Archive for the ‘இஸ்லாம்’ Category

7

(அஷ்ரப்.ஏ.சமத்)

சர்வதேச பலஸ்தீன் நட்புறவு தினமான இன்று நவம்பர் 29ஆம் திகதி மக்கள் விடுதலை முன்ணனியின் (ஜே.வி.பி)யின் சோஷலிச இளைஞர் சங்கம் மருதாணை  ஜூம்ஆப்  பள்ளிவாசல்முன்னால் ஜூம்ஆ தொழுகையின் பின்னர் கையெழுத்து வேட்டையும் பலஸ்தீனத்து மக்களை சுதந்திரமாக வாழவிடு என்ற கோசத்துடன் தமது எதிர்ப்புக்களையும்  தெரிவித்து உரையாற்றினர்.

இந் நிகழ்வு முன்னாள் பிரதியமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஆப்தீன் பலஸ்தீன் நாட்டு தூதுவர் கலாநிதி  அன்வர் அல் அகா ஆகியோறும் கலந்து கொண்டனர்.

இப் பேரணி கொழும்பில் மட்டுமல்ல  கண்டி, குருநாகல், களுத்துறை போன்ற 35 இடங்களில் இன்று ஜூம்ஆப் பள்ளிவாசலில் ஒழுங்கு செய்து ஜே.வி.பி யினால் நடாத்தப்படுகின்றன. அத்துடன் பலஸ்தீன் நாட்டில் உள்ள மாணவர் அமைப்புடன் இனைந்து இந் நிகழ்வுகளை எதிர்காலத்திலும் எமது அமைப்பு நாடாளாரீதியில் நடாத்தத் திட்டமிட்டுள்ளது. பலஸ்தீன மக்களின் சுதந்திரத்திற்காக நாம் மாபெரும் கையெழுத்து வேட்டை நடாத்துவதாகவும் விமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

விமல் ரத்நாயக்க  அங்கு மேலும் உரையாற்றும் போது-  இந்த நாட்டில் யார் முதலில் குடியேறியவர் அல்லது முதலில் பிறந்தவர் என்ற பாகுபாடுகள் எமது கட்சிக்குள் இல்லை.  எங்கெங்கெல்லாம்  சாதாரண மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றதோ அவர்களுக்கு சார்பாக நாம ; கட்டாயம் குரல்கொடுப்போம். அத்துடன் எமது எதிர்ப்பையும தெரிவிப்போம்.

அரசாங்கத்தில்  உள்ளவர்கள் சிலர் சிறு சிறு இனவாத குழுக்களையும் மதவாத அமைப்புக்களையும்  வைத்துக்கொண்டு இனவாதத்தை தூண்டி  அரசியல் இலாபம் செய்து வருகின்றனர்.

பலஸ்தீன மக்களின் சுதந்திரத்தை மட்டுமன்றி அடிப்படை மனித உரிமைகளையும் துண்டிக்கப்பட்டு நடாத்தும் இஸ்ரேவேல் மற்றும் ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்கள் உக்கிரமடையச் செய்துள்ளதுடன் பலஸ்தீன மக்களுக்கு தேவையான உணவு உடை மற்றும் வாகணங்களைக் கூட தாக்கும்  நிலை அங்கு காணப்படுகின்றது. எமது இயக்கம் நாடாளரீதியில் பலஸ்தீன மக்களை நிம்மதியாக வாழவிடு என்ற கோசத்தின் கீழ் பல்வேறு போராட்டடங்களை நடாத்த உள்ளோம். எனவும் விமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

11

10

9

8

6

7

1

4

 

Advertisements

1476615_715701901781193_1654876606_n

சவுதி அரேபியா அரசு சமிபத்தில் கொண்டு வந்த அந்நிய நாட்டு தொழிலாளர்களை பாதிக்கும் சட்டத்தால் அங்கு துப்புரவு பணி செய்த பலரும் வேலையிழந்தனர்.

மீதமிருந்த தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நபிகள் நாயகம்(ஸல்) புனித நகரமான மதினாவில் குப்பை சேருவதை என்னால் பொறுத்துக்கொள்ளமுடியாது என்று கூறிய
மதினா மேயர் டாக்டர். காலித் அப்துல் காதிர் தானே துப்புரவு பணிகளை மேற்கொண்டனர்.

மேயரது அதிரடியைப் பார்த்து பிற அதிகாரிகளும் சேர்ந்து துப்புரவு பணி செய்ய ஆரம்பித்தனர்.

இஸ்லாமிய ஆய்வுக் கட்டுரை

 கடன் இருக்கும் நிலையில் கடனை அடைக்க எவ்வித ஏற்பாடும் செய்யாமல் ஒருவர் மரணித்தால், கடன் அடைக்கப்படும்வரை அவரது ஆன்மா அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். (நூல்: திர்மிதீ)

உயிர்த் தியாகிகளுக்குங்கூட கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்; ஆனால் கடன் மன்னிக்கப்படுவதில்லை (நூல்: முஸ்லிம்) போன்ற அறிவிப்புகளின்படி, கடன் அடைக்கப்பட வேண்டும் என்பது சரியே! இது ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்வோருக்கு மட்டும் உள்ள நிபந்தனையல்ல. எல்லா முஸ்லிம்களுக்கும் பொதுவான விதியாகும்.

