Archive for the ‘ஊர் புதினங்கள்’ Category

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலருக்கு அவர்களின் நடத்தைகளின் அடிப்படையில் அமைச்சுப் பொறுப்புக்களை வழங்கலாம் என்று ஆங்கில நாளிதழ் ஒன்று பரிந்துரை செய்துள்ளது.

இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களையும், அதற்கான காரணங்களையும் அந்த நாளிதழ் இவ்வாறு வெளியிட்டுள்ளது.

விமல் வீரவன்ச :

விமல் வீரவன்சவை, கலாசார அமைச்சராக நியமிக்கமுடியும்.

காரணம், அவர் வரலாற்றை மாற்றி எழுதக்கூடியவர். இடம்,மொழி தெரியாமல் எங்கேயும் கருத்துக்கூறக் கூடியவர். மேலைத்தேய நாடுகளுக்கு எதிராக போராட்டம் செய்யக்கூடியவர். அதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தியவர். எனவே அவரை கலாசார அமைச்சராக்கலாம்.

பந்துல குணவர்த்தன :

இலங்கையில் நாளுக்கு நாள் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், குடும்பம் ஒன்று 7500 ரூபாவில் வாழ்க்கையை நடத்தமுடியும் என்று கூறும் இவர், நிதியமைச்சராக நியமிக்கப்படவேண்டும். இவ்வாறான ஒரு அமைச்சரால் மட்டுமே நாட்டு மக்களை பற்றி சிந்திக்காமல் அரசாங்கத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க முடியும்.

சனத் ஜெயசூரிய :

தான் உள்ளிட்ட வீரர்களை இலங்கையின் தேசிய கிரிக்கட் அணியில் இணைத்து விளையாடுவதற்கும், தொலைக்காட்சியில் கிரிக்கட்டை பற்றி பேசிக் கொண்டிருப்பதற்கும் மட்டுமே இவரால் முடியும் என்பதால் இவரை விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கலாம்.

டி.எம்.ஜெயரத்ன :

அநாவசியமான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்புவதற்கும் நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துக்களைக் கூறுவதற்கும், மத விவகாரத்தில் உணர்வுபூர்வமாக நடந்துக்கொள்வதற்கும் இவருக்கு முடியும். எனவே இவரை பொதுமக்கள் தகவல்பரப்புரை அமைச்சராக நியமிக்கலாம்.

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ :

இவர், இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்களை கடலில் வீசியவர். அத்துடன் முட்டைகளுக்காக வான்கோழிகளை இறக்குமதி செய்ய வேண்டும் என பரிந்துரைத்தவர். பாலுக்காக ஒட்டகங்களை தருவிக்கக் கூடியவர். எனவே இவரை ”நடைமுறைக்கு அப்பாற்பட்ட ஏற்றுமதி இறக்குமதி” அமைச்சராக நியமிக்கலாம்.

ஜி.எல்.பீரிஸ் :

அழைத்தோ அழைக்காமலோ பல வெளிநாடுகளுக்குச் சென்று ஏதோ பேசிவருகிறார். பல விடயங்களை மறைக்கக்கூடியவராக செயற்பட்டு வருகிறார். எனவே இவரை ”உலகம் சுற்றும் மற்றும் மறைப்புத்துறை” அமைச்சராக நியமிக்கலாம்.

எஸ்.பி.திஸாநாயக்க :

பல்கலைக்கழக மாணவர்களை அடக்குவதிலும் கல்வியை தனியார் மயப்படுத்துவதிலும் உறுதியாக இருப்பதால் இவருக்கு தற்போதுள்ள அமைச்சையே தொடர்ந்தும் வழங்கலாம்.

டக்ளஸ் தேவாநந்தா :

எப்போதுமே இவர் அரசாங்க அமைச்சர். வடக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பொன்றை வைத்திருக்கிறார். கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு அறிக்கையில் இவரைப் பற்றியும் இவரது அமைப்பு பற்றியும் கூடாத விடயங்கள் கூறப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்.

இத்தனை குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் ஜெனீவாவுக்கான இலங்கையின் உத்தியோகபூர்வ மனித உரிமைகளுக்கு பதில் சொல்லும் குழுவில் சேர்க்கப்பட்டிருந்தார்.

