொய்யான செய்திகளை பரப்பி வந்தனர்.
மேலும் கல்முனை சாய்ந்தமருது ஆகிய ஊர்களுக்குள் அரசியலுக்கு அப்பால் திருமண உறவு முறை வலுப்பெற்றுக் காணப்படுகின்றது. அரசியல் வரலாறு தொடக்கம் படித்தவர்கள் பாமரமக்கள் வரை பெண் கொடுத்து பெண் எடுக்கும் வழமையைக் கொண்டுள்ளனர். இந்த உறவு முறை இரு ஊர்களும் முரண்படுவதில் இருந்து பெரிதும் பாதுகாத்தது என என்னால் உறுதியாக கூறிக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.றிபான் –
பல்வேறு விவாதங்கள், சவால்கள், எச்சரிக்கைகள், எதிர் பார்ப்புக்கள் மத்தியில் கல்முனை மாநகர சபையின் மேயராக செயற்பட்ட சிராஸ் மீராசாஹிப்பின் இராஜினாமா இடம் பெற்றுள்ளது. எனது மக்களின் ஆணைப்படியே செயற்படுவேன் என்று துணிந்து நின்றவருக்கு, அதில் உறுதியாக நிற்க முடியவில்லை. காரணம், சிராஸ் யாரையெல்லாம் நம்பினாரோ அவர்கள் மெல்ல மெல்ல கழுத்தறுத்துக் கொண்டிருப்பதனை உணரத் தொடங்கினார். இதனால், சரியான நேரத்தில் சரியான முடிவினை எடுத்து கட்சியில் கோலாட்சி செய்து கொண்டிருக்கும் சிரேஸ்டமானவர்களுக்கு இதுதான்டா அரசியல் என்று காட்டுவதற்கு சிராஸ் தவறி விட்டார்.

