Archive for the ‘உலக‌ச் செய்திகள்’ Category

 இலங்கையில் நடந்த கடைசி கட்ட போரின் போது நடந்த மனித உரிமை மீறல் குறித்த விவாதம் ஐ.நா, மனித உரிமைகள் ஆணையத்தில் துவங்கியது. இதில் சர்வதேச தலையீட்டை முந்தைய அரசு நிராகரித்தது எனவும், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் மீதான தாக்குதல் குறித்து ராஜபக்சே அரசு விசாரணை நடத்தவில்லை என ஐ.நா., மனித உரிமை ஆணையர் கூறினார்.
இலங்கை மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா., மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில், அந்த அமைப்பின் ஆணையர் ஜைத் ராத் அல் ஹூசைன் பேசுகையில், 
 பயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் கைதானவர்கள் குறித்த விபரத்தை இலங்கை அரசு இன்னும் தரவில்லை . கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் மீதான தாக்குதல் குறித்து ராஜபக்சே அரசு விசாரணை நடத்தவில்லை. இலங்கை போர் முடிந்து 6 ஆண்டுகள் ஆகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதிகிடைக்கவில்லை. தனியார் நிலத்தை ஆக்கிரமித்துள்ள ராணுவத்தினரை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சர்வதேச தலையீட்டை இலங்கையில் முந்தைய அரசு நிராகரித்தது என கூறினார். மேலும் அவர் , பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை விலக்கிக்கொள்ள அரசு அளித்த உறுதிமொழி வரவேற்கத்தக்கது. இலங்கையில் புதிய ஆட்சியில் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்படு
கிறது. புதிய அரசு அமைந்த பிறகு தாக்குதல் குறித்த விசாரணையில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என கூறினார்.
இலங்கை உறுதி: 
 இலங்கை தூதர் ரவிநாதா ஆர்யசின்ஹா பேசுகையில், அனைத்து மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஐநாவுடன் இணைந்து செயல்படுவோம். சர்வதேச சமூகத்தின் ஆலோசனைகளும் உதவிகளும் ஏற்றுக்கொள்ளப்படும் என கூறினார்.
ரஷ்யா கருத்து:
 ரஷ்ய பிரதிநிதி பேசுகையில், சர்வதேச தலையீடு இன்றி இலங்கையே விசாரணை முறையை தீர்மானிக்க வேண்டும் என கூறினார்.
கொரியா ஆதரவு:
கொரிய பிரதிநிதி பேசுகையில், மீள் குடியேற்ற பணிகள் தொடர்பாக இலங்கை அரசு அளித்த உறுதிமொழி வரவேற்கத்தக்கது இலங்கை அரசு எடுக்கும் முயற்சிக்கு கொரியா ஆதரவு அளிக்கப்படும் என கூறினார்.
இங்கிலாந்து கருத்து:
இங்கிலாந்து பிரதிநிதி பேசுகையில், ஐ.நா., விசாரணை அறிக்கை மட்டும் தீர்வாக அமையாது. இலங்கையில் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த துணை நிற்போம் என கூறினார்.
இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு ஜப்பான் எப்போதுமே துணை நிற்கும் என ஜப்பான் பிரதிநிதி கூறினார்.
பிரான்ஸ் கண்காணிப்பு:
  கூட்டத்தில் பேசிய பிரான்ஸ் பிரதிநிதி, மனித உரிமைகளை காக்க ஐநா பரிந்துரைகள் அமல்படுத்துவதை தொடர்ந்து கண்காணிக்கப்படும். இலங்கை போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். போர்க்குற்றம், மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என கூறினார்.
பாகிஸ்தான் கருத்து:
பாகிஸ்தான் பிரதிநிதி பேசுகையில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சர்வதேச ஒத்துழைப்பு உதவி வேண்டும். இலங்கை நடவடிக்கையை விமர்சிக்கும் நாடுகள் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள். எந்த மாதிரியான விசாரணை தேவை என்பதை முடிவு செய்ய இலங்கைக்கு உரிமை உண்டு என கூறினார்.
ஆஸ்திரேலியா கருத்து:
ஆஸ்திரேலிய பிரதிநிதி பேசுகையில், போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா., அறிக்கையை தீவிரமாக எடுத்துள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கை தேவை என கூறினார்.
கனடா கருத்து:
 கனடா நாட்டு பிரதிநிதி பேசுகையில், மனித உரிமைகள், ஜனநாயகம், சட்டம் ஒழுங்கை காக்க இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்லிணக்க குழுவின் பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும். மனித உரிமை மீறலில் ஈடுபட்போரை தண்டிக்க நம்பத்தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
சுவிஸ்கவலை: 
  சுவிட்சர்லாந்து பிரதிநிதி பேசுகையில். இலங்கை போரில் ராணுவம் மற்றும் புலிகள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது கவலையளிக்கிறது. சர்வதேசத்தின் ஒத்துழைப்போடு போர்க்குற்ற விசாரணையை நடத்த வேண்டும் என கூறினார்.
யுனிசெப் வலியுறுத்தல்:
போர் காணாமல் போ கொல்லப்பட்ட குழந்தைகளின் உறவினர்களுக்கு உதவி தேவை. குழந்தைகளின் நிலை குறித்து இன்னும் பல குடும்பங்கள் தேடிக்கொண்டிருக்கின்றன. குழந்தைகள் உரிமைகள் விஷயத்தில் இலங்கை ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என யுனிசெப் அமைப்பு வலியுறுத்தியுள்ளது

இனி செவ்வாயில் வாழலாம்.

