Archive for the ‘வேண்டுகோள்’ Category

யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களிலுள்ள மீனவர்களை கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. தாழமுக்கம் வடமேல் திசையை நோக்கிப் பயணிப்பதே இதற்குக் காரணமென திணைக்களத்தின் கடமை நேர வானிலை நிபுணர் குறிப்பிட்டார்.
இதனால் கடற்பகுதிகள் ஏனைய நாட்களையும் விட சற்றுக்கொந்தளிப்பாகக் காணப்படுமென அவர் குறிப்பிட்டார். மேற்குறிப்பிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் கடுங்காற்று வீசுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட  நாட்டின் பல பகுதிகளிலும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த இரண்டாயிரத்து 700 பேர் தொடர்ந்தும் தற்காலிகமாக முகாம்களில் தங்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.
ஆயினும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களின் எண்ணிக்கை 25 ஆக குடைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படுவதாகவும் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையை அடுத்து அப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.வாகரை, கிரான், வாழைச்சேனை செங்கலடி ஏறாவூர், களுவாஞ்சிக்குடி மற்றும் வவுனதீவு ஆகிய பிரதேசங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisements

இவ்வருடத்தின் இறுதிக்கிரகணமான பூரண சந்திர கிரகணம் இன்ஷாஅல்லாஹ இன்று சனிக்கிழமை (10.12.2011) ஏற்படவுள்ளதாக வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் இலங்கைக்கும் இது உச்சம் கொடுக்குமெனவும் இலங்கை நேரப்படி இரவு 6.15 முதல் பகுதிக் கிரகணத்தின் உச்சம் ஆரம்பமாகி இரவு 8.00 மணியளவில் பூரண உச்சம் கொடுக்குமெனவும் தெரிவிக்கின்றன.
 
இவ்வாறான கிரகணங்கள் ஏற்படும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுங்கள், இறைஞ்சுங்கள், பிழை பொறுக்கத் தேடுங்கள் என்று உபதேசம் செய்வதுடன் கிரகணத் தொழுகையையும் நிறைவேற்றுவார்கள்.
 
எனவே கிரகணங்கள் ஏற்படும்போது வீண் பராக்குகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலை கடைப்பிடித்து தொழுமாறு நாட்டு முஸ்லிம்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழு கேட்டுக்கொள்வதோடு அன்றைய தினம் கிரகணம் ஏற்படும்போது கிரகணத் தொழுகையை அனைத்து மஸ்ஜிதுகளிலும் நிறைவேற்றுமாறும் சம்பத்தப்பட்டவர்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக்கொள்கிறது
எமது குறிப்பு – (இலங்கையின் சனத்தொகை கணக்கெடுப்பு நீதியாக நடத்தப்படுமாயின் 20 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் நாட்டில் உள்ளனர் என்பதை அறிந்துகொள்ளமுடியும். அவ்வாறான ஒருவேளையில் சிங்களப் பேரினவாதம் தென்னிலங்கையிலும், வடகிழக்கில் தமிழ் தேசியமும் முஸ்லிம்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக அமையலாம். இந்நிலையில் சிறந்த தந்திரோபாய உபாயங்களை வகுக்கவேண்டிய கட்டாயத்தில் இலங்கை முஸ்லிம் உம்மா தள்ளப்பட்டுள்ளது என்பதை முன்கூட்டியே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்)

 
அபூ மஸ்லமா
 
இலங்கையில் முஸ்லிம்கள் அநுபவிக்கும் உரிமைகள் எவ்வளவு தாராளமாக உள்ளனவோ அதே போன்று அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் தாராளமாகவே உள்ளன. முஸ்லிம் நாடுகளில் இல்லாத மதச்சுதந்திரங்களை நாம் இங்கு பின்பற்றுகிறோம். தாடி வளர்க்கலாம். முகத்தை மறைக்கலாம். விதம் விதமாய் தஃவா செய்யலாம். இப்படி பற்பல.
 
சிங்கள வீரவிதான என்றும் சிங்கள ஆரக்ச சபா என்றும் முகமூடிகள் போட்ட பேரினவாதம் இப்போது ஜாதிக ஹெல உருமய எனும் உருவத்தில் வந்து நிற்கிறது. நிற்கட்டும். பிரச்சனை என்னவென்றால் வடகிழக்கில் தோற்கடிக்கப்பட்ட புலி பயங்கரவாதத்தின் தொடரான எச்சங்களாக முஸ்லிம்களை சிங்கள மக்கள் மத்தியில் காட்ட முனைவதாகும்.
 
