Archive for the ‘தகவல்கள்’ Category

அவதானம் (1)

Posted: மே 26, 2016 by மூஸா in தகவல்கள், Uncategorized

writer

 

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்……

சமகால இலங்கை முஸ்லீம் அரசியல் வாதிகளுக்கு…….
– பதவிக்காக சமுகத்தை விற்கும் பிணந்தின்னிகள்
– பணத்திற்காக அரசியலை பயன் படுத்துவர்கள்
– சமூக பற்றற்ற சாணக்கியர்கள்
– தங்களின் இருப்புக்காக ஏனையோரை தூற்றும் துர்நாற்றகாறர்கள்
– நல்ல நடிகர்கள்
– பாமரரை பகடைக்காயாக பயன் படுத்துவர்கள்
என்று பல நல்ல பெயர்களும் உண்டு.
இவ்வாறானஅரசியல் வாதிகளின் நடவடிக்கைகளையும் செயற்பாடுகளையும் சமகாலமாக படித்தவர் முதல் பாமரர் வரை, இளைஞ்சர் முதல் முதியோர் வரையும் அறிந்து கொள்ளும் வகையிலும் தங்களது நியாயமான கருத்துக்களை விமர்சிக்கும் வகையிலும் இக்காலத்து சமூக வலைத்தளங்களூம், இலத்திரணியல் பத்திரிகை ஊடாகங்களூம் பெருதும் உபயோகபடுகிண்றன. இவ்வகையில் செய்யபடும் விமர்சனங்கள் இரண்டு வகையாக பிரிக்கப்படலாம்.
(1) ஆக்கபூர்வமாக, நடுநிலையான விமர்சனங்கள்

இவ்விமர்சனங்கள் பொதுவாக சிலர் கட்டுரை வடிவிலும் மேலும் சிலர் அரசியல் வாதிகளின் அண்றாட செயற்பாடுகளை கிண்டல் செய்தும் மூக்குடைப்பு செய்து நமது சமூகத்தின் சமகால தேவைகளையும், அரசியல் வாதிகளின் இயலாமையையும் சுட்டிக் காட்டுகின்றனர். இவர்களின் முளுநோக்கமும் அரசியல்வாதிகளை சமூகத்திற்கு ஏற்ற வாறு மாற்றியமைப்பதாகும்.

(2) காழ்புணர்வு ரீதியான விமர்சனம்கள்
பொதுவாக இவ்வகையானவிமர்சனங்களில் கட்சியின் போராளிகள் மற்றும் அடிமட்ட அரசியல்வாதிகள்,எடுப்புக்கள் தங்களது எதிர்கட்சியின் குறைகளையே விமர்சிக்கின்றனர். இவர்களை பொறுத்தவரையில் இவ்வாறு விமர்சிப்பதால் தங்க ளுக்கு மக்களிடையே ஆதரவும் கட்சியின் தலைமையிடமிருந்து நற்பெயர் போன்றவைகிட்டும் என்றே செய்கின்றார்களே தவிர சமூகரீதியான சிந்தனையில் செய்யவில்லை என்பது யாவரும் அறிந்தவிடயமே.
இவை இரண்டும் தவிர மேலும்சில அடிவருடிப்போராளிகள் அடிமட்ட அரசியல்வாதிகள் தங்களது காழ்புணர்வு ரீதியான பின்னூட்டல்களை செய் து வருகிண்றனர்.

அதாவது……
ஆக்கபூர்வமான அல்லது மக்களை தெளிவூட்டும் விதத்தில்சிலர் பதிவேற்றும் விமர்சனங்க ளானது மாற்றுக்கட்சிக்கு எதிரானதாக அல்லது மாற்றுக்கட்சி பற்றிய விமர்சனங்கள் எனில் அவ்வாறுவருகின்ற விமர்சனங்களுக்கு நல்லவகையான பின்னூட்டல்களை பதிவேற்றவும் விமர்சகர்களை வாழ்த்தவும் செய்கின்றனர்.
அதே விமர்சனம் தங்கள் கட்சிக்கோ அல்லது தங்கள் கட்சிசார்ந்த விடயமாக இருந்தால் மிக கீழ்த்தரமானமுறையில் பின்னூட்டம் செய்தல் மற்றும் அவ்விமர்சகரை மிக மோசமான முறையில் தூற்றுதல் போன்றநடவடிக்கையிலும் ஈடுபடுகன்றனர்
இவ்வாறான நடவடிக்கைஅவர்களின் பின்புலத்தையும் அவர்களின் அறியாமையும் இயலாமையும் தோல்வியையும் காட்டுகின்றதே ஒழிய நற்பெயரை கொண்டு வாரவோ மக்களின் அபிமானத்தைபெறவோ முடியாது என்பதே உண்மை