Posted: செப்ரெம்பர் 30, 2015 by Journalist of AKP in உலக‌ச் செய்திகள்

பூமியை விட்டால் வேறு இடம் இல்லாமல் தவித்த மனிதர்களை வரவேற்க, இப்போது செவ்வாய் கிரகம் தயாராக இருக்கிறது. இங்கு தண்ணீர் இருப்பதை ‘நாசா’ உறுதி செய்துள்ள நிலையில், நாம் செவ்வாயில் குடியேறும் நாள் வெகுதுாரத்தில் இல்லை.

சூரிய குடும்பத்தில் உள்ள சிவப்பு கோளான செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சியில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. சில நாடுகள் செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பி உள்ளன. இந்தியா சார்பில் ‘மங்கள்யான்’ அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி அமைப்பான ‘நாசா’, செவ்வாய் கிரகம் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த 2006ல் ‘மார்ஸ் ரெகோனாய்சன்ஸ் ஆர்பிட்டர்’ (எம்.ஆர்.ஓ.,) என்ற விண்கலம் ஏவப்பட்டது. இதில் பொருத்தப்பட்ட ‘இமேஜிங் ஸ்பெக்டோ மீட்டர்’ எடுத்த புகைப்படத்தில் நீர் ஓடுவதற்கான ஆதாரம் கிடைத்து உள்ளது. ‘செவ்வாயில் நீர் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது’ என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

 பள்ளத்தாக்குகளில் நீர் ஓடுவது போன்ற புகைப்படங்கள் கிடைத்துள்ளன. படத்தில் காணப்படும் விரல் தடம் போன்ற அமைப்பு தான் தண்ணீர் ஓடியதற்கான ஆதாரம் என ஆய்வில் கண்டறிந்துள்ளனர். நீர் எங்கிருந்து வருகிறது என்பதை விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கமுடியவில்லை. ‘நிலத்தடி நீர் அல்லது பனிக்கட்டிகள் உருகுவதால் நீர் ஓடலாம்’ என்கின்றனர். அதாவது செவ்வாய் கிரகத்தில் கோடை காலம் நிலவும் போது அந்த இடத்தில் தண்ணீர் ஓடியதும், குளிர் காலத்தில் அந்த தண்ணீர் உறைந்து காணப்படுகிறது என்றும் உறைந்த தண்ணீரின் அடியில் உப்புப்படிவங்கள் காணப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.

யார் இந்த லுஜேந்திர ஓஜா:

 செவ்வாயில் தண்ணீர் இருப்பதற்கான ஆய்வில் ஈடுபட்ட ‘நாசா’ விஞ்ஞானிகளின் வழி காட்டியவர் லுஜேந்திர ஓஜா. இவர் தற்போது அமெரிக்காவின் ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் ‘கோள் அறிவியல்’ துறையில் பி.எச்டி., படிக்கிறார். இவர் முதலில் நிலநடுக்கம் தொடர்பான துறையில் கவனம் செலுத்தி வந்தார். பின் பூமி, செவ்வாய், நிலவு தொடர்பான ஆய்வில் ஈர்க்கப்பட்டு 2012ல் பி.எஸ்சி., (ஜியோ இயற்பியல் வித் கோள் அறிவியல்) படிப்பை அரிஜோனா பல்லைக்கழகத்தில் முடித்தார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் ஒரு நேபாளி. குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். செவ்வாயில் தண்ணீர் இருப்பதற்கான ஆய்வில் ஈடுபட்ட நாசா விஞ்ஞானிகளில் ஒருவரான ஆல்பிரட் மெக்வென் என்பவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். அப்போது எம்.ஆர்.ஓ., எனப்படும் ‘மார்ஸ் ரெகனைஸ்சன்ஸ் ஆர்பிட்டர்’ என்பதை ஆராய்ச்சி செய்த போது, தற்செயலாக செவ்வாய் கிரகத்தின் பரப்பளவில் தண்ணீர் உறை நிலையில் இருக்கலாம் என்பதைக் கண்டறிந்தார்.

புதிய முறையில் ஆய்வு செய்தால் இதை உறுதிப்படுத்தாலம் என நாசா விஞ்ஞானிகளிடமும் கூறினார். மேலும் செவ்வாயில் ஆர்.எஸ்.எல்., (ரெகரிங் ஸ்லாப் லீனேஜ்) எனும் செவ்வாயில் நீர் வழிந்தோடியதற்கான தடத்தை கண்டுபிடித்தார். அது நிச்சயம் தண்ணீராகத்தான் இருக்கும். உப்புப் படிவும் போல இது தென்படுகிறது என்று தெரிவித்தார். 2011ம் ஆண்டு ஆல்பரட் மெக்வெனும், இவரும் சேர்ந்து இதனை அறிவித்தனர். இதையடுத்தே அதுகுறித்த ஆய்வுகளை நாசா தீவிரப்படுத்தியது. அறிவியல் ஆய்வுகளில் அசாத்திய திறனுடன் ஈடுபடும் இவர், இதற்கு முன் கிடார் வாசிப்பில் கைதேர்ந்தவராக இருந்தார்.

