Archive for the ‘உள் நாட்டு செய்திகள்’ Category

’வாடி கெதியா, எரும மாடு… வாடி கெதியா… கெதியா வா, தேவடியாள்’, கையில் நீண்ட தடியுடன், உரத்த குரலில் அந்தச் சின்னஞ்சிறுமியை நோக்கி அள்ளி வீசப்பட்ட அந்தவார்த்தைகளால், உள்ளங்கி மட்டுமே அணிந்திருந்த நிலையில், சற்றுத் தூரத்திலிருந்து நடுநடுங்கிக்கொண்டு வந்த அந்தச் சிறுமியின் முடியைப் பிடித்து பந்தாடிய சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி, அந்த வீடியோவைப் பார்த்த சகலரின் கண்களையும் ஒருகனம் நனைத்துவிட்டது.

சுமார் 4 நிமிடங்கள் 41 வினாடிகளுக்குள் காட்சிகளை அடக்கிக்கொண்ட அந்த வீடியோவிலிருந்து ‘அடியே உனக்கு அம்மாவ பற்றி விளங்காது. சரியா?… அவள் மாதிரி நினைக்காத… நினைக்காத… கெதியா வா… யாரும் இல்ல… கெதியா வா… உன்ன பிடிக்கிறத்துக்கு ஆக்களில்ல. கெதியா வா. சொன்னா கேக்கனும். கெதியா வா…’ எனக் கடுந்தொனியில் அந்தப் பெண், தான் நின்றிருந்த இடத்துக்கு குறித்த 9 வயதுடைய சிறுமியை அழைக்கின்றார்.
இழுத்து வாராத தலைமுடியுடன், உள்ளங்கி மாத்திரம் அணிந்து கொஞ்சத்தூரத்தில் நின்றிருந்த மெலிந்த உடல் கொண்ட அச்சிறுமியும், தனது கைகளின் விரல்களைப் பிசைந்தபடியே, மெது மெதுவாக, நடக்கப் போகும் விளைவை எதிர்கொள்ளத் தயாரானவளாக அப்பெண்ணுக்கு அருகில் செல்ல முயற்சிக்கின்றாள். காட்சியின் கொடூரம் நடந்தேறுகின்றது.

உச்சக் கோபத்தில், மதியிழந்துக் காணப்பட்ட அப்பெண், சிறுமிக்கு அருகில் சென்று, குளித்த நிலையில் தண்ணீரில் பாதி நனைந்த உடலுடன் நின்ற அச்சிறுமியின் கைகளைப் பிடித்து முறுக்கி, பற்றைத்தரையில் தள்ளி, ‘உன்ர தடிப்பு உன்னோட இருக்கனும். ஓடுவியா? ஓடுவியா?’ எனக் கேட்டு, தலைமுடியைப் பிடித்து இழுத்து தலையில் குட்டுவதுடன் காதைத்திருகி, அடி வயிற்றில் அல்லது தொடைகளில் கொடூரமாகக் கிள்ளுகிறார். தொடர்ந்து, சிறுமியின் மீது சரமாரியாக மூர்க்கத்தனமான தாக்குதல்களை, அப்பெண் மேற்கொள்ளும் காட்சிகள், அந்த ஒளிப்பதிவில் பதிந்தன.

யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியிலுள்ள வீட்டுக் காணியொன்றில் கடந்த 22ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணியளவில் நடந்த சம்பவம் தொடர்பில், அன்றைய தினமே பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டு, வைரலாகப் பரவிய ஒளிப்பதிவில், காட்சியாகப் பார்க்கப்பட்டவையே இவையாகும்.

இந்த வீடியோவை இலட்சம் பேர் பார்வையிட்டும் 30,000க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் பகிர்ந்ததன் எதிரொலியாக இச்சிறுமியும் சிறுமியின் சகோதரர்கள் மூவர் என நான்கு சிறார்கள், மீட்கப்பட்டு, சிறுவர் இல்லத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வீடியோ வெளியாகிய அன்றைய தினம் மாலை வேளையே இக்கொடூரத்தைப் புரிந்த பெண், கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். கோப்பாய் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரி, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் பிரகாரம், அவர் கைதுசெய்யப்பட்டார்.

