Archive for the ‘தொழில்நுட்பத் தகவல்கள்’ Category

 

Someone managed to get their hands on the Samsung Galaxy Note III, make a list of all its APKs take a couple of screenshots and even run an AnTuTu test ahead of tomorrow’s announcement. The phablet reports itself as Samsung N9005 running Android 4.3.

The AnTuTu score is around 24K, which is low for a Snapdragon 800 chipset (which is one of the tworumored chipsets for the Note II), it’s about as much as what the Snapdragon 600 in the Galaxy S4 scores. The Exynos 5 Octa version of the S4 is even faster and the Note III is supposed to come with the updated version of that chipset.

We’ll chalk this up to early software. Speaking of software, the list of APKs reveals KNOX features (Samsung’s enterprise security platform, approved by the US Department of Defense), a FingerprintService, a “digital pen” service (S Pen), a ANT+ service (a low-power wireless tech for sports sensors), a cover lock service (for flip covers ala Galaxy S4), Evernote, along with some custom Samsung apps (the custom camera app, the S Planner, etc.).

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும்.
ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.
1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.
4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.
◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —

அநேகமாக நம் எல்லோரது வீட்டிலும் லேப்டாப் இருக்கிறது இதனை நாம் ,மனைவி பிள்ளைகள் என எல்லோரும் தினசரி உபயோகப் படுத்துகிறோம் . பல தகவல்களை Google ல் நாம் தேடும் போது யதேச்சையாகவோ அல்லது தவறான ஸ்பெல்லிங் ஏற்படும் போதோ ஆபாசமான தகவல்கள், மற்றும் படங்கள் என வந்து மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது என்பது உண்மையே , இதனை சீர் செய்ய இந்த பதிவு மிகுந்த உபயோகமாக இருக்கிறது , எனவே முடிந்தவரை பலருக்கும் இதை SHARE செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்
ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?
நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .
…முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.
பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.
அல்லது
http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்..
Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் ,
அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.
Locking Process நடைபெறும்
பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.
அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.
இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .
நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.
google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள் ….
Setting போய் பாத்துட்டு அட ஆமா இருக்கு’ல ன்னு சும்மா இருக்காம… setting correct’ah பண்ணுங்க…
நண்பர்களிடமும் share பண்ணுங்க…

நன்றி:களஞ்சி

Free Antivirus for Windows 8

Posted: ஓகஸ்ட் 26, 2013 by Journalist of AKP in தொழில்நுட்பத் தகவல்கள்

win8விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான இலவச அன்ட்டி வைரஸ் தொகுப்புகள் குறித்த தகவல்கள் தரப்படுகின்றன. இங்கு அத்தகைய ஏழு தொகுப்புகளுக்கான விபரங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் எது தேவை என வாசகர்களே தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால், முடிவு செய்து ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்துவது, விண்டோஸ் 8 சிஸ்டத்தைத் தங்களின் கம்ப்யூட்டர்களில் கொண்டுள்ளவர்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

1. மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் (Microsoft Security Essentials): விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான, வைரஸுக்கு எதிரான பாதுகாப் பினை, மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் வலைத்தளத்தில் தந்துள்ளது. இதனைச் செயல்படுத்துவது, உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல்திறனைப் பாதிக்காது. இது தானாகவே அப்டேட் செய்யப்படுகிறது.

இதனைப் பெற செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://windows.microsoft.com/enus/windows/securityessentialsdownload

2. ஏ.வி.ஜி. (AVG): அனைவருக்கும் நன்றாகத் தெரிந்த ஓர் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் ஏவிஜி. விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு இலவசமாகக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் இது மிகச் சிறந்ததாகும். இது வைரஸ்கள், பயமுறுத்தும் சாப்ட்வேர் தொகுப்புகள், மால்வேர் தொகுப்புகள் ஆகியவற்றைக் கண்டறிகிறது. பாதுகாப்பில்லாத, சந்தேகத்திற்கு இட மான பைல்களைத் தடுத்து நிறுத்துகிறது. இணைய தள முகவரிகளை ஆய்வு செய்து எச்சரிக்கை செய்கிறது. நம் கம்ப்யூட்டரை வேவு பார்க்கும் முயற்சிகளைத் தடுக்கிறது. டேட்டாக்கள் திருடப்படும் முயற்சிகளை முறியடிக்கிறது.

இதனை இலவசமாகப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி : http://free.avg.com/inen/homepage.