ஆய்வு பணிகள்:

* 2008: அரிஜோனா பல்கலையின் இயற்பியல் மற்றும் வளிமண்டல் அறிவியல் துறை, உயிர் அறிவியல் துறை
* 2009 : தெற்கு கலிபோர்னியா நிலநடுக்க மையம்
* 2010 -11 : லூனார் மற்றும் கோள் ஆய்வகம், அரிஜோனா பல்கலை
* 2010 – 12 : லூனார் ரெகனைஸ்சன்ஸ் ஆர்பிட்டர் மற்றும் லூனார் மேப்பிங் மற்றும் மாடலிங் புராஜக்ட்
* 2011 – 12 : கோள் அறிவியல் இன்ஸ்டிடியூட் (பி.எஸ்.ஐ.,)
* 2013 ஜூன் – ஆக., : ஜெட் புரோபல்சன் லெபாரட்டரி

‘கூகுள்’ பாராட்டு:

செவ்வாயில் தண்ணீர் இருப்பதை நாசா உறுதி செய்தது. இதையடுத்து கூகுள் தனது தேடல் பக்கத்தில் சிறப்பு “டூடுள்’ போட்டு கொண்டாடியது. கூகுள் முகப்பு பக்கத்தின் நடுவில் உள்ள “ஓ’ என்ற எழுத்தை செவ்வாய் போன்று வடிவமைத்தது. அது சுற்றி வரும் போது ஒரு கார்ட்டூன் உருவம் டம்ளரில் தண்ணீரை வைத்து “ஸ்ட்ரா’ போட்டு உறிஞ்சுவது போன்று காட்டப்பட்டது. அந்த படத்தின் மீது “மவுஸை’ வைத்தால் “செவ்வாயில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்ற வாசகம் வரும். அதை “கிளிக்’ செய்தால் “மார்ஸ்’ என்ற சொல்லின் தேடல் பக்கத்துக்கு செல்கிறது.
“நெட்டிசன்’கள் கிண்டல்:
 எந்தவொரு விஷயத்தையும் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்வதை “நெட்டிசன்’கள் வழக்கமாக கொண்டுள்ளனர். செவ்வாயில் நீர் இருப்பதை உறுதி செய்துள்ளதையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவற்றில் கிண்டல் செய்து பதிவுகள் போட்டு வருகின்றனர்.காவேரி டெல்டா பாசனத்துக்கு செவ்வாயிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என்றும், பூமியில் உள்ள நீரை முதலில் கண்டுபிடியுங்கள் பின் செவ்வாய்க்கு செல்லலாம் என்றும் பலவிதங்களில் கலாய்த்து வருகின்றனர்.

இலங்கைகடந்த நவம்பர் மாதம் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை மஹிந்த ராஜபக்ச அர­சாங்­கத்தில் இருந்து, பிரித்­தெ­டுத்துக் கொண்டு வந்து, எதி­ர­ணியின் பொது­வேட்­பா­ள­ராக நிறுத்தப் போவ­தாக அறி­வித்த கொழும்பு நகர மண்­டப செய்­தி­யாளர் சந்­திப்பில், முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஒரு விட­யத்தைக் கூறி­யி­ருந்தார்.

மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவர் பத­வியில் அமர்த்தும் வரை தான் ஓய­மாட்டேன் என்று அவர் அப்­போது அறி­வித்­தி­ருந்தார். இப்­போது அவர், மைத்­தி­ரி­பா­லவை ஜனா­தி­ப­தி­யாக்­கு­வது, சுதந்­திரக் கட்­சியின் தலை­மையைக் கைப்­பற்­று­வது ஆகிய இரண்டு சப­தங்­க­ளி­லுமே வெற்றி பெற்று விட்டார் என்று தான் கூற வேண்டும்.
மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பொது­வேட்­பா­ள­ராக சந்­தி­ரிகா கொண்டு வரு­வதில் முன்­னின்­ற­தற்கு, எதி­ர­ணியில் உள்ள கட்­சி­களை அதி­கா­ரத்­துக்கு கொண்டு வரு­வதே காரணம் என்று கரு­தினால் அது தவ­றான கருத்து. ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியை மஹிந்த ராஜபக்சவின் கையிலிருந்து மீட்­பதே அவ­ரது முக்­கிய இலக்கு.
அதற்­காக, அவர் பொது­ந­ல­னுடன், செயற்­ப­ட­வில்லை என்று மறுத்­து­ரைக்க முடி­யாது. அவ­ரது முன்­னு­ரி­மைக்­கு­ரிய விடயம், சுதந்­திரக் கட்­சியின் அதி­கா­ரத்தை ராஜபக்ச குடும்­பத்தின் கையில் இருந்து கைப்­பற்­று­வது தான். அதை இப்­போது கிட்­டத்­தட்ட அவர் செய்து விட்டார் என்றே கூறலாம்.
மஹிந்த ராஜபக்ச தேர்­தலில் தோல்வி கண்ட பின்­னரும், சுதந்­திரக் கட்­சியில் அவ­ருக்கு கணி­ச­மான செல்­வாக்கு இருக்­கவே செய்­தது. ஜனா­தி­பதித் தேர்­தலில், சந்­தி­ரி­காவின் சொந்த தொகு­தி­யான அத்­த­ன­க­லவில் கூட, மஹிந்த ராஜபக்ச தான் வெற்றி பெற்­றி­ருந்தார்.
பண்­டா­ர­நா­யக்க குடும்­பத்தின் மூன்று பிர­த­மர்கள், ஒரு ஜனா­தி­ப­தியை பிர­தி­நி­தித்­துவம் செய்த அத்­த­ன­கல தொகு­தியில் கூட மஹிந்த ராஜபக்சவே செல்­வாக்குச் செலுத்­தினார். அதை­விட, மைத்­தி­ரி­பால சிறி­சேன நடத்­திய கட்­சியின் செயற்­குழுக் கூட்­டத்தில், கலந்து கொண்­ட­வர்­களை விடவும் அதி­க­மானோர் மஹிந்த ராஜபக்ச நடத்­திய கூட்­டத்தில் தான் பங்­கேற்­றி­ருந்­தனர்.
எனவே, மஹிந்த ராஜபக்சவின் செல்­வாக்கு சுதந்­திரக் கட்­சிக்குள் முற்­றா­கவே ஒழிந்து போயி­ருக்­க­வில்லை. மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிக்க விரும்­பி­ய­வர்கள் கூட, எப்­ப­டியும் இன்னும் மூன்று மாதங்­க­ளுக்குப் பின்னர் நாடா­ளு­மன்றத் தேர்தல் நடக்கப் போகி­றது என்­பதால் சற்று யோசிக்­கவே செய்­தனர்.
ஐ.தே.க. தலை­மை­யி­லான கூட்­டணி தமக்கு நாடா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிட இடம்கொடுக்க மறுத்தால் என்ன செய்­வது என்ற குழப்பம் அவர்­க­ளுக்கு இருந்­தது. எனவே மதில் மேல் பூனை­யாக இருக்க முடிவு செய்­தனர். இருந்தும் பலர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ர­வாகத் திரும்பி விட்­டனர் என்­பதை மறுக்க முடி­யாது.
 ஒரு கட்­டத்தில், மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து கொண்ட ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 48 ஆக அதி­க­ரித்­தி­ருந்­தது. எனினும், துல்­லி­ய­மான கணக்கு எத்­தனை என்று தெரி­யா­ம­லேயே இருந்­தது. பலர் மறை­மு­க­மாக மைத்­தி­ரி­பா­லவை ஆத­ரித்­தனர்.
இதனால் மஹிந்த ராஜபக்சவுக்கே தனது பக்கத்தில் எத்­தனை பேர் நிற்­கி­றார்கள் என்று தெரி­யாமல் இருந்­தது. அதை­விட இளம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உட­ன­டி­யாக நாடா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­டு­வதை விரும்­ப­வில்லை.
ஏப்ரல் வரை நாடா­ளு­மன்றம் செயற்­பட்டால் போதும் தமக்கு ஓய்­வூ­தியம் கிடைத்து விடும் என்ற எதிர்­பார்ப்பில், முதல்­ மு­றை­யாகத் தெரி­வான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உள்­ளனர். அதனால், அவர்­களும் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அர­சாங்­கத்தைக் காப்­பாற்றத் தயா­ராக இருந்­தனர்.
இந்­த­நி­லையில், மஹிந்த ராஜபக்சவுக்கும் சரி, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கும் சரி, அடுத்து என்ன செய்­வது என்ற குழப்பம் எற்­பட்­டது. இதனால், தாம் எதனைக் கனவு என்று தேர்தல் பிர­சா­ரத்தின் போது எள்ளி நகை­யா­டி­னரோ, மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அதே 100 நாள் செயற்­றிட்­டத்­துக்கு முழு­மை­யான ஆத­ரவை அளிப்­ப­தாக, அறி­விக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.
இதை­ய­டுத்து. யார் ஆளும்­கட்சி, யார் எதிர்க்­கட்சி என்று தெரி­யாத குழப்பம் உரு­வா­யிற்று. இத்­த­கைய நிலையில் கட்­சியின் தலை­மையைத் தன்­னிடம் வைத்துக் கொள்­வதால், எதுவும் நடக்கப் போவ­தில்லை என்ற முடி­வுக்கு வந்து தான் மஹிந்த ராஜபக்ச அதனை மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் ஒப்­ப­டைக்க முன்­வந்­தாரா?
அல்­லது மிகப்­பெ­ரிய சக்­தி­யாக தான் மீண்டும் உரு­வெ­டுக்க வேண்டும் என்ற திட்­டத்­துடன் கட்சித் தலை­மையை மைத்­தி­ரி­பா­ல­விடம் வழங்க முன்­வந்­தாரா என்ற கேள்­விகள் உள்­ளன.
45 வருட அர­சியல் அனு­ப­வத்தைக் கொண்­டுள்­ள­தாக மஹிந்த ராஜபக்ச அண்­மையில் கூறத் தொடங்­கி­யி­ருக்­கிறார். அந்த அனு­பவம் அவ­ருக்கு, முன்­கூட்­டியே தேர்­த­லுக்­கான அழைப்பை விடும் போது கைகொ­டுத்­தி­ருக்­க­வில்லைத் தான். என்­றாலும், இப்­போது மஹிந்த ராஜ­பக்ச சற்று ஒதுங்கி- அடங்கிப் போக முயற்­சிப்­பது, சந்­தே­கங்­க­ளையே எழுப்­பு­கி­றது. அர­சியல் உள்­நோக்­கத்­துடன் அவர் பதுங்கிக் கொள்ள முனை­கி­றாரா என்­பதே அது.
ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை உடை­யாமல் பாது­காக்க வேண்டும் என்­ப­தற்­காக மட்டும் அவர் இந்த முடிவை எடுத்­தி­ருப்பார் என்று எதிர்­பார்ப்­பது சுத்த முட்­டாள்த்­தனம்.