மறுநாள் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை, யாழ். நீதவான் நீதிமன்றத்தில் குறித்த பெண்ணை, கோப்பாய் பொலிஸார் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் உறுப்புரிமை 6க்கு அமைய 18 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு பிள்ளைகளும் உயிர்வாழும் உரிமையுடையவர்கள். கருத்துச் சுதந்திரம், கூடும் சுதந்திரம், அந்தரங்கத்தைப் பேணல், பொருத்தமான தகவல்களைப் பெறல், இம்சை மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறல், கல்வி கற்கும் உரிமை உட்பட எல்லா உரிமைகளும் சிறுவர்களுக்கும் உள்ளது என்ற ஐக்கிய நாடுகளின் சாசனத்தை, இலங்கை உட்பட உலக நாடுகள் அனைத்தும் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளன.

இந்த உரிமைகள் அனைத்தும் வயது, பால், இனம், நிறம், சாதி, மொழி மற்றும் மத வேறுபாடுகளின்றி வழங்கப்பட வேண்டும். சிறுவர்களை எல்லா வகையான பாகுபாடுகளிலிருந்தும் பாதுகாப்பதுடன் அவர்களின் உரிமைகளைப் பரப்புவதற்கு அனைத்து அரசாங்கங்களும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

சிறுவர்கள் தொடர்பான சகல செயற்பாடுகளும் முடிவுகளும் அவர்களின் சிறந்த நலன்களைக் கருத்தில் கொண்டே மேற்கொள்ளுதல் வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சாசனத்தின் விதிமுறைகளாகும்.
எனினும், இவை எந்தளவுக்கு சாத்தியம் என்பதும் இந்த உரிமைகள் அனைத்தும் சிறுவர்களுக்கு முழுமையாக வழங்கப்படுகின்றனவா என்பதும் இலங்கை போன்ற நாடுகளில் கேள்விக்குறியே.

மூன்று தசாப்தங்களைக் கொண்ட போர்ச்சூழலும் ஓர் ஒழுங்கமைப்பைக் கொண்டிராத சமூகப் பின்னணிக் காரணங்களும், பின்தங்கிய பொருளாதார நிலைமைகளும் இவற்றையெல்லாம் இன்று பின்தள்ளச் செய்துள்ளன. இதனால் நம் நாட்டில் சிறுவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் சந்தர்ப்பங்கள் தாராளமாக மலிந்து கிடக்கின்றன.

யுத்தம் காரணமாகக் கணவனை இழந்த மனைவியோ, மனைவியை இழந்த கணவனோ, தமது இறுதிக் காலத் தனிமையைப் போக்குவதற்காகவும் முதல் வாழ்க்கைத் துணையின் பிள்ளைகளைப் பொறுப்பாகவும் பாதுகாப்பாகவும் வளர்க்கும் பொருட்டும் மறுமணம் புரிகின்றனர். எனினும், மறுமணத்தின் போது வாழ்க்கைத் துணையாக வருபவர், முதல் வாழ்க்கைத் துணையின் பிள்ளைகளை ‘மாற்றான் பிள்ளைகள்’ என நோக்கி, அவர்களுக்கே வினையாக மாறும் போது அவ்விடத்தில் அப்பிள்ளைகளுக்கான பல உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இதுவே இந்தச் சிறுமி விடயத்திலும் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

‘ஓட மாட்டேன்’ எனக் கூறிய சிறுமியிடம் ‘எவ்வளவு கத்துக் கத்தினேன்’ எனக் கேட்டு அப்பெண், பக்கத்தில் நின்றிருந்த சிறுவன் வைத்திருந்த கூறிய கத்தியொன்றைப் பறித்து, ‘பரதேசி’ எனச் சிறுமியை விளித்து முதுகில் பலமாகத் தாக்குகின்றார். அவ்வேளையில் சிறுமி எழுப்பிய அபயக் குரலை வீடியோவில் கேட்டுக் கண்கள் கலங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அபயக் குரலையும் பொருட்படுத்தாத அப்பெண், சிறுமியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து ஷம்போவை ஊற்றி முகத்தில் தேய்ப்பதுடன், முதுகு மற்றும் கன்னத்தில் பலமாக அறைகின்றார். அத்துடன், அந்த ஒளிப்பதிவும் முற்றுப்பெறுகின்றது.