சரியான நேரத்தில் சரியான முடிவினை எடுக்கத் தவறியது மட்டுமன்றி, சரியான நேரத்தில் பிழையான முடிவினையும் எடுத்து விட்டார். ஆனால், சிராஸிற்கு வேறு வழிகளும் இல்லை. அவர் மேயர் பதவியை துறக்க மாட்டேன் என்று முரண்டுபட்டுக் கொண்டிருப்பராயின், இறுதியில் 45 நாட்களில் பெற்றுக் கொண்ட அரசியல் வெற்றியினை, அரசியலில் சாணக்கியமற்றவர் என்ற பெயரோடு, தலைக் குனிவினை (இரண்டு வருடங்களின பின்னர்) கடைசிப் பெறுமதியாக பெற்றுக் கொள்ள வேண்டியேற்பட்டிருக்கும்.
இப்போதைக்கு சிராஸ் தனது தலைக்கு வந்த கத்தியை, தலைப்பாகையுடன் தடுத்து நிறுத்தியுள்ளார். ஆனாலும், தாமதித்து அவர் எடுத்துக் கொண்ட முடிவினால், அரசியலில் தமது காலை ஆழப்பதித்துக் கொள்ளவும், தமது கட்சிக்குள் இருக்கும் அரசியல் எதிரிகளை சமாளித்துக் கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கும் அவர் அதிகம் உழைக்க வேண்டியுள்ளது.
மு.காவின் அரசியல் பாதையில் இன்றைய தலைவர், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கிம் கூட வாக்குறுதிகளை அளித்துள்ளார். அவற்றில் பல இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. இதே போன்று கட்சியின் தலைமையிடம் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் வாக்குறுதிகளை அளித்துள்ளார்கள். அவைகளில் பல இன்னும் கடனாகவே இருந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு, இருக்கின்ற நிலையில் சிராஸ் மீராசாஹிப் அளித்த உடன்பாட்டில் மட்டும் ரவூப் ஹக்கிம் கடும் போக்கையும், மூர்க்கத்தனத்தையும் ஏன் காட்ட வேண்டுமென்று சிந்திக்க வேண்டும். இதில் இருக்கின்ற பின்புலம் என்ன? என்றெல்லாம் சிராஸ் சிந்தித்து இருந்தால், அவரால் இலகுவாக முடிவினை எடுத்திருக்க முடியும்.
ரவூப் ஹக்;கிம் சிராஸின் இராஜினாமா மூலமாக பல அரசியல் நகர்வுகளை மேற் கொண்டுள்ளார். அதில் ஒன்றுதான், தனது தலைமைத்துவத்திற்கு இருக்கும் சவாலாகும். நிஸாம் காரியப்பர் மு.காவின் அரசியல் தலைமைத்துவம் கிழக்கில்தான் இருக்க வேண்டும். அந்த தலைமைக்குத்தான் கிழக்கு மக்களின் உண்மையான உணர்வுகளை அறிந்து கொள்ள முடியுமென்று கருத்துக்களை முன் வைத்து, ரவூப் ஹக்;கிமை நெருக்கடிக்குள்ளாக்கினார். நிஸாம் காரியப்பரின் இக்கருத்துக்கள் கிழக்கில் ஒரு அதிர்வினை ஏற்படுத்தியது. மட்டுமல்லாது, மு.காவின் தலைமைத்துவத்திற்கு நிஸாம் காரியப்பர் பொறுத்தமானவர் என்ற கதைகளும் மு.காவின் ஆதரவாளர்கள் பலரிடமும் மோலோங்கியும் இருந்தன.
மேலும், அம்பாரை மாவட்டத்தில் மு.காவின் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் ரவூப் ஹக்கிமை மிரட்டும் பாணியில் அடிக்கடி தங்களின் கருத்துக்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதி அமைச்சர் ஆசை விவகாரத்தில், ரவூப் ஹக்;கிம் அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்ததனை, வேண்டுமென்றுதான் அமெரிக்காவுக்கு போயுள்ளான் என்று மரியாதைக் குறைச்சலாக பக்கத்தில் நின்றவர்களுடன் பேசியும் உள்ளார்.
இத்தகையவர்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவும், நிஸாம் காரியப்பரின் ஆளுமையை வெளிக்கொணர்வதற்கும் சிராஸின் வாக்குறுதியை ஆயுதமாக பயன்படுத்த வேண்டிய அவசியம் ரவூப் ஹக்கிமுக்கு ஏற்பட்டது. தனது கருத்தை ஏற்றுக் கொண்டால், சிராஸ் அரசியலில் நன்மையடைவார் என்றும் ரவூப் ஹக்;கிம் எடை போட்டுக் கொண்டார். இதனைப் புரிந்து கொள்ளும் அரசியல் பக்குவமும், சாணக்கியமும் சிராஸிடம் இருக்கவில்லை. 45 நாட்களில் தனக்கு கிடைத்த வெற்றியை தனது முயற்சிக்கு கிடைத்த செல்வாக்கின் வெற்றி என்று சிராஸ் கணிப்பீடு செய்து கொண்டாரே அன்றி, மு.காவின் ஆதரவாளர்களின் மனப் போக்கை அவரால் அறிந்து கொள்ள முடியவில்லை.
அதாவுல்லாவோடு மு.காவிற்கு அரசியல் சூழ்ச்சி செய்த தவம், தனக்குரிய இடம் கிடைக்காது போன போது, அதாவுல்லாவுக்கு பாடம் புகட்ட வேண்டுமாக இருந்தால், தான் எதிரியாக நினைத்துச் செயற்பட்ட மு.காவில் இணைவதனைத் தவிர வேறு மார்க்கம் இருக்கவில்லை. மு.காவில் இணைந்தார். மு.காவின் ஆதரவாளர்களின் மனப் போக்கை அறிந்து தமது பேச்சு வன்மையால் கிழக்கு மாகாணத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். இதுதான் அரசியல் சாணக்கியமாகும். மு.காவில் தவம் இணைந்து கொண்ட போது, பெரிய மாற்றங்கள் ஏற்படுமென்றெல்லாம் தெரிவிக்கப்பட்டன. ஆனால், இப்பத்தியில், அதாவுல்லாவின் அரசியல் நகர்வினை தோற்கடிக்க முடியாதென்று நாம் தெரிவித்திருந்தோம்.
