Archive for the ‘இஸ்லாம்’ Category

தெஹிவளை பிரதேச தாருர் ரஹ்மான் மஸ்ஜித் , சிறுவர் மதரஸா தொடர்பாக முஸ்லிம் தரப்புக்கும், ஆர்பாட்டகாரர்கள் தரப்புக்கும் இடையில் நாளை பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் ஒன்று தெஹிவளை ஜெயசிங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது என அதன் பிரதான நிர்வாகி onlineAkkaraipattu க்கு  தெரிவித்தார்.

குறித்த மஸ்ஜித் மற்றும் மதரஸா தெஹிவளை – கல்கிசை மாநகர சபையில் கடந்த பத்து வருடங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தெஹிவளை பிரதேச தாருர் ரஹ்மான் மஸ்ஜித் , சிறுவர் மதரஸாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நேற்று இடம்பெற்றது அதில் பெளத்த பேரினவாதிகள் பெளத்த பிக்குகள் வழிகாட்டலில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் குறித்த மஸ்ஜித் மற்றும் மதரஸா பிரதேசத்தின் சிங்கள மற்றும் தமிழ் மக்களுடன் மிகவும் நெருக்கமாக உறவை கொண்டுள்ளது. நோன்பு காலங்களிலும் ஏனைய காலங்களிலும் முஸ்லிம்களுக்கு வழங்கப் படும் அனைத்து வகையான உணவு வகைகளும் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கும் வழங்கப் பட்டு வந்துள்ளது என்று தாருர் ரஹ்மானின் பிரதம நிர்வாகி மேலும் lankamuslim.org க்கு தெரிவித்தார்.

Advertisements

சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட தப்ஹீமுல் குர்ஆன் விளக்கவுரை இலங்கையில் அதை வாசிக்கக் கூடிய அனைத்து சிங்கள தலைவர்களுக்கும் கையளிக்கப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக சப்ரகவ மாகாணத்தில் கேகாலை மாவனெல்லை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட அல்குர்ஆன் விளக்கவுரை சப்ரகவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்திற்கு கையளிக்கும் நிகழ்வு கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாவனெல்லையில் இடம்பெற்றது .

1989ஆம் ஆண்டு ஜமாஅத்தே இஸ்லாமியினால் வெளியிடப்பட்ட தப்ஹீமுல் குர்ஆனின் ஸூரதுல் பாதிஹா, அல்பகரா ஆகிய இரண்டு ஸூராக்களும் சிங்கள மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன .அதன் பின்னர் 2000ஆம் ஆண்டு முதல், ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் அமீர் மௌலவி ஏ.எல்.எம். இப்றாஹீம் அவர்களின் தலைமையில் ஒரு குழு தப்ஹீமுல் குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டது.

இந்தக் குழு 11 வருடங்கள் தொடராக மேற்கொண்ட முயற்சியால் இப்பணி கடந்த 18.08.2011 (1432 ரமழான் மாதம் 17ஆம் நாள்) நிறைவுற்றது மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களால் உருதுமொழியில் எழுதப்பட்ட தப்ஹீமுல் குர்ஆன் விளக்கவுரை தமிழ்மொழிக்கு மாற்றம் செய்யப்படுவதற்கு முன்னர் சிங்கள மொழிக்கு மாற்றப்பட்டது.

கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற தப்ஹீமுல் குர்ஆன் வெளியீட்டு விழாவில் பிரதமர் டி.எம்.ஜயரத்ன பிரதம அதிதியாக கலந்துகொண்ட நிகழ்வில் பிரதம பேச்சாளராக களனி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ஜயந்த செனவிரத்னவும் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது .

மேற்படி அல்குர்ஆன் சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு சிங்கள தலைவர்களுக்கு வெளியிடும் நிகழ்வை முதலாவதாக சப்ரகவ மாகாணத்தில் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி மாவனெல்லையில் நடத்துவதற்கு தீர்மானித்தது. இதன்போதே குர்ஆனின் பிரதியை என்.டி.எம். யூசுப் முதலமைச்சர் மஹிபால ஹேரத்திடம் கையளித்தார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் அத்தாவுட செனனிவ ரத்ன, பிரதி அமைச்சர் லலித் திசாநாயக்க, முன்னாள் அமைச்சர் சந்ராரணதுங்க முன்னாள் இராணுவத் தளபதி சிறில் ரணதுங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ரவூப் ஹகீம் கூறியது தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது அகில இலங்கை ஜம்இயதுல் உலமா : ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், இலங்கையின் நீதி அமைச்சருமான ரவூப் ஹகீம் நேற்று முன்தினம்  மாலை கிண்ணியாவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது “தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் முடிவுக்கு வந்துள்ளமையால் அது பற்றி நான் பேசமாட்டேன்.

அந்தவிவகாரம் முடிந்த பிறகு குப்பையை கிளறுவதும் வீர வசனம் பேசுவதும் தேவையில்லாத விடயமாகும். இதற்கு மேல் தம்புள்ள பள்ளிவாசல் பற்றி பேசினால் என்ன நடக்கும் என்றும எல்லோருக்கும் தெரியும். சதிகாரர்களுக்கு எல்லாம் மிகைத்த சதிகாரன் ஒருவன் இருக்கும் போது நாங்கள் எதையும் கண்டு அஞ்ச வேண்டியதில்லை.

கலகம் பிறந்தால் தான் நியாயம் பிறக்கும். இதற்கு முன்னுதாரணமாக நடந்த பல சம்பவங்கள் அமைந்திருக்கின்றன. என்று கூறியதாக எமது செய்தியாளர்கள் செய்திகளை அனுப்பி இருந்தார்கள் இது தொடர்பாக அமைச்சரை நாம் தொடர்பு கொண்ட முயன்றும் உடனதியாக அவருடன் பேசமுடியவில்லை . இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் செயலாளரும் தம்புள்ள மஸ்ஜித் விவகாரங்களை கையாளும் நபருமான முபாரக் மௌலவியை தொடர்பு கொண்டு பேசியபோது

தாம் பசில் பசில் ராஜபக்ஷ வுடன் இது தொடர்பில் பேசியதாகவும் அவருக்கு நடந்த சம்பவம் தொடர்பிலான வீடியோ பதிவுகளை வழங்கியதாகவும் அதன் போது அமைச்சர் எந்த சமூகத்திற்கும் அநீதி இழைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்று ஏற்கனவே தெரிவித்திருந்ததை மீண்டும் தெரிவித்ததுடன்

ஜனாதிபதி ஜம்இயதுல் உலமாவை அழைத்து தம்புள்ள விவகாரத்தை தாம் கையாண்ட விதத்திற்கு நன்றி தெரிவித்ததாகவும் ஆனாலும் ஜனாதிபதி தம்புள்ள மஸ்ஜித் தொடர்பில் ஜம்இயதுல் உலமாவின் கருத்துக்களை வினவாதபோதும் அவருக்கும் வீடியோ பதிவுகளை வழங்கியதாகவும் . இன்னும் தீர்வு தொடர்பில் முடிவு எடுக்கப் படவில்லை என்றும் தெரிவித்ததுடன் அமைச்சர் ரவூப் ஹகீம் கூறியது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தார் .