இது குறித்த வழக்கு விசாரணையின் போது, சிறுமி தனது பிள்ளையெனவும் முன்பு எப்போதும் பிள்ளையை அடித்ததில்லையெனவும் பெண் தெரிவித்திருந்தார். இது தொடர்பாகத் தந்தையிடம் நீதவான் வினவியபோது, தனக்கு 3 மனைவிகள் எனவும் இதில் ஒருவர் இறந்து விட்டதாகவும் மற்றையவர் தம்மைவிட்டுப் பிரிந்து வாழ்வதாகவும் தற்போதுள்ளவர் மூன்றாவது மனைவியெனவும் தெரிவித்தார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமி சார்பாக 6 சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததுடன், அவர்கள் குறித்த தாய், அச்சிறுமியின் தாயில்லையெனவும் முதற்தாரத்தின் பிள்ளையே அச்சிறுமி எனவும் வாதிட்டனர்.

வழக்கை விசாரித்த யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் க. அருமைநாயகம், சிறுமியைத் தாக்கிய பெண்ணை, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அத்துடன், குறித்த சிறுமியின் தந்தையையும் விசாரணை செய்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

மேலும், வீடியோவின் உண்மைத் தன்மை மற்றும் சிறுமியைத் தாக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்ட கத்தி தொடர்பான உண்மைத் தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்த அவற்றை மொரட்டுவைப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்குமாறும் நீதவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

வீடியோ வெளியாகி சில மணித்தியாலங்களில் அது குறித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, அச்சிறுமியைப் பாதுகாக்குமாறு உரிய அதிகாரிகளுக்கும் பொலிஸாருக்கும், நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். எனினும், பாதிப்புக்கு உள்ளாகியிருந்த சிறுமி இருக்கும் இடம் நீர்வேலி எனும் தகவலைத் தவிர துல்லியமான தகவல்கள் எதுவும் ஆரம்பத்தில் கண்டறியப்படவில்லை. இதனையடுத்து, பொலிஸாரும் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து, நீர்வேலி கிராம சேவகர் பிரதேசம் முழுவதிலும் தேடுதல் நடத்தி, வீடியோவில் காணப்பட்ட சிறுமி உட்பட சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களின் பொறுப்பான செயற்பாடும் நீதிமன்றத்தின் துரித செயற்பாடும் ஒரு சிறுமியைக் கொடுமையிலிருந்து பாதுகாக்கப் பேருதவியாக அமைந்திருந்தது.

இதேவேளை, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பெண்ணைத் திருமண பந்தத்தில் இருந்து ஒதுக்கி விடுவதோடு, எந்தக் குழந்தையையும் வளர்ப்பதற்கோ அல்லது பராமரிப்பதற்கோ அனுமதிக்கக் கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

திருமண பந்தத்தில் இணைந்து வாழும் கணவன் – மனைவிக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு, அவர்கள் பிரிந்து வாழும் சந்தர்ப்பங்களில் அவர்களின் பிள்ளைகள் சுதந்திரமாக வாழும் உரிமை மறுக்கப்படுகின்றது. பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள குடும்பங்களின் தாய் – தந்தை வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புத் தேடிச் செல்கின்றனர். இதனால் இவர்களின் பிள்ளைகளின் பாதுகாப்பு உரிமை, மூச்சற்றுப் போகின்றது.
இவ்வாறு நம் நாட்டைப் பொறுத்தவரையில் இன்றுவரை கணிசமானளவு சிறார்கள் தமக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் உயிர்வாழ்கின்றனர்.

‘வாழ்வதற்குத் தகுதியற்ற உயிர்கள் நீடிப்பதில் பலனில்லை’ எனக் கூறிய சர்வாதிகாரியான ஹிட்லரை, ஒரு கொடூரனாக வரலாறுகள் காட்டிய போதும் அவன், குழந்தைகள் மீது மிகுந்த பிரியம் கொண்டவன் எனக் கூறப்படுகின்றது. எனினும், சிறுவர்கள் தொடர்பில் அன்றாடம் வெளிவரும் செய்திகள் நெஞ்சத்தைப் பதறச் செய்கின்றன. மனிதநேயம் துளி கூட அற்றுப்போன அரக்கர் சமூகத்தில்தானா நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என எண்ணத் தோன்றுகின்றது.