3. பண்டா செக்யூரிட்டி (Panda Security): மிகச் சிறந்த விண்டோஸ் 8 ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களில் இதுவும் ஒன்று. இதன் சில செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம். எப்போதும் பாதுகாப்பு, இணைய தள முகவரி மற்றும் இணையத்தை வடிகட்டுதல், தானாக அப்கிரேட் செய்யப்படும் வசதி, கம்ப்யூட்டர் செயல்பாட்டினையும், செயல்படும் விதத்தினையும் கண்காணித்து அறிவித்தல் ஆகியவற்றைச் சிறப்பான செயல்பாடுகளாகக் குறிப்பிடலாம்.

http://www.pandasecurity.com/india/windows8 என்ற முகவரியில் உள்ள இணையதளத்திலிருந்து இதனை இலவசமாகப் பெறலாம்.

4. அவாஸ்ட் (Avast): இதனைப் பெரும்பாலானவர்கள், முன்பே பயன்படுத்தி, இதன் செயல்திறனை அறிந்திருப்பார்கள். மிகச் சிறந்த விண்டோஸ் 8 ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களில் இதுவும் ஒன்று. வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்களிலிருந்து முற்றிலும் பாதுகாக்கிறது.

இலவசமாக இதனைப் பெற, நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.avast.com

5.பிட் டிபண்டர் ஆண்ட்டி வைரஸ் ப்ளஸ் (Bit Defender Anti Virus Plus): இலவசமாகக் கிடைக்கும் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், ஸ்பைவேர்களைச் சரியாக அடையாளம் கொண்டு தடுக்கிறது. இது செயல்படும் வேகம் மிக அபாரம். ஆன்லைனில் நிதி பரிவர்த்தனையின் போதும் பாதுகாப்பு தருகிறது.

நம் டிஜிட்டல் அடையாளங்களைப் பாதுகாக்கிறது. தேவையற்ற பாப் அப் விண்டோக்களை எப்போதும் தருவது இல்லை. இதனைத் தனியாக நாம் செட் செய்திட வேண்டியதில்லை. தானாகவே, தன்னை பெர்சனல் கம்ப்யூட்டரில் பதிவு செய்து கொண்டு மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது.

இதனைப் பெற செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.bitdefender. com/Downloads/

6. அவிரா (Avira): அவிரா ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும், விண்டோஸ் 8க்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டு, இலவசமாக வழங்கப்படுகிறது. வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோ கிராம்கள் மட்டுமின்றி, விளம்பரங்களாக வரும் ஆட் வேர் புரோகிராம்களையும் தடுக்கிறது. நம் இணைய தளச் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் நிறுவனங்களின் முயற்சிகளை முறியடிக்கிறது. தொடர்ந்து பாதுகாப்பு தருவதுடன், தேடலில் நாம் பெறும் இணையதளங்களின் பாதுகாப்பு தன்மை குறித்தும், கண்டறிந்து அறிவிக்கிறது.

இலவசமாக இதனைப் பெற http://www.avira.com/en/avirafreeantivirus என்ற இணைய தளத்திற்குச் செல்லவும்.

7. காஸ்பெர்ஸ்கி ஆண்ட்டி வைரஸ் (Kaspersky Antivirus): விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கென முதலில் வெளி வந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் இதுவும் ஒன்று. பெரும்பாலானவர்களால் விரும்பப்படும், இந்த புரோகிராம் ட்ரோஜன் வைரஸ், கெடுதல் விளைவிக்கும் இணைய தளங்களுக்கான லிங்க் ஆகியவை குறித்து மிகச் சரியாக எச்சரிக்கிறது. வைரஸ்களை ஸ்கேன் செய்வதில் இதன் அசாத்திய வேகம் குறிப்பிடத்தக்கது.

இதனைப் பெற http://usa.kaspersky.com/downloads என்ற முகவரியில் உள்ள இணையதளம் செல்லவும்.

மேலே தரப்பட்டுள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுடன், இன்னும் சில இணைய வெளியில் கிடைக்கலாம். அனைத்து புரோகிராம்கள் குறித்தும் அறிந்து, தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். ஆனால், ஏதாவதொன்றைப் பயன்படுத்துவதே நமக்குப் பாதுகாப்பினைத் தரும்.