அதன்படியே தேர்தல் முடிவுகளும் அமைந்திருந்தன. 2008ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அதாவுல்லா அம்பாரை மாவட்டத்தில் தமது சார்பில் 03 பிரதிநதிகளைப் பெற்;றுக் கொண்டார். மு.கா 04 பிரதிநிதிகளைப் பெற்றுக் கொண்டது. 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அதாவுல்லா 03 பிரதிநிதிகளையும், மு.கா 04 பிரதிநிதிகளையும் பெற்றுக் கொண்டன. ஆதலால், தவத்தின் வரவு மு.காவிற்கு ஒரு பாரிய புரட்சியை ஏற்படுத்தவில்லை. தவம் சாத்தியமானதை சாதித்துக் கொண்டார். அதாவுல்லாவுக்கு தவத்தின் வெற்றி ஒரு அதிர்ச்சியானதாகும்.
ஆகவே, சிராஸினால் ஒரு சாணக்கியமான முடிவினை எடுத்துக் கொள்ளுவதற்கு முடியாமைக்கான காரணம், அவருக்கு சிறந்த ஆலோசனைகள் வழங்கப்படவில்லை. அவருக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கக் கூடிய அரசியல் தெரிந்தவர்கள் அவரைச் சூழ இருக்கவுமில்லை. எங்கோ நின்று கொண்டிருந்தவர்களுக்கு சிராஸ் ஒரு காய்க்கும் மரமாக தென்பட்டார். வந்தார்கள். ஒட்டிக் கொண்டார்கள். அவர்கள் சிராஸினால் பிழைப்பு நடத்த வேண்டுமென்று எண்ணினார்களே அன்றி அவரை அரசியலில் உயர்த்த வேண்டுமென்று எண்ணவில்லை. சிராஸ் அரசியலில் ஒரு உயர்நிலையை அடைய வேண்டுமென்று அவர்கள் திட்டமிட்டு இணைந்து கொண்டவர்களுமில்லை. சிராஸ் மேயர் பதவியை இராஜினாமாச் செய்தால் தங்களின் பிழைப்பு கெட்டுவிடுமென்று கணக்குப் போட்டார்களே அல்லாமல், ரவூப் ஹக்கிம் என்ன கணக்குப் போடுகின்றார், சிராஸை அரசியலில் இருந்து ஒரங்கட்ட நினைப்பவர்கள் என்ன கணக்குப் போடுகின்றார்கள் என்ற கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல் சூத்திரங்களை ஆளுக்கும், இடத்திற்கும் ஏற்ப பயன்படுத்தாது, எல்லாவற்றையும் பெருக்கியே பார்த்தார்கள். இதனால்தான், சிராஸின் சமன்பாடு பிழைத்துக் கொண்டது.
இப்போதைக்கு சிராஸ் கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயராவார். அவர் தமது பதவிக் காலத்தில் எப்படித் தொழிற்பட்டார் என்பதனை மக்கள் அறிவர். புதிய மேயராக அரசியலில் சிராஸை விடவும் 25 வருடங்கள் அனுபவம் கொண்டவர். நாட்டில் புகழ் மிக்க சட்டத்தரணிகள் ஒருவர். மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப்பின் மிகவும் நெருக்கமான உறவினர். சட்டத்துறையில் அஸ்ரப்பின் வழிகாட்டலில் முன்னேறிச் சென்றவர். இவர் தனக்கு கிடைத்திருக்கும் மேயர் பதவி என்ற சந்தர்ப்பத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப் போகின்றார் என்பதுதான் அவரின், ஆளுமையையும், திறமையையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப் போகின்றன. அவரின் அனைத்து நடவடிக்கைகளையும் சிராஸின் நடவடிக்கைகளோடு ஒப்பிட்டே பார்ப்பர். ஆதலால், நிஸாம் காரியப்பர் ஏற்றுக் கொள்ள இருக்கும் மேயர் பதவி நிச்சயமாக பஞ்சு மெத்தையாக இருக்காது.
அரசியல் என்பது மக்களோடு இருக்கின்ற நெருக்கத்தினாலும், ஆளுமையினாலும் கட்டி எழுப்பப்பட வேண்டியதொரு நுட்பமான கலையாகும். இந்த இரண்டோடு சாணக்கியமும் தேவை. இதில் எதில் குறைவு ஏற்பட்டாலும் அரசியலில் சாதிக்க முடியாது. நிலைத்திருக்க இயலாது. நிஸாம காரியப்பர் தனது தொழிலின் நிமித்தம் கொழும்பிலேயே அதிக நாட்கள் தங்கியிருக்கக் கூடியவர். சாதாரண மக்களை விடவும், உயர்மட்ட குழுக்களுடனும், தொழிலின் நிமித்தம் வருகின்றவர்ளிடம்தான் இவருடைய தொடர்புகள் பெரும்பாலும் அமைந்துள்ளன. கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக இருந்த காலத்தில் கூட சபையின் ஒரு சில அமர்வுகளில் கூட அவர் கலந்து கொள்ளாமல் கொழும்பிலும், வெளிநாடுகளிலும் இருந்துள்ளார். அந்தளவிற்கு வேலைப் பளுக்களையுடையவர். ஆதலால், அவரினால், மேயர் பதவி என்ற சிம்மாசனத்தை திறம்படச் செய்ய முடியாது போய்விடும் என்ற குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
