Archive for the ‘சுகாதாரம்’ Category


sarah_haigh_கழிவுநீரில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை இங்கிலாந்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி உருவாக்கி வருகிறார்.

உலக பணக்காரர் பில்கேட்ஸ் அளித்த நிதியுதவியுடன் இந்த ஆராய்ச்சி நடந்து வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவன அதிபரும், உலக பணக்காரர்களில் முன்னணியில் இருப்பவருமான பில்கேட்ஸ், குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கான கண்டுபிடிப்பை ஊக்குவிக்க நிதியுதவி அறிவித்தார்.

உலகம் முழுவதும் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களது ப்ராஜக்ட்களை அனுப்பினர். அதில் இங்கிலாந்தை சேர்ந்த நானோ தொழில்நுட்ப வல்லுனர் சாரா ஹே என்ற பெண்ணின் ப்ராஜக்ட் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஸ்கூல் ஆப் மெட்டீரியல்ஸ் கல்வி நிலையத்தில் சாரா ஹே ஆராய்ச்சியாளராக பணியாற்றுகிறார்.

லண்டனின் இம்பீரியல் கல்லூரி மற்றும் டரம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து அவர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். ஆராய்ச்சிக்காக முதலில் அவருக்கு பில்கேட்ஸ் அண்ட் மெலிண்டா அறக்கட்டளை ரூ.50 லட்சம் நிதி அளித்துள்ளது.

இதுபற்றி சாரா கூறியதாவது: கழிவுநீரில் இருந்து மின்சாரம் தயாரிப்பது, எரிபொருள் தயாரிப்பது என பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த ஆராய்ச்சியும் அதுபோன்ற முயற்சிதான்.

இயந்திரத்திற்குள் செலுத்தப்படும் கழிவுநீருடன் பாக்டீரியா கலவை மற்றும் நானோ துகள்கள் வினை புரியும். இந்த ரசாயன வினைக்கு பிறகு, ஹைட்ரஜன் வாயு உருவாகும்.

அதை ஹைட்ரசீனாக மாற்றுவது எளிது. அதுதான் ராக்கெட் எரிபொருளாக பயன்படுகிறது. கழிவுநீரில் இருந்து ஹைட்ரஜன் பிரிக்கப்பட்ட பிறகு, அந்த நீர் மேலும் மேலும் வடிகட்டப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக மாற்றப்படுகிறது.

உலகின் பல நாடுகளில், பல பகுதிகளில் குடிநீருக்கு மக்கள் திண்டாடுகின்றனர். சுத்தமான குடிநீர் தேடி பல கி.மீ. செல்கின்றனர். குடிநீருக்காக மக்கள் சிரமப்பட கூடாது என்பதே இந்த ஆராய்ச்சியின் நோக்கம்.

இயந்திரத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணி நடக்கிறது. அடுத்த ஆண்டில் பணி முடிந்து செயல் விளக்கம் அளிக்கப்படும். எங்கும் எளிதில் எடுத்து செல்லும் வகையில் இந்த மெஷின் இருக்கும் என்று கூறினார். அடுத்த ஆண்டில் இந்த ஆராய்ச்சிக்காக பில்கேட்ஸ் அறக்கட்டளை ரூ.5 கோடி நிதியை சாராவுக்கு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

சவர்க்காரம் இட்டு கை கழுவாமல் உணவுப் பொருட்களை உண்பதால் வாந்திபேதி, நியூமோனியா போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இவ்விரு நோய்களினாலும் உலகில் வருடமொன்றுக்கு இரண்டு மில்லியன் சிறுவர்கள் (20 இலட்சம்) மரணமடைகின்றனரென யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி அப்துல்லா கான் தெரிவித்தார்.

உலக கைகழுவல் தினத்தின் தேசிய வைபவம் அநுராதபுரம் வலிசிங்க ஹரிச்சந்திர மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது,

இவ்வாறான கைகழுவல் தினங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்படுவதனால் இந்நிலை (45) நாற்பத்தைந்து வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. இன்று இலங்கையில் தொண்ணூறாயிரம் பாடசாலை மாணவர்கள் இவ்வாறான கைகழுவல் தினவைபவங்களில் கலந்துகொள்கின்றனர். நன்கு கைகழுவி சுத்தமாக இருக்கும் பழக்கம் ஒருதினத்துக்கு மட்டுமன்றி வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும். அப்போதுதான் சுகதேகியாக நாம் வாழமுடியும்.

சாதி, மதம் என்ற பேதங்கள் எதுவுமின்றி நாம் கைகழுவல் செயற்பாட்டினை முன்னெடுக்கலாம். எந்த மதத் கோட்பாட்டிலும் எந்த ஒரு சமூக விழுமியங்களிலும் கைகழுவலுக்கு மாற்றுக் கருத்துக் கிடையாது. எனவே நாம் இன்றிலிருந்து இதனைப் பின்பற்றுவோமென பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்திலிருந்து தங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்

கை குலுக்கினால் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் ஏற்படும் என நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.   இங்கிலாந்தில் உள்ள ஸ்டான் போர்டு பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சி நிபுணர் நாதன்வோல்பே தி வைரஸ் ஸ்ட்ராம் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், வயிற்று வலி, காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் போன்றவை தோல் மூலம் மற்றவர்களுக்கு பரவுகின்றன.