ஃ இதுபோண்ற காழ்புணர்வு ரீதியான பின்னூட்டல், விமர்சனம்க ளையம் பதிவிடுவது உங்களது இருப்பை கட்சியின் பால்தக்கவைத்துக்கொள்ளுமே ஒழிய மக்களின் அபிமானத்தை அல்ல எண்று இவ் அடிவருடிப்போராளிகளூம் அடிமட்ட அரசியல்வாதிகளூம் உணரவேண்டும் ஏனெனில் நமது சமூகம் அரசியல் பற்றியும் அரசியல்வாதிகள் பற்றியும் மிக தெளிவாகவும் அவதானமாகவும் உள்ளது என்பதே உண்மை …

தொடரும்…..

-மூஸா-

Advertisements

 

இலங்கை::பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் உத்தியோக பூர்வ இணையத்தளமான defence.lk மைக்ரோ சொப்ட் நிறுவனத்துடன் இணைந்து வின்டோஸ் 8 வாடிக்கையாளர்களுக்கு defence.lk இணைய சேவையை இலவசமாக தரவிறக்கம் செய்யும் வசதியை இன்று கொழும்பு மிலோதா நிலையத்தில் இடம் பெற்ற ஒரு நிகழ்வில் வைத்து அறிமுகம் செய்துள்ளது.

இலங்கை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் உத்தியோக பூர்வ இணையத்தளமான defence.lk யானது உலகலாவிய ரீதியில் அதிகமான வாசகர்களை கொண்டுள்ளதுடன் மனிதாபிமான செயற்பாடுகள் இடம்பெற்ற காலகட்டத்தில் மில்லியன் கணக்கான வாசகர்களால் பார்வையிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவ் இலவச சேவையை வின்டோஸ் 8 பயன்படுத்தப்படும் கணனிகள் மற்றும் தொலைபேசிகளினூடாக பெற்றுக் கொள்ள முடியும்.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு கோடாபய ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள இச் சேவையானது அமைச்சின் மேலதிக செயலாளர் (தொழிநுட்பம்) திரு. ரொஹான் செனவிரத்னவினதும் இராணுவத்தின் தொண்டர் படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கவினதும் நேரடி கண்கானிப்பின் கீழும் செயற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் பிரிகேடியர் கே.ஆர்.பி ரொவல், பிரதான சமிக்ஞை அதிகாரி பிரிகேடியர் என்.எம்.எச் ஹட்டியாராச்சி, சமிக்ஞை படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேர்ணல் ஆர்.டி கருணாரத்ன, பாதுகாப் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் தொடர்பாடல் ஆலோசகர்,மைக்ரோசொப்டின் இலங்கைப் பிரதி நிதிகள் தரீந்ர கல்பகே, வெளின்டன் பெரேரா, மதுசங்க டயஸ், முப்படை மற்றும் பொலீஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்..
defence.lk!! defence news on Microsoft Windows 8!!
The official website of the Ministry of Defence and Urban Development in collaboration with Microsoft Sri Lanka officially launched the country’s first defence related news application for Windows 8 connected devices at a ceremony held at the Miloda Center in Colombo  (05th December).
As the premiere website for defence and urban development related news in the Island the defence.lk draws in a huge internet audience from around the world. During the Humanitarian Operations it drew in millions of hits a day.
Microsoft Sri Lanka, working closely with the MoD & UD contributed to the national service by voluntarily coming forward to provide this unique feature in their latest product – Windows 8.
This ground-breaking venture will enable users of PC and mobile versions of Windows 8 based applications to receive news published on www. defence.lk directly to their devices free of charge.
The application can be downloaded for free from the Windows app store.
The project was carried out under the blessings and guidance of Secretary Defence and Urban Development Mr. Gotabaya Rajapaksa. It was completed under the supervision of the Additional Secretary (Technical) of MoD & UD Mr. Rohan Seneviratne and Commandant of the Sri Lanka Army Volunteer Force and advisor to the defence.lk Major General Prasad Samarasinghe.
Now anyone around the world using Windows 8 can get the latest news on Sri Lanka’s defence, post war development, reconciliation, urban development and other issues of important on their PCs, tabs or mobile phone devices free of charge by just clicking in a tile in their screens.
Speaking at the ceremony Major General Samarasinghe appreciated the pivotal role of Microsoft Sri Lanka in making this national endeavor a reality and also said it will no doubt be appreciated by all. He thanked all those involved in the project for their dedication in making this project a success.
Brigadier K R P Rowel, Chief Signal Officer, Brigadier N M Hettiarchchi, Signal Brigade Commander, Colonel RD Karunarathna, Communications Advisor at the MoD & UD, Microsoft Sri Lanka representatives Imran Vilcassim, Thareendra Kalpage, Velinton Perera, Madushanka Dias, tri forces and police officers were also present at the occasion.
இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்றம் பற்றிய சகல விபரங்களும் அடங்கிய இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
செரிடே ரிசேர்ச் என்ற நிறுவனம் இந்த இணையத்தளத்தை ஆரம்பித்துள்ளது.
இந்த புதிய இணையத்தளத்தின் மூலம் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களின் தகவல்கள், அவர்களின் உரைகள் போன்ற விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அந்த நிறுவனத்தின் உறுப்பினர் சுரேகா சமரசேன தெரிவித்தார்.
http://www.manthri.lk என்ற இந்த இணையத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட தனிப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் மூலம் 14 வயது சிறுமியைக் கொன்ற 16 வயது சிறுவன்..அதிர்ச்சி சம்பவம்!.
பேஸ்புக்கில் 16 வயது சிறுவன் ஒருவன் தொடர்ந்து அனுப்பிய ஆபாச பதிவுகளால் மனமுடைந்த 14 வயது மும்பை சிறுமி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மும்பையின் காந்திவ்லி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் பேஸ்புக் இணையதள பக்கத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தொடர்ந்து ஆபாச செய்திகளை பதிவு செய்து வந்துள்ளான். இதனால் மனவேதனை அடைந்த அச்சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவளது பெற்றோர் இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் இப்புகார் மீது போலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்து திரும்பிய அச்சிறுமி தனது அறைக்குள் சென்று படிக்கப் போவதாகக் கூறியுள்ளாள். ஆனால் இரவு வெகுநேரமாகியும் சிறுமியின் அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவளது பெற்றோர் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