நிஸாம் காரியப்பரின் திறமைகள் மீது இலங்கை முஸ்லிம்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிரூபிக்க வேண்டியவாராக அவர் உள்ளார். அவர் சிறந்த சட்டத்தரணி என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஆனால், அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி என்று இதுவரைக்கும் நிரூபிக்கப்படவில்லை. அதற்கான சந்தர்ப்பங்களும் அவருக்கு கிடைக்கவில்லை. அந்த சந்தர்ப்பம் இப்போது வழங்கப்பட்டுள்ளது. தமக்கு வழங்கப்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தை நிஸாம் காரியப்பர் மிகச் சரியாக பயன்படுத்த வேண்டியவாராக இருக்கின்றார். சிராஸ் சரியான நேரத்தில் இராஜினாமாக் கடிதத்தினை தலைவரிடம் வழங்காது இருந்ததனால் எப்படி அவரின் இமேஜில் ஒரு சரிவு ஏற்பட்டதோ, அதே போன்றதொரு ஆபத்தில்தான் நிஸாம் காரியப்பரும் இருக்கின்றார். மேயர் பதவியால் தான் அலங்காரம் பெறாது, மேயர் பதவியை அலங்கரிப்பராயின் அவர் தானாகவே அலங்காரம் பெறுவார். மேயர் பதவியை பெற்றுக் கொண்டததன் பின்னர் கொழும்புதான் கதியென்று இருப்பராயின், அவர் மீது இருக்கின்ற அரசியல் ரீதியான இமேஜ் நிச்சயமாக மக்களிடமிருந்து சரியத் தொடங்கும். அதன் பின்னர் அவரால் கல்முனை மாநகர சபைத் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாத சூழல் ஏற்பட்டுவிடும்.
இதே வேளை, சிராஸ் மாநகர சபையில் உள்ள தனது கட்சி சார்ந்த உறுப்பினர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் பின்தள்ளப்பட்டவராகவே இருந்தார். சிராஸ் தன்னை அதிகாரம் கொண்டவராக கருதிக் கொண்டமையும், உறுப்பினர்கள் சிராஸிடம் இருந்து அதிகம் எதிர் பார்த்துக் கொண்டதும்தான் இதற்கு காரணமாகும். இவை இரண்டிற்குமிடையே ஒரு சமநிலையினை ஏற்படுத்திக் கொள்வதில் எந்தவொரு கரிசனையும் அவர் காட்டவில்லை. தன்னோடு இருந்த இரண்டு உறுப்பனர்களையும், எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு மாநகர சபையை நடத்த முடியுமென்று கணக்குப் போட்டுக் கொண்டார். ஆதலால், நிஸாம் காரியப்பர் இவற்றையும் கருத்திற் கொள்ள வேண்டியவராக இருக்கின்றார்.
நிஸாம் காரியப்பர் கத்தி மேல் நடக்க வேண்டியவராகவே இருக்கின்றார். அவரின் இமேஜில் ஏற்படுகின்ற சரிவு, சிராஸின் இமேஜை சற்று அதிகரிக்கச் செய்யும் என்பதுதான் எமது தீர்மானமாகும்.
நிஸாம் காரியப்பருக்கு மேயர் பதவி வழங்கப்பட்டுள்ளதனால், அடுத்த பொதுத் தேர்தலில் நிஸாம் காரியப்பர் போட்டியிடுவதற்கு அதிகம் வாய்ப்புக்களில்லை. அதே வேளை, ஒரு வருடத்தின் பின்னர் நிஸாம் காரியப்பர் மேயர் பதவியை மற்றுமொருவருக்கு வழங்க இருப்பதாகவும், அவர் பொதுத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.
இதே வேளை, சிராஸ் பொதுத் தேர்தலில் போட்டியிடுவார் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. அம்பாரை மாவட்டத்தில் மு.கா தனித்துப் போட்டியிட்டால் மட்டுமே ஆகக் குறைந்தது இரண்டு ஆசனங்களையாவது பெற்றுக் கொள்ள முடியும். இதனால், சிராஸிற்கு பொதுத் தேர்தலில் மு.கா சீட் வழங்கும் என்பதில் ஐயமில்லை. சிராஸ் கடைசி வேளையிலாவது ஒரளவிற்கு சரியான முடிவினை எடுத்துக் கொண்டு மு.காவிற்குள் நின்று கொண்டிருப்பதனையிட்டு அம்பாரை மாவட்டத்தில் உள்ள மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சற்று உசாராகியுள்ளார்கள்.
மறுபுறத்தில். ரவூப் ஹக்கிமின் அண்மைக்கால அரசியல் நகர்வுகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு, அவர் அம்பாரை மாவட்டத்தில்தான் அடுத்த பொதுத் தேர்தலில் குதிக்க இருக்கின்றார் என்ற அச்சம் மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பலரிடம் தெரிவித்துக் கொண்டு வருகின்றார். நமக்கான பிரதிநிதித்துவம் பறிபோய்விடும் என்றும் சில இடங்களில் பிரஸ்தாபித்துக் கொண்டும் வருகின்றார். மேலும், அடுத்த பொதுத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் தற்போதுள்ள மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் போட்டியிட உள்ளார்கள். பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, சம்மாந்துறை ஆகிய இடங்களில் இருந்துதான் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளார்கள். இதனிடையே ரவூப் ஹக்கிம் போட்டியிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றதனை எம்மால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
இப்படியாக மாறவுள்ள அம்பாரை மாவட்ட அரசியல் களத்தில் சிராஸின் நடவடிக்கைகள் என்னவாக அமையப் போகின்றதென்பது அவரின் நிதானமான போக்கே தீர்மானிக்கும். நிஸாம் காரியப்பர் தமக்கு கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் விதத்திலேயே அவரின் அரசியல் எதிர்காலம் தங்கியுள்ளது. மொத்தத்தில் ரவூப் ஹக்கிம் தமது அதிரடி நடவடிக்கையால் சில அறுவடைகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றார்.
நன்றி: விடிவெள்ளி