“உரிமைகள்” பற்றி பேசுபவர்கள் பயங்கரவாதிகளாக அல்லது பிரிவினைவாதிகளாக இனங்காணப்படும் அதேவேளை “தேசியம்”  பற்றி பேசுபவர்கள் மண்ணின் மைந்தர்களாக இனங்காணப்படும் நச்சு சூழல் இது. அதாவது சிறுபான்மை கதைத்தால் பிரிவினைவாதம். பெரும்பான்மை பேசினால் தேசியவாதம் எனும் மாயை நிலை.
 
விடுதலை புலிகள் அநுராதபுரம், அரந்தலாவை, தலதாமாளிகை, பிட்டகொட்டுவை என அப்பாவிகளை வெடிகுண்டு தாக்குதல்கள் மூலம் படுகொலை செய்து சிங்களவர்கள் மத்தியில் தங்களை பயங்கரவாதிகளாக இனங்காட்டிக்கொண்ட அரசியல் சித்தர்கள். இவர்களின் முகவரி முள்ளிவாய்க்காலில் முடிவிற்கு வந்த போது் எல்லா சிங்களவரும் ஆர்ப்பரித்தனர். ஆடிப்பாடினர்.
 
புலி பாசிஸ அமைப்புடன் நடந்த இறுதி யுத்தத்தில் சிங்கள பேரினவாத மீடியாக்கள் எல்லாமே போட்டி போட்டுக்கொண்டு களச்செய்திகளை சேகரித்தன. வெளியிட்டன. பின்னர் அவை இறுவட்டுக்களில் போரியல் பாடல்களாக ஒவ்வொரு சிங்களவரினது இதயத்திலும் ஆழமாக பதிக்கப்பட்டது. விதைக்கப்பட்டது.
 
போரின் வெற்றியை கடைசி சிங்கள கிராமம் வரை கொண்டு செல்ல இந்த ஊடகங்களை அரசு சரியாகவே பயன்படுத்தியது. யுத்த செய்திகள், வெற்றி செய்திகள் என்பவற்றில் எந்தவொரு தணிக்கைகளும் இடம்பெறவில்லை. ஊடகங்களில் வந்த நிர்வாணமாக கிடந்த புலி பாசிஸ்ட்களின் உடலங்களை கூட வெட்கமில்லாமல் குடும்பமாக ரசித்தனர் சிங்ளவர்.
 
யுத்த வெற்றியை அரசியல் இருப்புக்கான வெற்றியாக மாற்றியது அரசு. இராணுவ கண்காட்சிகள் பலவற்றை நிகழ்த்தி மக்களை “வோர் மூட்டில்”  பராமரித்தது. ஆயுத மோகம் என்பதன், அடிப்படை ஆதிக்க மோகம் எனும் மறை கருத்தியலை இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் மறந்து போனதன் உடனடி விளைவு “சரத் பொன்சேகாவின் எழுச்சி”. நீண்ட கால விளைவு “சிஙகள பொளத்த பேரினவாதத்தின் எழுச்சி”.
 
இறுதி போரில் புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னரான ஊடக அரசியலிற்கான ஒரே வாய்ப்பு ஆளும் தரப்பை விமர்சிப்தன் ஊடாக நகர்வது. அதற்கான சந்தர்ப்பங்கள் இந்த அரசால் வழங்கப்படாத நிலையில் முஸ்லிம்கள் மீதான தப்பபிப்ராயங்களை வெளியிடுதன் ஊடாக பரபரப்பு சூழலில் தமது இப்பை தக்கவைத்தலாகும்.
 
“அரசியலை இந்து மயப்படுத்து. இந்து மதத்தை ஆயுதமயப்படுத்து” எனும் அன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வாக்கர் சொன்ன இனவாத சித்தாந்தம் இதுவரை அவர்களிற்கு கை கூடவில்லை. ஆனால் அதிர்ஷ்ட வசமாக சிங்களவரிற்கு அது கைகூடியுள்ளது. இந்த நாட்டில் “அரசியல் பௌத்த மயப்படுத்தப்பட்டு பல வருடங்களாகி விட்டது. அதே போன்று பொளத்த மதம் ஆயதமயப்படுத்தப்பட்டும் உள்ளது.”
 
இஸ்லாத்தின் மீது காழ்ப்புணற்ச்சி கொண்டவர்கள் குறைவானவர்களே. முஸ்லிம்கள் மீது காழ்ப்புணற்ச்சி கொண்டவர்களே அதிகம். முஸ்லிம்களின் கலாச்சார வெளிப்படுத்தல்கள் அவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக பொளத்த துறவிகளிற்கு. ஒன்றுமே இ்ல்லாத மதத்தை வைத்து காலத்தை ஓட்டும் இவர்களிற்கு இவ்வாறான அச்சங்கள் வருவது இயல்பே.
 