கடன் உள்ளவருக்கு ஹஜ் கடமை இல்லை என்பதையும் தாண்டி, கடனே இல்லாவிட்டாலும், ஹஜ்ஜுக்குச் சென்று வரும் பொருளாதார வசதியில்லாதவருக்கும் ஹஜ் கடமை இல்லை. அதாவது, கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றவில்லை என்பதற்கான கேள்விக்கு பொருளாதார வசதியற்றவர் உள்ளாக மாட்டார். ஹஜ் செய்வதற்கான பொருளாதாரம் அவரிடம் இல்லை; எனவே ஹஜ் செய்யவில்லை என்றாகிவிடும்.

 ஒருவரின் ஹஜ் பயணத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகும் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கடனும் உள்ளது. இப்போது உடனடியாகக் கடனை அடைத்து, ஹஜ் பயணத்தைத் தவிர்ப்பது சிறந்ததாகும். மரணம் எப்பவும் சம்பவிக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு கடன் அடைக்கப்பட வேண்டும்.

ஆனால், கடன் உள்ளவர் இஸ்லாம் அனுமதித்துள்ள வேறு வழியில் மக்கா செல்வதற்கான வசதியைப் பெற்றிருந்தால் அவருக்குக் கடன் உள்ளது என்று வைத்துக்கொண்டாலும் அவர் இப்போது ஹஜ் செய்வது கூடுமா கூடாதா என்றால், கடன் உள்ளவர் ஹஜ் செய்யலாம் என்பதே இஸ்லாத்தின் நிலைபாடாக உள்ளது. கஅபா அமைந்திருக்கும் நாட்டில் இருந்தாலும், அங்குப் பணியாற்றும் நிறுவனத்தில் ஹஜ்ஜுக்கு விடுப்புக் கிடைத்தாலும், சென்றுவர பொருளாதாரம் இருந்தாலும் கடனாளி ஹஜ் செய்தல் கூடாது என்பதற்கான தெளிவானத் தடையேதும் குர்ஆன், சுன்னாவிலிருந்து நம்மால் அறிய முடியவில்லை!

பயணத்தில் உண்பதும் உடுத்துவதும் ஹலாலாக இருக்கவேண்டும் என்று பொதுவாக இஸ்லாம் கூறுவதால், இதன் அடிப்படையில் ஹஜ் பயணத்திற்கான செலவுகள் ஹலாலாக இருக்கவேண்டும். கடன் வாங்குவது ஹராம் அல்ல! அதனால் கடன் உள்ளவர் மக்கா சென்றால் அவர் ஹஜ் செய்வதற்குக் கடன் இடையூறாக இருக்கும் என்பதற்குப் போதிய தெளிவுகள் இல்லை!

ஹஜ்ஜுடைய காலத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து பேரூந்து வாகனம் மூலமாக ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளும் பயணிகளுடன் வரும் பேரூந்து வாகன ஓட்டிக்குக் கடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதை அவர் பொருட்படுத்த வேண்டியதில்லை. அவரும் குறிப்பிட்ட எல்லையை அடைந்ததும் ஹஜ் பயணிகளுடன் தாமும் இஹ்ராம் அணிந்து “லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக்” என்று தல்பியா முழங்கியபடி வாகனத்தைச் செலுத்தி மக்காவிற்குள் நுழைந்து தங்க வேண்டிய இடங்களில் தங்கி, செய்ய வேண்டிய ஹஜ் கிரியைகளை நிறைவேற்றினால் இவர் உழைப்பிற்கான ஊதியத்துடன் ஹஜ்ஜை நிறைவேற்றுகிறார். அல்குர்ஆன் 2:198வது வசனத்தின் கருத்துப்படி ஹஜ்ஜின்போது நேர்மையான முறையில் அல்லாஹ்வின் அருளைத் தேடுவதில் அல்லாஹ் தடைவிதிக்கவில்லை!

அதுபோல், மற்ற நாடுகளிலிருந்து விமானம் மூலமாக வரும் ஹஜ் பயணிகளைக் கொண்டுவந்து ஜித்தாவில் சேர்க்கும் விமான ஓட்டி, அவரும் ஹஜ்ஜை முடித்துவிட்டு, குறிப்பிட்ட தேதியில் வந்து விமானம் புறப்படும் நாளில் வேலையை ஏற்றுக் கொள்கிறேன் என ஹஜ் கிரியைகளை நிறைவேற்றினால் அவருக்கு ஆகுமானதே!

ஹஜ் கடமை என்பது கிரியைகளைக் கொண்டு நிறைவேற்றப்படுவதாகும். “பூமியில் பரந்து சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்” என்கிற (அல்குர்ஆன் 62:10) வசனத்தினடிப்டையில் வேலைக்கென சவூதிக்கு வந்தவர் ஹஜ்ஜின் நாட்களில் மக்கா சென்று குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட கிரியைகளை நிறைவேற்றினால் அவருடைய ஹஜ் கடமையும் நிறைவேறிவிடும்.

கடன் உள்ள நிலையில் மரணித்தவருக்குக் கடன் மன்னிக்கப்படுவதில்லை. இது எல்லாருக்கும் உள்ள பொதுவானதாகும். ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றியவருக்கும் இது பொருந்தும்!

கடனாளியாக இருந்து, அந்தக் கடனை அடைக்காமலும் வாய்ப்புக் கிடைத்தும் ஹஜ்ஜை நிறைவேற்றாமலும் மரணித்த ஒருவரையும் கடனிருந்தும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றிவிட்டு மரணித்த ஒருவரையும் ஒப்பு நோக்கினால் இந்த உண்மை புரியும்.

ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ் வாய்ப்பை வழங்கும்போது, ஆதாரமில்லாத பொருந்தாக் காரணங்களை நாமாகக் கற்பித்துக் கொள்ளாமல், மக்காவுக்குச் சென்று ஹஜ்ஜை நிறைவேறுவதற்கு முனைப்புக் கொள்ளவேண்டும். ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவதற்கு ஆர்வமூட்டும் சான்றுகளைக் காண்போம்:

அருள்வளமிக்கதாகவும் அகிலத்தாருக்கு வழிகாட்டியாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பெற்ற முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதுதான். அது, பெரும் பேறு பெற்றதாகவும் உலகத்தாருக்கான நேர்வழி மையமாகவும் திகழ்கிறது.

அதில் தெளிவான சான்றுகளும் மக்காமு இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் பாதுகாப்புப் பெற்றவர் ஆவார். மக்களில் அங்குச் சென்றுவரச் சக்தி பெற்றோர் அல்லாஹ்வுக்காக அவ்வில்லத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவர் மறுதலித்தாலும் (அதனால் அல்லாஹ்வுக்கு இழப்பில்லை. ஏனெனில்) அல்லாஹ் அகிலத்தாரிடம் தேவையற்றவன் ஆவான் (அல்குர்ஆன் 3:96,97).

“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்” (அறிவிப்பவர் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 8, முஸ்லிம் 20, திர்மிதீ, நஸயீ, அஹ்மத்)

 அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது, “மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கிவிட்டான். எனவே ஹஜ் செய்யுங்கள்” என்றார்கள். அப்போது ஒரு மனிதர், “ஒவ்வோர் ஆண்டிலுமா (ஹஜ் செய்ய வேண்டும்),அல்லாஹ்வின் தூதேர?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அவர் மூன்று முறை அவ்வாறே கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நான் “ஆம்’ என்று சொல்லிவிட்டால் அது (ஒவ்வோர் ஆண்டிலும்) கடைமயாகிவிடும். பின்னர் உங்களால் அதை நிறைவேற்ற முடியாமலாகிவிடும்” என்று கூறிவிட்டு, “நான் (எதுவும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு எதை விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்)நீங்களும் விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அழிந்தெதல்லாம், அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் அதிகமாக(த் தேவையற்ற) கேள்விகள் கேட்டதாலும் அவர்களுடன் கருத்து மாறுபாடு கொண்டதாலும்தான். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டைளயிட்டால், அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதை(முற்றாக)விட்டுவிடுங்கள்!” என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 7288, முஸ்லிம் 2599, நஸயீ).

தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற கடமையான அமல்களை அறிவித்திடும் குர்ஆன் வசனங்களைப் போன்று, மேற்காணும் இறைவசனங்களும் நபிவழி அறிவிப்புகளும் ஹஜ் செய்வது முஸ்லிம்கள் மீது கடமையாகும் என வலியுறுத்துகின்றன.

கடமையான மற்ற அமல்களை நாம் வாழுமிடங்களில் இருந்தே நிறைவேற்றிக்கொள்ளலாம். ஆனால், ஹஜ்ஜுக் கடமையை, மனிதர்களுக்கென முதல் முதலாக அமைக்கப்பட்ட இறை ஆலயம் என அல்லாஹ் அறிவித்திருக்கும் மக்காவில் அமையப்பெற்ற கஅபத்துல்லாஹ்வைச் சென்றடைந்து அதைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட சில இடங்களில் தங்கியிருந்து ஹஜ் கிரியைகளை நிறைவேற்றிட வேண்டும்.

ஹஜ்ஜைப் பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள்(எனக் கூறினோம்) (அல்குர்ஆன் 22:27).

இறைத்தூதர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூலமாகவே அல்லாஹ் ஹஜ்ஜின் அறிவிப்பை ஏற்பாடு செய்துள்ளான் என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து விளங்குகிறோம். ஹஜ்ஜுக்கான அறிவிப்பைக் கேட்டு ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக அருகிலிருப்போர் நடந்தும், தூரத்திலிருப்போர் வாகனங்களில் பயணித்தும் கஅபத்துல்லாஹ்வை வந்தடைவார்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

மக்களில் அங்குச் சென்றுவரச் சக்தி பெற்றோர் அல்லாஹ்வுக்காக அவ்வில்லத்தை ஹஜ்ஜுச் செய்வது கடமையாகும்(அல்குர்ஆன் 3:97).

ஒரு முஸ்லிம் இன்று உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர் மக்காவுக்குச் சென்று வர சக்தி பெற்றிருந்தால் அங்குச் சென்று ஹஜ் செய்வது அவருக்குக் கடமையாகும். இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள ‘சக்தி’ என்பது ஹஜ் கிரியைகளுக்காகத் தொலை தூரம் செல்வதால் சென்று திரும்பும் நாட்களுக்கான பொருளாதாரமும் உடல் ஆரோக்கியமும் முக்கியத் தேவைகளாகும்.

அடுத்து, தொலை தூரம் சென்று வர வாகனம் அவசியம். ‘சக்தி’ என்பதில் வாகன அவசியமும் உள்ளடங்கும். ஆகவே, ஹஜ்ஜுக்குச் சென்று வர சக்தி பெற்றோர் என்பதில் பொருளாதாரம், உடல் ஆரோக்கியம், மற்றும் வாகன வசதியும் வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் அன்சாரிப் பெண்ணிடம், “நீ எங்களுடன் ஹஜ்ஜுச் செய்வதைத் தடுத்தது எது?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, “எங்களிடம் நீர் இறைப்பதற்கான இரண்டு ஒட்டகங்கள் மட்டுமே உள்ளன. ஓர் ஒட்டகத்தில் என் கணவரும் மகனும் ஏறி ஹஜ்ஜுக்குச் சென்றுவிட்டனர். மற்றோர் ஒட்டகத்தை எங்களுக்காக விட்டுச் சென்றனர். அதன் மூலம் நாங்கள் நீர் இறைத்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “ரமளான் மாதம் வந்துவிட்டால் அப்போது நீ உம்ராச் செய்துகொள். ஏனெனில், ரமளானில் உம்ராச் செய்வது ஹஜ்ஜுக்கு நிகரான(பலனுடைய)தாகும்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 1863, மேற்கண்ட அறிவிப்பு முஸ்லிம் 2408, 2409)

இதன் அறிவிப்பாளர் அதாவு ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்: “இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள். ஆனால், அதை நான் மறந்துவிட்டேன்”. (அப்பெண்ணின் பெயர் ‘உம்மு ஸினான்’ என்பதாகும்).