Hakeem SLMCஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வீரியமான போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளாது ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்களில் அக்கறையற்று இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கையை தேர்தல் முடிவடைந்ததும் கட்சி முன்னெடுக்கும் என்றும்அதன் மூலம் கட்சி புடம்போடப்படும் என்றும் குறிப்பிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் இப்பொழுது பிரதான கட்சிகள் இரண்டும் தமது கட்சிக்கு எதிரிகளாக மாறியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம் அஷ்ரஃப் நினைவுதின நிகழ்வு திங்கட் கிழமை (16.09.2013) இரவு புத்தளம் நுஹ்மான் மண்டபத்தில் நடைபெற்றபோது விஷேட உரையை நிகழ்த்திய போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டார்.

புத்தளம் மற்றும் இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் உட்பட நாடெங்கிலுமிருந்து முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் திரண்டு வருகை தந்திருந்த நினைவு தினக் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்து சிறப்புரையாற்றும்போது மேலும் குநிப்பிட்டதாவது:

மறைந்த நமது தலைவர் வாழ்ந்த யுகத்துக்கும் இன்று நாங்கள் முகங்கொடுக்கின்ற இந்த வித்தியாசமான யுகத்துக்கும் அடையிலான வித்தியாசமான மாற்றங்களைத் திரும்பிப்பார்த்தால் எவ்வாறு அக்கால இடைவெளியில் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு ஏற்ற வகையில் எங்களை நெறிப்படுத்திக் கொள்ளலாம் எனச் சிந்திப்பது சிறப்பாக இருக்கும்.

தேர்தல் ஒன்றை எதிர்நோக்கியுள்ள இவ்வேளையில் மறைந்த எம் பெரும் தலைவரின் நினைவுகளை இரை மீட்டிக்கொண்டிருக்கின்றோம்.

பன்னிரண்டு வருட இயங்குகின்ற அரசியலில் அவர் படைத்த சாதனைகளை ஆறுவருட கால எதிர்க்கட்சி அரசியல், ஆறு வருட கால ஆளும் கட்சி அரசியல் என்ற குறுகிய காலப் பரப்பில் அவர் விட்டுச் சென்ற படிப்பினைகள் ஏராளம். அவைபற்றி பலர் இங்கு எடுத்துக் கூறியிருந்தார்கள்.

என்னுடைய பார்வையில் மறைந்த தலைவர் மாபெரும் தலைவர் ஒரு ஜனாதிபதிக்கான வெற்றியை எதிர்க்கட்சியிலிருந்து பெற்றுக் கொடுத்தார். அதன் பிறகு இன்னும் ஒரு ஜனாதிபதியை ஆக்கும் பணியை ஆளும் கட்சியில் இருந்து கொண்டு சாதித்தார்.

தலைவரின் மறைவுக்குப் பிறகு ஜனாதிபதி ஒருவரை ஆக்கும் பணியில் நாம் தோல்வியையே அடைந்திருக்கின்றோம். இந்த வித்தியாசம்தான் இன்று நாம் எதிர்நோக்குகின்ற வியாதிகளுக்கெல்லாம் காரணமாகும்.

என்னைப் பொறுத்தவரை இன்று நாங்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு எங்களது உறுதியான கொள்கைப் பிடிப்புத்தான் இன்றைய ஆட்சியாளர்களை எங்களை எதிரியாகப் பார்க்க வைக்கின்றது. எங்களது அடிப்படைச் சித்தாந்தங்களில் நாங்கள் சரணாகதி அரசியலில் செல்வதற்குத் தயாரில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்துதான் ஆட்சியாளர்களால் எங்களை ஜீரணிக்க முடியாதுள்ளது.

அதன் விளவாக நாங்கள் மாறி மாறி ஒவ்வொரு கட்டத்திலும் எங்களின் கட்சியின் ஊடாக அரசியல் முகவரி பெற்றவர்களை பறிகொடுத்து வருகின்றோம். இந்தத் தேர்தல் சமயத்திலும் சிலர் இந்தக் கட்சிக்குக் கழுத்தறுப்புச் செய்து விட்டு ஆளும் கட்சிக்குச் சோரம் போயிருக்கின்றார்கள்.

இந்த நிலைமை மறைந்த பெருந் தலைவரின் காலத்திலும் இருந்திருக்கின்றது,. அப்பொழுது நடக்காத விஷயமல்ல இது. அவரது காலத்தில் நடக்காத பல விஷயங்கள் கடந்த பதின் மூன்று ஆண்டு காலத்துள் மட்டுமே நடந்ததாகக் கூற முடியாது.

அன்று அவர் அனுபவித்த சோதனைகளையும் வேதனைகளையும் இன்னும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். அவற்றில் எந்த ஒரு வேறுபாடும் கிடையாது. ஏன்றாலும் அவரிடம் காணப்பட்ட விடயங்களை ஒன்றிணைக்கின்ற தீவிரப் போக்கு எங்களிடம் ஓரளவு குன்றிப் போயுள்ளதாக அடையாளம் காண்கின்றோம்.