வடக்கில் இவர் அதிகாரத்தை கொண்டிருப்பதால் ”வடக்கின் முழு அதிகாரத்தையும் இவரிடம் ஒப்படைக்கலாம்” என்று குறித்த ஆங்கில நாளிதழ் பரிந்துரை செய்துள்ளது.

நன்றி :சண்டே லீடர்

Advertisements

இலங்கை::மாத்தறை – நில்வலா ஆற்றின் மாலிம்பட பிரதேசத்தில் பல உயிர்களை காவுகொண்ட முதலையொன்று பிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதலையொன்றினால் பாடசாலை மாணவி ஒருவரின் உயிர் காவுகொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, முதலைகளை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன,

இதற்கமைய, முதலைகளை பிடிப்பதற்கான நடவடிக்கை கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாணவியின் உயிரை காவுகொண்ட முதலையா பிடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து உறுதியாக கூறமுடியாதென சுகாதார பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

மாத்தறை நில்வளா கங்கையிலுள்ள முதலைகளை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

அமெரிக்க நியூயோர்க் விமான நிலையத்தில் இந்திய பாலிவூட் நடிகர் ஷாருக்கான் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இச்செயலுக்கு கடும் கண்டனம் விடுத்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இவ்விவகாரத்தை உடனடியாக அமெரிக்க அரச அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் படி அமெரிக்காவுக்கான இந்திய தூதுவர் நிருபமா ராவிடம் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்தியர்களை அவமானப்படுத்தும் நோக்கில், இவ்வாறு தடுத்துவைத்திருப்பதும் பின்னர் அதற்காக வருத்தம் தெரிவிப்பதும் அமெரிக்காவுக்கு வாடிக்கையாகிவிட்டது எனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

பிரபல யேல் பல்கலைக்கழக மாணவர்கள் சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றுவதற்கான நிகழ்ச்சி ஒன்றிற்காக ஷாருகான் அழைக்கப்பட்டிருந்தார். அப்பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பனியின் புதல்வியாரான இஷா, இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

நியூயோர்க் விமானநிலையத்தில் ஷாருக்கானுடன், இஷாவின் தாயார் நீடா அம்பானி மற்றும் பலரும் வந்திருந்தனர். எனினும் அமெரிக்க குடிவரவு திணைக்கள அதிகாரிகள் மற்றையவர்களை உடனடியாக நாட்டுக்குள் அனுமதித்த போதும் நடிகர் ஷாருக்கானிடம் விசாரணை என்ற பெயரில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக  தடுத்து வைத்த பின்னர் விடுவித்துள்ளனர்.

இச்சம்பவத்தின் பின்னர் அன்று மாலை பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஷாருக்கான் ‘நான் ஒன்றரை மணித்தியாலத்திற்கு மேலாக விமானநிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். எப்போதெல்லாம் என்னை நான் ஓர் ஸ்டாராக நினைக்கிறேனோ அப்போதெல்லாம் உடனடியாக அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவேண்டும். அப்போது நானும் ஓர் அடிமட்டத்தவனாக உணர்ந்து கொள்ள முடியும்’ என நகைச்சுவையாக கூறினார்.

மேலும், அவரது உயரம் பற்றி குடிவரவு திணைக்கள அதிகாரிகள் கேள்வி எழுப்பிய போது 5 அடி 10 அங்குலம் என வேடிக்கையாக பதில் கூறியதாகவும், அடுத்த முறை இந்த சவால்களை எதிர்கொள்ளும் போது இன்னமும் வேடிக்கையாக பதில் கூறவேண்டும் என நினைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உதாரணத்திற்கு ‘நீங்கள் என்ன நிறம்? என கேட்டால் ‘வெள்ளை’ என கூறவேண்டும் என்றார்.