அப்போது சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிசார் சிறுமியின் உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் தொடர்ந்து கொடுத்த தொல்லையே சிறுமியின் தற்கொலைக்குக் காரணம் எனத் தெரிவித்த அவளது பெற்றோர் தாங்கள் அளித்த புகாரின் மீது போலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளனர்….!

அர்ஜென்டினாவை சேர்ந்த நபர் ஒருவர், பிரசவத்தை எளிதாக்கும் வகையில் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

அர்ஜென்டினாவை சேர்ந்த கார் மெக்கானிக் ஜோர்ஜ் ஓ டன்.
இவர் பிரசவ முறையை எளிதாக்கும் வகையில் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

அதாவது பிளாஸ்டிக் பையை பயன்படுத்தி குழந்தையை மிக எளிதான முறையில் வெளியே எடுப்பது.
இந்த புதிய கருவியை பற்றி ஜோர்ஜ், தனது நண்பருடன் சேர்ந்து மகப்பேறு மருத்துவரை சந்தித்து விளக்கியுள்ளார்.
அந்த மருத்துவர் ஜோர்ஜின் புதிய கருவி செயல்பாட்டை தனது மருத்துவமனையில் சோதனை செய்து பார்க்க உதவினார்.
இதனை தொடர்ந்து யூடியூப்பில் இணையத்தளத்தில் சோதனையை வெளியிட்டதுடன், மிகச் சிறந்த மருத்துவரான மரியோ மரியால்டியை சந்தித்து பேச வைத்தார்.
இதுகுறித்து டாக்டர் மரியோ கூறுகையில், மகப்பேறு காலங்களில் பெண்கள் பல சிக்கல்களை சந்திக்கின்றனர்.
அவற்றில் ஒன்று பிரசவ நேரத்தில் குழந்தை கருப்பைக்குள் சிக்கிக்கொள்வது. இதனால் குழந்தை அறுவை சிகிச்சை மூலமாக வெளியில் எடுக்கப்படுகிறது.
இந்த சிக்கலான நேரத்தில் மருத்துவர் என்ன பிரச்னை, அதை எப்படி சரிசெய்வது என்று சரியாக முடிவெடுக்கவில்லை என்றால் தாயும் சேயும் இறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
சிக்கலான பிரசவ நேரத்தில் உபயோகப்படுத்தும் வகையில் எளிய கருவி இருந்தால் மருத்துவர்கள் பிரசவங்களை எளிதாகவும் சீக்கிரமாகவும் செய்யமுடியும்.
ஓடன் கருவி என்று பெயரிடப்பட்ட இந்த கருவி அர்ஜென்டினாவை சேர்ந்த ஜோர்ஜ் ஓ‘டன் என்ற 59 வயது கார் மெக்கானிக் கண்டுபிடித்தது.
இதன்மூலம் எளிதாக பிரசவம் நடக்க கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவர்கள் உதவ முடியும்.
இதில் கையால் பிடிக்கும் வகையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பை உள்ளது. உராய்வை குறைக்க லூப்ரிகன்ட் செலுத்தப்பட்ட இந்த பை காற்று நிரப்பும் வகையில் உள்ளது.
இதன்மூலம் சிக்கலான பிரசவத்தில் குழந்தை வெளிவராத போது குழந்தையின் தலையை சுற்றி இந்த பிளாஸ்டிக் பையை வைத்து காற்றால் நிரப்பவேண்டும்.
இதனால் தலையை சுற்றி பிளாஸ்டிக் பை கெட்டியாக பிடித்துக் கொள்ளும், பின்னர் மெதுவாக வெளியில் இழுத்தால் குழந்தை பத்திரமாக பிரசவிக்கப்படும்.
இதன்மூலம் மிக சிக்கலான பிரசவங்கள் கூட எளிதாக நடைபெறுகிறது.
இந்த கருவியை உலக சுகாதார நிறுவனம் அர்ஜென்டினா கர்ப்பிணி பெண்களிடம் சோதித்துப் பார்த்ததில், சுகப் பிரசவம் நடந்துள்ளது.
இதனால் அறுவை சிகிச்சைகள் குறையும், இந்த முறையை இந்தியா, சீனா மற்றும் தெற்கு ஆப்ரிக்காவில் பயன்படுத்த உள்ளோம்.
இதன்மூலம் பிரசவ நேரத்தில் ஏற்படும் சிக்கல்களினால் இறக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களை காப்பாற்ற முடியும்.