 ஹஜ்ஜுக்குச் சென்று வர வாகனத் தேவையுள்ளது. இது அந்தந்தக் காலத்திற்கேற்ப வாகனங்கள் மாறிக்கொள்ளும். சென்று வரும் சக்தியை முன்னேற்பாடு செய்துகொள்ள வேண்டும். என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜைத் தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் உடலுறவு, கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு – ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் நன்மை மிக்கது, தக்வா(என்னும் இறையச்சமே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! என்னையே அஞ்சி வாழுங்கள் (அல்குர்ஆன் 2:197).

ஹஜ்ஜுக்குத் தேவையான பொருள்களைச் சேகரித்துக் கொள்ள வேண்டும் என்பதில் உணவும், வாகன வசதியும் அடங்கிவிடும்.

யமன் வாசிகள் (ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருள்களைச் சேகரிக்காமல் ஹஜ்ஜுக்கு வருவார்கள். மேலும், ‘நாங்கள் இறைவன் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்’ என்றும் கூறுவார்கள். மக்கா வந்தடைந்தால் மக்களிடம் யாசகம் கேட்பார்கள். இது குறித்தே அல்லாஹ், “(ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள், நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் நன்மையானது தக்வா (என்னும் இறையச்சமே) ஆகும்” என்ற வசனத்தை இறக்கினான். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1523).

அல்குர்ஆன் 2:197வது வசனம் அருளப்பட்ட பின்னணி, தொலைவிலிருந்து ஹஜ்ஜுக்குச் செல்வோர் தேவையான பொருட்களை சேகரித்துக் கொண்டு செல்லாமல் மக்கா சென்று தமது தேவையை யாசித்துப் பெற்றுள்ளனர். இவ்வாறு செய்யாமல் உங்களுக்கான பொருட்களை முன்னேற்பாடாக சேகரித்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்லப்படுகிறது. இதனால் யாசிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லலாமே தவிர, வயிற்றுப் பசிக்குக்கூட யாசிப்பது கூடவே கூடாது என்று தடைவிதிப்பதாக ஆகாது. “குர்பானி இறைச்சியை ஏழைகளுக்கும், யாசிக்காதோருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்” என்று 22:28, 36 ஆகிய வசனங்கள் கூறுகின்றன!.

சக்தி பெறுதலைத் தாமாக முயற்சி செய்து சக்தி பெறுதல் என்றும் எதிர்பாராமல் வேறு வகையில் மக்கா சென்று விடுவது என்றும் இரு வகைகளாகப் பிரிக்கலாம். நாம் கவனிக்கத் தக்கது அவை ஹலாலான வழியில் உள்ளதா என்பதை மட்டுமே.

எனவே, ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவதற்கு ஹலாலான வழியில் சக்தி வழங்கப்பட்டவர்கள், கடன் என்ற காரணத்துக்காக அதைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை.

(இறைவன் மிக்க அறிந்தவன்).

source: http://www.satyamargam.com/1849

READ IT

Posted: ஓகஸ்ட் 26, 2013 by Journalist of AKP in இஸ்லாம்

PROPERT

மேற்கத்திய கலாசாரம் ஈன்றெடுத்த குழந்தைகள்தான் இன்றைய காதலும் காதலர் தினங்களும் சீரழிந்த இந்த மேற்கத்திய கலாசாரத்தின் வெளிப்பாடுகள்தான் இவைகள்.  இன்றைய இளவல்களை கவர்ந்திழுக்கின்ற ஒரு காரணியாக நவீன காதல் அமைந்திருக்கின்றது.

தமது திருமண வாழ்வைத் தீர்மானிப்பதில் தம்மை தாலாட்டி சீராட்டி வளர்த்த தமது தாய் தந்தையரின் தலையீடுகள் சிறிதும் இன்றி முழுவதுமாக தமது சுயவிருப்பின் அடிப்படையிலேயே தமது திருமண வாழ்வை அமைத்துக் கொள்ள விரும்புகின்றது இன்றைய இளைஞர் சமுதாயம்.
தற்போதைய சூழற்காரணிகளும் அதற்கு ஏதுவாக அமைந்திருக்கின்றது. அந்நிய ஆண்களும் பெண்களும் தனிமையில் சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களும் கலந்து பழகுவதற்கான வாய்ப்புக்களும் தாராளமாகவே காணப்படுகின்றன.

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் தனியார் கல்விநிலையங்கள் அலுவலகங்கள் மற்றும் பூங்காக்கள் போன்றவற்றில் அந்நிய ஆண்களும் பெண்களும் எந்தவிதமான தடங்கல்களுமின்றி கலந்து பழகுகின்றனர். பழக்கம் தொடர்ந்து  கடைசியில் தம்மை ஈன்றெடுத்த தாய் தந்தையருக்கு தெரியாமலேயே அல்லது அவர்களது விருப்பத்திற்கு மாற்றமாக திருமணம் நடந்தேறுகிறது.