நடிகர் ஷாருக்கான் இதற்கு முன்னரும் மூன்று முறை அமெரிக்க விமான நிலையங்களில் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமையும் இதே போன்று அமெரிக்க அதிகாரிகள் தடுத்துவைத்து விசாரணை மேற்கொண்டதுடன்  பின்னர் இச்செயலுக்கு மன்னிப்பு கோரியிருந்தனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 65 ஆவது பிறந்த தினத்தையும், இரண்டாவது பதிவியேற்பு நிகழ்வையும் முன்னிட்டு சுற்றாடல் அமைச்சு ஏற்பாடு செய்துள்ள தேசத்துக்கு நிழல் (தெயட்ட செவன) தேசிய மர நடுகை திட்டம் செவ்வாய்கிழமை நாடு முழுவதும் இடம்பெறுகிறது. இதன் போது 11 இலட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் சகல அமைச்சுகள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள், மாகாண சபைகள், மாவட்ட பிரதேச செயலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றின் பங்களிப்புடன் 29 இலட்சத்து 2851 மரக் கன்றுகள் நடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 15 ஆம் திகதி மேற்படி தேசிய மர நடுகைத் திட்டத்தை நடத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதனூடாக சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் நீர் ஊற்றுக்கள், வளி மண்டலம் ஆகியவற்றை காக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ‘தெயட்ட செவன’ திட்டத்துடன் இணைந்ததாக யாழ்ப்பாணம் பளையிலுள்ள தெங்கு பயிர்ச் செய்கை சபைத் தோட்டத்தில் 4 ஆயிரம் தென் னங்கன்றுகளை நடும் நிகழ்வு செவ்வாய்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிறீஸ் பூதம் -கிறீஸ் யக்கா- என்ற மர்ம மனிதர்களின் அச்சுறுத்தல் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றது. இந்த மர்ம மனிதர்கள் பற்றிய பல கதைகள் கூறப்படுகின்றது. அவற்றில் அரசியல் பின்னணியுடனும், மத பின்னணியுடனும் கதைகள் உலாவருகின்றது.

இன்னும் ஊடகங்கள் குறிப்பாக சிங்கள மொழி ஊடகங்கள் கிறீஸ் பூதம் -கிறீஸ் யக்கா- வார்த்தைகளின் ஊடாக கொடுத்த முக்கியத்துவம் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள சமூக விரோத கும்பல்களை இவ்வாறான மர்ம மனிதர்களாக நடமாட ஊக்குவித்துள்ளது என்றும் கூறலாம். தினமும் இடம்பெறும் சாதாரன் சமூக விரோத நடவடிக்கைகள் அனைத்தும் இப்போது கிறீஸ் பூதங்களின் மர்ம நடவடிக்கையாக பார்க்கபடுகின்றது. ஆனாலும் நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிறீஸ் பூதம் என சந்தேகிக்கப்படும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய மாகாணம் ஹட்டன் பிரதேசத்தில் கிறீஸ் பூதம் -கிறீஸ் யக்கா- என சந்தேகிக்கப்படும் ஒரு குழு தலைமறைவாக இருப்பதாக பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து பதுளை மற்றும் ராகலை பகுதிகளில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதேபோன்று கல்கினை, அலவத்துகொட, அப்புத்தளை, தம்பேதன்னை பண்டாரவளை, வெலிமடை, பதுளை, பசறை, கொட்டகலை மற்றும் நாவலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் இருப்பதாக தெரிவித்து பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தில்  வரிப்பத்தான்சேனை, இறக்காமம், ஒலுவில், அக்கரைப்பற்று மற்றும் மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளில் இத்தகைய மர்ம மனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் மர்ம மனிதன் என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் இறக்காமம் பிரதேசத்தில் பொதுமக்களினால் பிடிக்கப்பட்டு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதன் பின்னணி மற்றும்  உண்மைத்தன்மை பற்றி எதுவும் தற்போது கூறமுடியாவிட்டாலும் இதில் ஒரு நன்மையையும் இருக்கிறது. சமூகத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் என்று சந்தேகிக்க படுபவர்கள் பலர் பொதுமக்களினால் கண்காணிக்கப் படுவதுடன் பலர் கைதாகியும் உள்ளனர். தற்போது இந்த கிறீஸ் பூதம் கதை அனுராதபுரம், புத்தளம் ஆகிய பிரதேசங்களின் பின்தங்கிய கிராமங்களிலும்  பேசப்படுகின்றது .