இதைத் தயாரிக்க 50 டாலர்கள் ஆகிறது. கனடாவை சேர்ந்த கிரான்ட் சேலஞ்சஸ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பென்டன் டிக்கின்சன் கம்பெனியுடன் சேர்ந்து இந்த கருவியை தயாரிக்க உள்ளது.
ஏழை நாடுகளில் இந்த கருவி அதிக அளவில் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த கருவிக்கு உலக சுகாதார நிறுவனம் விருது வழங்கியுள்ளது
பாதுகாப்பு தலைக்கவச புதிய சட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
மோட்டார் சைக்கிளில் செல்வபவர்களுக்கு தலைக்கவசம் குறித்து பிறப்பிக்கப்பட்ட புதிய சட்டத்தை செயற்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
புதிய சட்டத்தை பயன்படுத்தி பெரிய வியாபாரிகள் அதிக பணம் கொடுத்து தலைக்கவசம் கொள்வனவு செய்கின்ற போதும் குறைந்த வருமானம் பெறுவோர் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

எனவே இதனை கருத்திற் கொண்டு பாதுகாப்பு தலைக்கவசம் அணியவென கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிறப்பிக்கப்பட்ட புதிய சட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

1981 21ம் இலக்க மோட்டார் வாகன போக்குவரத்து சட்ட 158 (2) மற்றும் 237 சரத்துக்களில் புதிய ஏற்பாடுகளை தற்போதைய போக்குவரத்து அமைச்சர் சேர்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்திருந்தது.

இதன் அடிப்படையில் தலைக்கவசத்தின் பட்டிகள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், முகம் தெளிவாக தெரியக்கூடிய வகையில் தலைக்கவசம் காணப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.  

இலங்கையில் எதிர்வரும் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ரத்து செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

 ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை தேசிய பரீட்சை என்ற நிலையிலிருந்து மாற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

 தவணைப் பரீட்சைக்கு நிகரான ஓர் பரீட்சையாக நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புலமைப் பரிசில் பரீட்சை பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு பெரும் அழுத்தங்களை ஏற்படுத்தி வருவதாக உளவியல் நிபுணர்களும் ஏனைய தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

கல்வியியலாளர்கள், மருத்துவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த்த் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளை வழங்குதல், மாணவர்களுக்கு புலமைப் பரிசில் பணத் தொகை வழங்குதல் தொடர்பில் சில பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பரிந்துரைகள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

புலமைப் பரிசில் பரீட்சையை நடாத்துதல், வினாத்தாள் தயாரித்தல், அதற்கான நேர ஒதுக்கீடு தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது,

பாடசாலைகளில் நடைபெறும் தவணைப் பரீட்சையைப் போன்றே புலமைப் பரிசில் பரீட்சையையும் நடாத்துவதன் மூலம் தேவையற்ற அழுத்தங்களை தவிர்க்க முடியும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய பலத்த மழைபெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும்.