“நாளைய இலங்கையில் முஸ்லிம்கள்” எனும் அச்சம் இரு தரப்பினரிற்குமே உருவாகியுள்ளது. தங்கள் மதத்தின் இருத்தல் தொடர்பாக சிங்களவரிற்கும்,  சிங்கள பேரினவாதத்தின் எழுச்சி காரணமாக இஸ்லாத்தின் இருப்பு தொடர்பாக முஸ்லிம்களிற்கும் இது எழுந்துள்ளதெனலாம்.
 
இப்போது ஒரு புதிய பாணி அல்லது யுக்தி கையாளப்படுகிறது. ஒரு மஸ்ஜித்தையோ அல்லது மதரஸாவையோ உடைக்க வேண்டுமென்றால் முன்வரிசையில் ஆமத்துருக்களை நிறுத்தி தமது இலக்கு நோக்கி நகர்கின்றமை. கலகக்கார கும்பலை முஸ்லிம்கள் பதில் பலாத்காரம் ஊடாக தடுக்கலாம். ஆனால் முன்னிலையின் ஆமத்துருக்கள் அணிவகுக்கும் போது ஒன்றுமே செய்ய முடியாத நிலை. நேற்றைய முன்தினம் இது தான் நடந்தது தெஹிவலையில். கிண்ணியாவிலும், அநுராதபுரத்திலும், களுபோவிலையிலும் இது நடந்த போது நாம் ஒன்றும் பேசவில்லை. ஏதோ பிரதேச செய்தியை கேட்பது போல் செய்தியாக கேட்டு செய்தியாக மறந்து விட்டோம். 
 
புத்தளத்தில் ஒரு சிங்கள பொலிஸ்காரர் கொல்லப்பட்டதற்கு முழு புத்தளத்தையுமே பழி வாங்கும் இனவாத பொழுதுகள் இவை. இந்த நாட்டில் கும்பல் கும்பலாக பொலிசார் கொல்லப்பட்ட போது எழுதாத சிங்கள நாளிதல்கள் மற்றும் இணையங்கள் இந்த விடயத்தில் மட்டும் இனவாதத்துடன் எழுதுகின்றன.
 
இந்த தேசத்தில் இனவாதம் பன்சலைகளிலிருந்தும், ஊடகங்களிலிருந்துமே கிளப்பப்படுகின்றன. ஊதி பூதகரமாக மாற்றப்படுகின்றன. கற்பனைகளை கலந்து முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக, காட்டுமிராண்டிகளாக, முட்டாள்களாக, பிற்போக்குவாதிகளாக, பகற்கொள்ளையராக, சுயநல விஷமிகளாக, காமுகர்களாக, சுரண்டல் வர்த்தகர்களாக என இன்னோரன்ன வடிவங்களில் அப்பாவி சிங்கள மக்கள் முன் உருவகப்படுத்தப்படுகின்றனர்.
 
இந்த நாட்டின் பெரும்பாலான அரசியல்வாதிகளிடமோ அல்லது படைத்துறையினரிடமோ இனவாதம் தானாகவே உருவாவதில்லை. அரசு மக்களை எப்படி மூளைச்சலவை செய்கிறதோ அதே போன்றே பேரினவாத சக்திகள் படைத்துறை அதிகாரிகளை, நிர்வாக சேவை அதிகாரிகளை என இலக்கு வைத்து அவர்களை மூளைச்சலவைக்கு உட்படுத்துகிறது.
 
இன்றைய போட்டி உலகில் எல்லா துறை சார்ந்த சக்திகளும் தங்கள் வசதிக்கும், முன்னேற்றத்திற்கும் ஏற்றாற்போல் இந்த முஸ்லிம் பயங்கரவாதம் எனும் கோஷத்தை உயர்த்திப்பிடிக்கின்றன.
 
இன்றைய சிலோன் முஸ்லிம்களின் நிலை ஒரு உத்தரவாதமற்ற, நிச்சயமற்ற வாழ்வியல் போக்காக மாறியுள்ளது. பேரினவாதம் மியன்மாரை மாதிரியாகக் கொண்ட அரசியல், சமூகவியல் பற்றி சிந்திக்கும் வேளையில் முஸ்லிம்கள் தங்களிற்கான “மொடல்” சமூக அமைப்பை பற்றி சிந்திக்க இயலாத சமூகமாக விறைத்து நிற்கின்றனர். இது பற்றி பேசும் அல்லது எழுதும் மனிதர்கள் கூட தங்கள் பணி அத்துடன் முடிந்து விட்டதாக திருப்தி அடைகின்றனர்.
 