தற்போதைய தகவற் தொழிநுட்ப யுகத்தில் இன்றைய காதலையும் காதல் திருமணங்களையும் ஊக்குவிப்பதில் இணையங்களும் (internet) சினிமாக்களும் பெரும் பங்கு வகிக்கின்றன.
இந்த காதல் திருமணங்கள் ஆற அமர நிதானமாக சிந்தித்து நடப்பவை அல்ல. மாறாக உணர்வுகளின் உந்துதல்களால் நடைபெறுபவை ஆகும். இவ்வாறு நடந்தேறிய திருமணங்கள் சில மாதங்கள் சில வருடங்கள் சந்தோஷமாக கழிகின்றன‌. பின்னர் கோலங்கள் கலைந்து வாழ்வின் யதார்த்தங்கள் புரிகையில் இவர்களால் அதற்கு முகம் கொடுக்க முடிவதில்லை. பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல் என்கின்ற தன்மைகள் அஸ்த்தமித்து அற்பப்பிரச்சினைகளும் சுனாமியாய் உருவெடுக்கின்றன.

உறவுகள் சீர்குலைந்து காதல் கசந்து விருப்புக்கள் வெறுப்பாய் மாறி பூகம்பமாய் வெடிக்கின்றது. நிறைகள் அஸ்த்தமனமடைந்து குறைகள் உதயமாகி குறைகளே பூதாகரமாக காட்சியளிக்கத் தொடங்குகின்றன. கடைசியில் இது விவாகரத்தில் சென்று முடிகின்றது.
அண்மைக்கால பத்திரிகைச் செய்திகளும் ஆய்வறிக்கைகளும் உணர்த்தி நிற்கின்ற ஒரு விடயம் விவாகரத்தில் அதிகளவு இடத்தைப் பிடித்திருப்பதும் தற்போதைய திருமணங்களில் மிகக் குறைந்த ஆயுளை கொண்டதுமான திருமணங்கள்  தற்போதைய காதல் திருமணங்களேயாகும்.

மேலும் தமிழ் சினிமாக்களில் சித்தரிக்கப்படுவது போன்று தற்போதைய காதலானது தெய்வீகத் தன்மை வாய்ந்ததாயின் அதில் துளியளவு கூட ஏமாற்றம் தோல்வி துரோகம்  என்பன இருக்கக் கூடாது. எனவே இன்றைய இந்த காதல் திருமணங்கள் தெய்வீகத் தன்மை வாய்ந்தது புனிதமானது என்ற வாதங்கள் போலித்தனமானவையாகும்.

இன்றைய காதலால் அதிகம் பாதிப்புக்குள்ளாவது பெண்கள்தான். தாய் தந்தையரையும் ஏனைய உறவுகளையும் துறந்து ஆரம்பிக்கின்ற இந்த வாழ்வில்  காதலனால் கைவிடப்படுகின்ற சந்தர்ப்பத்தில் ஆதரிப்போரின்றி தவிக்கின்றனர். இதற்கு தீர்வாக பலர் தற்கொலையை கையிலெடுத்து நிரந்தர நரகத்தை நோக்கி பயணிக்கின்றனர். தற்கொலை தொடர்பாக நபிகளாரின் பொன்மொழி பின்வருமாறு எடுத்தியம்புகின்றது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யார் மலையின் மீதிருந்து கீழே  குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் என்றென்றும் குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரகத்திலும் நிரந்தரமாக விஷத்தைக் கையில் வைத்துக் கொண்டு குடித்துக் கொண்டேயிருப்பார். யார் கூறிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவ்வாயுதம் தமத கையில் இருக்கும் நிலையில் நரகத்தில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் குத்திக் கொண்டேயிருப்பார்.’
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
நூல்: புஹாரி 5778

இன்றைய காதல் சில நேரங்களில் தற்கொலைக்கும் வழிவகுத்து எம்மை நிரந்தர நரகவாதியாகவும் ஆக்கி விடுகிறது. மேலும் அந்நிய ஆண்களும்  பெண்களும் நெருங்கிப் பழகுவதை மார்க்கம் வன்மையாக கண்டிக்கின்றது.
கள்ளக்காதல் கொள்வதையும் இஸ்லாம் தடை செய்கிறது. ஏக நாயன் அருள் மறையாம் திருமறையில் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.

‘உங்களில் எவருக்குச் சுதந்திரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;)  அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு மணமுடித்துக் கொள்ளுங்கள் – அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்; அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும் விபச்சாரம் செய்யாதவர்களாகவும் கள்ளக் காதல் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால் விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்;  தவிர உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ – அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும்இ மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான் ‘.  (அல்குர்ஆன் 4:25)

மேலுள்ள அருள் மறை வசனம் திருட்டுத் தனமாக காதல் கொள்வதை தடைசெய்கிறது.
திருமணத்திற்கு முன் ஓர் ஆண் பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புவது அல்லது ஓர் பெண் ஆணைத் திருமணம் செய்ய விரும்புவதுதான் காதல் என்று சொன்னால் அதனை இஸ்லாம் தாராளமாக அனுமதிக்கின்றது. மாறாக இன்றைய காலகட்டத்தில் காதலின் பெயரால் இடம்பெறுகின்ற வரம்பு மீறிய செயற்பாடுகளைத்தான் தடை செய்கின்றது.

