Archive for the ‘தொழில்நுற்பம்’ Category

 

கண்ணின் கருவிழியின் மீது அணியும் கான்டாக்ட் லென்ஸ் வழியாக இன்டர்நெட்டை இணைத்து தகவல்களைப் பெறும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒருவரது அறிவுத்திறனைப் பாராட்டும் வகையில், “”அவர் பெரிய அறிவு ஜீவி. எதைப் பற்றி கேட்டாலும் பதில் சொல்லிவிடுவார். தகவல்களை விரல் நுனியில் வைத்திருப்பார்” என்று கூறுவதைக் கேட்டிருக்கிறோம்.
இனி இந்தப் பாராட்டு அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒரே வித்தியாசம், தகவல் அனைத்தும் உங்கள் விரல் நுனியில் அல்ல, விழி நுனியில் வரப்போகிறது. இதைச் சாதித்திருப்பது, (வழக்கம்போல) அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகம் மற்றும் பின்லாந்தின் ஆல்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள்தான்.
இன்றைய தகவல் புரட்சி யுகத்தில் புத்தகங்களின் இடத்தை இன்டர்நெட் பிடித்துவிட்டது. எந்தத் தகவல் வேண்டுமானாலும் கணினியை இயக்கி இணையதளங்களில் திரட்டிவிடலாம். சிலர் லேப்-டாப்பை (கர்ணனின் கவச குண்டலம் போல) எப்போதும் சுமந்துசெல்வதைப் பார்த்திருப்பீர்கள். அந்த சுமையையும் குறைக்க, உங்கள் கண்களில் “கான்டாக்ட் லென்ûஸ’ பொருத்தி, அதன் மூலம் இன்டர்நெட் இணைப்பை வழங்க முடியும் என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
இதற்காக பார்வை குறைபாடு உடையவர்கள், கண் கண்ணாடியை பயன்படுத்துவதற்குப் பதிலாக அணியும் கான்டாக்ட் லென்சில் பல மாற்றங்களை விஞ்ஞானிகள் செய்துள்ளனர். விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கான்டாக்ட் லென்ஸடன் இணைக்கப்படும் ஆன்டெனா, வெளியிலிருந்து வரும் தகவல்களைத் திரட்டித் தருகிறது. “சிப்’பில் பதிவாகும் அந்தத் தகவல்கள், மெல்லிய எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பாகிறது. இந்த வசதியின் மூலம், இ-மெயில் உள்ளிட்ட பல தகவல்களைப் படிக்கலாம
இந்த கான்டாக்ட் லென்ûஸ ஒருவருக்குப் பொருத்தி, வெற்றிகரமாக இயக்கிக் காட்டியுள்ள விஞ்ஞானிகள், இதனால் கண்ணுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளனர். எனினும், கண்களுக்கு மிக அருகில் இருப்பதால், வாசகங்களைத் தெளிவாகப் படிக்க முடியவில்லை. இப்பிரச்னையை சரிசெய்ய தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது புத்தக மூட்டையை சுமந்து செல்லும் மாணவர்கள், இன்னும் சில ஆண்டுகளில் லேப்-டாப்புடன் (மடிக் கணினி) பள்ளிக்குச் செல்லும் நிலை ஏற்படலாம். விஞ்ஞானிகளின் தற்போதைய கண்டுபிடிப்பு நடைமுறைக்கு வந்துவிட்டால், கை வீசிக் கொண்டும் செல்லலாம்!
Advertisements
புகழ்பெற்ற இணையத்தள தேடுபொறி நிறுவனமான கூகுள், யாஹு நிறுவனத்தை வாங்க திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க பத்திரிகையான வோல்ஸ்டிரீட் ஜெர்னலில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

யாஹு நிறுவனத்தை வாங்க அதிக முதலீடு தேவை என்பதால் அதற்கான நிதியை திரட்ட சில பங்கு முதலீட்டு நிறுவனங்களுடன் கூகுள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் எந்ததெந்த நிறுவனங்களோடு கூகுள் பேச்சு நடத்தியது என்பது தெரியவில்லை.