ஒரு பெரும்பான்மை சமூகத்தவன் முஸ்லிமின் மீது தீங்கு செய்தாலோ அல்லது தவறிழைத்தாலோ அந்த தவறை தட்டிக் கேட்கவோ அல்லது சுட்டிக் காட்டவோ முஸ்லிமிற்கு முடியா ஒரு அவல நிலை. அப்படி தட்டிக்கேட்டால் அது சிறுபான்மை பெரும்பான்மை பிரச்சனையாக வடிவமெடுக்கும் பொறிமுறையை பேரினவாதம் சிறப்பாக நிறுவியுள்ளது.
 
இது ஆரம்பம் மட்டுமே. இன்னும் பலவற்றை நாம் காண நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளன. மடாலங்கள் இலங்கை அரசியலை நிருணயித்த காலங்கள் மலையேறி இன்று மடாலயங்கள் இலங்கை முஸ்லிம்களின் தலைவிதியை தீர்மானிக்கும் தலைமைப்பீடமாக மாறி நிற்கின்றன. எங்கு என்ன பிரச்சனை என்றாலும் ஜம்மியதுல் உலமா கூட நாயக்க ஹாமத்துருவின் உள்ளத்தை திருப்தி படுத்தும் அரசியல் போக்கில் சிக்கி தவிக்கிறது.
 
முஸ்லிம் அரசியல் எனும் மாய மானை கண்டு ஏமாறும் சமூகமாகவே நாம் நிற்கின்றோம். இந்த அரசியலோ அல்லது முஸ்லிம் அரசியல்வாதிகளோ ஒரு போதும் நமது சமூக பாதுகாப்பை வழங்க கூடிய சக்திகள் அல்ல. நாம் ஒவ்வொரு முறையும் சொல்லும் வார்த்தைகளையே மீண்டும் சொல்கிறோம்.
 
“தாகூத்தின் அடிமையால் அல்லாஹ்வின் அடிமையை ஒரு போதும் பாதுகாக்க முடியாது”. நாம் அல்லாஹ்வின் அடிமைகள். மீண்டும் சொல்கிறோம் நாம் அல்லாஹ்வின் அடிமைகள்.  

இந்த மாதம் 20 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு, ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி வீதி விபத்துக்களின் பலியானவர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை சுகாதார அமைச்சு சகல இலங்கையர்களிடமும் விடுத்துள்ளார்.

நாட்டில் விபத்துக்களின் சிக்குண்டு மரணமானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக, முதல் தடவையாக நவம்பர் மாதாம் 20 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு விபத்துக்களில் 15 தொடக்கம் 45 வயதுடையவர்களே அதிகம் பலியாவதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளொன்றிற்கு 6 பேர் வீதம் வீதி விபத்துக்களில் பலியாவதுடன், ஒவ்வொரு 10 வினாடிக்கும் எந்த இடத்திலாவது ஒரு விபத்து இடம்பெறுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

முக்கிய அறிவித்தல்!!!!

Posted: நவம்பர் 18, 2011 by Journalist of AKP in வேண்டுகோள்

பல ஆண்டு காலமாக இருந்து வந்த அல்லாஹ்வை ஸுஜுது செய்யும் மட்டக்களப்பு கள்ளியங்காடு பிர்தௌஸ் பள்ளிவாயல் நிர்வாகப் பயங்கரவாதத்தின் ஆசீர்வாதத்துடன் ஆக்கிரமிப்புக்குள்ளாகி அழிக்கப்பட்டு பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையம் கட்டப்பட்டு கடந்த 09.11.2011 அன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்த பள்ளிவாயலின் பெயரில் காணி பத்திரமிருந்தும் கூட இப்பிரதேசத்தில் இருக்கின்ற பெண் அரச நிருவாகியொருவர் நிர்வாக துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு இப்பள்ளிவாயலின் பேர்மிட்டை மாற்றி பிரம்மகுமாரி இராஜயோக நிலையம் அமைப்பதற்கு அனுமதி கொடுத்தார். அத்தோடு சில அரசியல்வாதிகளும் இந்த பெண் அரச நிர்வாகிக்கும் அவரோடு இணைத்திருந்த ஏனையோருக்கும் கள்ளியங்காடு முஸ்லிம்களின் உரிமையை பறிப்பதற்கு பக்கபலமாக பின்னின்றனர்.