மேலும் திருமணம் செய்ய விரும்புகின்ற பெண்ணை நேரில் நன்கு பார்த்து நாம் எதிர்பார்க்கும்  விடயங்கள் பண்புகள் அவளிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகின்றது. இது தொடர்பாக நபிகளாரின் பொன்மொழிகள் பின்வருமாறு எடுத்தியம்புகின்றன.
‘நான் நபி (ஸல்) அவர்களுடன் வீட்டிலிருந்த போது ஒருவர் வந்து தான் அன்சாரி பெண்ணொருத்தியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை நீங்கள் பார்த்தீர்களா?  எனக் கேட்டார்கள். அதற்கு அவர் இல்லை நாயகமே! நான் அவளைப் பார்க்கவில்லை என்றார். அப்படியானால் முதலில் அவளைப் பார்த்துக் கொள்ளுங்கள். மதீனாவாசிகளின் கண்களில் சிறிது கோளாறு இருக்கின்றது என்றார்கள் ‘.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
நூல்: முஸ்லிம்

‘நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளத் தூதனுப்பினேன். இதனைக் கேள்வியுற்ற நபி (ஸல்) அவர்கள் நீங்கள் பெண்ணைப் பார்த்தீர்களா? என வினவினார்கள். இல்லை என்றேன். அவ்வாறாயின் அப்பெண்ணை பார்த்துக் கொள்ளுங்கள். இம்முறையைக் கையாள்வதால் உங்களுக்கிடையில் நட்பும் நல்லிணக்கமும் ஏற்பட வழிபிறக்கும் எனக்கூறினார்கள்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஹுஃபா(ரழி)
நூல்: திர்மிதீ நஸயீ

மேற்படி நபிமொழிகளில் இருந்து ஒருவர் திருமணம் செய்வதாக இருந்தால் கட்டாயம் பெண்ணைப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்பதை அறியலாம். மேலும் திருமணம் செய்து கொடுக்கப்படுவதாக இருந்தால் கட்டாயம் பெண்ணின் விருப்பம் கேட்கப்பட வேண்டும்.

‘பெண்ணின் சம்மதமின்றி செய்யப்பட்ட திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் இரத்து செய்துவிட்டார்கள் ‘
ஆதாரம்: ஸஹீஹுல் புஹாரி 5136/ 6968/ 6970

அதே வேளை பெண்ணைப் பொறுத்த வரையில் விரும்பிய ஆண்மகனை தானாக திருமணம் செய்ய முடியாது. மாறாக பொறுப்பாளரே விரும்பிய ஆண்மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என இஸ்லாம் பணிக்கின்றது.
இவ்வாறு செய்கின்ற போது பெண்கள் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகின்றார்கள். இதனால் பெண்ணுடைய வாழ்வுக்கு உரிய உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

அதே சமயம் பெண் ஒருவனை விரும்புகின்ற போது அவன் இஸ்லாமிய அடிப்படையில் சீதனமின்றி மஹர் கொடுத்து திருமணம் முடிக்க முன்வருகின்ற போது பெற்றோர் பெண்ணின் உணர்வினை மதித்து அவளது விருப்பப்படி திருமணம் செய்து கொடுக்க முன் வர வேண்டும்
மேலும் திருமணம் செய்து கொள்வதற்காக ஒருவரை ஒருவர் விரும்புகின்ற போது விரும்புபவரும் விரும்பப்படுபவரும் முஸ்லிமாக இருத்தல் வேண்டும். முஸ்லிம்கள்  முஸ்லிமல்லாதோரை திருமணம் செய்வதை இஸ்லாம் தடைசெய்கின்றது. முஸ்லிமும் முஸ்லிமல்லாதோரும் விரும்புகின்றபோது முஸ்லிமல்லாதோர் இஸ்லாத்தை ஏற்றதன் பிற்பாடு திருமணம் செய்து கொள்ள முடியும்.

ஏக நாயன் அருள் மறையாம் திருமறையில் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.
“(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை -அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;  இணை வைக்கும் ஒரு பெண்  உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும் அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்;. அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;  இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும் ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள் உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும் மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (அல்குர்ஆன் 2:221)

அதே சமயம் ஒரு ஆணோ பெண்ணோ விரும்புகின்ற வாழ்க்கை மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் காணப்படும் போது அதனைத் தடுப்பது குற்றமாகும்.
எனவே அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத்தந்த வகையில் எமது வாழ்வை அமைத்து ஈருலகிலும் ஏகநாயனின் திருப்தியையும் மன்னிப்பையும் பெறுவோமாக!

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் “முஸ்லிம் சேவை இணைய வானொலி” சேவை எதிர் வரும் 19 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 02.00 மணிக்கு ஆறாம் இலக்க கலையகத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க தலைமையில் இடம்பெறவிருப்பதாக இனைய வானொலியின் பொறுப்பாளர் அஹமட் முனவ்வர் தெரிவித்தார்.
இதன்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையில் உயர் பதவிகள் வகித் பேராசிரியர் மர்கூம் டொக்டர் உவையிஸ், ஏ.எம்.காமில் மரைக்கார், வி.ஏ.கபூர், எம்.சி.கபூர், எம்.எஸ்.குத்தூஸ், மௌலவி.இஸட்.எல்.எம்.முஹமட், நூராணியா ஹஸன் மற்றும் ஒலிபரப்பு முன்னோடியும் தயாரிப்பாளருமான எம்.ஏ.எம்.முஹமட் ஆகியோரின் குரல்ஒலிகள் அடங்கிய இறுவெட்டுக்களும் உத்தியோக பூர்வமாக வெளியிட்டு வைக்கப்படவிருக்கின்றது.
மேற்படி நிகழ்வில் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் புத்தி ஜீவிகள், மார்க்க அறிஞர்கள் உட்பட பல பிரமுகர்கள் கலந்த கொள்ள இருப்பதாகவும் மேற்படி நிகழ்வினை கண்டுகளிக் விரும்புபவர்கள் மேற்படி நிகழ்வில் கலந்து கொள்ளலாம் எனவும் அங்குரார்ப்பன நிகழ்வினை நேரடி உலிபரப்புச் செய்யவுள்ளதாகவும்  இனைய வானொலியின் பொறுப்பாளர் அஹமட் முனவ்வர் தெரிவித்தார்.