எந்த விடயமாக இருந்தாலும் அவருடைய காலத்தில் ஒரு காரியம் நடைடிபெறுவதானால் குறிப்பிட்ட நிகழ்வுக்கு முன்தினம் நள்ளிரவைத் தாண்டிக் கூட ஓர் ஒத்திகை நடப்பது வழக்கம். யாருமே பிழை விட முடியாது. ஏதும் தவறுகள் ஏற்பட்டால் தலைவர் அதில் மிகவும் கண்டிப்பாக இருந்திருக்கின்றார். அவர் காட்டிச் சென்ற இவ்வாறான வழி முறையை நாங்கள் படிப்படியாக கைவிட்டு விட்டோம் என்ற கைசேதத்தில் இருக்கின்றோம்.

ஆனால் இன்று எதிர் நோக்குகின்ற பிரச்சினகளுக்கு மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிரான மிகத் தீவிரமான இனவாதப் போக்கு தலை தூக்கியிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் அவரிடம் இருந்த அசாமான்யமான தைரியம் எங்களிடம் இருந்து அற்றுப்போய்விட்டதா என மக்கள் கேட்கத் தலைப்பட்டிருக்கின்றார்கள்.

மறைந்த தலைவரின் காலத்தில் அவரது அரசியல் சாணக்கியம் தன்னை சவாலுக்கு அழைத்த யாரையும் சும்மாவிட்டுவிடாது, அதில் வெற்றிகண்டவராக இருந்தார் என்பதை நாமனைவரும் எங்களுக்குள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய முக்கிய அம்சமாகும். இன்று அவரது பாசறையில் வளர்ந்ததாகச் சொல்பவர்கள் எத்தனைபேர் அவரின் புகழ் பாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

அவரைத் தேசியத் தலைவராக ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள் இன்று அவரது தலைமைத்துவத்தின் சிறப்பை சிலாகித்துப் பேசுகின்றனர் என்றால் அந்த மாமனிதரின் குறுகிய கால அரசியல் வாழ்வில் எதிரிகளைத்தான் அவர் சம்பாதித்திருந்தார் என்ற எண்ணப்பாட்டை தோற்றுவித்திருக்கும். அவரைத் தூற்றியவர்கள் இப்போது புகழாரம் சூட்டுகின்றனர்.

அந்தத் தலைவரின் பாசறையில் இருந்து இன்று கட்சியோடு எஞ்சியிருக்கும் போராளிகள் மறைந்த தலைவரின் அரசியலை மீண்டும் திரும்பிப் பார்க்கின்ற பொழுது – இவ்விரு காலப்பகுதிக்கும் இடையிலான வேறுபாட்டை உற்று நோக்குகின்றபோது – இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்தின் மீது பார்வை முன்னர் எப்போதையையும்விட மேலோங்கி இருப்பதைக் காணலாம்.

முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அநியாயங்கள், அட்டூழியங்கள் என்பன மீது சர்வதேசத்தின் அவதானம் தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றது. மறைந்த தலைவரின் காலத்தில் இருந்ததைவிட சர்வதேசத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லவேண்டிய மிகவும் இக்கட்டான நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

தமிழ் சமூகம் கடந்த பல ஆண்டுகளாக சர்வதேசத்தில்தான் தங்கியிருக்கின்றது. அவர்கள் உள்நாட்டுச் சக்திகளை விட வெளிச் சக்திகளின்பால்தான் தங்கள் அவதானத்தைக் கூடுதலாகச் செலுத்தி இருக்கின்றனர். அதனால் வெளிச் சக்திகளின் அவதானம் தமிழ்ச் சக்திகளின்பால் கூடுதலாகத் திரும்பியுள்ளது.

வடக்கில் முதன்முறையாக அரசாங்கம் ஒரு தோல்வியைத் தழுவப்போகின்றது என்ற சூழ்நிலையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்ட அரசியல் தீர்மானங்களின் பெறுமானம் குறித்த ஒரு அச்சம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருப்பதை நாம் பார்க்கின்றோம்.

தலைவரின் காலத்தில் அம்பாறையில் மூன்று ஆசனங்களைப் பெறமுடியவில்லை. ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு அது நடந்தேறியிருக்கின்றது. அது மட்டுமல்ல கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தின் மூன்று பெரும்பான்மை முஸ்லிம் தொகுதிகளையும் நாம் அமோகமாக வென்றிருக்கின்றோம். இவை இந்தக் கட்சியின் வீரியம் குன்றிப்போகவில்லை என்பதை மிகத் தெளிவாகக் காட்டுகின்றது.