ஒருங்கிணைந்த இந்த சதி முயற்சியால் கள்ளியங்காடு முஸ்லிம்களின் உரிமை பரிக்கப்பட்டு பள்ளிவாயலிருந்த அதே இடத்தில் பள்ளிவாயல் காணியில் பிரம்மக்குமாரிகளின் இராஜயோக நிலையம் அமைக்கப்பட்டு கிழக்கு மாகாண சபை முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிர்வாகப் பயங்கரவாதத்திற்கு எதிராகவும், கள்ளியங்காடு முஸ்லிம்களின் உரிமையை மீட்டுத்தர கோரியும், அந்தப் பூமியில் மீள அப்பள்ளிவாயலை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று வெள்ளிக்கிழமை (18-11-2011) ஜும்ஆ தொழுகையின் பின் பகல் 1.30 மணிக்கு மெத்தை பள்ளிவாயலில் நடைபெறவுள்ளது.

இந்த ஆர்பாடத்தில் இணைந்து கள்ளியங்காடு முஸ்லிம்களின் உரிமைக்காக போராடுமாறு அதன் ஏற்பாட்டாளர்கள் கோருகின்றனர்.

கள்ளியங்காடு முஸ்லிம்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஏ.கே.பி குழுமம் மற்றும் ஒன்லைன் அக்கறைப்பற்று வலைத்தளம் ஒட்டுமொத்த அக்கறைப்பற்று முஸ்லிம்கள் சார்பில் தமது ஆதரவை வெளிப்படுத்துவதுடன், எதிர்வரும் காலங்களில் பாதிக்கப்பட்ட கள்ளியங்காடு முஸ்லிம்களுக்கு எமது வலைத்தளம் மூலமாக குரல் கொடுப்போமென உறுதி கூறுகிறோம். முஸ்லிம்களிடமிருந்து கபளீகரம் செய்யப்பட்ட இந்த அல்லாஹ்வின் இல்லத்தை பிரம்மகுமாரிகளிடமிருந்து மீட்கவும் அல்லாஹ் துனை நிற்பானாக…!!

 

வடமாகாண முஸ்லிம்கள் வடமாகாணத்தில் இருந்து விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்டு ஒக்டோபர் மாதத்துடன் 21 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. இந்த சம்பவம் ஆண்டுதோறும் வடமாகாண முஸ்லிம்களால் நினவு கூறப்படுகின்றது. இந்த ஆண்டும் நினைவுகூரும் நிகழ்வுகள் கொழும்பு ,கண்டி, புத்தளத்தில், மன்னார் , யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கறுப்பு ஒக்டோபர் 2011  நிகழ்வுகளின் கருப்பொருளாக முஸ்லிம் மீள்குடியேற்றத்தை ஊக்குவித்தல் , தமிழ் , முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் மீண்டும் புரிந்துணர்வையும் , ஒருமைப்பாட்டையும் ஊக்குவித்தல். வடமாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் போது மிகப்பெரிய கொள்ளை சம்பவமொன்றும் இடம் பெற்றுள்ளது அது வரலாற்றில் சரிவர பதிவு செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்துதல் ஆகியவற்றை கருப்பொருளாக கொண்டு. சொற்பொழிவு , தமிழ் , முஸ்லிம் சமூக கலந்துரையாடல் , இரத்ததானம், விழிப்புணர்வு சுவரொட்டி பிரசாரம் ஆகிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் வாலிபர் கூட்டமைப்பு மேற்கொண்டுள்ளது

இதன் முதல் கட்டமாக விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதுடன் , சொற்பொழிவு நிகழ்சிகள் இன்று நாளையும் புத்தளத்திலும் கண்டியிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றை அஷ்ஷெய்க் எஸ் .எம் மஸாஹிம் மற்றும் அஷ்ஷெய்க் மின்ஹாஜ் ஆகியோர் நடத்தவுள்ளனர் இதை தொடர்ந்து , எதிர்வரும் ஞாயிற்றுகிழமை கொழும்பில் தமிழ் , முஸ்லிம் சமூக கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

படுகொலை செய்யப்பட்ட லிபியத் தலைவர் முஅம்மர் கடாபி மற்றும் சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஸ் ஆகியோரின் மறைவுக்காக சகல பள்ளிவாசல்களிலும் இன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகையின் பின்னர் ஜனாஸா தொழுகை நடத்துமாறு மேல் மாகாண ஆளுநர் அல்ஹாஜ் அலவி மெளலானா மற்றும் தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா சகல பள்ளிவாசல் கதீப்மார்களையும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