அதேவேளை தம்புள்ள மஸ்ஜித்-Dambulla Mosque- என்ற முகப்புநூல் பக்கம் -Facebook page- மகிந்தவின் தீர்ப்பு தம்புள்ள மஸ்ஜித்தைப் பாதிக்குமாயின் லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் முற்றுகை இடப்படும். என்று தெரிவித்துள்ளது

தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாரையின் விகாராதிபதி இனாமலுவ சுமங்கள தேரரை சண்டே லீடர் ஊடகவியலாளர் நிரஞ்சலா ஆரியவன்ஷா சந்தித்து பேட்டி கண்டுள்ளார் . அதிகார தோரணையில் அந்த பெண் ஊடகவியலாளரையும் மிரட்டியுள்ள தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாராதிபதி. தனது 65 ஆண்டுகால மஸ்ஜிதுக்கு எதிரான வன்முறைகளையும் நியாயப்படுத்தியுள்ளார். அவர் வழங்கியுள்ள பேட்டியின் முக்கிய பகுதிகளை தமிழில் உங்களுக்கு வழங்குகிறோம் :

நிரஞ்சலா : நீங்கள் விகாரையின் நிலத்தில் இருப்பதாக சொல்லப்படும் ஒரு பள்ளி கட்டிடத்தை எதிர்த்து இரண்டாவது தடவையும் கவனத்தை பெற்றுள்ளீர்கள். இந்த ஆர்பாட்டத்தில் இருந்தும் எதிர்காலத்தில் பின்வாங்குவீர்களா ?

இனாமலுவ: இல்லை ஒரு தடவை நாம் பாடம் கற்றுகொண்டோம். இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லை என்பதை கற்றுகொண்டோம். யாராவது , எதேச்சாதிகாரமாக ஆட்சி செய்தால் , அது ஜனநாயகத்திற்கு எதிராக இருந்தால் , நாங்கள் உயிருக்கு பயப்படாமல் அதை எதிர்ப்போம் .

நிரஞ்சலா : எப்படி ஜனநாயகம் இல்லாத ஒரு அரசாங்கத்தை எதிர்க்க முடியும் என்று கருதுகிறீர்கள் ?

இனாமலுவ: அதை நாம் அண்மையில் காண்பித்தோம்’.

நிரஞ்சலா :வன்முறை மூலமாகவா ?

இனாமலுவ: ஆம் , அது பகுதியளவில் உண்மையானது . நாம் அமைதி பூர்வமாகவே -ஆர்பாட்டத்தை- ஆரம்பித்தோம். ஆனால் மக்கள் உணர்ச்சி அதிகரிக்கும்போது அதை கட்டுப்படுத்த முடியாது போய்விட்டது . இதை தேசிய மட்டத்திலும் , சர்வதேச மட்டத்திலும் காணலாம் தீவிரவாதிகளான பின் லாடன் போன்றவர்கள் என்ற செய்தார்கள் ?  அவர்கள் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்ய இரத்தம் சிந்தினார்கள் .அதுதான் உண்மை .

எங்கள் மக்கள் பெளத்த கலாச்சாரத்தை சூழ கனவுகளையும் , எதிர்பார்ப்புகளையும் கட்டியுள்ளார்கள் அவர்கள் பொறுமையாக இருக்கிறார்கள் ஆனால் இங்கு அந்த பொறுமை சற்று ஓரத்தில் வைக்கப்பட்டது. நான் இதை வன்முறையாக பார்கவில்லை .

நிரஞ்சலா : பௌத்தம் பொறுமையை போதிக்கிறது. ஆனால் நீங்கள் ஒரு பகுதி பௌத்தர்களுக்கு எதிர்மறையாக செயல்பட தலைமை தாங்கினீர்கள்  அது ஏன் ?

இனாமலுவ: இல்லை. அதை என்னால் ஏற்றுகொள்ள முடியாது .இது அரசாங்கம்தாம் அப்படியான செயலை செய்தது . 30 வருடங்களுக்கு முன்னர் விகாரையையும் அதனை சூழவுள்ள நிலத்தையும் பாதுகாக்க ஒரு திட்டம் இருந்தது . அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தாததன் மூலம் அரசாங்கம் மக்களை -ஆர்பாட்டதிற்கு – நிற்பந்தித்துள்ளது . அவ்வாறு செய்வதற்கு மக்கள் என்னை வேண்டினார்கள் என்று நீங்கள் கூறினால் அது சரியானதாகும் . அதற்கு அரசாங்கமும் பொறுப்பு கூறவேண்டும் .

நிரஞ்சலா : இந்த ஆர்ப்பாட்டம் அவசரமாக செய்யப்பட்டது இல்லை என்பதை கூறினீர்கள். பௌத்தர்களின் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு .அரசாங்கம் அவர்களை பொறுமையற்றவர்களாக ஆக்கியுள்ளது. அரசாங்கமே இதற்கு பொறுப்பு என்றும் கூறினீர்கள் அதன் பின்னர் இஸ்லாத்தை பரப்ப எப்படி பின் லாடின் வன்முறையாக செயல்பட்டார் என்று கூறுனீர்கள். அப்படியானால் மதத்தின் பெயரால் இரத்தம் சிந்தப்படவேண்டும் என்று நம்புகிறீர்களா ?

இனாமலுவ: ஆம் நீங்கள் கூறியது உண்மை , அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும் , ஆனால் 20 ஆம் திகதி இரத்தம் சிந்தப்படவில்லை .

நிரஞ்சலா : 20 ஆம் திகதி நீங்கள் ” இன்று நாங்கள் எங்கள் கையில் பெளத்த கொடியுடன் வந்தோம் . ஆனால் அடுத்த முறை இது வித்தியாசமாக இருக்கும்”  என்று பகிரங்கமாக கூறினீர்கள். அப்படியானால் அடுத்த முறை மதவன்முறை ஏற்பட்டு ,இரத்தம்சிந்தும் நிலை ஏற்பட்டால் அதற்கு நீங்கள் பொறுப்பு கூறுவீர்களா ?

இனாமலுவ: அதற்கான பொறுப்பை இந்த நாட்டின் செயலற்ற ஆளும் தரப்புதான்  பொருப்பு கூறவேண்டும் . இந்த பள்ளியை பற்றி அவர்களின் அரசாங்கத்தின் முஸ்லிம் தலைவர்கள் பொய்களை பரப்புகிறார்கள் .இந்த நாட்டின் பிரதமர் இதன் மீது ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளார் என்பதை அவர்கள் கண்டிப்பாக விளங்கிக் கொள்ள வேண்டும் .

பிரதமர் இந்த நாட்டின் இரண்டாவது குடிமகன். அவர் பெளத்த சாசன அமைச்சரும் கூட. அவர் அரசாங்கத்தின் முடிவை பிரதிபலித்துள்ளார். அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்துள்ளவர்கள், அமைச்சரவையில் தம்புள்ளையை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் அந்த தீர்மானதிற்கு எதிராக செயல்படமுடியுமா ? அமைச்சர் ஜானக பண்டார தென்னகோன் கூறுகிறார். அந்த பள்ளி அகற்றப்பட்ட மாட்டாது என்று , பிரதமர் கூறுகிறார் அந்த பள்ளி அகற்றப்படும் என்று ,அமைச்சர் ரவூப் ஹகீம் அந்த பள்ளி தொடந்து இருக்கும் என்று கூறுகிறார். இது அரசாங்கம் பிளவு பட்டுள்ளதை கட்டுகிறது , அத்துடன் அரசாங்கத்தில் பிரதமரை விடவும் பெரிய ஆட்கள் இருப்பதை இது காட்டுகிறது ,அப்படி இருக்க முடிமா ? அரசாங்கத்தினதும், அமைச்சரவையினதும் கூட்டு பொறுப்புக்கு என்ன நடந்தது ? அதனால்தான் இந்த ஒழுக்கமற்ற அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியை வலியுறுத்துகிறோம் .

நிரஞ்சலா : நீங்கள் அமைச்சரவையின் கூட்டு பொறுப்பு பற்றி பேசும்போது நான் உங்களுக்கு இலங்கை பல மதங்களை ,கலாச்சாரத்தை ., பல இனங்களை கொண்ட நாடு என்பதை நினைவுபடுத்துகிறேன்.

இனாமலுவ: என்ன அர்த்தமற்ற பேச்சு , நீ அர்த்தமற்ற தத்துவம் ஒன்றை பேசுகிறார் . இந்த நாடு 14 மில்லியன் பௌத்தர்களை கொண்டது . எவ்வளவு முஸ்லிம்கள் இங்கு இருக்கிறார்கள் ?