அவ்­வாறு கரு­தி­யி­ருப்­பா­ரே­யானால், அலரி மாளி­கையை விட்டு வெளி­யேற முடி­வெ­டுத்த போதே கட்சித் தலை­மை­யையும் விட்டுக் கொடுக்க முடிவு செய்­தி­ருப்பார். மெல்ல மெல்ல தனது அதி­காரம் கட்­சிக்குள் வலு­வி­ழந்து வரத் தொடங்­கிய பின்னர் தான், அவர் இந்த முடிவை எடுத்­தி­ருப்­பதால், கட்­சியின் நலனை அவர் கருத்தில் கொண்­டி­ருப்பார் என்று ஒரு போதும் எதிர்­பார்க்க முடி­யாது.
மஹிந்த ராஜபக்சவைப் பொறுத்­த­வ­ரையில், தனது அர­சியல் வாழ்வு இத்­துடன் முடிந்து போய் விட்­ட­தாக கரு­து­வ­தாகத் தெரி­ய­வில்லை.
மீண்டும் அர­சி­யலில் தலை­யெ­டுக்கும் ஆர்­வமும், அவாவும் அவ­ருக்கு இருக்­கி­றது. அவ்­வாறு தலை­யெ­டுத்தால் தான், தமது குடும்­பத்தின் அடுத்த தலை­மு­றை­யி­னரை அர­சி­யலில் நிலை நிறுத்­தலாம் என்­பது அவ­ருக்கு நன்­றாகத் தெரியும்.
அதை­விட, அவர் நாட்டை விட்டுத் தப்­பி­யோ­டவும் தயா­ராக இல்லை. அது தனது ஒட்­டு­மொத்தக் குடும்­பத்­துக்கும் அவப்­பெ­யரை ஏற்­ப­டுத்தும் என்று கலங்­கு­கிறார். அதை­விட அவ்­வா­றா­ன­தொரு தெரிவை அவர் மேற்­கொண்டால் கூட, அவர் எதிர்­கா­லத்தில் பல்­வேறு சட்­ட­ரீ­தி­யான சிக்­கல்­க­ளுக்கு முகம் கொடுக்கும் நிலையும் ஏற்­ப­டலாம்.
எனவே, அவர் தொடர்ந்து இலங்­கையில் தங்­கி­யி­ருக்­கவே விரும்­பு­கிறார். எவ்­வா­றா­யினும், இப்­போ­தைக்கு அமை­தி­யாக இருக்க வேண்டும் என்று அவர் கரு­து­வ­தாகத் தெரி­கி­றது.
புதிய அர­சாங்­கத்­துடன் மோதல் போக்கை கடைப்­பி­டிக்க முனைந்தால், அவர்­களின் எதிர் நட­வ­டிக்­கைகள் இன்னும் இன்னும் தீவி­ர­மாகும். அது தனதும் தனது குடும்ப உறுப்­பி­னர்­க­ளி­னதும் நல­னுக்கு பாத­க­மாக அமையும் என்று மஹிந்த ராஜபக் ஷ கணக்குப் போடு­வ­தாகத் தெரி­கி­றது.
சுதந்­திரக் கட்­சியின் தலை­மையை மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் ஒப்­ப­டைக்க அவர் இணங்­கி­ய­தற்கு அதுவும் ஒரு காரணம். அதை­விட, இப்­போ­தைய நிலையில், சுதந்­திரக் கட்­சியின் தலைமைப் பத­வியைத் தக்க வைத்துக் கொள்­வ­தற்­காக நேரத்தை செல­வி­டு­வதை விட, அதனை மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வழங்­கு­வதே புத்­தி­சா­லித்­த­ன­மா­னது.
ஏனென்றால், சுதந்­திரக் கட்­சியின் தலைமை மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வசம் வந்து விட்டால், மஹிந்த ராஜபக்ச அரசில் மோச­டிகள், முறை­கே­டு­களை செய்த முன்னாள் அமைச்­சர்­க­ளான, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் அவரே தலை­வ­ராக மாறி­வி­டுவார். அது அவ­ருக்கு சங்­க­டத்தை ஏற்­ப­டுத்தும்,
அவரை பத­விக்கு கொண்டு வந்த ஐ.தே.க. தலை­மை­யி­லான கூட்­ட­ணிக்கும் இக்­கட்­டான நிலையை ஏற்­ப­டுத்தும். அதே­வேளை, 100 நாள் செயற்­றிட்­டத்தின் முடிவில் பாராளு­மன்­றத்தைக் கலைத்து தேர்தல் நடத்தும் போது, மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் ஐ.தே­.கவும் அதன் கூட்­ட­ணியில் உள்ள கட்­சி­களும் எவ்­வாறு செயற்­படப் போகின்­றன?
ஒரு உறையில் இரண்டு கத்­திகள் இருக்க முடி­யாது என்று கூறப்­ப­டு­வ­துண்டு. ஐ.தே­.கவும், சுதந்­திரக் கட்­சியும் இரண்டு கத்­திகள். அவை இரண்டும் எப்­படி ஒரே உறையில் ஒரே கூட்­ட­ணியில் இடம்­பெற முடியும்? இதனால், நாடா­ளு­மன்றத் தேர்­தலில் தனித்­த­னி­யாக பிரிந்து மோதும் நிலை உரு­வா­கலாம்.
அவ்­வா­றா­ன­தொரு நிலை ஏற்­பட்டால், மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையும், ரணில் தலை­மை­யி­லான கூட்­ட­ணி­யையும் பிரித்து விட்­ட­தாக மஹிந்த ராஜபக்சவினால், உரிமை கோர முடியும்.
மேலும், ஊழல் மோசடி செய்­த­வர்கள் மீது தற்­போ­தைய அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுப்­ப­திலும் சிக்­கல்­களை எதிர்­கொள்ள நேரிடும். தனது வசம் உள்ள கட்­சியின் உறுப்­பி­னர்கள் மீது நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தயங்க வேண்டி வரலாம். இவை­யெல்லாம் மஹிந்த ராஜபக்சவுக்கு சாத­க­மான விட­யங்கள்.
வடமேல் மாகா­ண­சபை ஒட்­டு­மொத்­த­மாக முத­ல­மைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தலை­மையில் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் சர­ண­டைந்த போது, ஐ.தே.க. திகைத்துப் போய் விட்­டது.
ஏனென்றால், அங்கு ஆட்­சியைப் பிடிக்க ஐ.தே.க. முயன்­றது, ஆனால், நடந்­தது எதிர்­ம­றை­யான விடயம். மத்­திய மாகா­ண­ச­பை­யிலும், ஆட்­சியைப் பிடிக்க முனைய, திடீ­ரென அதன் முத­ல­மைச்சர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து கொண்­டி­ருக்­கிறார்.
இது­போன்று ஏனைய மாகா­ண­ச­பை­க­ளிலும் நடந்தால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசுகள் மாகாண சபைகளில் நிலைத்திருக்கும். இதுபோன்ற நிலை தொடருமேயானால், ஐ.தே.கவுக்குள் குழப்பம் உருவாகும்.
அது பிரதமர் ரணிலுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் விரிசலையும் ஏற்படுத்தும். மஹிந்த ராஜபக்ச சுதந்திரக் கட்சிக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்தால் இதெல்லாம் சாத்தியமாகாது.
மைத்திரிபால சிறிசேனவிடம் சுதந்திரக் கட்சியின் தலைமையையும் ஒப்படைத்து விட்டால் அவர் கட்சியையும் கவனிக்க முடியாமல் நாட்டையும் நிர்வகிக்க முடியாமல் திணறுவார். அது அவரை திறனற்ற, நேர்மையற்ற தலைவராக சித்திரிப்பதற்கு வசதியாகி விடும்.
எனவே சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி என்பது சுலபமாகவே மைத்திரிபால சிறிசேனவிடம் கிடைத்து விட்டாலும், அது அவருக்குப் பெரும் பாரத்தையும் தலைவலியையும் தான் ஏற்படுத்தும்.
அது மஹிந்த ராஜபக்சவுக்கு சாத­க­மான சூழலை உட­ன­டி­யாக ஏற்­ப­டுத்­தா­வி­டினும், என்றோ ஒருநாள் உரு­வாக்­கலாம். அந்தக் கனவுடன் தான் அவர் காத்திருக்க முடிவு செய்துள்ளார் போலும்.மீண்டும் வருவார் என்பது நிஜம்!