42 ஆண்டுகளாக லிபியாவை ஆட்சி செய்த தலைவர் முஅம்மர் கடாபி கடந்த வியாழக்கிழமை அவரது சொந்த ஊரான சிர்த் நகரில் லிபிய கிளர்ச்சி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

கடாபியின் மறைவானது அந்நாட்டு மக்களை மட்டு மல்லாது இலங்கையில் உள்ள சகல இன மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் எங்கள் நாட்டின் உற்ற நண்பனாகவும் எமது நாட்டுக்கு பல்வேறு உதவிகளையும் வழங்கிய தலைவராவார்.

 

அதேநேரம் எமது அயல் நாடான சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வரும் பல்வேறு மனிதாபிமான உதவிகளை நாம் மறந்துவிடலாகாது.

 

எமது நட்பு நாடுகளின் தலைவரின் இழப்பா னது ஈடு செய்ய முடியாது எனவும் மேல்மாகாண ஆளுநர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டனர்.

 

மேற்படி இருவரின் இழப்புக்களுக்காக வும் எமது சகோதரர் என்ற வகையிலும்  வெள்ளிக்கிழமை சகல பள்ளி வாசல்களிலும் ஜனாஸா தொழுகை நடத்துமாறு கேட்டுக் கொண்டனர்.

 

இவர்களின் மறுமை வாழ்வுக்காகவும் அந்நாடு களில் சமாதானம் மலர்ந்து மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறும் கேட்டுக் கொண்டனர்


பெண் என்பவள் இஸ்லாத்தின் பார்வையில் மிக கண்ணியமானவளாக கருதப்படுகின்றாள். எந்தவொரு மதமும் கொள்கையும் பெண்ணுக்கு வழங்கிடாத கௌரவத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் இஸ்லாம் வழங்கியிருக்கின்றது.

ஆனால், இஸ்லாம் வழங்கியுள்ள சுதந்திரத்தை சில முஸ்லிம் பெண்கள் தவறான முறையில் பயன்படுத்துகின்றார்கள் என்பது தான் கவலைக்குரியவிடயமாகும்.

முஸ்லிம் பெண்கள் தமது தனித்துவமான ஒழுக்கங்கள், பண்புகள், கலாசாரம் என்பவற்றை இழந்து வீழ்ச்சி நிலைய நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலைக்கு காரணங்கள் பல இருந்தேபாதும் அவற்றில் சிலதை இங்கு நோக்கலாம்.

முதலாவதாக, தொடர்புசாதனங்கள் முஸ்லிம் பெண்களின் ஒழுக்க, கலாசார, பண்பாட்டு விடயங்களில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன. தொலைக் காட்சிகளில் தினந்தோறும் ஒளிபரப்பாகும் சினிமாக்களும், தொடர்நாடகங்களும் வானொலிகளில் 24 மணி நேரமும் ஒலித்துக் கொண்டிருக்கின்ற பாடல்களும் இதில் முதன்மை பெறுகின்றன.

 

ஒரு காலத்தில் முஸ்லிம் பெண்கள் திரையரங்கு/கலியாட்டங்களுக்கு செல்வது மிக அரிதாகேவ காணப்பட்டது. ஆனால், இன்று ஹிஜாப் அணிந்த நிலையில் குடும்பத்தவர்களுடன் இணைந்து திரையரங்குகளுக்கும், விணான விழாக்கலுக்கும்  செல்கின்ற பெண்களை காண்கின்றோம்.  கிராமப்புற வீடுகளில் திரையரங்குகளின் இடத்தை தொலைக்காட்சி வகித்து வருகின்றது. சிறுபர் பாலர் பாடசாலை நிகழ்ச்சி நிரல்கள் மிகவும் கேவலமான முறையில் தயாரிக்கப் படுகின்றன. பச்சிலம் பாலகர்களின் உணர்வுகள் இஸ்லாமிய விழுமியங்களுக்கு மாற்றமான முறைக்கே உரமிடப்படுகின்றன.

மிகுந்த ஒழுக்கத்தோடும் கண்ணியத்தோடும் வாழ்ந்துகொண்டிருந்த முஸ்லிம் குடும்பங்கள் இன்று வெட்க உணர்வற்று, பண்பாடற்று, ஒன்றாக அமர்ந்து சினிமாக்கைளயும் ஆபாச பாடல்கைளயும், நாடகங்களையும் பார்த்து ரசிப்பதை பரவலாக காண முடிகின்றது.

வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என எந்த ஊடகத்தை எடுத்தாலும் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் முஸ்லிம் பெண்களே முன்னணியில் திகழ்கின்றனர். வானொலியை செவிவிமடுத்தால் ஹலோ என ஒரு முஸ்லிம் பெண்தான் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருப்பாள். தொலைக்காட்சியிலும் இதே நிலைதான்.

இஸ்லாமிய நூல்கைளயும், சஞ்சிகைகளையும் வாசிக்கும் பழக்கம் மிகவேகமாக குறைந்து வருகின்றது. பாடசாளைகளில் உள்ள நூலகங்களில் நிறைந்து காணப்படும் இஸ்லாமிய நூல்கைள விடவும் காதல் கதைகைளக் கொண்ட நாவல்களும் கவிதைத் தொகுதிகளும்தான் அதிகமாக வாசிக்கப்படுகின்றன.

முன்தினம் பார்த்த சினிமாக்களினதும் நாடகங்களினதும் விமர்சனம் அடுத்தநாள் பாடசாலை வகுப்புகளில் நடைபற்று வருகின்றது. சில பெண்கள் பாடப் புத்தகங்களுக்குப் பதிலாக சினிமா நடிக, நடிகைகளின் புகைப்படங்கைள வைத்துக்கொண்டு அதை ரசிப்பதிலேய கவனம் செலுத்துகின்றனர். இன்னும் சிலர் வேடிக்கைத்தனமாக வகுப்பைறகளில் சிகையலங்காரம், முக அலங்காரம் போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர்.

எமது முஸ்லிம் பெண்களின் ஒழுக்கவீழ்ச்சிக்கு இரண்டாவது காரணமாக அமைவது ஆடைகளாகும். ஆடை….ஆடை என்று வாங்கி குவிக்கின்றார்கள், இதனால் குடும்ப செலவினம் உயர்வடைவதை அவர்கள் ஒரு போதும் அழட்டிக்கொள்வதில்லை, அது மட்டுமல்ல இன்று ஒரு ஆணுக்கு நிம்மதியாக பொது போக்குவரத்து சாதனங்களில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்நிய பெண்கள் எவ்வாறு இருந்த போதிலும் அவர்கைள ஒத்தவர்களாக எமது முஸ்லிம் பெண்களும் மாறிவிட்டனர். சாதாரணமாக டீ-சேர்ட், காற்சட்டை, போன்றவற்றை அணிகின்றனர்.

இன்னும் சிலர் தாம் அணிகின்ற ஹபாயாவையும் கூட நாகரிகம் என்றபெயரில் தவறாகப் பயன்படுத்துகின்றனர். மிக இறுக்கமாக அணிந்துவருவதோடு அதன் நோக்கத்தை அறியாதவர்களாகவும் செயற்படுகின்றனர்.

முஸ்லிம் பெண்களின் கலாசார சீரழிவிற்கு இன்னொரு காரணமாக மேலதிக வகுப்புக்கைளயும் குறிப்பிட வேண்டியிருக்கின்றது. நகர்ப்புறங்களுக்குச் செல்லும் சில முஸ்லிம் மாணவிகள் பஸ்களிலும் பஸ்நிலையங்களிலும் வகுப்புக்களிலும் வரம்புமீறி நடந்துகொள்கின்றனர். அத்துடன் இரவு வேளைகளிலும் இத்தகைய வகுப்புகளுக்கு தனியாக சென்றுவருகின்றனர். இது பாரிய பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்துள்ளதை அனைவரும் அறிவர்.

எனேவ, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான்கொண்டுள்ள முஸ்லிம் பெண்கள் தமது ஈமானை மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ளவேண்டியிருக்கின்றது. றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டல்களை இன்னுமொரு முறை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியிருகின்றது. இது பெண்களுக்கு மட்டுமேயான விடயமல்ல அவர்களுக்கு பொறுப்பாக இருக்கின்ற பெற்றோர்கள், பாதுகாவலர்களும் இவ் விடயத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

‘நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள். உங்களது பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்’ என்ற ஹதீஸ் எல்லோருக்கும் பொருத்தமானது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு பொறுப்புதாரிகள். ஆண்கள் தமது கட்டுப்பாட்டுக்குக் கீழுள்ள குடும்பத்தினருக்கு பொறுப்பாளர்கள்.