இதேநேரம் மின்னல் தாக்கம் அதிகமாக காணப்படக்கூடும் என்பதனால் பொதுமக்கள் மின் உபகரணங்களை உபயோகிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறும் அந் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

nokia-microsoft

செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை மைக்ரோசாப்ட் விலைக்கு வாங்குகிறது. 7.2 பில்லியன் டாலருக்கு நோக்கியாவை மைக்ரோசாப்ட் விலைக்கு வாங்குகிறது. செல்போன் விற்பனையில் உலகில் முதலிடத்தில் இருந்த நோக்கியா மொபைல் போன்களை ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் நிறுவனங்கள் பின் தள்ளிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களை சமாளிப்பதற்காக 2011ம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் போன் சாப்ட்வேரை நோக்கியா மொபைலில் இயக்கியது. ஆனால் இது பெரிய அளவில் விற்பனையை அதிகரிக்கவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த ஒப்பந்தம், 2014-ம் முதல் காலாண்டில் முடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர் நோக்கியா நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குனரான ‘ஸ்டீபன் எலோப்’ மீண்டும் மைக்ரோசாப்டிலேயே இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இவர் மைக்ரோசாப்டில் இருந்து தான் நோக்கியாவுக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எங்களது சாதனங்கள் மற்றும் சேவைகளை, மைக்ரோசாப்ட் மற்றும் எங்களின் கூட்டாளர்கள் ஆகிய இருவரும் ஒட்டுமொத்த வாய்ப்புகளை வலுப்படுத்துகிறது. இந்த பெரிய குழுக்கள் போன்களில் இணைந்து மைக்ரோசாப்ட் பங்கினை மற்றும் லாபத்தை விரைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று நோக்கியா நிறுவனம் கூறியுள்ளது. சீனியர் எக்ஸ்கியூட்டீவ் ஜோ ஹார்லோ, ஜீஹா புட்ரன்டா, டிமோ டோய்க்கனேன், மற்றும் கிரிஸ் வெபர் ஆகியோரா ஒப்பந்தம் முடிவிற்கு வந்த பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மாற்ற உள்ளனர். ஆனால் அவர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் எந்த பதவியில் இருப்பார்கள் என்று தகவல் வெளியாகவில்லை.

kids with pcஇப்போதெல்லாம் பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைக்கு கம்ப்யூட்டர், டேப்ளட் பிசி, ஐ பேட், லேப்டாப் என ஏதேனும் டிஜிட்டல் சாதனம் ஒன்றை வாங்கிக் கொடுக்க வேண்டியது கட்டாயமாகி விட்டது. இந்நிலையில் அது போன்ற டிஜிட்டல் சாதனத்துடன் அவர்களுக்கு அவற்றைப் பயன்படுத்துவதில் உள்ள நன்மை தீமைகளை எடுத்துக் கூறி என்ன என்ன செய்யக் கூடாது என அறிவுரை என்றில்லாமல் டிப்ஸ் எனப்படும் பயன் குறிப்புகளைக் கண்டிப்பாகக் கொடுக்க தரவும். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாமா!

1.நேர எல்லைகள்:

டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்திப் பார்த்த பின்னர், விரைவில் அதற்கு அடிமையாகும் பண்பு சிறுவர்களுக்கு வந்துவிடுகிறது. எனவே, பக்குவமாக, ஒரு நாளில், எந்த எந்த வேலைகளுக்கு அவற்றை, எவ்வளவு நேரம் அதிக பட்சம் பயன்படுத்த வேண்டும் என்பதை, விளக்கமாக எடுத்துரையுங்கள்.