 

Saturday, December 07, 2013
இலங்கை::ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாஷி ஆறுநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளார்.

இம்மாதம் 13ஆம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார் என இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின்போது அகாஸி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

நல்லிணக்க முயற்சியின் ஒரு கட்டமாக நடத்தப்பட்டுள்ள வட மாகாண சபைக்கான தேர்தலை ஜப்பான் அரசாங்கம் வரவேற்றுள்ள நிலையில், யசூசி அகாஸியின் சமாதான விஜயம் அமைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண சபைக்குத் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கும் சூழ்நிலையில் இலங்கை வரும் அகாசி அரசாங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தேசிய நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறுவார் என ஜப்பானியத் தூதரகம் தெரிவித்தது.

இலங்கையின் சமாதானம், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புக்கான ஜப்பானின் விசேட பிரதிநிதியாக யசூசி அகாசி நியமிக்கப்பட்ட பின்னர் 22 தடவைகள் இலங்கைக்கு விஜயம் மேற் கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத் தக்கது.

ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவராக 2002 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டதை அடுத்து, யசூசி அகாஷியின் 23ஆவது இலங்கைக்கான விஜயமாக இது அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ஜோகன்னஸ்பர்க்::தென்னாப்ரிக்காவில் மட்டும் அல்லாமல் உலக அளவில் அனைவராலும் விரும்பப்படும் ஒரு நபராக விளங்கியவர் நெல்சன் மண்டேலா.. அவர் உடல் நலக் குறைவு காரணமாக ஜோகன்னஸ்பர்க்கில் தனது இல்லத்தில் காலமானார்
நெல்சன் மண்டேலாவின் இயற்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா என்பதாகும். 1918ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி பழங்குடி இனத் தலைவரின் மகனாக பிறந்த நெல்சன் மண்டேலாஇ இனவெறி ஆட்சியில் ஊறிக் கிடந்த தென்னாப்ரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு கொண்டு சென்ற மகத்தான தலைவர் ஆவார்.

குத்துச் சண்டையிலும்இ போர் கலையிலும் வல்லவராக திகழ்ந்த மண்டேலாவுக்கு அவரது ஆசிரியர் சூட்டியப் பெயரே நெல்சன் என்பதாகும். பழங்குடியினத்தில் பிறந்திருந்தாலும்இ படிப்பறிவை பெறுவதில் பெரும் நாட்டம் கொண்ட மண்டேலாஇ லண்டன்இ தென்னாப்ரிக்க பல்கலைகளில் பட்டப்படிப்பை முடித்து தென்னாப்ரிக்காவில் சட்டக்கல்வியையும் பெற்றார்.
தென்னாப்ரிக்காவில் சிறுபான்மையினராக இருந்த வெள்ளையர்களிடமே ஆட்சி அதிகாரம் இருந்தது. அவர்களது அடக்குமுறை கருப்பின மக்கள் மீது திணிக்கப்பட்டது.