அக்கரைபற்றுவில் 02  மையவாடி இருபதனை நீங்கள் அறிவீர்கள்.இவற்றை பல அமைப்புக்கள் அபிவிருத்தி செய்து வருகின்றன.இன் நிலையில் பதர் மைய வாடி சென்ற தேர்தல் மேடைகளிலும் பேசப்பட்டது உங்களுக்கு தெரியும் .அரசியல் இலாபத்துக்காக அமைச்சர்  பேசினார். ஆனாலும் அதில் தோல்வியும் கண்டார் .இந்த மையவடினை பொறுத்த வரை சூன மாஸ்டர், தொடக்கம் அபிவிருதினை பலர் செய்துள்ளனர்.
 
எல்லாம் உங்களுக்கு செய்து தருவேன் என கூறி பாதூர் பிரதேச மக்களின் வாகுகளை பெறுவதற்காக கஅமைச்சர் பேசினார் .உங்களுக்கு 02 முட்டை விடும் கோழிகளை தருவேன் என்றும் பேசியதாக மக்கள் கூறுகின்றனர் .இன் நிலையில் பதர் மைய வாடி அபிவிருத்தி பற்றியும் அமைச்சர் பேசினாராம் .ஆனால் அவர் நினைத்ததை மக்கள் செய்யவில்லை அதாவது தவத்தை மக்கள் தோட்கடிகவில்லை. இதன்னால் அவருக்கு வாக்குறுதிகள் மறந்தே விட்டன .இந்நிலையில் பொறுமை காத்த மக்கள் பணம் அறவீடு செய்து மைய வாடியின் சுற்று மதிலை அமைத்துக்கொண்டுள்ளனர் .ஜுனூன் என்பவர் இதில் பிரதானமானவர். 
 
இதனை அறிந்த அமைச்சர் இதன் பின்னால் தவத்தின் கரம் இருக்குமோ என பயந்து உடனடியாகஇதனை நிறுத்துமாறு  தனது சபைக்கு கட்டளை இட்டாராம் .இப்படி மக்கள் இதனை கட்டி முடித்தால் தனது கௌரவம் என்னாகும் ?இதுவும் அவருக்கு பிரச்சினை .
சம்பந்த பட்ட சுநூனை அழைத்து தான் இதனை கட்டி தருவதாக  கூறியுள்ளார் .15 நாட்களுக்குள் கட்டாவிட்டால் என்ன செய்வது என ஜுனூன் அமைச்சருக்கு காலக்கெடு விதித்தாராம் .அமைச்சரில் நம்பிக்கை இல்லாத பிரதி மேயர் ரிசாம் தான் அதனை செய்வேன் என கூறி உள்ளார் .எப்படியோ இன்று ஜுனூன் ஆரம்பித்த  வேலைகளை தொடந்து செய்வதற்காக மேயரும் ,ஏனையவர்களும் மையவாடி வேலைகளை ஆரமிக்க உள்ளார்கள் .ஜுனூன் இவற்றை செய்யாது விட்டால் நமக்கு மதிலும் கிடைதிருகாதோ  என மக்கள் பேசுவதோடு  சுநூனுக்கு நன்றி கூருவதனையும் கேட்க முடிந்தது .மைய வாடி மதிலை நானே காட்டினேன் என்று பெயர் எடுபதட்கு அமைச்சர் முயல் கிறாரோ .ஏன் இப்படி உங்களுக்கு இந்த நிலை வந்தது அமைச்சரே ?அதற்கு எவ்விடத்தில்  அடிச்சாலும் காலை கிளப்புவது போன்று எதிலும் தவம் அடிகின்றானா ? என்று பயம் பிடித்துள்ளதோ ….பது நகர் மதிலுக்கு ஜுனூன், இன்னும் எதையும் எவனாவது ஆரம்பித்தால் நீங்கள் முடிக்க வருவயளோ. பாவம் …..
 