உதாரணமாக தாய்லாந்தின் பெரும்பான்மையினர் பௌத்தர்கள் ,மியன்மாரில் பெரும்பான்மையினர் பௌத்தர்கள். கத்தோலிக்கர்கள் வத்திகானில் பெரும்பான்மையினர். அதனால்தான் வத்திகான் கத்தோலிக்க நாடு என்று கூறுகிறோம். அதேபோன்றுதான் மத்திய கிழக்கு அதிகமான நாடுகள் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்டுள்ளது. அதனால்தான் அவற்றை இஸ்லாமிய நாடுகள் என்று கூறுகிறோம் .

நிரஞ்சலா :என்னுடைய கேள்வி இதை குறிக்கவில்லை , ஒரு நாடு பல மதநம்பிக்கைகளை கொண்டிருக்கும்போது அவைகள் சம உரிமைகளை கொடிருக்க கூடாதா ? என்பதுதான் எனது கேள்வி.

இனாமலுவ: நீ எமது பெளத்த உரிமைகளை பறித்தெடுக்க முயல்கிறாயா ? நாம் அனைவரையும் மதித்தோம், இங்கு அவைகள் அல்ல பிரச்சினை , இது பெளத்த பாரம்பரியங்களை அழிப்பதில் இருந்து பாதுகாப்பதுடன் தொடர்பானது .

இங்கு அர்த்தமற்ற பேச்சு தேவை இல்லை . நாங்கள் 2500 ஆண்டுகால பெளத்த வரலாற்று பாரம்பரியங்களை பாதுகாக்க போராடுகிறோம். அது எங்களுடையது. அவர்கள் அதற்கு மாற்றமாக வரலாற்று பாரம்பரியங்களை அழிக்க முயற்சிக்கிறார்கள். எதார்த்தத்தை விளங்கிக்கொள்வது அனைவருக்கும் நல்லது.

நான் எமது உரிமைகளை பாதுகாக்க குரல் கொடுக்கிறேன் , மற்றவரின் உரிமைகளை ,சொத்துக்களை பறிப்பதற்காக அல்ல .இஸ்லாமிய வாதிகள்- தம்பியா -இங்கு வேறு ஒன்றை செய்ய முயற்சிக்கிறார்கள் .அதை அனுமதிக்க முடியாது .நாங்கள் ஒருபோதும் ஈராகிற்கு, மத்திய கிழகிற்கு இஸ்லாமியவாதிகளின் உரிமைகளை பறிக்கசெல்லவில்லை. இது ஒரு கொள்ளை. நீ இந்த முழு நாட்டிற்கும் இந்த நிலையை தெளிவாக சொல் .

நிரஞ்சலா : நீங்கள் ஒருவரின் உரிமைகளை பாதுகாக்க போராடும்போது மற்றவரின் உரிமையை மீறுகிறீர்கள் ?

இனாமலுவ: நீ பௌத்தர்களின் உரிமைகளை பறிக்க முயற்சிக்கிறாயா ?

நிரஞ்சலா : இல்லை . அவர்கள் பள்ளி 1962 ஆம் ஆண்டில் இருந்து இருப்பதற்க சொல்கிறார்கள்

இனாமலுவ: மூன்றாவது கண்னை கொண்ட ஒருவனை போன்று உன்னுடன் நான் பேசுவேன் .நான் உலகில் என்ன நடந்து கொடிருக்கிறது என்பதை பேசுகிறேன் .நான் உலகளாவிய ரீதியில் என்ன நடக்கிறது என்பதை ஒப்பிடுகிறேன் . உலகளாவிய ரீதியில் இஸ்லாம் மேலோங்கிக் கொடிருக்கிறது . சில சிங்கள பெயர் தாங்கிகள் அவர்களுக்கு கைகொடுகிறார்கள். நீ அப்படி செய்யவேண்டாம் என்று உன்னை கோருகிறேன் .

அந்த பேட்டியின் முழுமையான வடிவம் 

Ven. Inamaluwe Sumangala Thero, the Chief Priest at the Rangiri Dambulla Viharaya was in the forefront in recent times leading a protest at Dambulla to relocate a mosque which was within the sacred Vihara land, disputed by the Muslim fraternity. The issue is yet on the boil and the government has not resolved this sensitive stand off.
Inamaluwe Sumangala Thero is no stranger to controversy and has time and again led protests against the administrative and political structure. Our reporter Niranjala Ariyawansha interviewed the Chief monk. At the conclusion of this interview Sumangala Thero warned our reporter of dire consequences if she ever stepped foot into Dambulla.

Excerpts:
SL: You were first identified with protests against the construction of the Kandalama Hotel. What was the final outcome of that protest?
Ven Inamaluwe: I will continue that protest as long as I live. That is my position. I did not join that protest as a mere visitor. I joined the protest as the President of the Kandalama Left Canal farmers society though the media reported that I was acting as the Secretary General of the Sangha Society.
I knew the importance of the kandalama tank and the environs, being the leader of the farming community in addition to being a monk. It is prohibited by law  to erect any buildings near the banks of  tanks. This was so from the time of our ancient kings. The British when they were here followed that too. We thought that a democratic government elected after independence would also follow this.
We created public opinion against this wrongful erection. We wanted the hotel project stopped. What did the government do? They provided Police protection to them, down graded public opinion, denigrated us and allowed the project to go through.
What I started off in Kandalama reflects the real situation in this country in the name of democracy. It is a dictatorship. Democracy is only by name. I realised that there is no ruling party that will listen to the voice of the people as early as in 1991.

SL: Do you regret launching that protest?
Ven IS: It is like this. What is it that a government cannot do? President Premadasa could only not make a man, a woman. That was the power. So, to erect a hotel is no big deal. That took place under the approval of President Premadasa. Therefore, it showed that a government can do anything in this country. I have realised that.

SL: You are once more in focus for the second time when you opposed the existence of a building said to be a mosque within the confines of land belonging to the Dambulla temple. Will you have to backtrack on this protest too, in the future?
Ven IS: No. We learnt a lesson once. We learnt that there is no democracy in this land. Therefore, if anyone rules oppressively and against democracy, we will without fear of life, oppose such action.

SL: How do you think you should oppose a regime that is not democratic?
Ven IS: We showed that recently.

SL: By resorting to violence?
Ven IS: Yes. That is partially true. We started peacefully. But people’s feelings when aroused cannot be controlled. Look at it nationally and internationally. What did extremist persons like Bin Laden do? They have shed blood to propagate Islam. That is the truth.
Our people have built their hopes and dreams around Buddhist culture. They are patient. But here that patience was set aside a little. I do not see it as violence.

SL: Buddhist teachings promote patience. But you lent leadership to a section of Buddhists to practice the opposite. Why?
Ven IS:  No. I do not accept that. It is the government that did such a thing. There was a plan made 30 years ago to protect the temple and the land surrounding it. By not implementing that plan it was the government that pushed the people. If you say the people wanted me to do so, it is correct For that too the government must take responsibility.

SL: Most of the people who came for that protest were not people from Dambulla. Some charge that you brought people from other areas?
Ven IS: Who says so? Anyone can say anything. There is an ancient saying that when one is hungry even a monitor lizard becomes an iguana  (a kabaragoya becomes a thalagoya). Therefore whatever anyone says I will not accept such charge.

SL: When I met you on the 30th of last month at the Dambulla temple, you said the people of Dambulla though from different religious persuasions lived amicably. What happened to that? Why was this protest held in such haste?
Ven IS: Who says it was in haste? That is what the media has concocted. We have over a period of time informed the President and the Minister in charge. But they were silent.When the working class ask for higher wages by filling out a form for that purpose, does it happen? No. They have to strike.That is our country.The super democracy you talk of will not work in this country.If one were to win any rights in this country, it could be only through protests. That’s the truth. No one can say that it’s a lie. The people of this country have resorted to protests to win their rights. We live in a country where even a letter written to a department goes without acknowledgement.Therefore the people have to resort to these kind of things.