பாதுகாக்கப்பட வேண்டியவர்களாலேயே சிறுவர்கள் வன்புணர்வுக்கும் துஷ்பிரயோகத்துக்கும் உள்ளாக்கப்படுதல், அச்சுறுத்தல், அடித்தல், உதைத்தல், கொலை முயற்சி, கொலை செய்தல், உரிமைகள் அனைத்தும் மறுக்கப்படல், பெற்றோரே விஷம் வைத்தல் மற்றும் ரயிலின் முன் தள்ளிவிடுதல் எனச் சிறுவர்கள் குறித்தான கொடூரச் செய்திகள் ஏராளம் ஏராளம். நம் கண்களுக்கு அப்பால் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள், வன்முறைகள் தினந்தோறும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த அவலங்கள் களையப்பட வேண்டும். தனி மனிதனாக இணைந்து சமூகமாகிய நாம் இவற்றை இல்லாதொழிப்பதற்கான வழிவகைகளைக் கையாள வேண்டும்.

பாடசாலை செல்லாமையினாலேயே குறித்த சிறுமியைத் தாக்கியதாக சிறுமியைத் தாக்கிய பெண், நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆக, கண்டிப்பு எனும் பெயரிலேயே இந்தக் கொடூரத்தை இவர் புரிந்துள்ளார். சிறுவர்களைக் கண்டித்தல் என்பது வேறு. தாக்குதல் என்பது வேறு. அன்பான சொற்களால் கூடச் சிறுவர்களைக் கண்டிக்கலாம். ஆனால், சிறுவர்கள் மீதான தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த வீடியோவை பேஸ்புக்கில் பதிவேற்றியிருந்த நபர், ‘இந்தச் சிறுமி தாக்கப்படும் கடைசி நாள் இன்றாகத்தான் இருக்க வேண்டும் எனக் கருதியே அங்கு நடப்பவை அனைத்தையும் ஒளிப்பதிவு செய்தேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். சிறுமி கடைசியாகத் தாக்கப்பட்ட இந்த ஒளிப்பதிவே இன்று அச்சிறுமிக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுத்துள்ளது.
இச்சிறுமியைப் போன்றே இன்னும் இன்னும் எத்தனையே இளம் சமூகத்தினர் எம்மால் பாதுகாக்கப்படுவதற்காகக் காத்துக்கிடக்கின்றனர்.

எனவே, சமூக வலைத்தளங்களை தினம் தினம் சித்திரவதைகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் சிறார்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் வாழ்வில் ஒளியூட்டுவதற்கும் பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது.

tamilmirror

Advertisements

“தெஹிவலை, பாத்யா மாவத்தை பள்ளிவாயல் விஸ்தரிப்பு விடயத்தில், நால்லாட்சிக்கு இரண்டு நாள் காலக்கெடு-செய்தி”

இந்த விடையத்தில் விட்டுக்கொடுப்புக்கள் எதுவும் இல்லாமல், இனவாதிகளின் முகத்திரை கிழிக்கப்படும் வரை சகல வழிமுறைகளிலும்(முகநூல் உட்பட) போராட்டம் மேட்கொள்ளப்படல் வேண்டும். இந்த விடயம் இலங்கை முஸ்லிம்களுக்கான இனவாத செயற்பாட்டில் ஒரு மையிற்கல்லாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக….🙏🏼

 
 News: Waakir

அக்/ஸாஹிறா வித்தியாலயம்,
யூனியன் வீதி, அக்கரைப்பற்று
🔎🔎🔎🔎🔎🔎🔎
கண் பரிசோதனையும் மூக்குக் கண்ணாடி வழங்குதலும்.
🌅🌅🌅🌅🌅🌅🌅