முன்னதாக யாஹுவை கையகப்படுத்த மென்பொருள் நிறுவனமான மைக்ரோ சொப்ட் முயற்சி செய்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. யாஹுவை வாங்க முயற்சிப்பதன் மூலம் யாஹுவின் பங்கு விலைகளை சந்தையில் உயரச் செய்து அதை கையகப்படுத்தத் துடிக்கும் மைக்ரோ சொப்ட் போன்ற போட்டி நிறுவனங்களின் முயற்சியை முறியடிப்பது என்ற நோக்கத்தையும் கூகுள் கொண்டி ருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பேஸ்புக், ஓர்குட் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை இலக்குவைத்து நடத்தப்படும் ஏமாற்று வேலைகள் பெரிய அளவில் அதிகரித்து இருப்பதாக இணைய பாதுகாப்பு தொடர்பில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது. 
ஃபிஷிங் என்று சொல்லப்படும் ஏமாற்று வேலைகள் அதிகரித்துவருவதை கணினி மென்பொருள் உற்பத்திப் பெருநிறுவனமான மைக்ரோசாஃப்ட் நடத்தியுள்ள ஆய்வு காட்டுகிறது. ஃபிஷிங் என்பது பெரும்பாலும் நண்பர்களிடம் இருந்து வருகின்ற அழைப்பு போலவோ அல்லது தகவல் போலவோ அமைந்திருக்கும். ஆனால் இவை உண்மையில் இணையத்தில் குற்றச்செயல்களை செய்ய முயலும் ஆட்களிடம் இருந்து வருபவை. வலைத்தளத்தைப் பயன்படுத்துவோரை ஏமாற்றி அவர்களிடம் இருந்து முக்கியமான பிரத்யேகத் தகவல்களைப் பெறுவது இந்த அழைப்பு மற்றும் தகவல்களின் நோக்கமாகும். 
பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் எல்லாம் இப்போது மிகவும் பிரபலம் அடைந்து ஏராளமனவர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தமது கைவரிசையைக் காட்ட இந்த இணையத்தளங்களை அதிகம் இலக்கு வைக்கிறார்கள் என்பதில் ஆச்சரியம் இல்லை. 
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆறு மாதத்துக்கு ஒரு முறை நடத்துகின்ற இணையப் பாதுகாப்பு பற்றிய ஆய்வு கடைசியாக வெளியிட்டுள்ள அறிக்கை இந்தப் பிரச்சினையையின் தீவிரத்தன்மையை எடுத்துரைப்பதாய் அமைந்துள்ளது. அறுபது கோடி கணினிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்க்கையில் கடந்த ஒருஆண்டில் மட்டும் சமூக வலைத்தளங்கள் வழியாக நடத்தப்படுகின்ற ஃபிஷிங் மோசடி வேலை முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 12 மடங்கு அதிகரித்துள்ளது. 
ஃபிஷிங் எமாற்று வேலை என்பது, பொதுவாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது நாம் அறிந்த ஒருவர், அதாவது நமது நண்பர் அல்லது உடன் பணியாற்றுபவர் ஒருவரிடம் இருந்து வருகின்ற செய்திபோல வரும். நண்பர் கேட்பதுபோல நம்முடைய பிரத்யேகத் தகவல்களை, தனிநபர் தகவல்களைக் கேட்கும். அப்படி நாம் தகவல்களைக் கொடுத்தால் அது கிரிமினல்கள் கைகளில் கிடைத்துவிடும். அதனைப் பயன்படுத்தி அவர்கள் வங்கிக் கணக்கு, இணைய வர்த்தக கணக்கு போன்றவற்றில் மோசடி வேலைகளைச் செய்து பணம் திருடுவார்கள். 
சில ஆண்டுகளுக்கு முன் இப்படியான ஃபிஷிங் மோசடி மின் அஞ்சல்களில் பெரிய அளவில் நடந்துவந்தது. ஆனால் இப்போது இத்தகைய மோசடிகள் பெருமளவு சமூக வலைத்தளங்களை இலக்குவைத்து நடத்தப்படுகிறது. 
ஒரு ஆண்டுக்கு முன்புவரை சமூக வலைத்தளங்களில் நடந்த பல விதமான ஏமாற்று வேலைகளில் பத்து சதவீதத்துக்கும் குறைவாகவேதான் இந்த ஃபிஷிங் மோசடி வேலைகள் நடந்ததாக ஆய்வுகள் காட்டியிருந்தன. ஆனால் மொத்த மோசடிகளில் 85 சதவீதத்தை தொடும் அளவுக்கு சென்ற ஆண்டு கடைசியில் இவ்வகையான மோசடிகள் அபரிமிதமாக அதிகரித்து விட்டுள்ளன என்று இந்த புதிய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.