SL: You say that this protest was not done in haste and that it is justified. The Buddhists have a limit to their patience. The government made them impatient, and the government is responsible for it. Then you say how Bin Laden acted violently to spread Islam. Do you then believe that blood should be shed in the name of religion?
Ven IS: Yes, what you say is true and the government must take responsibility. But on the 20th there was no blood shed.

SL: Yes, but on the 20th you said publicly, ‘today we came with the Buddhist flag in hand. But the next time it would be different’. So, the next time if it progresses to religious disharmony and bloodshed, would you take responsibility?
Ven IS: The responsibility for that should be taken by the inactive ruling class of this country. The Muslim leaders of their government are spreading falsehoods about this mosque. They must know that the Prime Minister has made a decision on this. The Prime Minister is the second citizen in this country. He is also the Minister of Buddhist Affairs. Therefore, he has expressed the government’s view. So, can others who have now aligned with the government or even the cabinet minister who is representing Dambulla go against that?
The government minister Janaka Bandara Tennekoone says that the mosque will not be removed. The prime Minister says it will be removed. Minister Rauf Hakeem says it will remain. This shows that the government is divided. It also shows that there are people within this government who are bigger than the Prime Minister. How can that be? What has happened to collective responsibility within the cabinet and the government? Therefore we urge the President to take a decision against these in-disciplined political braggarts.

SL: When you speak of collective responsibility of the Cabinet, I would like to remind you that in Sri Lanka we have a multi religious, multi cultural and multi ethnic society.
Ven IS: What nonsense.You are speaking of a nonsensical theory. This country has fourteen million buddhists.How many muslims are there? For example in Thailand, the majority are Buddhists. In Myanmar too Buddhists are in the majority. Catholics are a majority at the Vatican. Therefore, we say that the Vatican is a Catholic State. Similarly in the middle east many countries have a Muslim majority. Therefore we call them Islamic States.

SL: That is not what I meant. When a society consists of multi religious people practicing different faiths, should they not have equal rights?
Ven IS: Are you trying to wrest away our Buddhist rights? We have respected all. What we have here is none of that. It is about protecting the Buddhist legacy against the wresting of it. There is no need for talking nonsense here. We are fighting to save the 2300 year old Buddhist heritage that is ours! They in turn are trying to wrest away our heritage. Therefore it would be good for all to understand that reality. I am vocal to protect that right and not to wrest away someone else’s right or property. It is the Islamists who are trying something else here. That cannot be allowed. We never went to Iraq or the middle east to wrest the rights of Islamists? This is robbery. You tell the whole country of this position clearly.

SL: So whilst fighting to protect one’s right you violate another’s right?
Ven IS: Are you trying to trample the rights of the Buddhists?

SL: No. They say that the Mosque was there from 1962.
Ven IS: I will speak to you as a person possessing a third eye. I speak of what is happening globally. I am comparing what happens globally. Globally, Islam is on the rise. Some so called Sinhalese lend a hand (gotta allanawa) to them. I ask you also not to do so.

SL: Would you say there is Muslim fundamentalism growing across the world? As against Buddhist fundamentalism growing here?
There is no such thing. Others may have such intentions. I cannot condone nor certify that. I am not like that.
The Rangiri Dambulla Viharaya has a history of 2300 years and is a highly venerated Viharaya. Even UNESCO has named it as a historical site in the world. That has been done because the Buddhists protected it. Now, Islamists (Thambis) are trying to creep into this. For those islamists (Thambis) and those who are propping them (Gotta Allana Aya) this may be good. But I say it is because of the Buddhists who protected this Dambulla Viharaya that the villages around this site came into being. Not bacause of a church or mosque. We have a history. What history does the muslims have with Dambulla? They can do anything in their regions. I will not speak of history here. But, I am a monk who has studied history and archaeology for my degree. I have studied the history of Sri Lanka well.
The Muslims came to Sri Lanka by sail boats to trade in groceries. Only males came. Some of them settled down permanently in countries like Sri Lanka, India and the Maldives.
During the reign of King Keerthi Sri Rajasinghe there was a saying ‘ let us just have a bit of land to look after,’ by them. Having come like visitors they robbed the Sinhala and Tamil women. They fooled our Sinhala and Tamil women and married them. Now this purdah that the Muslims wear to cover their faces? It’s a plan by those men who came to rob women. They used it in every country. It has now become a religious practice. It’s however not a real religious practice. It’s a caddish ploy to rob women. If I am to say in proper Sinhala (Sudda Sinhalenma Kiyanawa nam , oka thamai mata kiyanna thiyennay.) That is all what I have to say about it.

SL: As a person who believes in globalisation do you accept the theory of a purist race?
Ven IS: You are perfectly right. I do accept globalisation. Similarly I believe that there is a Sinhala race without mixed blood. I do believe that I am such a person myself. So, if anyone says that there is no pure race, like you, if one speaks of reason, I think they are of mixed blood. I mean there must be some kind of mix. They must have a name like Thambi Mudiyanselage in their birth certificate.

SL: Buddhist sermons are based on equality. But in Sri Lanka the clergy has split into different sects. Do you believe in the theory of sects?
Ven IS: I do not accept the need for sects. But even during the time of Buddha there were varying groups of monks. But Buddha did not prevent that. During Lord Buddhas first sermon monk Punna did not attend. Those monks who participated wanted monk Punna to accept that sermon. The monk answered,’ I have heard Buddha’s sermons before. I accept them. You accept it too’. Three months after Buddha achieved enlightenment, there were groups with varying views. These groups were there from that time and progressed thereon to date.

SL: The sects in Sri Lanka are based on caste. Is the caste system in line with Buddhas teachings?
Ven IS: I do not endorse that. I do not accept the sects based on a caste system at all.

SL: You belong to the Siyam Sect. You propagated another group called the Rangiri Dambullu Sect. What was the basis for that?
Ven IS: To tell the truth I followed the principal you spoke of. Buddha from birth did not accept a caste system. We based it on that presumption and rejected the caste system and opened the doors to anyone from any background  or any sect to be ordained.

SL: But on the 23rd when a discussion was held at the Rangiri Dambulla Viharaya the Asgiriya Chief Prelate who is from the Siyam Sect participated?
Ven IS: Yes. He is our Chief Priest. But other monks attended as well.

SL: What is the quarrel between you and Minister Janaka Bandara Tennekoon?
Ven IS: He first entered parliament as an MP in 1993 or 1994. Prior to that he was a policeman. His father was T. B. Tennekoon. A very humble, and  good Buddhist. Janaka Bandara got his votes because of his father. On an election platform  with tears in his eyes he said what his father had told him from his death bed, “My dear son, being a policeman wouldn’t do. Please go to Dambulla and start from where I stopped”. The people were fooled and voted for him.
The first thing he did after becoming an MP was to open a tavern in Dambulla town. The people protested by closing down shops, hoisting black flags and going in a procession. Janaka used his thugs and attacked the protesters. They pulled down buddhist flags and trampelled them.The police did nothing. Why? Because he was also in the police. I complained about this to the then President Chandrika. She closed the tavern immediately. We had problems with each other from then. As at now he is angry with me as a monk who went above him.

SL: Are you also angry with him?
Ven IS: Oh what anger do I have? I must have a preference vote to get angry. I was never a friend of his. Before I complained to President Chandrika I spoke to him on the phone and asked, “ you said that you would start your politics from where your father stopped. Is this where your father stopped?”. He replied, “I will act according to the wishes of the people”. I asked, ‘ now Dambulla is self sufficient, only a place to have a tot is needed. Is this what the people want?”. He got angry and slammed the phone down. From there we worked to preserve the buddhist legacy. He was angry at that and has tried to take revenge since then. It’s only a dream.