அதை தடுக்க சில எளிய முறையை மேற்கொள்ளலாம்.   அன்பை பரிமாறிக் கொள்ள ஒருவருக்கொருவர் கை குலுக்கி கொள்கின்றனர். அதை தவிர்க்க வேண்டும். மாறாக தங்களின் முழங்கைகளால் ஒருவருக்கொருவர் இடித்து கொள்ளலாம். அவை தவிர ஜப்பானியர்களை போன்று ஒருவரை சந்திக்கும் போது தலையை குனிந்து மரியாதையுடன் வணக்கம் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.

இவை தவிர மாசுபட்ட சொதிகலன்கள், கதவு கைபிடி, பணிபுரியும் இடங்கள் ரிமோட் கண்ட்ரோல் போன்றவற்றில் காய்ச்சலை பரப்பும் வைரஸ் கிருமிகள் 24 மணி நேரமும் காத்திருக்கும். அவை மனிதர்களின் மூக்கு, நாக்கு போன்றவற்றின் மூலம் தொற்றிக் கொள்ளும். எனவே தினமும் கைகளை தேய்த்து கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்

விழிகளில் படலம் ஏற்படுகின்றமையால் வருடாந்தம் ஒரு இலட்சம் பேர்வரை பார்வையை இழக்க நேரிடுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.
விழிகளில் ஏற்படுகின்ற படலங்களை அகற்றும் சுமார் 75 ஆயிரம் சத்திரசிகிச்சைகள் வருடாந்தம் அரசாங்க வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் கூறுகின்றது.

விழிகளில் தோன்றும் படலத்தை அகற்றும் சத்திரசிகிச்சையை மேற்கொள்வதன் மூலம் இந்த நோய்க்கு நிரந்தர தீர்வினைக் காணமுடியும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது

சிறுவர்கள் மனநல பாதிப்புகளுக்கு இலக்காகும் தன்மை அதிகரித்துச் சென்றுள்ளதாக அங்கொடை தேசிய மனநல சுகாதார ஆய்வுநிறுவனம் தெரிவிக்கிறது. குடும்பத் தகராறுகள் கல்வி மற்றும் சமூக பிரச்சினைகளே இந்த நிலைமைக்கு காரணமாக அமைந்துள்ளதென அந்த நிறுவனத்தின் பணிப்பாளரும் விசேட மனநல வைத்திய நிபுணருமான ஜயன் மெண்டிஸ் குறிப்பிடுகிறார்.

பிள்ளைகளிடையே மன அழுத்தம் பரந்தளவில் காணப்படுதாகவும் விசேட மனநல வைத்திய நிபுணர் குறிப்பிட்டார். பிள்ளைகளுக்கு சிறந்த இளம் பராயமும், பெற்றோரின் உரிய பராமரிப்பும் பி்ள்ளைகளின் மன அழுத்தங்களை இனங்கண்டு அவற்றுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுப்பதும் அவசியமான ஒரு விடயமாகும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

அத்துடன் இளம்வயதிலேயே பிள்ளைகளுக்கு ஏற்படுகின்ற மனநல பாதிப்புகளை அடையாளம் காண்பது மிக முக்கியமானதாகும் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

               இலங்கையில் தினமும் 900 கருக் கலைப்புக்கள் இடம்பெறுவதாக குடும்ப சுகாதாரப் பணியகம் தெரிவித்துள்ளது.
இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் கருக்கலைப்புக்கள் வருடாந்தம் இடம்பெறுகின்றன. வருடாந்தம் 3 இலட்சத்து 80 ஆயிரம் பிறப்புக்கள் இடம்பெறுகின்ற நிலையிலேயே கருக்கலைப்புக்களும் அதிகரித்திருப்பதாக சமூக, சுகாதார ஆலோசகர் வைத்தியர் கபில ஜெயரட்ண தெரிவித்தார்.

2005 ஆம் ஆண்டிலேயே மிகக் குறைவான 660 கருக்கலைப்புக்கள் நாளாந்தம் இடம்பெற்றிருந்ததுடன், 17 உயிர்கள் வருடாந்தம் இழக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். கருக்கலைப்பில் 92 வீதமானவை திருமணமான பெண்களுடையது 8 வீதம் திருமணமாகாத பெண்களுடையது.