ஆயினும் இந்தக் கட்சிக்குள் இருந்து அதிகாரத்தைப் பெறுகின்றவர்கள் நெருக்கடியைக் கட்சிக்கே கொடுக்கின்ற சாபக் கேட்டை நாம் காண்கின்றோம். இது ஒவ்வொரு தேர்தல்களின் சமயத்திலும் நாம் சந்திக்கின்றவைகள். கடந்த மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து கட்சியின் உள் முரண்பாடுகளைச் சாதகமாகப் பயன்படுத்தி கட்சியைக் கருவறுப்பதற்கான சதிகள் முடுக்கிவிடப்பட்டன. இவ்வாறான சக்திகளுக்கு எங்களில் சிலரும் சோரம்போய் விடுகின்றனர். இவற்றில் இருந்து மீண்டுகொள்வதற்காக உள்ளுராட்சித் தேர்கலின்போது உறுதிப்பாடுகளைக் கொடுத்தவர்கள் அவற்றைச் செய்கின்றனரா என்பதை அடுத்த சில மாதங்களுள் கண்டுகொள்ள இருக்கின்றோம்.

அந்தச் சந்தர்ப்பத்தினபோதும் இதே மாதிரியான சவால்களை நாம் முகங்கொடுக்க வேண்டிவருமா என்கின்ற கேள்வி எங்கள் போராளிகள் மத்தியில் எழலாம். ஆனால் கட்சியன் கொள்கைகள், கொடுக்கப்பட்ட உறுதி மொழிகள் என்பனவற்றோடு அதற்கு உரியவர்கள் இருக்கின்றனரா என்பதைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் வரவிருக்கின்றது. அதன்போது எந்த வேறுபாடும் பாகுபாடும் இல்லாமல் நேர்மையாக தலைமை நடந்து கொள்ளவேண்டிய அவசியம் உள்ளது.

சில பிரதேசங்களில் தலைமைத்துவப் போட்டிகள் உருவாகி ஆளுக்கு ஆள் முரண்பட்டுக் கொண்டாலும் போராளிகள் தங்களுக்கு விருப்பமான சிலருக்கு விசுவாசமாக நடந்து கொண்டாலும் அவர்கள் கொள்கையில் மிகுந்த உறுதிப்பாட்டுடன் உள்ளனர்.

இந்தக்கட்சியைப் பலவீனப்படுத்துவதற்கு அரசு எந்த முயற்சியை எடுத்தாலும், அதனை முறியடிக்கக் கூடிய சக்தி இந்த இயக்கத்துக்கு இருக்கின்றது என்பதில் எல்லோரும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

வடக்கில் தழிழ்ச் சகோதர சமூகம் தனது சமூகத்தின் மீத காட்டும் அதே ஈடுபாட்டை முஸ்லிம்களும் தங்கள் சமூகத்தின் மீது வெளிக்காட்டப் போகின்றதா என்பது பற்றி மிகவும் உன்னிப்பாக நோக்கப்படுகின்றது.

கட்சிக்கு எதிரான பல சதிகளை எமது மக்கள் முறியடித்துக்காட்டிய வரலாறுகள் ஏராளம்.

என்மைப் பொறுத்த வரையில் எங்கள் மத்தியில் ஒற்றுமையை நிலை நாட்டுவதன் மூலம்தான் இந்தச் சதிகளை மேலும் மேலும் நாம் முறியடிக்க முடியும்.

சதிகளை முறியடிப்பதற்கு கட்சியின் மேல் மட்டத்தில் இருப்பவர்கள் செய்கின்ற பங்களிப்புக்களை விடவும் தலைமை சோர்வடைகின்றபோதும் போராளிகள்தான் தலைமையை உற்சாகப்படுத்துகின்றனர். ஏங்கள் ஆதங்கங்களை நாம் பிரச்சாரமாக முன்கொண்டு செல்லுகின்றபோது இந்தக் கட்சியைப் பாதுகாத்தாக வேண்டும் என்ற உணர்வு நம்மக்களுக்கு ஏற்பட்டு விடுகின்றது.

ஆனால், பதவியில் இருப்பவர்கள் தமது பதவிகளில்தான் கண்ணாக இருக்கின்றார்களே தவிர போராளிகளின் உணர்வுகளைப் பற்றிச் சரிவர சிந்திக்காது சோரம்போகின்ற நிலைமை அடிக்கடி ஏற்பட்டாலும் அவ்வாறு சோரம்போகின்றவர்களால் கட்சியின் வீரியம் குன்றிப் போக மாட்டாது.

எந்தச் சக்தியாக இருந்தாலும் சரி இன்று அரசாங்கத்துக்குள் முஸ்லிம் காங்கிரசை நெருக்கடிக்கு உள்ளாக்கி அதன் உண்மையான அரசியல் செல்வாக்கை குன்றச் செய்ய வேண்டும் என எடுக்கப்படும் முயற்சியின் பின்னணியில் அதிகாரப்போட்டிதான் காரணம்.

கட்சியில் பதவியில் இருப்பவர்கள் தங்கள் அதிகாரத்தைக் கூட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக செய்கின்ற சதிகார வேலைகள் என்னைப் பொறுத்த மட்டில் போராளிகளால் உன்னிப்பாகப் பார்க்கப்படுகின்றது.