SL: The people in Dambulla accuse you of giving away land belonging to the temple over their heads to others by charging LKR 100,000 for it.
Ven IS: This is not something I take for myself. The lands belonging to the Dambulla Viharaya is governed by the Buddhist tempolarities Act. The Buddhist Commissioner has a system to grant land. According to that a charge is made to register. These lands cannot be sold to anyone. If the lessee does not need it then it must revert back to the temple. People do not follow that but sell it to others. For all of such acts we charge. They must pay 30% to the temple. It’s not to me. We issue a receipt. The government audits them. Whilst you charge the Dambulla temple could you as a media person check on the lands belonging to the Dalada Maligawa too and how much is charged?”

SL: The buddhist tempolarities Act is not divine? Why cannot it be amended to allow people to benefit?
Ven IS: It’s a law. Do you say that all laws should be amended to suit the people? That Act is there to preserve and safeguard temple lands.

SL: The populations grows day by day. But land does not. Shouldn’t those people have right to land?
Ven IS: You speak on the basis of human needs. I need to ask you a question. The government means, the people. Can the people enter any government land by force? Please answer me.

SL:  Since you ask me I will answer. I do not think that the government means the people. The government is separate and the people are separate. But the government has created a view that the government is the people. Unfortunately the people have accepted that.
Ven IS: Right. You are absolutely right. If that is so, can the people enter a land belonging to the government? They cannot.

SL: Cannot that be changed?
Ven IS: That is called a wanting of a super human rights and a super democracy. But the reality is not that.

SL: You said before that this protest was based on the needs of people. Do you think   you would be precipitating the buddhists to go beyond their tolerance levels and are you not provoking them?
Ven IS:  I reject that.

SL:  You are a dominating person?
Ven IS: Yes. I am a dominating person. I accept that with all humility. Without being so these temples cannot be improved.

SL: There is a big difference between the laity and clergy. There are differences of opinion between the laity which results in fights, quarrels etc. It’s the clergy that act as a buffer to settle these disputes. As a leading buddhist monk you say “ Yes, I am dominating”. How then can you bring the laity towards reconciliation?
Ven IS: I do not know how you describe a dominant person. I describe it as follows, i. e.: There can be only one officer in overall charge of an army. If  everyone gives orders can one fight a war? Similarly a country cannot be developed if one were to bow down to everyone.

SL: I described dominance as an attribute which brings others under a person’s total control.
Ven IS: That does not concern me. Remember one thing. I am also a media person. I also have a media organisation. I know a great deal about the media. When you question me as a media person I too answer as a media person. Please remember that you have boundaries as a media person.

SL: But I am speaking to Inamaluwe Sumangala Chief priest and the line of the interview was what I felt was necessary to ask after talking to you. I feel that there is not much difference between you and a lay person.
Ven IS: Make a decision based on your mental capacity. Do not try to teach me the difference between a lay person and clergy. What you said was the worst insult one could make to me. Do not try to be too smart lady. You (thamusay) can record if you want. Do not waste my time

தம்புள்ள மஸ்ஜித் விடயம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவுக்கும் ஜனதிபதிக்கும் இடையிலான எதிர்பார்க்கப்படும் சந்திப்பு இன்னும் இடம்பெறவில்லை. ஆனால் மஸ்ஜித் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்ஷ்சவை ஜம்இயத்துல்  உலமா சந்து பேசியுள்ளது.

அமைச்சர் பசில் ராஜபக்ஷ்சவை சந்தித்து தம்புள மஸ்ஜித்துக்கு நடந்த விடயங்களை தெளிவாக விளக்கியதுடன் அது தொடர்பான வீடியோ பதிவுகளையும் வழங்கியது என்று lankamuslim.org க்கு ஜம்இயத்துல் உலமாவின் செயலாளர் முபாரக் மௌலவி தெரிவித்தார் . அந்த சந்திப்பின்போது அமைச்சர் எந்த சமூகத்திற்கும் அநீதி இழைக்கப் படுவதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்ததாகவும் , குறித்த சந்திப்பு மஸ்ஜித் தொடர்பான வீடியோ பதிவுகளையும் சரியான விளக்கத்தையும் அவருக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டிருந்தாவும் சந்திப்பு திருப்தி கரமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தனர் .

மேலும் இது தொடர்பான தீர்வு முயற்சிகள் வெசக் திங்களின் பின்னர் தான் மேற்கொள்ளப்படும் என்பதை அமைச்சரின் பேச்சில் இருந்து விளங்கிக் கொள்ளமுடிந்ததாகவும் நிலைமை தற்போது இருக்கும் நிலையில் இருக்கட்டும் வெசக்கின் பின்னர் அந்த பிரச்சினையை நீதியான முறையில் தீர்ப்போம் என்று அமைச்சர் தெரிவித்ததாக தெரிவித்தார்.

அதேவேளை ஏற்கனவே அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா தலைவர் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தம்புள்ள மஸ்ஜித் தொடர்பாக விளக்கியுள்ளதுடன் ஜனாதிபதிடனான சந்திப்பு ஒன்றையும் விரைவில் எதிர்பார்த்துள்ளது. அதேவேளை முழு நாட்டு முஸ்லிம்களையும் அதிர்சியில் ஆழ்த்தியுள்ள தம்புள்ள மஸ்ஜித் மீதான முற்றுகை தாக்குதல் தொடர்பாக அரசாங்கம் இது வரை எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Posted: மே 2, 2012 by Journalist of AKP in இஸ்லாம்

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அறி

சிறுபான்மை மக்களின் உரிமைகளை வழங்கவில்லை என்ற சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தைக் கையாளும் விதம் மனித உரிமைக் குற்றச்சாட்டை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது.

முஸ்லிம்களும் இந்நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் தமது மத சுதந்திரத்தைப் பயன்படுத்தி மஸ்ஜிதுல் ஹைரிய்யா என்ற பெயரில் ஒரு பள்ளிவாசலை நிறுவி கடந்த 50 வருடங்களுக்கு மேலாகப் பரிபாலித்து வருகின்றனர்.

தம்புள்ளை வாழ் மக்களுக்கோ ஏனைய மத வழிபாட்டுத் தலங்களுக்கோ எவ்வித இடையூறும் இன்றி மிக அமைதியான முறையில் தமது மதக் கடமைகளை நிறைவேற்றி வந்துள்ளனர். தீவிரவாத சிந்தனை கொண்ட சிலரின் கோரிக்கையை ஏற்று தம்புள்ளைப் பள்ளிவாசலை அகற்றுவதற்கோ இடம் மாற்றுவதற்கோ முயற்சிப்பது இலங்கை வரலாற்றில் ஒரு பிழையான முன்னுதாரணத்துக்கு வழிவகுக்கும்.

இந்த நாட்டின் முன்னோர்கள் பல அர்ப்பணிப்புகள் செய்து கட்டிஎழுப்பிய ஆயிரம் வருட கால பௌத்த- முஸ்லிம் நல்லுறவைச் சீர்குலைக்கும் முயற்சியாகவே இது வரலாற்றில் பதியப்படும். முப்பது வருடங்களாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து மூன்றாண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் இன, மத பேதங்களால் ஏற்பட்ட விளைவுகளால் நாம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதாகவே அமையும்.

இந்த நிலைமைகளைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதி அவர்கள் மிகச் சரியான முடிவை எடுத்து நாட்டு மக்களுக்கு அறிவித்து தம்புள்ளை நிகழ்வினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை மாற்றி இயல்பு நிலைக்குக் கொண்டு வர ஆவன செய்ய வேண்டும். அவ்வாறு செய்வது எமது நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவை ஜனாதிபதிக்கு பெற்றுத் தருவதுடன் சிறந்த முன்மாதிரியாகவும் அமையும்.