எனவே, ஒவ்வொருவரும் தமது பொறுப்புக்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.‘நீங்கள் உங்கைளயும், உங்கள் குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்’

என்று அல்குர்ஆன் கூறுவைத நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். நரக நெருப்பின் விறகுகளாக நாம் மாறிவிடாதிருக்க அல்லாஹ் எமக்கு அருள்பாலிக்க வேண்டும். இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றுகின்ற மக்களாக நாம் மாறுவதற்கு அல்லாஹ்வின் உதவியை வேண்டி நிற்போம்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பேரவையும், கிழக்கு மாகாண சிவில் சமூகமும் ஒன்றிணைந்து நாடு காத்து நம் உரிமையை வென்றெடுப்போம்” எனும் தலைப்பிலான பிரகடன நிகழ்வு நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாக முன்றலில் நடை பெறவுள்ளது. முஸ்லிம்களின் எழுச்சி அரசியல் தீர்வு முயற்சியில் ஈடுபடும் தரப்புக்களுக்கான அழுத்தங்களாக மாற்றப்பட வேண்டும், அரசியல் அதிகாரங்களுடன் தொடர்புபடும் எந்த விடயத்திலும், முஸ்லிம்கள் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும், அரசியல் தீர்வு முயற்சியில் முஸ்லிம்களுக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும், முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை உறுதியுடன் செயற்பட்டு முஸ்லிம் தலைமைகள் வென்றெடுக்கவேண்டும், பாதிக்கப்பட்டதும், இனமுரண்பாடுகளைத் தீர்க்கும் முயற்சியில் அனைத்துலக நாடுகள் பாரபட்சமாக நடந்து கொள்ளக் கூடாது போன்ற விடயங்களை வலியுறுத்தி இந்தப் பிரகடன நிகழ்வு இடம்பெறவுள்ளது.

நாளை காலை ஒலுவில் சந்தியில், ஒலுவிலின் தென்புறமுள்ள ஊர்களில் இருந்து வரும் மக்களும், களிஓடைப் பாலத்துக்கு அருகில் வடபுறமுள்ள பிரதேசங்களில் இருந்து வரும் மக்களும் ஒன்று கூடி சுலோகங்களையும் பதாகைகளையும் ஏந்திய வண்ணம் முஸ்லிம்களின் உரிமைக்கான கோஷமிட்டு ஊர்வலமாக தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்றலுக்கு வந்துதடைவர்.அதன் பின்னர் அங்கு கூடும் மக்கள் மத்தியில் “நாடு காத்து நம் உரிமையை வென்றெடுப்போம்” என்னும் பிரகடன நிகழ்வு இடம்பெறுமெனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அன்றைய தினம் 12 மணிவரை அலுவலகங்கள், வியாபாரத்தலங்கள், பாடசாலைகள் போன்றவற்றின் பணிகள் பிற்போடப்பட்டு நாடு, சமூக உரிமைக்கான முன்னெடுப்புக்கு உணர்வுபூர்வ ஒத்துழைப்பை வழங்குவதுடன், பிரகடன நிகழ்வில் கலந்துகொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது. 

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சகோதரி றிஸானா நபீக்கின் விடுதலையை வலியுறுத்தி இன்று புதன்கிழமை கொழும்பில் அமெரிக்க தூதரகம் முன்னிலையில் ஆர்ப்பாட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் சகோதரி ரிஸானா நபீக்கின் விடுதலையில் ஆர்வம் கொண்டுள்ள எமது உறவுகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் ஆதரவை வெளிப்படுத்துமாறு ஒன்லைன் அக்கரைப்பற்று வலைத்தளம் மற்றும் ஏ.கே.பீ குழுமமும் கோருகிறது.

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம்முன் றிஸானா நபீக்கின் விடுதலையை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதன் மூலம் சவூதி ஆரேபியாவுக்கு அமெரிக்க அழுத்தம் கொடுக்கும் வாய்ப்பிருப்பதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை றிஸானா நபீக்கின் விடுதலையை வலியுறுத்தி நேற்று செவ்வாய்கிழமையும் கொழும்பிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது. இருந்தபோதும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் சகோதரர்கள் குறைந்தளவிலேயே பங்குகொண்டதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. முஸ்லிம்களைவிட சிங்கள சகோதரர்களே இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகளவில் கலந்துகொண்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, அகவே எமது அன்புச் சகோதரர்களே உங்களால் முடிந்தவரை இதில் கலந்து கொள்ளுமாறு மிகவும் வினயமாக கேட்டுக் கொள்கின்றோம். அல்லாஹ் எமது பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள்வானாக.. ஆமீன்.