Archive for the ‘கவிதை’ Category

முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக கவிஞர் வைரமுத்து ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில், ’’முல்லைப் பெரியாறு பிரச்சினை நாளுக்குநாள் தீவிரம் அடைவது கவலை தருகிறது. அந்த தண்ணீர் குடித்து வளர்ந்தவன் என்பதால் இன்னும் கூடுதலாக வலிக்கிறது. கேரளம் ஒன்றை மறந்து விட்டது. முல்லைப் பெரியாற்று தண்ணீரில் கேரள சகோதரனுக்கும் சேர்த்துத்தான் எங்கள் தமிழன் நெல் விளைவிக்கிறான். காய்கறி பயிரிடுகிறான். 
 
கேரளம் தங்கள் உணவுக்கு எதிராகவும், எங்கள் உணர்வுக்கு எதிராகவும் நடந்து கொள்வது என்ன நியாயம்? என்னவோ தெரியவில்லை. உடைந்த சோவியத் யூனியன் என் நினைவில் வந்து வந்து போகிறது. மூன்றாம் உலகப்போர் மூண்டால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற கணிப்பு ஒன்று உண்டு. அந்தப் போர் எங்குமே நிகழக் கூடாது. குறிப்பாக, இந்தியாவில் தொடங்கிவிடக்கூடாது. 
 
அணை பலவீனமாகி விட்டது என்ற உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு சொல்லப்பட்டு 33 ஆண்டுகள் கழிந்து விட்டன. அதன்பிறகு நவீன தொழில்நுட்பத்தோடு அணையும் வலிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. 33 ஆண்டுகள் உடையாத அணையை உங்கள் சுயநலம் உடைக்கப் பார்க்கிறது. 
 
எங்களைப் போன்ற படைப்பாளிகள் கலக்கத்தோடு கவனித்துக் கொண்டிருக்கிறோம். நியாயத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கு சாதகமாக ஒரு நிரந்தர தீர்வு இதில் எட்டப்படாவிட்டால், எங்களைப் போன்றவர்களையும் காலம் களத்தில் இறக்கிவிடலாம். 
 
பச்சைத்தமிழ்நாடு பாலைவனமாக சம்மதிக்க மாட்டோம். போராடுவோம். முல்லைப் பெரியாற்றை விடமாட்டோம். மலையாளிகளைத் தொட மாட்டோம் என்ற முழக்கத்தோடு முன்னேறுவோம். தமிழர்கள் பட்ட சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? விதியே விதியே என் செய நினைத்தாய் தமிழ் சாதியை? தமிழ் இனமே ஒன்றுபடு. இந்திய அரசே தலையிடு’’ என்று கூறியிருக்கிறார்.
Advertisements
                                                     எம்.எச்.எம்.அஷ்ரப்
போராளிகளே புறப்படுங்கள்!
ஒரு துப்பாக்கியின் ரவைகளினால்
எனது இரைச்சல் அடங்கி விட்டதுக்காய்
நமது எதிரி
வென்றுவிட்டான் என்று நீ
குழம்பிவிடக் கூடாது!

அன்றுதான்
போராட்டம் எனும் நமது
இருண்ட குகைக்குள்
வெற்றிச் சூரியனின்
வெண்கதிர்கள் நுழைகின்றன
என்பதை நீ மறந்து விடவும் கூடாது!

உனது தலைவனுக்கு
ஒன்றுமே நடக்கவில்லை என்பதனை
நீ எப்போதும் மறந்திடாதே!

தலைவர்கள் ஒரு போதும்
மரணிப்பதில்லை என்பதனை
நான்
சொல்லித்தரவில்லையா?
என்னை அதற்காய் நீ
மன்னித்து விடுவாயாக!

நாம் அல்லாஹ்வின் பாதையில்
நடந்து வந்தவர்கள்
நீங்களெல்லாம் தொடர்ந்து அப்பாதையில்
நடக்க இருப்பவர்கள!

இந்தப் போராட்டத்தில்
சூடுண்டாலும்இ வெட்டுண்டாலும்
சுகமெல்லாம் ஒன்றேதான்!

நமது போராளிகள்
யாரும் மரணிக்கப்போவதில்லை!

போராளிகளே புறப்படுங்கள்
ஓரத்தில் நின்று கொண்டு
ஓய்வேடுக்க நேரமில்லை!

இந்த மையத்தைக் குளிப்பாட்டுவதில்
உங்கள் நேரத்தை வீனாக்க வேண்டாம்!

தண்ணீரும் தேவையில்லை
பன்னீரும் தேவையில்லை!