உதவிப் பொதுச் செயலாளர்
எம்.எம்.எச். ஹஸன்

Posted: மே 2, 2012 by Journalist of AKP in இஸ்லாம்

நான் இன்னும் ஜனாதிபதியின் வாயை பார்த்தவாறுதான் இருக்கிறேன்

ஒரு முஸ்லிம் வாலிபனின் ஆதங்கம் :தம்புள்ளை ஹைரியா பள்ளிவாயல் எங்கள் நாட்டு ஜனாதிபதி கொரியா விஜயம் மேற்கொள்ள முன்பு நடைபெற்றதை எல்லோரும் அறிவார்கள். அந்த விடயத்தின் பின்பு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு கிடையில் ஒரு பதற்றம் என்ன செய்வது என்று ஒன்றும் புரியாத கலக்கம்.

தொலைகாட்சியில் செய்திகளும் , மக்கள் மத்தியில் தொலைபேசி அழைப்புக்களும், குறுஞ் செய்தி மூலமாக செய்திகளும், இணையத்தில் மக்கள் மனதை திடுக்கிட வைக்கும் வீடியோ காட்சிகளும் என ஒரு நாள் முழுதும் நம்மை நடுங்க வைத்து விட்டது. நமது அகில இலங்கை ஜம்இயதுல் உலமாஅனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளையும் ஒன்றாக அழைத்து ஒரு முடிவெடுத்து அறிக்கை விட்டு முஸ்லிம் மக்களை கொஞ்சம் அமைதி படுத்தியது.

ஆனாலும் சில பிரதேசங்களில் ஹர்த்தாளுடன் கூடிய ஆட்பாட்டங்களும் இடம் பெற்றன. மின்னல் நிகழ்சிகள் கூட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்றை பெற்றுக்கொண்டது இப்படி ஒரு முடிவில்லாமல் நகர்ந்து சென்றது அல்ஹம்துலில்லாஹ் என ஒரு முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை நமது மக்கள் மத்தில் அப்படியே ஒளிமயமானது அதாவது “நமது அதிமேதகு ஜனாதிபதி கொரியா பயணத்தை முடித்து இலங்கை திரும்பி வந்துள்ளார்” என்ற செய்தி. அனைத்து மக்களும் ஜனாதிபதியை நோக்கி அமைதியாக காத்திருந்தனர், ஆங்காகே ஜனாதிபதி கூறப்போகும் விடயம் இது தான் இது தான் என சில விடயங்களும் ஊகிக்கப்பட்டுகொண்டிருந்தன.

ஆனால் அவரோ காத்திருக்கும் மக்களை இன்னும் இன்னும் காக்க வைத்தார், இதற்கிடையில் முஸ்லிம் அமைச்சர்களை தனித்தனியாக அறிக்கை விடக்கூடாது என்று கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டிருந்த ஜம்இயதுல் உலமாவின் சத்தமும் மக்களுக்கு கேட்காமல் போய் விட்டது காரணம் சூடு பிடித்த இந்த ஹைரியா மஸ்ஜித் விடயம் மக்கள் மத்தியில் இருந்து மறைந்துவிட ஆரம்பித்தது. அது மனித இயற்கையின் நியதி அல்லவா, ஆனாலும் அமைதியாய் இருந்து சில முஸ்லிம் கட்சிகளும் , இயக்கங்களும் இதை மறக்காமல் மேலும் குரல் கொடுத்தவாறு உள்ளது. இப்படி எதிர்ப்பார்த்து இருந்து மக்களுக்கு மீண்டுமொரு சந்தோசமான செய்தி கிட்டியது அதாவது “நீதி அமைச்சருக்கும் நமது நாட்டு ஜனாதிபதிக்கும் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது” என்ற ஒரு செய்தி. ஆனால் அதிலே ஒரு விடயமும் ஜனாதிபதி கூறினார் என்று பெரிதாக தெரிவிக்கப்படவில்லை.

ஆனாலும் நான் இன்னும் ஜனாதிபதியின் வாயை பார்த்தவாறுதான் இருக்கிறேன். ஒரு நாளைக்கு எத்தனை முறைதான் போன பத்திரிக்கையை பார்ப்பது. ஒன்றும் கிடையாது , நமது முஸ்லிம் அமைச்சர்மார்களும், அரசியல்வாதிகளும் கருத்துக்களோடு வருகிறார்களே ஒழிய ஜனாதிபதியை சந்தித்தோம் -நீதியான தீர்வை பெற்றோம் – என்ற தகவலோடு வர மறுக்கிறார்கள் (அவங்க என்ன வச்சிகிட்ட வஞ்சகம் செய்றாங்க?), அவர்கள் சந்தித்தால் தானே தகவல் வரும்.

மக்கள் மத்தியில் நகரும் முற்றுபுள்ளியை இருந்த இந்த விடயம், தூங்கும் புள்ளியாய் மாறி மக்கள் மத்தில் இருந்து கனவு காணுகிறது என்று கூறலாம், ஆனாலும் இந்த விடயத்துக்கு நமது நாட்டு ஜனாதிபதி, “நாம் அனைவரும் இலங்கை என்ற தாயின் பிள்ளைகள்” என்று கூறிய நமது ஜனாதிபதியின் கருத்து வெளிவராமல் தூங்க மாட்டோம். இந்த ஹைரியா மஸ்ஜித் தகர்ப்பு விடயம் தூங்கிவிட்டால் அதுவே வருங்காலத்தில் நமது பலவீனம் ஆகிவிடும்.

முஸ்லிம் அரசியல்வாதிகளே மின்னலின் கதைத்தால் போதாது, பத்திரிகையில் அறிக்கை விட்டால் போதாது, “இது மார்க்க விடயம் ஒன்றாய் ஒற்றுமையாய் போராடி முடிவு எடுக்கப்பட வேண்டிய விடயம்” என பேசினால் போதாது, 100 சட்டத்தரணிகள் வரலாற்றில் முதன் முறையாக ஒன்றாக கூடி இந்த விடயம் சம்பந்தமாக பேச முடியுமானால். ஜமியதுல் உலமாவின் தலைமையில் பெரும்பான்மை முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றாய் நிற்க முடியுமானால். ஏன் நீங்கள் அனைவரும் ஒன்றாய் இணைந்து ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப்பிடித்து ஜனாதிபதியை சந்திக்க கூடாது. ஒருவர் ஒருவராக appoinment எடுக்க முயற்சிக்காமல் அனைவரும் ஒரே நேரம் ஒன்றாய் appoinment எடுத்து நமது நாட்டில் இருக்கும் முஸ்லிம்களுக்கான வளமான எதிர்காலத்தை “வளமான எதிர்காலம்” என்ற கொள்கையோடு பயணிக்கும் ஜனாதிபதியிடம் இருந்து பெற்று கொடுங்கள். அப்படியே அதி மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு சிங்கள அல் குர்ஆன் பிரதியையும் கொடுத்து வாருங்கள்.

முன்மொழிவதை விட்டு விட்டு , முயற்சி செய்யுங்கள் . இதிலே எந்த ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரையும் தள்ளிவைக்க வேண்டாம். மனிதர்கள் தப்பு செய்யக்கூடியவர்கள், குத்திக்காட்டுவதை கைவிட்டு கட்டிப்பிடித்து முஸாபஹா செய்து ஒன்றாய் செல்லுங்கள்.

வாய்பார்த்து நிற்கும் என்னைப்போன்ற பலருக்கு உங்கள் வாக்கு கிடைக்காமல் போனாலும் அல்லாஹ்வின் வாக்கு நிச்சயம் கிடைக்கும், இந்த பிரச்சினை மக்களால் தீர்க்கப்பட்டால் ஒரு கலவரமாகத்தான் மாறிச்செல்லும். அதுவே நீங்களாகிய அரசியல்வாதிகளால் தீர்க்கப்பட்டால் அமைதியாக இருந்து கொள்ளும். எல்லாப்புகழும் அல்லாஹுக்கே – பெரும் பான்மை சகோதரகளுக்கு தவ்வா செய்யும் சரியான நேரமும் இதுவே என்பதையும் மறக்க வேண்டாம்

Posted: மே 2, 2012 by Journalist of AKP in இஸ்லாம்

புனித பூமி அதன் வரைவிலக்கணம் என்ன ? அதை யார் பிரகடனப் படுத்துவது ?

 : உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் : புனித பூமி என்பது அனைத்து மதத்தவர்களுக்கும் உண்டு ஆனால் இங்கு தம்புள்ள ஹைரியா ஜும்ஆ மஸ்ஜித் பெளத்த புனித பூமியில் அமைத்துள்ளது என்று கூறி அதை அகற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளபடுகிறது. இந்த விடயத்தில் ஒரு பிரதான கேள்வி இருக்கிறது. புனித பூமி என்றால் என்ன ? அதன் வரைவிலக்கணம் என்ன ? ஒரு மதத்தின் புனித பூமி என்பது அந்த மதத்தின் ஸ்தாபகரால் பிரகடனப் படுத்தப் பட்டிருக்கவேண்டும் .

இஸ்லாத்தில் அல்லாஹ்வின் இறுதித் தூதர் பிரகடனப் படுத்திய மூன்று இடங்கள் இருக்கிறது. அந்த மூன்றும்தான் உலகில் முஸ்லிம்களின் புனித இடங்கள் அதன் புனிதத் தன்மையை முஸ்லிம்கள் பாதுகாப்பார்கள் அது முஸ்லிம்களுக்கு என்று தனியாக இருக்கும் அதேபோன்று மற்ற சமூகங்களுக்கும் புனித பிரதேசங்கள் இருப்பதும் அது அவர்களுக்கு என்று தனியாக இருப்பதும் ஆச்சேபனைக்குரிய விடையமல்ல.

ஆனால் இங்கு உள்ள பிரச்சினை புனித பூமி என்பதற்கு என்ற வரைவிலக்கணம் என்பதுதான். முஸ்லிம் சமூகத்திடம் புனித பூமி என்பதற்கு வரைவிலக்கணம் உண்டு மக்கா , மதீனா , பைத்துல் முகத்திஸ் ஆகியன அல்லாஹ்வின் இறுதித் தூதரினால் பிரகடனப் படுத்தப்பட்டவை உலகில் நான்காவது ஒரு இடத்தை முஸ்லிம் சாம்ராஜித்யத்தின் கலீபா கூட புனித பூமியாக , பிரதேசமாக பிரகடனப் படுத்த முடியாது . இஸ்லாத்தில் மூன்று இடங்களும் அல்லாஹ்வின் இறுதித் தூதரினால் பிரகடனப்படுத்தப் பட்டதால் அதன் புனித தன்மை உலக அழிவு வரை இருக்கும் . ஒரு மதத்தின் புனித பூமி என்பது அதன் ஸ்தாபகரினால் அறிவிக்கப்பட்டிருக்கவேண்டும்.

ஆனால் காலத்துக்கு காலம் ஒவ்வொருவரும் புனித பூமி என்று பிரகடனம் செய்யப்போனால் ? இன்று இலங்கை புத்தரின் தேசம் என்று சுவரொட்டி ,விளம்பரங்கள் செய்யப் படுகிறது , நாளை முழு இலங்கையும் புனித பூமி என்று பிரகடனம் செய்தால் இங்கு இருக்கும் மற்றவர்கள் என்ன செய்வது ? ஆகவே புனித பெளத்த பூமி என்பதை யார் பிரகடனப் படுத்துவது ? அதன் வரைவிலக்கணம் என்ன ? என்பது தெளிவாக இருக்கவேண்டும் .

புத்தர் உலகில் இந்தெந்த இடங்கள் புனிதமானவை என்று கூறி இருந்தால் அங்கிருந்து நாங்கள் வெளியேறுவது சரி அங்கு எமக்கு உரிமை கோரமுடியாது ஆனால் காலத்துக்கு காலம் நினைத்தவர்கள் எல்லாம் இது புனித பூமி என்று பிரகடனப் படுத்தப் போனால் அது எந்த வரையறைகளையும் கொண்டிருக்காது அப்படி செய்வது மதத்தை கௌரவப் படுத்தாது.

தம்புள்ள பிரதேசத்தின் குறித்த பகுதி 1982 ஆம் ஆண்டு புனித பிரதேசமாக பிரகடனப் படுத்தப்பட்டது என்றால் அங்கு அதற்கு முன்பிருந்தவர்கள் எல்லாம் வெளியேறிப் போவதா ? -( தம்புள்ள புனித பூமி என்பது பின்னர் ரத்து செய்யப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது )- அதேபோன்ற சட்டம் 2013 ஆம் ஆண்டிலும் 2020ஆம்  ஆண்டிலும் வெவ்வேறு  இடங்களில் கொண்டுவந்து புனித பூமி என்று பிரகடனப் படுத்தினால் இது எங்கு போய் முடியும் ? இதன் நடைமுறை என்ன என்பதுதான் பிரச்சினை .

ஆகவே இந்த பிரச்சினையின் ஆணிவேர் தொடர்பாக எல்லா மத தலைமை பீடங்களும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் புனித பூமி என்பதற்கு தெளிவான வரைவிலக்கணம் வேண்டும் அல்லது இந்த நாட்டில் எங்குவேண்டுமானாலும் இடங்களை நாளை புனித பூமி என்று பிரகடனப் படுத்துவார்கள் அங்கிருப்பவர்கள் எல்லாம் வெளியேறவேண்டும் , நாளை முழு நாடும் புத்தரின் தேசம், புனித பூமி என்று பிரகடனப் படுத்தினால் நாட்டில் இருக்கும் மஸ்ஜித்துக்கள் , கோவில்கள் , தேவாலையங்கள் எல்லாம் உடைக்க வேண்டிவரும் அப்படியா ?!!

இஸ்லாம் இந்த விடயத்தில் உறுதியானதும் தெளிவானதுமான தன்மையை கொண்டுள்ளது, முழு உலகமும் இஸ்லாத்தின் கீழ் வந்தாலும் எவரும் நான்காவது புனித பூமி என்று ஒன்றை பிரகடனப் படுத்த முடியாது. புனித பூமி என்பது வணக்கத்துடன் தொடர்பானது அதை நோக்கி பயணிப்பது கூட ஒரு வண்ணக்கம் ஆகவே  அந்த பிரகடன அதிகாரம் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மட்டும் உரியது என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு .அதேபோன்று புனித பூமி விடயத்தில் பெளத்த மதத்தில் ஒரு தெளிவான நிலைப்பாடு இருக்கிறதா ?

புனித பூமி என்றால் மற்ற சமூகத்தின் வணக்கஸ்தலங்கள் அங்கு இருக்க முடியாது என்பதல்ல பிரச்சினை. எது புனித பூமி என்பதும் அதன் வரைவிலக்கணம் அதை பிரகடனப் படுத்துவதற்கான வழிமுறை என்ன ? என்பதும்தான் பிரச்சினை. புனித பூமி என்று அரசாங்கம் சட்டம் இயற்றுவது மாத்திரம் போதுமா ? அப்படியானால் புனித பூமி பிரகடனத்தின் ஊடாக மற்றவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. மற்றவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஒரு சமூகத்திற்கு அநியாயம் செய்ய நினைத்தால் அந்த சட்டத்தை பயன்படுத்த முடியும். இது மதத்தை இழிவு படுத்தும் வேலையாகத்தான் அமையும் இது மதத்தை கௌரவ படுத்தும் வேலையல்ல.