Thanks அவதானம்

நமது பிரதேச  வீதிகள் அண்மைக்காலமாக மோட்டார் கிரேடர் மூலம் செப்பநிடபட்டதை அறிவீர்கள். இத்திட்டம்  பிரதேச செயலகம் மூலம் நடைமுறைபடுத்த படுகின்றது .
இதனை செய்விக்கும் அதிகாரிகள் அபுல்ஹசன் , ஆஹிர் ,அஜீர்  ஆவர்.
நடப்பது என்ன ?
வீதிகள் போடப்பட்டு விட்டதாகவும் அதற்கான பணத்தினை கணக்கு பிரிவிடம் வவுச்சர் மூலம் இவர்கள் கோரியுள்ளனர்.ஆனால்,இதில் சந்தேகம் இருபதாக நாங்கள் அறிவித்தம்.விபரங்கள் வருமாறு
01 அக்கரைப்பற்று ஆயுர் வேத வீதி போடப்பட்டதாகவும் 15 qube கிரஷர் போட்டதாகவும் 48000 ரூபா கணக்கு வவுச்சர் போடப்பட்டதாக அறிந்துள்ளோம் .2011 / 06 /20    வரை இந்த வீதி போடப்பட வில்லை .போடாத வீதியை போட்டதாக கணக்கு காட்டி பணத்தை கொள்ளையடிக்க முயற்சிக்கும் கொள்ளையர்களே  ஆஹிரே , ஹசனே ,அஜீரே , மக்கள் விழிப்பாக உள்ளனர் (இந்த விடயம் பிரச்சினை என்பதை அறிந்த கொள்ளையர்கள் 2011 / 6 /21 காலை மண்  கொட்டியுள்ளனர்.இந்த விடயம் வெளியே வர விட்டால் நமது பணம் 48000 அம்போ,வவுச்சர் திகதி  17 க்கு முன்னராகும்) .
02 இச்சங்கனி சேமயில் 14 மணித்தியாலம் வேலை செய்து விட்டு 51 மணித்தியாலம் மோட்டார் கிரேடர் வேலை செய்ததாக கணக்கு காட்டி யுள்ளனர் .
03aalim நகரில் 01 நாள் வேலை செய்து விட்டு 31 மணித்தியாலம் மோட்டார் கிரேடர் வேலை செய்ததாக கணக்கு காட்டி யுள்ளனர் .
கிராம உத்தியோகத்தர்களே உங்களுக்கு உண்மை தெரியுமல்லவா?
accountant அவர்களே ,அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் வவுச்சர் களை பொது மக்கள் பார்வைக்கு வையுங்கள் .
பிரதேச  செயலாளரே நடவடிக்கை எடுங்கள் .
தொடரும் ….