இதனால் வெகுண்டு எழுந்துஇ தென்னாப்ரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடிய தலைவர்களில் முக்கியமானவராக விளங்கிய மண்டேலாஇ முதலில் காந்திய முறையில் அகிம்சை வழியில்தான் தனது போராட்டத்தைத் துவக்கினார். ஆனால்இ பிறகு அவரே ஆப்ரிக்க தேசிய காங்கிரஸின் ராணுவப் பிரிவுக்கும் தலைமை தாங்கி போராட்டத்தை வழி நடத்தினார். இதன் மூலம்இ நிறவெறி அரசுக்கு எதிராக மிகக் கடுமையான கெரில்லாப் போர் முறைத் தாக்குதலை நடத்தினார்.

இதனால்இ 1962ஆம் ஆண்டு அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டார். நிறவெறி அரசுஇ 27 ஆண்டு காலம் மிகச் சிறிய சிறை அறையில் அடைத்து தனது நிறவெறியை வெளிக்காட்டியது. ராபன் தீவுப் பகுதியில் அமைந்த திறந்தவெளி சிறிய சிறை அறையில் பெரும்பாலான சிறைக் காலத்தை கழித்த மண்டேலாஇ சிறைக் காலத்தில் அனுபவித்த கொடுமைகள் சொல்லி மாளாதவை. எனினும்இ அவரது போராட்ட உணர்வு மட்டும் சோர்ந்து போகவில்லை.

உலக வரலாற்றிலேயே மண்டேலாவைப் போல இத்தனை காலம் சிறையில் கழித்த தலைவர் யாரும் இல்லை என்கிறது வரலாறு.
மண்டேலாவை விடுதலை செய்ய உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான கோரிக்கைகள் வலுத்தன. அவரது மனைவி சார்பில் தென்னாப்ரிக்காவில் போராட்டம் வலுத்தது. இதையடுத்துஇ 1990ஆம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி  மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.  அப்போது அவருக்கு வயது 71.
1990ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா விடுதலையானதை உலகமே வரவேற்றது. தென்னாப்ரிக்காவில் குடியரசு மலரவும் காரணமானார்.

அதோடுஇ தென்னாப்ரிக்காவின் முதல் கறுப்பின அதிபராகவும் 1994ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார் நெல்சன் மண்டேலா. அவரது பதவிக் காலம் முடிந்ததும்இ 2வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட மறுத்துவிட்டார். 2008ஆம் ஆண்டு பொது வாழ்க்கையில் இருந்து விலகுவதாக அறிவித்தார் மண்டேலா.

அப்போதும் ஓயாமல் பல்வேறு நலப் பணிகளுக்காக மக்களுக்காக உழைத்துக் கொண்டிருந்தால் மண்டேலா.பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டு 2013ஆம் ஆண்டு ஜுன் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பிறகு குணமடைந்துஇ வீடு செல்வதும்இ சில நேரம் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனை சென்று வந்த நெல்சன் மண்டேலா சில வாரங்களாக மரண படுக்கையில் விழுந்தார். அவர் தனது பேசும் திறனை இழந்துஇ குடும்ப உறுப்பினர்களின் ஆறுதல் வார்த்தையாலும்இ உற்சாக மொழிகளாலும் உயிர் பிழைத்து வந்தார்.

இந்த நிலையில்இ வெள்ளிக்கிழமையான இன்று (2013ஆம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி)நெல்சன் மண்டேலா தனது 95வது வயதில் உலக மக்களை எல்லாம் சோகத்தில் ஆழ்த்திவிட்டு மரணம் அடைந்தார்.

எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை முன்னேற்றத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லையென பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக் இதனை தெரிவித்துள்ளார்.
இதனை இலங்கை அரசாங்கம் செயற்படுத்த தவறினால் ஜெனீவா மாநாடு கூடும்போது இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை பிரித்தானியா வலியுறுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் இடம் பெற்றதாக கூறப்படும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குறித்து நம்பிக்கையானதும் சுதந்திரமானதுமான விசாரணைகள் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியா கோரியிருந்தது.
இந்தநிலையில், பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பிரித்தானியாவின் உறுதியான நிலைப்பாட்டை பொதுநலவாய மாநாட்டின் போது வெளிப்படுத்தினார் எனவும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.

 

சனா::ஏமன் நாட்டில் அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதிகள் நாட்டின் தெற்குப்பகுதி மலைகளில் மறைந்துகொண்டு அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். அரசுக்கு ஆதரவாக அமெரிக்க ஆளில்லா விமானம் தீவிரவாதிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் தலைநகர் சனாவில் உள்ள பாதுகாப்பு அமைச்சக கட்டிடத்தில் இன்று குண்டுகள் நிரப்பப்பட்ட காரைக்கொண்டு தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பின் தொடர்ந்து வந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சராமரியாக சுட்டனர். இதையடுத்து அங்கு கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

இந்த சண்டையில் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. அப்போது அந்த கட்டிட வளாகத்திற்குள் இருந்த மருத்துவமனையை குறிவைத்தும் அவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் அமைச்சரவை கூறியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. கடந்த ஜூலை மாதம் ராணுவ உடையில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 90-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

இலங்கையில் நடந்த யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் புலிகள் இயக்கத்தின் ஒரு முன்னாள் பெண் உறுப்பினர் வாழ்வை விளக்கும் ‘இறுத்திக்கட்டம்’ ஆவணப்படம் பிரஸ்ஸலிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் முதல் தடவையாக திரையிடப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றிலுள்ள இலங்கை நண்பர்கள் குழுவின் தலைவரான ஜொப்ரேவான் ஓடன் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தார்.