இந்த கட்சி ஒரு நாடகமேடை போன்று போராளிகளால் பார்க்கப்படுகின்றது. ஊடகவியலாளர்கள் சிலர் சொல்வதைப்போல கட்சித் தலைமைத்துவத்துடனான முரண்பாடுகள் எல்லாம்வெறும் நாடகம் என்பதான ஒரு மாயையைத் தோற்றுவிக்கின்றது.

ஆனால் உண்மை அதுவல்ல என்பது போராளிகளுக்குத் தெரியும். ஆனால் அந்தஸ்துக்கான போட்டி, அதிகாரத்தக்கான போட்டி என்பன இந்தக் கட்சியை அழித்து விடுமோ என்ற அச்சம் இன்று போராளிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து கட்சியைப் பாதுகாக்கும் பணியை பொராளிகள்தான் செய்ய வேண்டும் என்று தலைமை எதிர்பார்க்கின்றது.

ஏதாவது பொருத்தம் கொடுக்கப்பட்டால் அது நிறைவேற்றப்பட்டாக வேண்டும். இன்றும் கூட இந்தத் தேர்தல் பிரசார வேலைகள் தொடர்பில் எங்கள் கட்சியில் இருந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆகக் குறைந்த பொறுப்புக்கள் கூட தட்டிக்களிக்கப்பட்டுள்ளன. இது சம்மந்தமாக ஏதும் சாக்குப் போக்குகளைக் கூட சொல்லலாம். ஆனால் அதில் மிகுந்த அலட்சியப் போக்கோடு நடந்து கொண்ட பலர் இருக்கின்றனர்.

அவர்களைப் பற்றி மறைந்த தலைவரின் நினைவு நாளில் நான் மிகவும் வேதனையோடு பேச வேண்டிய நிலையில் இருக்கின்றேன். வெறும் சாட்டுக்காக – இந்தத் தேர்தலை நாம் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு மத்தியில், இரண்டு பிரதான கட்சிகளும் எங்களை எதிரிகளாக நோக்குகின்ற நிலையில் அவர்கள் பொடுபோக்காக நடந்து கொள்வது கண்டிக்கவும் தண்டிக்கவும் தக்கது.

முன்னர் ஒரு பிரதான கட்சி நேச சக்தியாக இருந்தது. இப்போது இரு கட்சிகளும் எதிரிகளாக மாறியிருக்கும் சூழ்நிலையில் இந்தக் கட்சியின் வீரியமான போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளாது தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புக்களில் அறவே அக்கறையற்று இருப்பவர்கள் விஷயத்தில் போராளிகள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் மீதான கடும் நடவடிக்கையை இக்கட்சி தேர்தல் முடிவடைந்த கையோடு முன்னெடுக்கும். அதனூடாக இக்கட்சி புடம்போடப்படும்.

அன்று ஒரு புதிய யுகத்துள் கட்சி பிரவேசித்திருக்கும் பொழுது மறைந்த எமது மாபெருந் தலைவருக்குச் செலுத்துகின்ற மிகப் பெரிய நன்றிக் கடனாக அதுவாகத்தன் இருக்கும். கட்சியின் கட்டமைப்பில் உறுதியான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கும் தருணமாக இதனை ஆக்கிக் கொள்வோம்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம். ரீ ஹஸனலி, கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட், கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் ஏ.எல் அப்துல் மஜீத், பாராளுமன்ற உறுப்பினர் ஏச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோரும் உரையாற்றினர்.

மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஷ்ரஃப் அவர்களின் ஆன்ம ஈடேற்றத்துக்கான துஆப்பிரார்த்தனையும் இடம் பெற்றது.

h12

mahintha1நாட்டில் ஒரு எழுச்சியையும் இன மற்றும் மத அடிப்படையிலான வேறுபாடுகளை மக்கள் மத்தியில் உருவாக்கி நாட்டை சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். மாத்தளையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய கிழக்கு நாடுகளில் தொலைபேசி குறுஞ் செய்திகளை அனுப்பி, வீதிகளில் போராட்டங்களை நடத்தி, இளைஞர்களை தூண்டி விட்டு, மோதல்களை உருவாக்கி அந்நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டன. இப்படியான குற்றச்சாட்டுகளும், கோரிக்கைகளும் மத்திய கிழக்கு நாடுகளின் அரசாங்கங்களை தூக்கியெறிய உருவாக்கப்பட்டன.

முஸ்லிம்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டது சியா , சுன்னாஹ் மோதல் ஏற்பட்டது . ஈராக், லிபியா, எகிப்து போன்ற நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும் அந்நாடுகளில் இன்னும் பிரச்சினைகள் முடிவுக்கு வரவில்லை.

இலங்கை மக்கள் மத்தியிலும் இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுக்களை உருவாக்கி பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும்  பொய் பிரசாரங்களை நப்பக் கூடாது என்றார்.