2. பிரைவசி செட்டிங்ஸ்:

 பேஸ்புக் போன்ற சமுதாய தளங்களில், யார் யாருடைய செய்திகளை உங்கள் மகன்/மகள் பார்க்கலாம் என்பதனை அவர்களுடன் சேர்ந்தே முடிவு செய்து செட் செய்திடவும்.
 3. தனிநபர் தகவல் கொள்கை:
இணைய தளங்கள், அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பயன்படுத்தும் முன்னர், அவை பிரைவசி பாலிசி என தனிநபர் சுதந்திரத்தினை அவர்கள் எந்த அளவிற்கு மதிக்கின்றனர்; உங்கள் தகவல்களை அவர்கள் என்ன செய்வார்கள் என்று தந்திருப்பார்கள். இவை சற்று நீளமான டெக்ஸ்ட்டாக இருந்தாலும், பொறுமையாகப் படித்து அவை என்ன என்று தெரிந்து கொள்வது நல்லது.
4. பின்னால் வராதே:
இப்போது அனைத்து பிரவுசர்களும், பயனாளருக்கு “Do Not Track” வசதியைத் தந்து வருகின்றன. இதனை இயக்கி வைக்கவும். இதன் மூலம் ஒருவர் பார்த்த தளங்கள் என்ன என்ன என்று, மற்றவர்கள் பார்க்க முடியாது.
5. பாஸ்வேர்ட் பகிர்வு:
பல சிறுவர்கள், ஒரே பாஸ்வேர்டினை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதனைப் பார்க்கலாம். உங்கள் பிள்ளைகளிடம், அது தவறு என்று எடுத்துக் கூறி, அவனுக்கு மட்டுமான பாஸ்வேர்டைப் பயன்படுத்தத் தூண்டவும். எப்படி பாதுகாப்பான பாஸ்வேர்டை உருவாக்குவது என்று கற்றுக் கொடுங்கள். அவற்றை மறந்துவிடாமல் இருக்க, என்ன வழிகளைக் கையாள வேண்டும் என்பதனையும் சொல்லிக் கொடுங்கள்.
6. தனி நபர் தகவல்கள் தனி நபருக்கு மட்டுமே:
உங்கள் மகன்/மகளிடம் அவர்கள் சார்ந்த தகவல்கள் அவர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும். மற்றவர்களுடன் அவற்றைப் பகிர்வதோ, போட்டோ போன்றவற்றை, அறிமுகம் இல்லாதவர்களுக்கு அனுப்புவதோ கூடாது என்று கற்றுக் கொடுக்கவும்.
7. அனுமதி முக்கியம்:
உங்கள் மகன்/மகள் புதிய தளம் ஒன்றிலோ, சேவைக்கெனவோ தங்களைப் பதிவு செய்திடும் முன், உங்களிடம் அனுமதி கேட்க வேண்டும் என்பதனை அன்பாக வற்புறுத்தவும்.
8. எச்சரிக்கையாக இருக்க:
இணையப் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருக்க, அனைத்து வழிகளையும் கற்றுக் கொடுங்கள். எப்படியெல்லாம், சிலர், இணையத்தில் நம்மை ஏமாற்றி, தகவல்களை வாங்குவார்கள் என்பதனைக் கூறவும். எந்நிலையிலும் மெயில்களில் காட்டப்படும் இணைய முகவரிகளில் கிளிக் செய்திடக் கூடாது என்பதனை அவசியம் தெரிவிக்கவும்.
9. வயது வரையறையைப் பின்பற்ற:
பல இணைய தளங்களில் அக்கவுண்ட் வைத்துக் கொள்ள வேண்டும் எனில், குறைந்த பட்ச வயது அளவினைக் கட்டாயமாகக் கொண்டுள்ளன. ஆனால், நம் குழந்தைகள், அதனை ஏமாற்றும் விதமாக, தங்கள் வயதைக் கூடுதலாகக் காட்ட முயற்சிப்பார்கள். உடனே, ஆஹா! என்ன புத்திசாலித்தனம் என்று பாராட்டாமல், பொய்யான தகவல் கொடுப்பது சரியல்ல என்று கற்றுக் கொடுங்கள். எப்படி நல்ல நேர்மையான குடிமகனாக, குடிமகளாக உங்கள் குழந்தை இந்த உலகில் வளர வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதே போல இணைய உலகிலும், அவர்கள் நல்ல குடிமக்களாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
 10. பேச விடுங்கள்: 
உங்கள் குழந்தைகள் அவர்களின் எண்ண ஓட்டங்களைக் கூறுகையில் காது கொடுத்துக் கேளுங்கள். உனக்கு ஒன்றும் தெரியாது என்று என்றும் கூற வேண்டாம். சில வேளைகளில், அவர்களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொள்ளும் விஷயங்கள் கூடக் கிடைக்கலாம்.