உங்கள் தலைவனின் உடலில்
இரத்தத்தால் சந்தனம் பூசப்பட்டுள்ளதா?

அது அவனின் மண்ணறையில்
சதா மணம் வீச வேண்டுமெனில்
தூக்கி விரைவில் எடுத்துச் சென்று
தொழுது விட்டு அடக்குங்கள்!

இந்த மையித்தைக் குளிப்பாட்டுவதால்
கடைசி நேரத்தில் தலைமைத்துவக்
கட்டுப்பாட்டை மீறாதீர்கள்!

கண்ணீர் அஞ்சலிகள் போதும்
கவலைகளை கொஞ்சம் மறந்து தூக்குங்கள்!

இரத்தத்தால் தோய்ந்திருக்கும்
எனது ஆடைகளை எடுத்து வீசாதீர்கள்!
வேண்டுமெனில் எனது ‘இஹ்ராம்’
துண்டுகளை
அவற்றுக்கு மேலே எடுத்துப் போடுங்கள்!

எனது உடலில் இருந்து பொசிந்து வரும்
இரத்தச் சொட்டுக்கள்இ அவற்றை தழுவும்
பசியுடன் இருப்பதைப் பாருங்கள்!

எனது மூக்குக்குள்ளும்
எனது காதுகளுக்குள்ளும்
பஞ்சுத் துண்டங்களை வைத்தென் முகத்
தோற்றத்தை
பழுதாக்கி விடாதீர்கள்!

சில வேளைகளில் உங்களை நான்
சுவாசிக்காமலும்
சில வேளைகளில் உங்களை நான்
கேட்காமலும்
சில வேளைகளில் உங்களை நான்
பேசாமலும் இருந்திருக்கின்றேன்!

குருடர்களாகவும்
செவிடர்களாகவும்
ஊமையர்களாகவும் இல்லாதவர்களால்
இப்போராட்டத்தில் நின்று பிடிக்க முடியாது!

கபுறுக் குழிக்குள்ளாவது
என்னை சுவாசிக்க அனுமதியுங்கள்!
ஹூர்லீன்களின் மெல்லிசைகளை
கேட்டு ரசிக்கும் பாக்கியத்தைத் தாருங்கள்!

தூக்குங்கள் இந்த மையித்தை இன்னும்
சுணக்கவும் தேவையில்லை.
தூக்கி விரைவில் எடுத்துச் சென்று
தொழுது விட்டு அடக்குங்கள்!
ஓரத்தில் நின்றுகொண்டு
ஓயாமல் தர்க்கம் செய்யும்
வீரத்திற்கு வையுங்கள் முற்றுப் புள்ளி!

கருத்து வேறுபாடென்னும்
கறையான்கள் வந்துங்கள்
புரிந்துணர்வை சீரழிக்கும்! மிகவும்
புத்தியுடன் நடந்துகொள்ளுங்கள்!

வேகத்தைக் குறைக்காமல்
வெற்றியுடன் முன்னே செல்லுங்கள்!

ஆலமரமாய்
ஆயிரம் விழுதுகளுடன் நமது மரம்
வாழவேண்டும் – அதை
வாழ்விற்கப் புறப்படுங்கள்!

எனது பணி இனிது முடிந்தது
உங்கள் பணிகளைச் செய்வதற்காய்ப்
புறப்படுங்கள்!

அவனின் நாட்டத்தை
இவனின் துப்பாக்கி ரவைகள்
பணிந்து தலைசாய்நது
நிறைவேற்றியுள்ளன.

விக்கி அழுது
வீணாக நேரத்தை ஓட்ட வேண்டாம்
தூக்கி விரைவில் எடுத்துச் சென்று
தொழுது விட்டு அடக்குங்கள்

தலைப்பிறையும் தாயகமும் !

Posted: ஓகஸ்ட் 25, 2011 by Journalist of AKP in கவிதை

காற்றடித்து பார்த்தஊரு
கடலலையும் புகுந்து
பார்த்த ஊரு
கரிமருந்தும்
கலக்கிப்பார்த்த மண்ணு
காத்த மண்ணு

கலிமத்து தேசமென்று-ஊரின்
கதவோரம் தெரியுமண்ணு !