F.M.பர்ஹான்: மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை பற்றுப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள காங்கேயனோடை கிராமத்தைச் சேர்ந்த அப்துல் காதர் முஸ்தபா என்பவர் கடந்த ஒரு வருட காலமாக சிறு நீரக (கிட்னி) நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் இரண்டு கிட்னிகளும் பழுதடைந்த நிலையில் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரை உடனடியாக கண்டி பெரியஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் படியும் இவருக்கு கிட்னி மாற்று சத்திரசிகிச்சை செய்யும் படியும் இவரை பரீசோதித்த வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வித உதவியும் அற்ற நிலையில் காணப்படும் இவருக்கு கிட்னி மாற்று சத்திரசிகிச்சை செய்வதற்க்கு 15லட்சடம் ரூபாய் தேவைப்படுகிறது இவருக்கும் இவரது குடும்பத்திக்கும் குறித்த 15லட்சடம் ரூபாய் தொகையை திரட்ட முடியாதுள்ளது நல்லுள்ளம் கொண்ட இறைவனின் திருப்பதியை நாடி உதவும் எண்ணம் கொண்டவர்கள் அந்த தொகைகை பெற்றுக்கொள்ள உங்களால் முடிந்த தொகையை அவரின் கணக்கு இலக்கதிக்கு நேரடியாக அனுப்ப முடியும் .

இவருக்கு உதவி வழங்க விரும்புவோர; இலங்கை வங்கி ஆரையம்பதி கிளை ஏ.முஸ்தபா ‘கணக்கு இலக்கம் 73153401 தேசிய அடையாள அட்டை 661783249V என்ற இலங்கை வங்கி கணக்கு இலக்கத்துக்கு அனுப்பும்படி அவரின் குடும்பத்தினர் கேட்டுகொள்கின்றனர் .

Name:    A.MUSTHAFA
A/C:        73153401
Bank:     BANK OF CEYLON
NIC:       661783249v
Branch: ARAYAMPATHY.

குறிப்பு : இவரின் கணக்கு இலக்கத்திற்கு சிறிய , பெரிய தொகைகளை அனுப்ப எண்ணம் உள்ளவர்கள்  நேரடியாக அவரின் கணக்கு இலக்கத்திற்கு தொகையை அனுப்பிய பின்னர் எமது  இணையத்தள ஈமெயில் ( infom.lankamuslim@gmail.com )முகவரிக்கு  அறியத்தரவும்.

உங்களின் தகவல் எமக்கு  எதிர்காலத்தில் இது போன்ற சேவைகளை செய்ய உதவியாக இருக்கும்.

புர்ஹான் அலி , இர்ஷாத் றஹ்மத்துல்லா: வவுனியா மாவட்ட ஜம்இயத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட பள்ளிவாசல்களின் நிர்வாக சபையினர்களுக்கான கூட்டமொன்று இன்று வ்வுனியா இஸ்லாமிய கலாச்சார அபிவிருத்தி சபை கேட்பேர் கூடத்தில் இடம்பெற்றதுஇதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை வவுனியா மாவட்ட ஜம்இயத்துல் உலமா சபையின் தலைவர் மற்றும் செயலளார் ஆகியோர் கையெழுத்திட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவ்வறிக்கையின் விபரங்கள் வருமாறு –

1.வவுனியா மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் சிங்களம் என மூவின மக்களும் புரிந்துணர்வுடனும்,ஒற்றுமையுடனும் வாழ்ந்து வரும் இத்தருனத்தில் அதை சீர்குலைக்க சுயநலம் போக்கு கொண்ட சில அரசியல்வாதிகள் ஈடுபடுவதை வண்மையாக கண்டிக்கின்றோம்.

2.முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு முறைமுகமாக தடைகளை ஏற்படுத்தி அவர்களை பிழையானவர்களாக ஊடகங்களில் சித்தரித்துக்காட்டும்,சில தமிழ் அரசியல்வதிகளின் போக்கு உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

3.வன்னி மக்களின் விடிவுக்காகவும்,அவர்களின் சௌபாக்கிய வாழ்வுக்காகவும் நீதியுடனும்,நேர்மையுடனும் இனம் மதம் பாராமல் உழைத்து வரும்,தன்னலம் பாராத சமூக சேவையாளனாகவே அமைச்சர் கௌரவ அல்-ஹாஜ் றிசாத் பதியுதீன் அவர்களை மூவின மக்களும்,பார்க்கின்றனர்.இந்த நிலையில அமைச்சர மீது அவதுறுகளை அள்ளிவீசி, இனமுரண்பாடுகளை தோற்றுவித்து அரசியல் லாபம் தேட முற்படும்,சில தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளையும்,அவர்கள் விடும் பிழையான அறிக்கைகளையும்,வண்மையாக கண்டிக்கின்றோம்.