News by அவதானம் செய்திகள்

கொடிகாமத்தில் உள்ள எனது நண்பனின் அப்பாவின் ஆண்டுத் திவசத்துக்குச் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தேன். ஒருபோன் வருகிறது. உடனே வீதி ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டுப் போனை எனது சேட் பொக்கெற்றிலிருந்து எடுத்து யார் என்று கதைக்க எங்கே நிற்கிறாய்? ஒரு பெண் குரல்… யார் என்று கேட் டேன் நான்தான் தம்பி உனது பெரியம்மா எனச் சொல்ல, ஓ… என்ன விசயம் என்று கேட்க, ஒருக்கால் வீட்டை வந்து போயேன் என்று சொன்னா. என்ன விசயம் என்று மறுபடியும் கேட்டேன். நேரில் வா சொல்கிறேன் என்று சொல்லிப் போனை பெரியம்மா துண்டித்துவிட்டா.
கொடிகாமத்தில் இருந்து வந்த களைப்பைப் பாராமல் வலிகாமம் பகுதியில் இருக்கும் பெரியம்மா வீட்டுக்குச் சென்றேன். என்னைக் கண்டதும் அங்கே நின்ற எல்லோரின் கண்ணில் இருந்தும் கண்ணீர் வந்து கொண்டிருந்தது.
என்ன நடந்தது என்று கேட்டேன். பெரியம்மா உடனே உள்ளே வாவன் என்று அக்கம் பக்கம் பார்த்துச் சொல்லிவிட நானும் உள்ளே பதற்றத்துடன் சென்றேன்.
 இதைப் பாரண்டா, பெரியப்பாவின் மண்டையை பக்கத்து வீட்டுப் பெடியன் கொட்டனாலே அடித்து உடைத்து விட்டான். இப்ப ஆஸ்பத்திரியிலே மறிச்சுப் போட்டாங்கள். ஏன் என்ன நடந்தது என்று கேட்க… வேறு என்ன என்ர மகள் கம்பசில படிக்கப் போய் பேஸ்புக்கில தனது படத்தையும் விலாசத்தையும் போன்நம்பரையும் கொடுத்து வைத்ததாலே பிரச்சினை வந்திட்டுதடா என்றார். பிரச்சினை என்ன என்று கேட்க பிரச்சினையோ… வெளிநாட்டில் வேலை பார்க்கிற ஒருவன் இவளது பேஸ்புக்கில் இவளைத் தொடர்பு கொண்டு தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வலுக்கட்டாயப்படுத்தி வருகிறான்.
அவன் யாரென்றும் தெரியாது. இவளது போன் நம்பரில கதைக்கிறான். பக்கத்து வீட்டுப் பெடியனுக்கு அவனைத் தெரியும். ஆதலால் பக்கத்து வீட்டுப் பெடியனுடன் அவன் கதைத்து என்ர மகளோடு பேசும்படியும் சொல்லியிருக்கிறான். அவனும் அடிக்கடி என்ற மகளை வீதியில் மறிக்கிறதும் அவனைத் திருமணம் செய்யும்படியும் வற்புறுத்துகிறதும் நாளுக்குநாள் கூடிக் கொண்டே செல்கிறது. இதனைக் கண்ட என்ர அவர் போய்க் கேட்டதும் என்ன ஏது என்று சொல்லாமல் தலையில் கொட்டனால் அடித்துவிட்டான். 
நீங்கள் ஏன் பொலிஸுக்குப் போகவில்லை என்று கேட்க… பொலிஸுக்குப் போகப் பயமாக இருக்கிறது. பொலிஸுக்கு முறைப்பாடு செய்தால் என்ன நடக்கும் என்று தெரியுமோ என்று வெருட்டுகிறான். என்ன நீங்கள் எந்த உலகத்திலே இருக்கிறியள். பேஸ் புக்கில் பிரச்சினைகள்வரும் என்று தெரியாதா என்றேன். எனக்கு என்னடா விளங்கும். பேஸ்புக்  என்றால் ஏதோ ஒரு படிக்கிற புத்தகம் என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது. அது இணையத்தள வசதி என்று. படிச்ச இவளுக்கு என்ன தெரியும். இப்படி மாட்டுப்பட்டுப் போய் இருக்கிறாள். 
சரி சரி நடந்தது நடந்து போச்சு. மகளிட்ட போனைக் கொடுக்காதேங்கோ. இனி ஏதாவது நடந்தால் பார்ப்பம் என்று சொல்லி விட்டு பெரியம்மா வீட்டை விட்டு வெளிக்கிட்டுச் சென்றேன். அந்தப் பக்கத்து வீட்டுப் பெடியன் வீட்டு போட்டிக் கோவில் நின்று கொண்டு என்னைப் பார்த்துக் கொண்டு நின்றான். எனக்குப் பயமாக இருந்தது. அவன் ஏதோ தன்னைக் கட்டுப்படுத்த வந்தனான்போல என்னைப் பார்த்துக் கொண்டு நின்றான். 
அவனைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் மோட்டார் சைக்கிளை வேகமாக எடுத்துக் கொண்டு வந்தேன். பார்த்தியளோ  உந்த பேஸ் புக்காலை வந்த வினையை. இது உலகத்திலை பேசுகிற ஒரு விடயம். பேஸ்புக் சம்பந்தமாக எத்தனை குற்றங்கள் நடந்திருக்கின்றன என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படு கிறது. பேஸ்புக்கைப் பயன் படுத்துபவர்களுக்குத் தெரிய வில்லையா ஆழம் தெரிந்தும் காலை விட்டு விட்டு எடுக்க முடியாமல் அவஸ்தைப்படுகிறவர்களில் கூடுதலானவர்கள் பெண்கள்தான்.
ஆகவே, பெண்கள்தான் இந்த பேஸ்புக்கைப் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டு மோட்டார் சைக்கிளின் வேகத்தைக் கூட்டிக் கொண்டு கொக்குவில் பகுதிக்கு வரும்போது அங்கே இருந்த நெற்கபேயில் இருந்து பல இளம் பெண்கள் வெளியேறிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டு வந்தேன்.
நன்றி: நியூ யவ்னா