இடம்பெறுகின்ற கருக்கலைப்புக்களில் 27 வீதமானவை 25 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்ட பெண்களுடையது என கணக்கெடுப்பொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

இரவில் முன் கூட்டியே தூங்க சென்று அதிகாலையில் கண் விழிப்பது உடல் நலத்துக்கு நல்லது. அவர்கள் சொல்வாக்கு மற்றும் செல்வாக்குடன் திகழ்வார்கள் என கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்னரே பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர் தெரிவித்து இருந்தார். அது முற்றிலும் உண்மை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கிலாந்தில் உள்ள ரோம்ப்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக சுமார் 1100 ஆண்கள் மற்றும் பெண்களை தேர்ந்தெடுத்தனர். அவர்களில் அதிகாலையிலேயே எழுபவர்கள் ஒல்லியாகவும், நல்ல உடல் நலத்துடனும் இருந்தனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

அதே நேரத்தில் ஆந்தை போன்று இரவு முழுவதும் கண் விழித்து விட்டு மிகவும் தாமதமாக படுக்கையை விட்டு எழுபவர்கள் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் தொலைத்தவர்களாக இருந்தனர். எனவே அதிகாலையிலேயே எழுந்து வழக்கமான தங்கள் பணிகளை தொடங்குபவர்கள் உடல் நலத்துடன் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

ஐரோப்பிய நாடுகளில் பரவிவரும் “ஈ-கோலி’ என்னும் நோய் எமது நாட்டிலும் பரவும் அபாயம் காணப்படுவதாக இலங்கை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உணவு, குடிதண்ணீர் மற்றும் தொற்று நோய்க்கு உட்பட்ட விலங்குகள் மூலம் நேரடியாகத் தாக்கும் கிருமிகளால் இந்த நோய் வேகமாகப் பரவக்கூடியது எனவும் இந்த நோயின் அறிகுறியாக வயிற்றுநோ, வயிற்றுளைவு, மலத்துடன் இரத்தம் வடிதல், காய்ச்சல், வாந்தி போன்றவை காணப்படுமெனவும் குறிப்பாக இளம் சிறார்கள், முதியோர்களைத் தாக்கி உயிராபத்தை ஏற்படுத்தக் கூடியது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் நாட்டில் கடந்த மே மாதம் இந்த நோயால் 773 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இவர்களில் 203 பேர் அபாய கட்டத்தில் இருக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவற்றைவிட, ஐரோப்பாவிலும் ஏனைய நாடுகளிலும் இந்த நோய் வேகமாகப் பரவி வருவதாகவும் இந்த நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருவோர் மூலம் இந்த நோய் பரவக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நோயானது சிறுநீரகத்தை நேரடியாகத் தாக்கி அதன் தொழிற்பாட்டை குறைக்கும் ஆற்றல் உள்ளதால் இந்த நோயால் பாதிக்கப்படுபவரின் இரத்தம் தண்ணீர் தன்மை அடைவதுடன் உறுப்புகளுடாக இரத்தக் கசிவையும் ஏற்படுத்தக் கூடியது.

இந்த நோய் ஏற்படாதிருக்க உணவு அருந்த முன்னரும் பின்னரும் சவர்க்காரத்தால் கைகளைக் கழுவுதல், வெளி இடங்களில் உணவு அருந்துவதைத் தவிர்த்தல், உணவு கையாழும் நிலை யங்களில் பணிபுரிவோர் சுத்தமான ஆடைகளை அணிதல், உணவு வகை தயாரிப்போர் சுத்தமாக இருத்தல், கொதித்து ஆறிய குடிதண்ணீர் பருகுதல் போன்றவற்றைக் கடைப்பிடிக்குமாறு தொற்று நோயியல் பிரிவால் வைத்தியசாலைகளுக்கு அனுப்பிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Following a court order that the marketers of Astra Margarine have evaded displaying the warning label on the product stating the content was harmful to the health of kids under three years, the Health Ministry has ordered the Public Health Inspectors countrywide to check all Astra Margarine packs in the market, Health Ministry sources said.

The Kahatagasdigiliya Magistrate on receipt of a complaint by the Public Health Inspectors in the region asserted that the substance E-319 in the product was harmful to growth of kids less than three years.

Court was informed that the Health Ministry has issued such warning to be displayed on the product by way of an Act and the marketers of the said product conveniently ignored the ministry directive.

Sources said the Health Ministry has sought the assistance of the Consumer Affairs Authority to conduct raids on super markets where the said product was moving fast among all classes of people.

 

உலகம் முழுவதும் சுமார் 10 கோடி பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 1980-ம் ஆண்டில் புதிய கருத்தடை மாத்திரைகளை தயாரித்தனர். அவை “மூன்றாம் தலைமுறை கருத்தடை மாத்திரை” என அழைக்கப்படுகிறது.

இவை இதற்கு முன்பு பெண்களால் பயன்படுத்தப்பட்ட மாத்திரைகளைவிட ஆபத்தானது. இது ரத்தத்தை உறைய செய்யக் கூடியது என கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நிபுணர்கள் 2 ஆய்வுகள் நடத்தினர். அதில் மேற்கண்ட தகவல் தெரிய வந்துள்ளது.

ரத்தம் உறைவதால் சில நேரங்களில் இது உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே டாக்டர்கள் பரிந்துரையின் பேரில்தான் பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.