இந்த ஆவணப்படத்தை பார்த்தவர்களில்இ இலங்கையின் பெல்ஜியம் லக்ஷம்பேர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கான தூதுவரான பி.எம்.அம்ஸாஇ இலங்கையில் 11 வருடங்கள் வாழ்ந்த பிரித்தானிய பிரசையான றிச்சாட் மன்டிஇ ஆகியோரும் அடங்குவர்.

இந்த படத்தில்  புலிகளினால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு உண்டான அவலங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்தினர் வழங்கிய இரக்கமான அன்பான கவனிப்புகள் சித்திரிக்கப்பட்டுள்ளன.

புலிகளினால் நடத்தப்பட்ட செஞ்சோலையில் வளர்ந்த புலி பெண் உறுப்பினர் ஒருவரை மையமாக கொண்டே இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜெயவதனி எனும் இப்பெண் மறுபக்கத்தை தீயதாகவே பார்க்கும் வகையில் வளர்க்கப்பட்டவர்.

இந்த படம் ஜெயவதனி பற்றியதாயினும் இது தனி ஒருவரின் வாழ்க்கை சரித்திரத்துக்கும் அப்பால் செல்கின்றது. இதில் இவரைப்போன்ற பலரின் கதி காட்டப்பட்டுள்ளது. இது மீட்சிபெற முயலும் இலங்கையிலுள்ள மக்களின் கதையாகும்.

இவர்களுக்கு ஆழமான அனுதாபமும்  உதவியும் தேவை இதனால்தான் இந்த படத்தை தயாரித்தேன் என இந்த படத்தின் இயக்குநர் ஜீவன் சந்திமல் கூறினார்.

இந்த படத்தை பார்த்தவர்கள் ஒரு நீதியான சமநிலைப்பட்ட ஊடக கவனிப்பு என்ற நேக்கில் இந்தப் படத்தை இயன்றளவு பல இடங்களிலும் திரையிட வேண்டுமெனும் கருத்தை வெளியிட்டனர்

Asin
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தென்னிந்திய நடிகை ஒருவர் மிக நெருக்கமாக இருக்கும் இறுவட்டு (சீ.டி) மற்றும் புகைப்படங்கள் சில சென்னையில் முக்கிய பிரமுகர்களிடம் சிலரிடம் சிக்கியுள்ளதாக உலா வரும் தகவலால் திரையுலகமே பரபரப்புக்குள்ளாகியுள்ளது.

குறித்த நடிகை, இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடமும் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் அவையும் அந்த சீ.டி மற்றும் புகைப்படங்களில் அடங்குவதாகவும் இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘தமிழில் நம்பர் வன் நடிகையாக இருந்த அவர், திடீரென மும்பையில் செட்டிலாகி, இந்தி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில், இந்தி திரைப்படமொன்றின் படப்பிடிப்புக்காக அவர் இலங்கைக்கு சென்றுள்ளார்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் தமிழ் திரைப்படத்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இலங்கை வந்த அந்த நடிகை, ‘இங்கே தமிழர்கள் சுகமாக வசிப்பதாகவும், விஜய், சூர்யா போன்ற ஹீரோக்களைப் பார்க்க ஆர்வமாக உள்ளதாகவும்’ பிரசாரம் செய்தார்.

இதேவேளை, கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் அந்த நடிகை தங்கியிருந்தபோது அவரைச் சந்திக்க பல தொழிலதிபர்கள் வந்திருந்ததாகவும், அப்படி வந்தவர்களில் ஒருவர் உல்லாசமாக இருக்கும் காட்சியை ரகசியமாக படம் பிடித்து சீ.டி.யாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சீ.டி.தான் இப்போது சென்னையின் வி.வி.ஐ.பி.கள் சிலரிடம் உள்ளதாம்.

இதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் அவர்கள் கைவசம் சிக்கியுள்ளனவாம். இதுகுறித்து விசாரிக்க அந்த நடிகையை தொடர்பு கொண்டபோது, ‘அந்த எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதா’ தெரிவிக்கப்படுகிறது. நடிகைக்கு நெருக்கமானவர்களோ, அவர் இப்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், இந்த தகவல்களில் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

asini-srilanka.-7

1476615_715701901781193_1654876606_n

சவுதி அரேபியா அரசு சமிபத்தில் கொண்டு வந்த அந்நிய நாட்டு தொழிலாளர்களை பாதிக்கும் சட்டத்தால் அங்கு துப்புரவு பணி செய்த பலரும் வேலையிழந்தனர்.

மீதமிருந்த தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நபிகள் நாயகம்(ஸல்) புனித நகரமான மதினாவில் குப்பை சேருவதை என்னால் பொறுத்துக்கொள்ளமுடியாது என்று கூறிய
மதினா மேயர் டாக்டர். காலித் அப்துல் காதிர் தானே துப்புரவு பணிகளை மேற்கொண்டனர்.

மேயரது அதிரடியைப் பார்த்து பிற அதிகாரிகளும் சேர்ந்து துப்புரவு பணி செய்ய ஆரம்பித்தனர்.