மென்பொருள் துறையில் முதன்மையான மைக்ரோசாப்ட் தற்போது புதிய சமூக வலைத்தளம் ஒன்றை கட்டமைத்து வருகின்றனர். மைக்ரோசாப்டின் புதிய சமூக வலைத்தளத்திற்கு Socl என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதன் (User Interface) மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இடது புறத்தில் Navigation வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. செய்திகள் Feed என வகைப்படுத்தப்பட்டுள்ளன. நமது செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. (Update Status).
Social Search: இதில் சமூக வலைத்தளத்திலிருந்தே தேடிக் கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது. நீங்கள் தேடும் போது வழக்கமான தேடல், நண்பர்களின் செய்திகள், ஒத்த சேவைகள் போன்றவற்றிலும் தேடி முடிவுகள் தரப்படும்.
எதாவது தேடிப் பெறப்பட்ட விடயத்தை அப்படியே உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும். நண்பர்களின் தேடல்களையும் உங்கள் பக்கத்தில் பார்த்துக் கொள்ள முடியும். இது கூகிள்+1 பட்டன்களின் மூலம் பெறப்படும் Recommendation களை கூகிள் பிளஸ் தளத்தில் தேடுதலுக்குப் பயன்படுத்துவதைப் போல ஆகும்.
தேடுதலுக்கு பிங் சேவை(Bing) பயன்படுத்தப்படும். நண்பர்கள் உங்களின் தேடல்களுக்கு கருத்துரை அளிக்கலாம், Like செய்யலாம், Tag செய்யலாம்.
Tagging: நீங்கள் ஒருவரின் செய்தியை Tag செய்யும் போது சம்பந்தப்பட்ட விடயம் உங்களின் Interest Tags பிரிவில் இடதுபுறத்தில் தோன்றும். இதனால் விரைவில் குறிப்பிட்ட விடயம் சார்ந்தவற்றைப் பார்த்துக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு Photography, Cinema, Arts.
வலதுபுறத்தில் Video Party வசதி தரப்பட்டுள்ளது. இதில் நண்பர்களிடம் சாதாரண மற்றும் வீடியோ சாட்டிங் செய்து கொள்ள முடியும். மேலும் Youtube வீடியோக்களையும் பார்த்துக் கொள்ளலாம். இது முற்றிலும் HTML5 தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அடோப் பிளாஷ் மென்பொருளின் உதவி தேவைப்படாது.
இதில் குறைபாடுகளாக மற்ற சமுக வலைத்தளங்களில் இருக்கும் சில வசதிகள் இல்லை. அதாவது செய்திகளை குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் பகிர்தல், கூகிள் பிளசில் இருக்கும் வட்டங்கள் போல Groups போன்றவை இல்லை. இதன் பரிசோதனை செயல்பாடுகள் முடிந்து மைக்ரோசாப்ட் விரைவில் வெளியிட ஆயத்தமாகி வருகிறது.

 