4. வன்னி மாவட்ட மூவின மக்களும்,யுத்த்த்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து பேர் இழப்புக்களைச் சந்தித்துள்ளனர்.தற்போது மீள்குடியேற்றம் நடைபெறும் இவ்வேளையில் மீள்குடியேறும் இம்மக்களை இன மத வேறுபாடு இன்றி,மனிதாபிமான முறையில் ஏற்றுக் கொள்ளுமாறும்,இதற்கு முட்டுக்கட்டையாக இருப்போரிடம்,அன்பாக வேண்டுகோள்விடுக்கின்றோம்.

5. அரசியல் வாதிகளோ அல்லது சமூகத்தில் மதிப்பு மிக்கவர்களோ மீள்குடியேற்றம் மற்றும்,காணி போன்ற விடயங்களில் தமக்குள் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்காக ஊடகங்கள் வாயிலாக சமயங்களை குறை கூறுவதையும்,பிழையாக விமர்சிப்பதையும் முற்றாக நிறுத்த வேண்டும்.என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்ப்பட்டுள்ளது.

எஸ்.எச்.அமீர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்ளத்தினால் திருகோணமலை மாவட்ட அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்ட இரண்டு நாள் பயிற்சி செயலமர்வு இன்று சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. திருகோமலை மாவட்ட அஹதிய்யா பாடசாலை சம்மேளனத்தின் உப தலைவர் மௌலவி வை. ஹதியத்துல்லா தலைமையில் கிண்ணியா இஹ்ஸானியா மகளிர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது .

இச்செயலமர்வு ஆரம்ப வைபவத்தில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் வை.எல்.எம்.நவவி, ஈரான் அல்-முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அரிய்க் ஹக்கி ,பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.எச்.நூருல் அமீன், கலாசார உத்தியோகத்தர் டி. ரவுப்தீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செயலமர்வில் வளவாளராக ஜாமியா நளிமியாவின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளரும் மிஸ்காத் ஆய்வு மையத்தின் ஸ்தாபகத் தலைவருமான உஸ்தாத் எம்.ஏ.மன்சூர் ,முன்னாள் கல்விப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம். நிஸாம் முதலானோர் கலந்து கொண்டனர்.

முஹம்மத் அம்ஹர்: மேல்மாகாணத்தின் சில பெளத்த ,கிறிஸ்தவ பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகள் இஸ்லாமிய உடையிலான சீருடைகளை அணிவதில் பல்வேறு தடைகளை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போது முஸ்லிம் மாணவியரின் சீருடைகள் மீதான தடை அவர்களின் பெற்றோரின் இஸ்லாமிய உடைகளுக்கு எதிராகவும் திரும்பியுள்ளது.

இது தொடர்பாக மேல்மாகாண சபை உறுப்பினர் முஜீபு ரஹ்மான் மேல்மாகாண சபையில் தெளிவு படுத்தியபோது ஹிஜாப், அபாயா உடைகளில் பெற்றோர் பாடசாலை கூட்டங்களுகு அனுமதிக்கப் படவேண்டும் என்ற சுற்று நிருபம் சகல பாடசாலைகளுக்கும் மாகாண கல்விப் பணிப்பாளர் அனுப்பவேண்டும் என்று மேல்மாகாண முதலமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார் .

முஸ்லிம் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பெரும்பான்மை பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களின் பெற்றோர் பாடசாலை நிர்வாகங்கள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களுக்கு போகும்போது இஸ்லாமிய உடைகளான ஹிஜாப், அபாயா போன்ற உடைகளுடன் கூட்டங்களில் பங்கு பற்ற அனுமதிக்கப் படுவதில்லை அவர்கள் திருப்பி அனுப்பப் பட்டுள்ளனர் ,சில பெரும்பான்மை பாடசாலைகளின் அதிபர்கள் ஹிஜாப் அபாயா உடைகள் அணியாது கூட்டங்களுக்கு வருமாறு பெற்றோரை கேட்டுள்ளார் . இதனால் பெரும்பான்மை பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவரின் பெற்றோர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர் . இது குறித்து மேல்மாகாண சபையின் கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் மேல்மாகாண சபை உறுப்பினர் முஜீபு ரஹ்மான் தெளிவு படுத்தியுள்ளார் .

இது தொடர்பாக மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் கல்வி அதிகாரிகளின் பங்கேற்புடன் இடம்பெற்ற இக் கூட்டத்தில் மேல்மாகாண சபை உறுப்பினர் முஜீபு ரஹ்மான் மேற்கண்ட தகவல்களை முன்வைத்தபோது முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆச்சரியத்துடன் அவற்றை கேட்டதுடன். பெரும்பான்மையினர் பாடசாலைகளில் முஸ்லிம் முஸ்லிம் மாணவர்களின் உடைகளைச் கழற்றுவதும், முஸ்லிம் பெண்கள் ஹிஜாப், அபாயா உடைகளை கழற்றிவிட்டு கூட்டங்களுக்கு வருமாறு உத்தரவிடுவதும் அதிகரித்து வருகின்றமை குறித்து முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க கவலை தெரிவித்ததுடன் , பெரும்பான்மையினர் பாடசாலைகளில் கற்கும் முஸ்லிம் முஸ்லிம் மாணவர்களின் பெற்றோர் ஹிஜாப், அபாயா அணிந்து கூட்டங்களுக்கு வர அனுமதிக்கும் வகையில் சகல பாடசாலைகளுக்கும் சுற்று நிருபம்மொன்றினை உடனடியாக அனுப்பி வைக்குமாறு முதலமைச்சர் மாகாண கல்விப் பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்தார்