மிகைந்த
மௌலவி மாரும்
வலிந்து கொடை செய்யும்
வள்ளல்களும்
குவிந்த வூரு

அறபுமொளித்
தெருப்பலகை
தெரியுமூரூ

மக்கத்து ஈச்ச மரமும்- ஊரின்
முற்றத்தே- நிறைந்த பள்ளிகளும்
மார்க்கத்தின்
மகிமை சொல்லும் ஊரு

ரமளான்
‘பாலகப்பிறை’
பிறக்கு முன்னே…

பச்சரிசும் குத்தியெடுத்து
செத்த மிளகாய்த்தூளும்
அரைத்து மெடுத்து
உள்நாவூரும்
ஊறுகாயும் உலர்த்தி யெடுத்து
மாட்டிறைச்சி
மட்டைத்தணலில்
வாட்டி யெடுத்து-எங்க
பாட்டி மாரு
காப்பிலிடும்
காட்சி தெரியுமூரு

நம்

பா(B)வாக்கள்-தானாய்
பாவாக்கள் செய்து
தகராக்கள் சகருக்கு
தட்டி யெழுப்பும்
தெருவோரக்காட்சி
தெரியுமூரூ!

தலைப்பாகை
தலைமறையக்கட்டி
வெள்ளை வேஸ்டியும்
வரிந்து
வாருடன் கட்டி
ஆடவரும்

கறுப்பபாயாவுடுத்து
காலுக்கு சொக்சும்
கையிலெடுத்து
அரிவையரும்
தராபியாவுக்கோடும் காட்சி
அராபியத்தை அருகே
கொண்டுவரும்

அழுது அழுது
தௌபாவும்
விழுந்து விழுந்து
வல்லோனை வளிபட்டும்
கரையான் அரித்த
கல்புகளும்- கழுவி
சுவனத்து சொந்தங்களோடு
சுகந்த பூமி
ஈத்திருநாளோடு
விடியும் !
இல்மி அஹமட் லெவ்வை  – காத்தான்குடி

ஈக்கள் மொய்க்கும் சின்னஞ் சிறுசுகளின்
வறண்டு வெடித்துப்போன உதடுகள்
தொலைக்காட்சி செய்திகட்காய் படமாக்கப்படுகிறது
மொய்க்கும் ஈக்களை எப்பொழுதாவது
இந்தக் குழந்தைகள் பசியில் விழுங்குமாவென
ஒளிப்பட பதிவாளர்கள்
விருது பெறுவதற்காய் காத்துக் கிடக்கிறார்கள்

 வறண்டுபோன விழிகள்
கண்ணீர் விட முடியாது ஏழ்மையில்
கருகிப் போய்க் கிடக்கிறது
நேர்காணல்களை முழுமையாக ஒளிபரப்ப முடியாமல்
வருமான விளம்பரங்கள் காசு கறக்கிறது
எஞ்சிய நேரத்தில்
முபாரக் தண்டிக்கப்பட வேண்டியவராயும்
புஸ்சும் பிளேயரும்
போற்றப்பட வேண்டியவர்களாய் பாடம் புகட்டப்படுகிறது

அழுகி நாறும் முதலாளித்துவம்
குழந்தைகளை தெருவில் வீசி எறிந்திருக்கிறது
முச்சுவிடவும் இயக்கமற்று
முதுமைத் தோற்றத்தொடு சாகடிக்கிறது
இயற்கை வளங்களை வறுகியெடுத்த பின்பாய்
தாயிடம் பாலூட்ட மிஞ்சமென்ன  இருக்கிறது

ஒரு முறடு தண்ணிக்கு
பச்சிளம் குழந்தைகள் பரிதவிக்கின்ற போதும்
நீச்சல் தடாகங்களிலும் நிமிரும் கட்டிடங்களிலும்
பன்றிகள் குளித்துப் படுத்துறங்குகின்றன
ஒலிம்பிக் மைதானங்கள்
ஒவ்வொரு நாட்டிலும் புதிதாய்த் தான் பளிச்சிடுகிறது
வறுமையில் தவிக்கும் குழந்தைகட்கு
வயிறாற்ற  ஜநா அழுது வடிக்கிறது
எசமானத் தேசங்களின் வீட்டோ அதிகாரம்
படை நகர்த்தலுக்கும்
மகிந்தக் கொலையாளிகளின் பாதுகாப்புக்குமாய்
எதிரும் இணைவுமாய்
மக்கள் சக்திக்கு சவால் விடுகிறது

வீட்டோ அதிகாரம்
மக்கள் கரங்களிற்கு மாறும் யுகத்திற்கு….
குழந்தைகள் அவலம்
உழைக்கும் வர்க்கத்தை அழைத்துச் செல்லுக
மழலைகள் ஏழ்மையறியா
சிரிக்கும் உலகு என்று பிறக்கும் வாழ்வு சிறக்கும்….