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தால்🏰 அம்பாறை மாவட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் பார்வைக் குறைபாடுடைய🔬 மாணவர்களுக்கு எதிர்வரும் 2016.06.22 ம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணி முதல் கண்பரிசோதனையும் மூக்குக் கண்ணாடி வழங்குகின்ற நிகழ்வும் அக்கரைப்பற்று அக்/ஸாஹிறா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில்🏰 இடம்பெறவுள்ளது. எனவே, அம்பாறை மாவட்டப் பாடசாலைகளில் கல்வி பயில்கின்ற பார்வைக் குறைபாடுள்ள மாணவர்கள்👭 குறித்த நேரத்துக்கு🕖 வருகை தந்து இதன் நன்மைகளை அடைந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

A.விஜயானந்தமூர்த்தி
மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர்
மாகாணக்கல்விப் பணிப்பாளருக்காக.

(தகவல்: EP/20/05/35/01ம் இலக்கமும் 2016.03.06ம் திகதியும் கொண்ட கடிதத்தின் சார்பாக.)

திஹாரியிலுள்ள இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
முன்னாள் பிரதமர்களான எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க, முன்னாள் சபாநாயகர் அனுர பண்டாரநாயக்க ஆகியோரின் ஞாபகார்த்த நிகழ்வு திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிதியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, துறைமுகம் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, ஆகியோர் கலந்து கொண்டனர்.
அங்கவீனர் நிலையத்தின் மாணவர்கள் மட்டுமன்றி, பிரதேசவாசிகளும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் அங்கவீனமுற்ற மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் செவிப்புலன் கருவிகளை வழங்கி வைத்தனர்(thanks colombomail.today)
 இலங்கையில் நடந்த கடைசி கட்ட போரின் போது நடந்த மனித உரிமை மீறல் குறித்த விவாதம் ஐ.நா, மனித உரிமைகள் ஆணையத்தில் துவங்கியது. இதில் சர்வதேச தலையீட்டை முந்தைய அரசு நிராகரித்தது எனவும், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் மீதான தாக்குதல் குறித்து ராஜபக்சே அரசு விசாரணை நடத்தவில்லை என ஐ.நா., மனித உரிமை ஆணையர் கூறினார்.
இலங்கை மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா., மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில், அந்த அமைப்பின் ஆணையர் ஜைத் ராத் அல் ஹூசைன் பேசுகையில், 
 பயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் கைதானவர்கள் குறித்த விபரத்தை இலங்கை அரசு இன்னும் தரவில்லை . கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் மீதான தாக்குதல் குறித்து ராஜபக்சே அரசு விசாரணை நடத்தவில்லை. இலங்கை போர் முடிந்து 6 ஆண்டுகள் ஆகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதிகிடைக்கவில்லை. தனியார் நிலத்தை ஆக்கிரமித்துள்ள ராணுவத்தினரை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சர்வதேச தலையீட்டை இலங்கையில் முந்தைய அரசு நிராகரித்தது என கூறினார். மேலும் அவர் , பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை விலக்கிக்கொள்ள அரசு அளித்த உறுதிமொழி வரவேற்கத்தக்கது. இலங்கையில் புதிய ஆட்சியில் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்படு