கழிவுப் பொருட்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இரண்டு திட்டங்கள் மேல் மாகாண சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கரதியான மற்றும் கடுவெல ஆகிய பகுதிகளில் இந்த மின் உற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக மேல் மாகாண சபையின் கழிவுப் பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நலின் மான்னப்பெரும தெரிவித்தார்.
மலேசியா மற்றும் இந்தியாவிலுள்ள இரண்டு நிறுவனங்கள் இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் கூறினார். இதன் ஊடாக 50 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விண்வெளி துறை பேராசிரியர் ஸ்டீவன் வோக்ட் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது, பூமியை போன்ற மற்றொரு கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அந்த கிரகத்துக்கு கிளைஸ் 581ஜி என பெயரிட்டுள்ளனர். இது பூமியில் இருந்து 123 லட்சம் கோடி தொலைவில் உள்ளது.
இந்த புதிய கிரகத்தில் தண்ணீர் உள்ளது. எனவே அங்கு மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழும் சூழ்நிலை இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியை சுற்றி இருப்பது போன்றே இங்கும் சந்திரன் உள்ளது. மேலும், கிளைஸ் 581ஜி கிரகத்தின் அருகே மேலும் 2 கிரகங்கள் உள்ளன.
அவற்றை சுற்றி 6 நட்சத்திரங்கள் உள்ளன. அவை குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. புதிய “கிளைஸ் 581ஜி” கிரகம் பூமியை விட 4 மடங்கு பெரியது. 11 வருட ஆராய்ச்சிக்கு பிறகு இது கண்டுபிடிக்கப்பட்டது. என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி ஓடத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அது எடுத்து அனுப்பியுள்ள போடடோக்களில் செவ்வாய் கிரகத்தில் மணல் குன்றுகள் மற்றும் அடுக்கடுக்கான மணல் அலைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, அமெரிக்காவின் ஜோன்ஸ் காப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி நாதன் பிரிட்ஜஸ் கூறும் போது, செவ்வாய் கிரகத்தில் மிக பலத்த புயல் காற்று வீசுகிறது.   அதனால் அங்கு பறக்கும் மணல்கள் குன்றுகளாக உருவாகியுள்ளன. மேலும் மணலும் அலைகளாக மாறி அடுக்கடுக்காக தெரிகின்றன என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு மணல் குன்றுகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ஆனால், அவை தானாக உருவானது என கூறி வந்தனர். தற்போதுதான் அவை புயல் காற்றினால் ஏற்பட்டவை என கண்டுபிடித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
சேற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இஸ்ரேல் கண்டுபிடித்துள்ளது.இதுகுறித்து இஸ்ரேலை சேர்ந்த மின் உற்பத்தி நிறுவனம் ஜிஆர்பிஎல் தரப்பில் கூறப்படுவதாவது,
ஆற்றுப் படுகையில் சேரும் சேறு, சகதியில் படிந்திருக்கும் மின்காந்த சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. மின் உற்பத்திக்கான இயந்திரங்களை பயன்படுத்த சுற்றுச்சூழலுக்கு ஆதரவான சூரிய மின்சக்தி பயன்படுத்தப்படும்.
இயற்கை எரிவாயு தயாரிப்பு உலை மூலம் சேறு, சகதியை வெப்பமூட்டுவதன் மூலம் அது வாயுவாக வெளிப்பட்டு டர்பைன்கள் வழியாக மின் உற்பத்தியாகும். சேறு, சகதி மட்டுமின்றி தண்ணீரில் நனைந்த குப்பைகளில் காணப்படும் சகதியிலும் மின் உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜிஆர்பிஎல் தெரிவித்துள்ளது.

தினம் தினம் புதுமைகளை சந்தித்து கொண்டிருக்கிறது மொபைல் உலகம். அந்த புதுமைகள் வாடிக்கையாளர்களின் வசதிகளை நாளுக்கு நாள் பெருக்கி வருகிறது. அதன் அடிப்படையில் இப்போது டோல்மோல்.காம் மற்றும் என்மேக் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து என்மேக் குரான் என்ற பெயரில் புதிய மொபைலை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்த மொபைல் முஸ்லிம் சமுதாய மக்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் உள்ள ஓர் அற்புதமான வசதியின் மூலம் எங்கிருந்தாலும், குரான் வாசகங்களை எந்த நேரத்திலும் கேட்டு பயன் பெறலாம். இந்த குரான் 29 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதனால் 29 மொழிகளில் குரானை கேட்கலாம்.
இதில் தொழுகை நேரத்தை குறித்துவிட்டால் போதும், அந்த குறிப்பிட்ட நேரத்தில் இந்த மொபைல் தானாகவே சைலன்ட் மோடிற்கு மாறிவிடும். இதனால் தொழுகை செய்யும்போது இடையூறு ஏற்படாது.
இந்த குரான் என்மேக் மொபைலில் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தி கொள்ள உதவும் டியூவல் சிம் தொழில் நுட்ப வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. குரான் என்மேக் மொபைலின் கீப்பேடில் அரபிக் எழுத்துக்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அரபி மொழியிலும் எளிதாக டைப் செய்யலாம்.
இந்த மொபைல் 150 நிமிடங்கள் டாக் டைமினையும், 4 நாட்கள் ஸ்டான்-பை டைமினையும் கொடுக்கும். 2.0 இஞ்ச் திரையை கொண்டுள்ள இந்த மொபைலில் கேமராவையும் கொண்டிருக்கிறது. இந்த மொபைல் ஏற்கனவே மலேஷியா, துபாய் உள்ளிட்ட பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது

மன்னார் கடற்பரப்பில் இரண்டாவது எரிவாயு கிணறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனம் பெற்றோலிய வள அபிவிருத்தி செயலகத்திற்கு அறிவித்துள்ளது. மன்னார் கடற்பரப்பை அண்மித்த பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது எண்ணெய்க் கிணறு முதலாவது கிணற்றிலிருந்து 38 கிலோ மீற்றர் தொலைவில் இருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.