எங்கள் சமூகத்தில் சிலரிடம் ஒரு பயம் இருக்கிறது. நாம் அனுசரித்து போகவேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள் . காரணம் எங்களிடமும் புனித பிரதேசங்கள் இருக்கிறது வெளியார்கள் வந்தால் அங்கு அவர்களுக்கு அனுமதிப் வழங்குவீர்களா ? என்று மற்றவர்கள் கேட்கிறார்கள் ? என்று கூறுகிறார்கள். அதற்கு ஒரு விளக்கத்தை தாங்களே விளங்கிக்கொண்டு பயம் கொண்டுள்ளார்கள் . இது பயப்பட வேண்டிய விடையமல்ல புனித பூமி, புனிதப்படுதல் என்று ஒரு விடயம் உண்டு. அதை நாங்கள் மதிக்கிறோம்  ஆனால்  அதன் முறை என்ன என்பதுபற்றி விளக்கம் வேண்டும்   இஸ்லாத்தின் அது தெளிவாக உள்ளது அந்த முறை பௌத்தர்களிடம் இருந்தால் அவர்கள் கூறும் புனித பிரதேசத்தை நாங்கள் கௌரவிக்க தயார். இந்த விடயத்தில் பயம்படவேண்டிய அவசியம் இல்லை .

அல்லாஹ்வின் இறுதித் தூதர் மூன்று இடங்களை உலகில் பிரகடனப் படுத்தியுள்ளது போன்று புத்தரும் பிரகடனப் படுத்தி இருந்தால் அதை நாங்கள் கௌரவிக்க தயார். அங்கிருந்து  வெளியேற தயார் சரியான வரைவிலக்கணங்கள் வரையறைகள் வேண்டும். இந்த விடயத்தில் இஸ்லாம் தெளிவாக உள்ளது. என்று தெரிவித்தார்

நாடு நகர திட்டமிடல் சட்ட மூலத்திற்கு அன்று அங்கீகாரம் வழங்கியிருந்தால் இன்று முழு நாட்டிலும் இந்த புனித பூமி…

 மாகாண சபைகளின் அங்கீகாரத்தை பெரும் நோக்கில் கிழக்கு மாகாணசபையில் நாடு நகர திட்டமிடல் சட்ட மூலத்தை அன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாக்களித்து அனுமதி வழங்கயிருந்தால் இன்று முழு நாட்டிலும் இந்த புனித பூமி என்கின்ற சட்டம் அமுலாகியிருக்கும். மேற்கண்டவாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஏ. அஸீஸ்  ஞாபகார்த தின நிகழ்வின் போது தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் : அரசு இச் சட்டத்தினை அவசரமாக அமுல்படுத்துவதற்கு மிக அங்கலாய்ப்புடன் இருந்தது. இச் சட்டத்தில் ஓர் அங்கமாகவே இந்த புனித பூமி என்கின்ற வரைபுச் சட்டம் உள்ளது. இச் சட்டத்தினை எதிர்த்து முதலில் உயா நீதிமன்ற சென்ற தமிழ் தேசிய கட்சிக்கு நாம் நன்றிசெலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

அவர்களே இச் சட்டத்திற்கு எதிராக உயர் நீதி மன்றம் சென்றனர் .அத் தீர்ப்பில் தான் சகல மாகாணசபைகளிலும் இச் சட்டம் பாஸ்பண்ணினால் அமுல்படுத்தலாம் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் கிழக்கு மாகாணத்தில் அச் சட்டத்தினை எதிர்ப்பது என்று முஸ்லிம் காங்கிரஸ் அன்றே தெரிவித்திருந்தது.

ஆனால் கிழக்கு தவிர ஏனைய மாகாண சபைகள் இச் சட்த்தினை அங்கிகரித்தன. கிழக்கில் மட்டும் இச்சட்டதினை நிறைவேற்ற முடியாமல் அரசு திண்டாடியது. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மாகாணசபை உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய கட்சிகளின் உறுப்பினகளையெல்லாம் அழைத்து அமைச்சர் பசில் ராஜபக்ச பேசினார். ஆனால் அவர்கள் இதற்கான கிரடிட் முஸ்லீம் காங்கிரஸூக்கு போய் சேர்ந்து விடும் என்பதனை அமைச்சரிடம் சொல்லியிருந்தார்கள். ஆனால் இது சம்பந்தமாக அரசு எங்களிடம் பேசவில்லை .அவர்களுக்கு தெரியும் இச்சட்டத்தினை முஸ்லீம் காங்கிரஸ் ஒருபோதும் ஆதரிக்காது என்று .

மலையக ஐனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஏ. அஸீஸ் அவர்களின் ஞாபகார்த நிகழ்வு நாரேயன்பிட்டியவில் உள்ள முஸ்லிம் லீக் வாலிப முன்னணி தலைமையகத்தில் நேற்று பி.பகல் என். எம் அமீன் தலைமையில் நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரனும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

இந் நிகழ்வின் போது தினகரன் பிரதம ஆசிரியர் எஸ். தில்லை நாதன், தினக்குரல் ஆசிரியர் தனபால சிங்கம், வீரகேசரி வாரவெளீயீடு ஆசிரியர் பி. தேவராஜ் மற்றும் தினக்குரல் சிரேஸ்ட பத்திரிகையாளர் எம்.ஏ. நிலாம் ஆகியோஆசிரியர்கள் பிரதம அதிதியால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

படங்கள்: அஸ்ரப் ஏ ஸமத், அஸ்லம்  அலி ,F.M.பர்ஹான்


Posted: ஏப்ரல் 30, 2012 by Journalist of AKP in அரசியல், இஸ்லாம்

ஜமிய்யத்துல் உலமாவின் தீர்மானத்தை அமுல்படுத்த முழு அரசியல் பலத்தையும் பிரயோகிப்போம் ..

இர்ஷாத் றஹ்மத்துல்லா, F.M.பர்ஹான்:  தம்புள்ள ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாசல் சர்ச்சை தொடர்பாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீடம் கடந்த ஞாயிற்றுக் கிழமை கட்சியின் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் கூடி விரிவாக ஆராய்ந்ததுடன்,தீர்மானங்கள் சிலவற்றையும் எடுத்துள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்துள்ளர்.

அன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை செயலாளர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.அவை பின்வருமாறு –

தம்புள்ள பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை அகில .இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வண்மையாக கண்டிப்பதென்றும்,தொடுக்கப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படல் வேண்டும்.

தம்புள்ள ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக இஸ்லாமிய மார்க்க அதி உயர் பீடமான அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபை எடுக்கின்ற தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு தமது முழு அரசியல் பலத்தையும் பிரயோகிப்பது என்றும்,அதனை முன்னெடுப்பதற்கு வகிக்கும் பதவிகள் தடையாக இருக்குமெனில்,அப்பதவிகளை துரப்பது, என்றும்.

அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சரியாக முஸ்லிம் சமூகத்தை வலி நடத்தியதுடன், முஸ்லிம்களின் எதிர்ப்பை இலங்கையிலும், சர்வதேசத்திலும் வெளிப்படுத்தியமைக்கு கட்சியின் நன்றிகளை தெரிவிப்பதுடன், அரசியல் உள்நோக்கம் கொண்ட சில சக்திகள் ஜமிய்யத்துல் உலமாவை பிளவுபடுத்தி தங்களது அரசியல் இலக்குகளை அடைய எடுக்கும் முயற்சிகளை வண்மையாக கண்டிப்பது,

இலங்கையில் வாழும் இஸ்லாமியர்களது மத வழிபாடுகளை உரிய முறையில் முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்தை அழுத்தி கூறி,முஸ்லிம்களது தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில் நியாயமான முறையில் செயற்பட்ட காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அவர்களுக்கும்,ஏனைய அரசியல் தலைவர்களுக்கும்,மதப் பெரியார்களுக்கும்,  எமது நியாயத்தை ஏற்றுக் கொண்டுள்ள சிங்கள மற்றும் தமிழ் சகோதரர்களுக்கும் தமது நன்றிகளை தெரிவிப்பது என்ற தீர்மானமும் இந்த கூட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் மேலும் கூறினார்