கிறது. புதிய அரசு அமைந்த பிறகு தாக்குதல் குறித்த விசாரணையில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என கூறினார்.
இலங்கை உறுதி: 
 இலங்கை தூதர் ரவிநாதா ஆர்யசின்ஹா பேசுகையில், அனைத்து மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஐநாவுடன் இணைந்து செயல்படுவோம். சர்வதேச சமூகத்தின் ஆலோசனைகளும் உதவிகளும் ஏற்றுக்கொள்ளப்படும் என கூறினார்.
ரஷ்யா கருத்து:
 ரஷ்ய பிரதிநிதி பேசுகையில், சர்வதேச தலையீடு இன்றி இலங்கையே விசாரணை முறையை தீர்மானிக்க வேண்டும் என கூறினார்.
கொரியா ஆதரவு:
கொரிய பிரதிநிதி பேசுகையில், மீள் குடியேற்ற பணிகள் தொடர்பாக இலங்கை அரசு அளித்த உறுதிமொழி வரவேற்கத்தக்கது இலங்கை அரசு எடுக்கும் முயற்சிக்கு கொரியா ஆதரவு அளிக்கப்படும் என கூறினார்.
இங்கிலாந்து கருத்து:
இங்கிலாந்து பிரதிநிதி பேசுகையில், ஐ.நா., விசாரணை அறிக்கை மட்டும் தீர்வாக அமையாது. இலங்கையில் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த துணை நிற்போம் என கூறினார்.
இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு ஜப்பான் எப்போதுமே துணை நிற்கும் என ஜப்பான் பிரதிநிதி கூறினார்.
பிரான்ஸ் கண்காணிப்பு:
  கூட்டத்தில் பேசிய பிரான்ஸ் பிரதிநிதி, மனித உரிமைகளை காக்க ஐநா பரிந்துரைகள் அமல்படுத்துவதை தொடர்ந்து கண்காணிக்கப்படும். இலங்கை போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். போர்க்குற்றம், மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என கூறினார்.
பாகிஸ்தான் கருத்து:
பாகிஸ்தான் பிரதிநிதி பேசுகையில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சர்வதேச ஒத்துழைப்பு உதவி வேண்டும். இலங்கை நடவடிக்கையை விமர்சிக்கும் நாடுகள் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள். எந்த மாதிரியான விசாரணை தேவை என்பதை முடிவு செய்ய இலங்கைக்கு உரிமை உண்டு என கூறினார்.
ஆஸ்திரேலியா கருத்து:
ஆஸ்திரேலிய பிரதிநிதி பேசுகையில், போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா., அறிக்கையை தீவிரமாக எடுத்துள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கை தேவை என கூறினார்.
கனடா கருத்து:
 கனடா நாட்டு பிரதிநிதி பேசுகையில், மனித உரிமைகள், ஜனநாயகம், சட்டம் ஒழுங்கை காக்க இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்லிணக்க குழுவின் பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும். மனித உரிமை மீறலில் ஈடுபட்போரை தண்டிக்க நம்பத்தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
சுவிஸ்கவலை: 
  சுவிட்சர்லாந்து பிரதிநிதி பேசுகையில். இலங்கை போரில் ராணுவம் மற்றும் புலிகள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது கவலையளிக்கிறது. சர்வதேசத்தின் ஒத்துழைப்போடு போர்க்குற்ற விசாரணையை நடத்த வேண்டும் என கூறினார்.
யுனிசெப் வலியுறுத்தல்:
போர் காணாமல் போ கொல்லப்பட்ட குழந்தைகளின் உறவினர்களுக்கு உதவி தேவை. குழந்தைகளின் நிலை குறித்து இன்னும் பல குடும்பங்கள் தேடிக்கொண்டிருக்கின்றன. குழந்தைகள் உரிமைகள் விஷயத்தில் இலங்கை ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என யுனிசெப் அமைப்பு வலியுறுத்தியுள்ளது

இலங்கையில் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவை கொலை செய்யும் நோக்கில் நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில் 2 பேருக்கு 290 மற்றும் 300 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் 1999ம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்கா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது புலிகளின் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், சந்திரிகாவின் பாதுகாவலர்கள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். சந்திரிகாவின் ஒரு கண் பறிபோனது. அவர் உள்பட 80 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு உதவியதாக வேலாயுதம் வரதராஜா, சந்திரா ரகுபதி ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில், அவர்கள் தாக்குதலுக்கு உதவி செய்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, இன்று நீதிபதி தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில், வேலாயுதத்தற்கு 290 ஆண்டுகளும், சந்திரா ரகுபதிக்கு 300 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிப்பதாக அறிவித்தார்.

இவ்வழக்கில் ஏற்கனவே ஒருவருக்கு 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

முன்னாள் முப்படைகளின் பிரதானி சரத் பொன்சேகா மீது சாட்டப்பட்டிருந்த அணைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் அவரை விடுதலை செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
அதற்கமைய சரத் பொன்சேகாவிடம் இருந்து பறிக்கப்பட்ட அனைத்தும் அவருக்கு திருப்பி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் சமிந்த சிறிமல்வத்த இத்தகவலை உறுதி செய்துள்ளார்


கிழக்கு மாகாணசபையில் ஏற்படவுள்ள ஆட்சி மாற்றத்தின்போது, முதலமைச்சர் பதவியில் விட்டுக் கொடுப்புக்கு இடமளிக்க வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் கட்சித் தலைமையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

கிழக்கு மாகாணசபையின் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 11 பேரும் இரா. சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் தலைவர்களை கூட்டாக சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
கிழக்கு மாகாணசபையில் ஆட்சி மாற்றத்திற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.
இரு தரப்புக்கும் இடையே இரண்டு தடவைகள் பேச்சுக்கள் நடந்துள்ளபோதிலும், முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ள நிலையில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களுக்கும் இடையே நடைபெற்றுள்ள சந்திப்பின்போது, முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் குமாரசாமி நாகேஸ்வரன் கூறுகின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரே, மீதமுள்ள அடுத்த இரண்டரை ஆண்டுக் காலத்தில் முதலமைச்சராக பதவி வகிக்க வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டை கட்சித் தலைமை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
கிழக்கு மாகாண சபையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பெருன்பான்மை உறுப்பினர்களை கொண்டுள்ளது.
‘கடந்த தடவை அமைந்த ஆட்சியில் தமிழர்களுக்கு இடமளிக்கப்படவில்லை. இதன் காரணமாக ஜனநாயக ரீதியிலும் தார்மீக ரீதியிலும் எதிர்வரும் பதவிக் காலத்தில் தமிழர் ஒருவருக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும்’ என்றும் குமாரசாமி நாகேஸ்வரன் சுட்டிக் காட்டுகின்றார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு கிடைக்காத பட்சத்தில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்தி கட்சியின் ஆதரவை நாடுவது தொடர்பாக கவனம் செலுத்துமாறு தங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கட்சி தலைமை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ அடைந்த தோல்வியின் எதிரொலியாக, அவரது பதவிக் காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழிருந்த மாகாணசபைகளிலும் ஆட்சி மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

2012ம் ஆண்டு கிழக்கு மகாண சபைத் தேர்தலில் 37 உறுப்பினர்களில் 15 உறுப்பினர்களை வென்றிருந்த ஐ.ம.சு.கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவுடன் 22 உறுப்பினர்களைக் கொண்டு ஆட்சியை அமைத்துக் கொண்டது.

தற்போது முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஐ.ம.சு. கூட்டமைப்புக்கான ஆதரவை விலக்கிக் கொண்டுள்ள நிலையில் தற்போதைய ஆட்சி பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது.

2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்ற முடியாத நிலையில் செவ்வாய்க்கிழமை வரை சபை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள றக்ன லங்கா தனியார் பாதுகாப்பு சேவைக்கு சொந்தமான ஆயுத களஞ்சிய சாலை சற்று முன்னர் பொலிஸாரால் திறக்கப்பட்டுள்ளது.

குறித்த பாதுகாப்பு சேவைக்கு சொந்தமான ஆயுதங்கள் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகிடைத்ததையடுத்தே இக்களஞ்சியசாலை கடந்த சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.
 பின்னர் கொழும்பு பிரதான நீதவானின் உத்தரவுக்கு அமைய குறித்த ஆயுத களஞ்சிய சாலை இன்று திறக்கப்பட்டு சேதனை நடவடிக்களை மேற்கொள்ளப்படுகிறது
Saturday, December 07, 2013
இலங்கை::அகில இலங்கை தமிழ் மொழிப் போட்டியில் தொடர்ந்து ஐந்து வருடங்கள் முதலிடம் பெற்ற மட்டக்களப்பு மெதடிஸ் மத்திய வித்தியாலய மாணவன் ஜே. சேஷயனைப் பாராட்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விருது வழங்கினார்.

சக மாணவர்கள் குழுவொன்றுடன் அவர் நேற்று (05) அலரி மாளிகைக்கு வந்தபோதே ஜனாதிபதியின் பாராட்டையும் விருதையும் பெற்றார்.
இந்த மாணவர் 2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் அகில இலங்கை தமிழ் மொழிப் போட்டியில் தொடர்ந்து முதலிடம் பெற்றுள்ளார்.
வித்தியாலய அதிபர் கமல ராஜா மற்றும் ஆசிரியர் குழுவினரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.